முதன்மைப் பதிவேடுகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. கணக்கியல் சமன்பாடு குறிப்பது

    (a)

    வியாபாரத்தின் முதல், சொத்திற்கு சமமானது

    (b)

    வியாபாரத்தின் பொறுப்புகள், சொத்திற்கு சமமானது

    (c)

    வியாபாரத்தின் முதல், பொறுப்புகளுக்கு சமமானது

    (d)

    வியாபாரத்தின் சொத்துகள், முதல் மற்றும் பொறுப்புகளுக்கு சமமானது

  2. கணக்கியல் சமன்பாடு, எந்த கணக்கியல் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது?

    (a)

    இரட்டைத் தன்மை

    (b)

    நிலைத்தன்மை

    (c)

    நிறுவனத் தொடர்ச்சி

    (d)

    நிகழ்வுத்தன்மை

  3. பின்வருனவற்றில் பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு எது?

    (a)

    கட்டடம் கணக்கு

    (b)

    கொடுபட வேண்டிய சம்பள கணக்கு

    (c)

    மகேஷ் கணக்கு

    (d)

    பாலன் நிறுவனம்

  4. முன் கூட்டிச் செலுத்திய வாடகை ஒரு

    (a)

    பெயரளவு கணக்கு

    (b)

    ஆள்சார் கணக்கு

    (c)

    சொத்துக் கணக்கு

    (d)

    பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

  5. இரட்டைப் பதிவு முறையில் கணக்குகளைப் பதிவு செய்யும் போது நடவடிக்கைகள் பாதிப்பது

    (a)

    குறைந்தபட்சம் இரண்டு கணக்குகள்

    (b)

    ஒரே கணக்கில், வெவ்வேறு தேதிகளில்

    (c)

    ஒரே கணக்கின் இரு பக்கங்களில்

    (d)

    குறைந்த பட்சம் மூன்று கணக்குகள்

  6. 3 x 2 = 6
  7. ஆதார ஆவணங்கள் என்றால் என்ன?

  8. சொத்து கணக்கு என்றால் என்ன?

  9. இரட்டைப் பதிவு கணக்கியல் முறையின் பொன்னான விதிகளைத் தருக.

  10. 3 x 3 = 9
  11. பின்வருவனவற்றை ஆள்சார் கணக்கு, சொத்து கணக்கு மற்றும் பெயரளவு கணக்கு என்று வகைப்படுத்துக
    (அ) முதல்
    (ஆ) கட்டட ம்
    (இ) உள் ஏற்றிச் செல் செலவு
    (ஈ) ரொக்கம்
    (உ) தள்ளுபடிப் பெற்றது
    (ஊ) வங்கி
    (எ) கொள்முதல்
    (ஏ) சந்துரு
    (ஐ) கொடுபட வேண் டிய கூலி.

  12. ஆள்சார் கணக்கின் மூன்று வகைகளைக் கூறுக.

  13. இரட்டைப்பதிவு கணக்கு முறையின் விதிகள் யாவை?

  14. 2 x 5 = 10
  15. பின்வரும் வணிக நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டில் காண்பிக்கவும்.
    (i) அன்பு, ரொக்கம் ரூ 20,000 சரக்குகள் ரூ 12,000 மற்றும் இயந்திரம் ரூ 8,000 த்துடன் தொழில் தொடங்கினார்
    (ii) ரமணியிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ 7,000
    (iii) ரமணிக்கு ரூ 6,900 கொடுத்து கணக்கு முழுவதும் தீர்க்கப்பட்ட து
    (iv) ரூ 5,400 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு இராஜனுக்கு விற்கப்பட்டது ரூ 6,000
    (v) இராஜனிடமிருந்து ரூ 5,800 பெற்றுக்கொண்டு அவரது கணக்கு முடிக்கப்பட்டது
    (vi) கொடுபட வேண்டிய கூலி ரூ 400

  16. பின்வரும் நடவடிக்கைகளுக்கு கணக்கியல் சமன்பாட்டினை உருவாக்குக.
    (i) இராகேஷ் ரூ 1,50,000 முதலுடன் தொழில் தொடங்கினார்.
    (ii) வங்கியில் இட்ட தொகை ரூ 80,000.
    (iii) மகேஷிடமிருந்து கடன் அட்டை மூலம் சரக்கு வாங்கியது ரூ 25,000.
    (iv) 10,000 மதிப்புள்ள சரக்குகள் ரூ 14,000க்கு மோகனிடம் விற்பனை செய்யப்பட்டது. இத்தொகையினை அவர் எடுப்பு அட்டை மூலம் செலுத்தினார் .
    (v) காசோலை மூலம் பெறப்பட்ட கழிவு ரூ 2,000 உடனடியாக வங்கியில் வசூலிப்பதற்காக செலுத்தப்பட்டது.
    (vi) அலுவலக வாடகை மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தியது ரூ 6,000.
    (vii) இராமனுக்கு விற்ற சரக்கின் மதிப்பு ரூ 15,000-ல், ரூ 5,000 உடனடியாக பணமாகப் பெறப்பட்டது.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் - முதன்மைப் பதிவேடுகள் Book Back Questions ( 11th Standard Accountancy - Books of Prime Entry Book Back Questions )

Write your Comment