முதன்மைப் பதிவேடுகள் முக்கிய வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. கணக்கியல் சமன்பாடு குறிப்பது

    (a)

    வியாபாரத்தின் முதல், சொத்திற்கு சமமானது

    (b)

    வியாபாரத்தின் பொறுப்புகள், சொத்திற்கு சமமானது

    (c)

    வியாபாரத்தின் முதல், பொறுப்புகளுக்கு சமமானது

    (d)

    வியாபாரத்தின் சொத்துகள், முதல் மற்றும் பொறுப்புகளுக்கு சமமானது

  2. சொந்த பயன்பாட்டிற்காக உரிமையாளரால் வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தோகையால் ஏற்படும் நிலை.

    (a)

    சொத்தின் மதிப்பு குறையும், உரிமையாளரின் முதலின் மதிப்பு குறையும்

    (b)

    ஒரு சொத்தின் மதிப்பு உயரும், மற்றொரு சொத்தின் மதிப்பு குறையும்

    (c)

    ஒரு சொத்தின் மதிப்பு உயரும், பொறுப்புகளின் மதிப்பு உயரும்

    (d)

    சொத்தின் மதிப்பு உயரும், முதலின் மதிப்பு குறையும்

  3. கணக்கியல் சமன்பாடு, எந்த கணக்கியல் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது?

    (a)

    இரட்டைத் தன்மை

    (b)

    நிலைத்தன்மை

    (c)

    நிறுவனத் தொடர்ச்சி

    (d)

    நிகழ்வுத்தன்மை

  4. இரட்டைப் பதிவு முறையில் கணக்குகளைப் பதிவு செய்யும் போது நடவடிக்கைகள் பாதிப்பது

    (a)

    குறைந்தபட்சம் இரண்டு கணக்குகள்

    (b)

    ஒரே கணக்கில், வெவ்வேறு தேதிகளில்

    (c)

    ஒரே கணக்கின் இரு பக்கங்களில்

    (d)

    குறைந்த பட்சம் மூன்று கணக்குகள்

  5. ஒரு நடவடிக்கையின் பெறுதல் தன்மை அழைக்கப்படுவது

    (a)

    பற்றுத்தன்மை

    (b)

    வரவப்புதன்மை

    (c)

    ரொக்கத்தன்மை

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  6. ஒரு நடவடிக்கையின் செலுத்தல் தன்மை அழைக்கப்படுகிறது.

    (a)

    பற்றுத்தன்மை

    (b)

    வரவுத்தன்மை

    (c)

    ரொக்கத்தன்மை

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  7. நற்பெயர் எடுத்துக்காட்டாக இருப்பது

    (a)

    பெயரளவுக் கணக்கிற்கு

    (b)

    ஆள்சார் கணக்கிற்கு

    (c)

    புலனாகும் சொத்து கணக்கிற்கு

    (d)

    புலனாக சொத்து கணக்கிற்கு

  8. கீழ்க்கண்டவற்றில் எது சரியானது?

    (a)

    முதல் = சொத்துக்கள் + பொறுப்புகள்

    (b)

    முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்

    (c)

    சொத்துக்கள் = பொறுப்புகள் - முதல்

    (d)

    சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்

  9. முருகன் என்பவரிடம் கடனாக அறைக்கலன் வாங்கியதற்கு வரவு வைக்க வேண்டிய கணக்கு.

    (a)

    முருகன் க/கு

    (b)

    அறைக்கலன் க/கு

    (c)

    கொள்முதல் க/கு

    (d)

    ரொக்க க/கு

  10. நடவடிக்கைகள் தோற்றம் பெறுவது

    (a)

    ஆதார ஆவணங்கள்

    (b)

    குறிப்பேடு

    (c)

    கணக்கியல் சமன்பாடு

    (d)

    கணக்கியல் கருத்துக்கள்

  11. 5 x 2 = 10
  12. ஆதார ஆவணங்கள் என்றால் என்ன?

  13. கணக்கியல் சமன்பாடு என்றால் என்ன?

  14. பெயரளவு கணக்கிற்கான கணக்கியல் விதியைக் கூறுக.

  15. ரொக்கச் சீட்டு என்றால் என்ன (Cash Memo)?

  16. இடாப்பு என்றால் (Invoice)?

  17. 5 x 3 = 15
  18. பின்வருவனவற்றை கணக்கியல் சமன்பாட்டின் படி பதிவு செய்து காட்டுக.

     (அ) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது       ரூ 60,000
     (ஆ) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது   ரூ 20,000
     (இ) ரூ 10,000 மதிப்புள்ள சரக்கினை விற்பனைச் செய்தது       ரூ 15,000
     (ஈ) வாடகை ரொக்கமாக செலுத்தப்பட்டது   ரூ 500
  19. குறிப்பேட்டில் பதிவு செய்யும் படிநிலைகளை விவரி.

  20. இரட்டைப்பதிவு முறை என்றால் என்ன? அதன் நன்மைகளை எழுதுக.

  21. குறிப்பேட்டின் நன்மைகள் யாவை?

  22. கீழ்கண்டவைகளுக்கு ஏதேனும் ஒரு தொகையுடன் நடவடிக்கைகளைத் தருக.
    அ] சொத்துகள் மற்றும் முதலின் மதிப்பு கூடுதல்.
    ஆ] சொத்துக்களின் மதிப்பு கூடுதல் மற்றும் குறைதல்
    இ] சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் மதிப்பு கூடுதல்.
    ஈ] சொத்துகள் மற்றும் முதலின் மதிப்பு குறைதல். 

  23. 3 x 5 = 15
  24. செல்வி அறைகலன் விற்பனைச் செய்பவர். பின்வரும் நடவடிக்கைகளை கணக்கியல் சமன்பாட்டின்படி பதிவு செய்க.

     (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது       ரூ 1,00,000
     (ii) வங்கியில் செலுத்திய ரொக்கம் ரூ 60,000
     (iii) வங்கியிலிருந்து கடன் பெற்றது ரூ 25,000
     (iv) காசோலை செலுத்தி சரக்கு வாங்கியது   ரூ 10,000
     (v) சொந்த பயன்பாட்டிற்காக ரொக்கம் எடுத்தது      ரூ 5,000
     (vi) அலுவலகத் தேவைக்காக வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது     ரூ 3,000
  25. பின்வரும் நடவடிக்கைகளைக் கொண்டு கணக்கியல் சமன்பாட்டினை உருவாக்கவும்.
    (i) ரொக்கம் ரூ 80,000 மற்றும் சரக்குகள் ரூ 75,000 கொண் டு வியாபாரம் தொடங்கப்பட்டது.
    (ii) சண்முகத்திற்கு கடனுக்கு சரக்கு விற்றது ரூ 50,000.
    (iii) சண்முகத்திடமிருந்து ரூ 49, 000 பெற்றுக் கொண் டு அவரது கணக்குத் தீர்க்கப்பட்டது.
    (iv) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 3,000.
    (v) ரூ 1,000 மதிப்புள்ள சரக்குகள் தொண்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது.
    (vi) காப்பீட்டு முனைமம் செலுத்தியது ரூ 3,000.
    (vii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 500.

  26. குறிப்பேட்டில் கீழ்க்கண்ட தொடக்கப் பதிவினைப் பதிவு செய்க.

    ரொக்கம் ரூ 2,000
    இயந்திரம் ரூ 50,000
    அறைகலன் ரூ 5,000
    கடனீந்தோர்கள் ரூ 13,000
    கடனாளிகள் ரூ 18,000

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் Chapter 3 முதன்மைப் பதிவேடுகள் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Accountancy Chapter 3 Books Of Prime Entry Important Question )

Write your Comment