வங்கிச் சரிகட்டும் பட்டியல் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. வங்கிச்சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதில் உதவுவது

    (a)

    வங்கி அறிக்கை

    (b)

    ரொக்க ஏடு

    (c)

    வங்கி அறிக்கை மற்றும் ரொக்க  ஏட்டின் வங்கி பத்தி

    (d)

    சில்லறை  ரொக்க  ஏடு

  2. வங்கியிலிருந்து பணம் எடுக்கும்போது வங்கியானது

    (a)

    வாடிக்கையாளர் கணக்கில் வரவு செய்யும்

    (b)

    வாடிக்கையாளர் கணக்கில் பற்று செய்யும்

    (c)

    வாடிக்கையாளர் கணக்கில் பற்று மற்றும் வரவு செய்யும்

    (d)

    மேற்கண்ட ஏதுமில்லை

  3. ரொக்க  ஏட்டின் படி இருப்பு ரூ.2,000. வங்கியால் பற்று செய்யப்பட்ட வங்கிக் கட்டணம் ரூ.50 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை எனில் வங்கி அறிக்கையின் படி இருப்பு என்ன

    (a)

    ரூ 1,950 வரவு இருப்பு

    (b)

    ரூ, 1,950 பற்று இருப்பு

    (c)

    ரூ, 1,950 பற்று இருப்பு

    (d)

    ரூ 2,050 வரவு இருப்பு

  4. பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?

    (a)

    செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது

    (b)

    விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது

    (c)

    வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை

    (d)

    ரொக்க  ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த

  5. ரொக்க ஏட்டின் இருப்பு ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது , வங்கி அளிக்கும் வட்டி ________.    

    (a)

    கழிக்கப்பட வேண்டும் 

    (b)

    கூட்டப்படவேண்டும்  

    (c)

    இரண்டும் இல்லை 

  6. 5 x 2 = 10
  7. வங்கி மேல்வரைப்பற்று என்றால் என்ன?

  8. வங்கிச் சரிகட்டும் பட்டியல் என்றால் என்ன?

  9. கீழ்கண்ட வாக்கியத்திற்கு ஒரு வார்த்தையில் விடை தருக
    (அ) வங்கியால் அளிக்கப்படும் வாடிக்கையாளர் கணக்கின் நகல்
    (ஆ) வங்கி அறிக்கையின் படி பற்றிருப்பு
    (இ) ரொக்க  ஏட்டின் படி இருப்பு மற்றும் வங்கி அறிக்கையின் படி இருப்பு வேறுபடுவதற்கான காரணங்களை பட்டியலிடும் அறிக்கை

  10. வங்கிச் செல்லேடு என்றால் என்ன? 

  11. செல்லேட்டில் அதிகமான இருப்பினை  விளைவிக்கக் கூடிய ஐந்து இனங்களை  வரிசைப்படுத்துக.       

  12. 5 x 3 = 15
  13. வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதற்கான மூன்று காரணங்களைத் தருக

  14. வங்கியில் ரொக்கம்  செலுத்தும்போது ரொக்க  ஏட்டில் பற்றும் வங்கி அறிக்கையில் வரவும் வைக்கப்படுவது ஏன்? விளக்குக

  15. ரோனி என்பவர் வீணா புகைப்பட நிலையத்தின் உரிமையாளர் ஆவார். மார்ச் 31, 2018 ஆம் நாளன்று அவருடைய வணிகத்தின் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தி இருப்பு கட்டப்பட்டது. அது
    ரூ12,000 மேல்வரைப்பற்று காட்டியது. வீணா புகைப்பட்பட நிலையத்தின் வங்கி அறிக்கை ரூ 5,000 வரவு இருப்பைக் காட்டியது. பின்வரும் விவரங்களைக் கொண்டு  வங்கிச் சரிக்கட்டும் பட்டியலை தயார் செய்க.
    (அ) வங்கி நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 3,000 ஆனால், இது குறித்து ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை
    (ஆ) 2018 மார்ச் 27 அன்று விடுத்த ரூ 9,000 மதிப்புள்ளள்ள காசோலை . இதில் ரூ 7,000 மதிப்புள்ள காசோலை  2018 மார்ச் 31-ஆம் நாள் வரை செலுத்துகைக்கு முன்னிலைப் படுத்தப்படவில்லை.
    (இ) ரொக்க  ஏட்டின் பற்றிருப்பு ரூ 4,100 வரவிருப்பாக எடுத்தெழுதப்பட்டது.
    (ஈ) வங்கியால் பற்று வைக்கப்பட்ட காசோலை  புத்தகக் கட்டணம் ரூ.200 ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை.
    (உ) வங்கியில் பற்று வைக்கப்பட்ட பாதுகாப்பு பெட்டக வாடகை ரூ1,000 ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை

  16. ரொக்க ஏட்டில் பதிவு செய்வதில் ஏற்படும் தவறுகள் யாவை? 

  17. பின்வரும் விவரங்களிலிருந்து  திரு.ஜோசப்  அவர்களின்  வங்கி அறிக்கையின்  படியான  இருப்பினை  2018 மார்ச்  31 -ல் காண்க.
    1. 2018 மார்ச்  31 - ல் ரொக்க  ஏட்டின் படியான வங்கியிருப்பு  ரூ 11,500
    2. விடுத்த காசோலைகள்  பணமாக்கப்படாதவை  ரூ 1,750
    3. வங்கியில்  செலுத்திய  காசோலைகள்  31 மார்ச்  2018 - ல் தீர்வு செய்யப்படாது  ரூ 2,150.
    4. வாங்கி வசூல் செய்த  முதலீடுகள்  மீது வட்டி  ரூ 275 குறித்து  ரொக்க  ஏட்டில்  பதிவு இல்லை.
    5. உள்ளுர்  காசோலை  நேரடியாக வங்கியில்  செலுத்தியது. ரூ 250 குறித்து  எட்டில்  பதிவு இல்லை .
    6. வங்கி அறிக்கையின்படி வங்கிக் கட்டணம் ரூ 95/                         

  18. 4 x 5 = 20
  19. பின்வரும் விவரங்களிலிருந்து குமார் என்பவரின் 2016 டிசம்பர் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க.
    (அ) ரொக்க  ஏட்டின் படி இருப்பு ரூ.7,130
    (ஆ) செலுத்திய காசோலை வசூலாகாதது ரூ.1,000
    (இ) வாடிக்கையாளர் நேரநேரடியாக வங்கியில் செலுத்தியது ரூ.800

  20. ஆனந்த் அவர்களின் 2017 மார்ச் 31 ஆம் நாளன்றைய ரொக்க  ஏடு 1,12,500 இருப்பைக் காட்டியது. வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்கவும்
    (அ) 2017 மார்ச் 28 அன்று விடுத்த காசோலை ரூ.23,000 -இல் ரூ  9,000 மதிப்பிலான காச�ோலை மட்டுமே இதுவரை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது.
    (ஆ) 2017 மார்ச் 27 அன்று வங்கியில் செலுத்திய காசோலை  ரூ  6,300. 2017 ஏப்ரல் 5 அன்று வசூலித்து வரவு வைக்கப்பட்டது.
    (இ) பெ பெற்ற காசோலை  ரூ 12,000 ரொக்க ஏட்டில் பதியப்பெற்றிருப்பினும் வங்கியில் செலுத்தப்படவில்லை.
    (ஈ) 2017 மார்ச் 30 அன்று வங்கியால் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது ரூ  2,000
    (உ) 2017 மார்ச் 30, அன்று ஏற்கனவே வங்கியில் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ  3,000 மதிப்புள்ள மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது குறித்து எந்தப் பதிவும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
    (ஊ) வங்கியால் நேரடியாக பெறப்பட்ட கடன் பத்திரம் மீதான வட்டி ரூ 700
    (எ) ரொக்க விற்பனை ரூ 4000 தவறுதலாக ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தியில் பதியப்பட்பட்டது.

  21. பின்வரும் விவரங்களைக் கொண்டு  2017 டிசம்பர் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியலைத் தயார் செய்து, வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டுபிடிக்கவும்

      விவரம் ரூ
    i) ரொக்க  ஏட்டின் படி மேல்வரைப்பற்று 20,000
    ii) செலுத்திய காசோலை  இன்னும் வரவு வைக்கப்படாதது 4,000
    iii) விடுத்த காசோலை  செலுத்துைகக்கு முன்னிலைப்படுத்தப்படாதது 1,000
    iv) நிலை அறிவுறுத்தலின்படி வங்கி வசூலித்த வாடகை   500
    v வங்கியால் பற்று செய்யசெய்யப்பட்ட மேல்வரைப்பற்று மீதான வட்டி 2,000
    vi) வங்கியால் தவறுதலாலாக பற்று வைக்கப்பட்ட தொகை  300
    vii) 2017 டிசம்பர் 30 அன்று விடுத்த காசோலை  வங்கியால் மறுக்கப்பட்டது 5,000
    viii) வங்கியில் செலுத்திய வாடிக்கையாளரின் காசோலை  வங்கியால் மறுக்கப்பட்டது. ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை 2,000

     

  22. 2018 மார்ச் 31 -ஆம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியலைத் தயார் செய்து ரொக்க  ஏட்டின் படியான இருப்பினைக் கண்டறிக

    விவரம் ரூ
    வங்கி அறிக்கையின் படியான வங்கி இருப்பு 15,000
    விடுத்த காசோலை  இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது 2,500
    வங்கிக் கட்டணம் ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை 250
    வங்கியால் பற்று செய்யப்பட்ட வட்டி ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை 500
    நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய காப்பீட்டு முனைமம் ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை 300
    செலுத்திய காசோலை  இன்னும் வரவு வைக்கப்படாதது 900

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் Chapter 8 வங்கிச் சரிகட்டும் பட்டியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Accountancy Chapter 8 Bank Reconciliation Statement Model Question Paper )

Write your Comment