பேரேடு மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. பேரேட்டுக் கணக்குகள் தயாரிப்பதன் முக்கிய நோக்கம்

  (a)

  நிதி நிலைமையை அறிய

  (b)

  இலாபம் அல்லது நட்டத்தை அறிய

  (c)

  நிதிநிலைமை மற்றும் இலாப நட்டத்தை அறிய

  (d)

  ஒவ்வொரு பேரேட்டுக் கணக்கின் இருப்பை அறிய.

 2. கு.ப.எ. என்பது

  (a)

  பேரேட்டு பக்க எண்

  (b)

  குறிப்பேட்டு பக்க எண்

  (c)

  சான்று சீட்டு எண்

  (d)

  ஆணை எண்

 3. உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது

  (a)

  ரொக்க கணக்கு

  (b)

  எடுப்புக் கணக்கு

  (c)

  முதல் கணக்கு

  (d)

  அனாமத்து கணக்கு

 4. பேரேடு ஒரு _________.  

  (a)

  தோற்றப் பதிவு ஏடு 

  (b)

  இறுதிப்  பதிவு ஏடு  

  (c)

  ரொக்க நடவடிக்கைகள் ஏடு 

  (d)

  இவற்றில் எதுவுமில்லை 

 5. கணக்கின் இருப்பை அடுத்த காலத்தின் முதல் நாளில் எழுதப்படுவது _________. 

  (a)

  இருப்பு கீ/கொ  

  (b)

  இருப்பு கீ/இ 

  (c)

  இருப்பு மு/தூ  

  (d)

  இருப்பு பி/தூ  

 6. 6 x 2 = 12
 7. பேரேடு என்றால் என்ன?

 8. எடுத்தெழுதுதல் என்றால் என்ன?

 9. பற்று இருப்பு என்றால் என்ன?

 10. கூட்டுக் குறிப்பேட்டுப் பதிவு என்றால் என்ன? 

 11. இறுதி இருப்பு என்றால் என்ன?

 12. கீழ்க்காணும் கணக்குகளில் தோன்றும் இருப்புகளைக் குறிப்பிடுக.
  அ.ரொக்கம், ஆ. கடனீந்தோர், இ. விற்பனை, ஈ. அறைகலன், உ. கழிவு பெற்றது, ஊ. கடனாளி, எ. கொள்முதல், ஏ. முதல், ஐ. ஊதியம் வழங்கியது, ஓ. கணினி

 13. 6 x 3 = 18
 14. குறிப்பேட்டினை பேரேட்டுடன் வேறுபடுத்துக.

 15. பேரேடு என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் யாவை?

 16. நடவடிக்கைகள் குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எவ்வாறு எடுத்தெழுதப்படுகின்றது?

 17. பேரேட்டுக் கணக்கின் இருப்புகட்டுதலின் வழிமுறையை விளக்குக.

 18. தமிழன்பன் என்பவர் 2018 ஜனவரி 1 அன்று புத்தகம் விற்கும் தொழிலைத் தொடங்கினார். 2018 ஜனவரி மாதத்திற்கான அவருடைய தொழில் நடவடிக்கைகள் பின்வருமாறு. குறிப்பேட்டுப் பதிவுகளைத் தந்து பேரேட்டுக் கணக்குகளையும் தயாரிக்கவும்.

  2018 ஜன 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.3,00,000
  2 வங்கி கணக்கை தொடங்குவதற்காக பணம் செலுத்தியது ரூ.2,00,000
  5 சரக்குகள் வாங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு ரொக்கம் செலுத்தியது ரூ.10,000
  15 புத்தகங்களை M.M. நிறுவனத்திற்கு ரொக்கத்திற்கு விற்றது ரூ.5,000
  22 சரக்குகளை X நிறுவனத்திடமிருந்து வாங்கி ரூ.15,000 இணையவங்கி மூலமாக செலுத்தப்பட்டது  
  25 Y என்பவருக்கு சரக்குகள் விற்பனை செய்யப்பட்டு அவரிடமிருந்து தொகை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) மூலம் பெறப்பட்டது ரூ.30,000
 19. பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து 2018 ஜனவரி மாதத்திற்கான ரொக்க கணக்கைத் தயாரிக்கவும்.

  ஜன 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.62,000
  3 ரொக்கம் கொடுத்து சரக்கு வாங்கியது ரூ.12,000
  10 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது ரூ.10,000
  12 கூலி ரொக்கமாகச் செலுத்தியது ரூ.4,000
  25 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது ரூ.6,000
 20. 3 x 5 = 15
 21. பின்வரும் தொடக்கப்பதிவினைக் கொண்டு ஜாய் என்பவரின் ஏடுகளில் முக்கிய பேரேட்டுக் கணக்கினைத் தயாரிக்கவும்.

  ஜாய் என்பவரின் ஏடுகளில் குறிப்பேட்டுப்பதிவுகள்
  நாள் விவரம் பே.ப.எ. பற்று ரூ. வரவு ரூ.
  2017 ஜூன் 1 ரொக்கக் க/கு.                                                                                                                   ப   45,000  
    சரக்கிருப்பு க/கு                                                                                                                ப   50,000  
    சோகன் க/கு                                                                                                                      ப   35,000  
    அறைகலன் க/கு                                                                                                              ப   50,000  
    ராம்                                                                                                                                க/கு     20,000
    ஜாய் முதல் க/க                                                                                                                 
  (சென்ற ஆண்டின் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் கணக்கில் கொண்டுவரப்பட்டது)
      1,60,000
 22. கீழ்க்கண்ட நடவடிக்கைகளை திரு.கார்த்திக் அவர்களின் பேரேட்டில் நேரடியாகப் பதிவு செய்து இருப்புகளைக் காண்க.

  2018
  ஜனவரி
    ரூ
  1 இரமெஷிடமிருந்து பெற்றது  1,60,000
  5 சரக்கு வாங்கியது  60,000
  6 சுரேஷிற்கு விற்பனை செய்தது  30,000
  15 தாளனிடமிருந்து கொள்முதல் செய்தது  40,000
  18 கணேசனுக்கு விற்பனை செய்தது  50,000
  20 சொந்தப் பயனுக்கு எடுத்தது  18,000
  25 கழிவு பெற்றது  20,000
  30 வாடகை செலுத்தியது  5,000
  31 ஊதியம் வழங்கியது  10,000
 23. கீழ்க்காணும் நடவடிக்கைகளை திரு. சிவனேஸ்வர் அவர்களின் குறிப்பேட்டில் பித்தந், பேரேட்டில் எடுத்தெழுதி இருப்புகளைக் காண்க.

  2015 மார்ச் 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.500000
  2015 மார்ச் 3 வங்கியில் செலுத்தியது ரூ.80000
  2015 மார்ச் 5 கட்டிடம் வாங்கியது ரூ.300000
  2015 மார்ச் 7 சரக்கு வாங்கியது ரூ.70000
  2015 மார்ச் 10 சரக்கு விற்றது ரூ.80000
  2015 மார்ச் 15 வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது ரூ.10000
  2015 மார்ச் 25 மின் கட்டணம் செலுத்தியது ரூ.3000
  2015 மார்ச் 30 ஊதியம் வழங்கியது ரூ.15000

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் Chapter 4 பேரேடு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Accountancy Chapter 4 Ledger Model Question Paper )

Write your Comment