தேய்மானக் கணக்கியல் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகையானது,

    (a)

    ஆண்டுதோறும் அதிகரிக்கும்

    (b)

    ஆண்டுதோறும் குறையும்

    (c)

    அனைத்து ஆண்டுகளுக்கும் நிலையாக இருக்கும்

    (d)

    ஆண்டுதோறும் மாறக்கூடியது

  2. தேய்மானம் கீழ்க்கண்டவற்றுள் எவற்றில் நீக்கப்படுகிறது?

    (a)

    நிலைச் சொத்துகள்

    (b)

    நடப்புச் சொத்துகள்

    (c)

    கொடுபடபட வேண்டிய செலவுகள்

    (d)

    அனைத்து சொத்துகள் மீது

  3. தேய்மான வழிமுறை என்பது

    (a)

    சொத்தின் அடக்க விலையை, சொத்தின் பயனளிப்புக் காலம் முழுவதும் நீக்குதல்

    (b)

    சொத்துகளை மதிப்பீடு செய்தல்

    (c)

    நல்ல நிலையில் சொத்தினைப் பராமரித்தல்

    (d)

    சொத்தின் மதிப்பினை அதிகரித்தல்

  4. சொத்தின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகள் காலப்போக்கில் அதிகரிக்கும் போது பின்வரும் தேய்மான முறைகளுள் எது சிறந்தது?

    (a)

    நேர்கோட்டு முறை

    (b)

    குறைந்து செல் இருப்பு முறை

    (c)

    தேய்மான நிதி முறை

    (d)

    ஆண்டுத் தொகை முறை

  5. சொத்தின் இறுதி மதிப்பு என்பது, பயனளிப்புக் காலத்தின் ____________ அச்சொத்திலிருந்து கிடைக்கும் தொகையாகும்.

    (a)

    ஆரம்பத்தில்

    (b)

    இறுதியில்

    (c)

    மத்தியில்

    (d)

    இவைகளில் ஏதுமில்லை

  6. 3 x 2 = 6
  7. தேய்மானம் கணக்கிடும் முறைகள் யாவை?

  8. நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் கணக்கிட உதவும் சூத்திரங்கள் யாவை?

  9. ஆண்டுத் தொகை முறையில் தேய்மானம் கணக்கிடுதல் என்றால் என்ன?

  10. 3 x 3 = 9
  11. 1.1.2018 அன்று ஒரு நிறுவனம் ரூ. 9,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவுகைச் செலவாக ரூ. 1,000 செலவழித்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு தேய்மானம்
    15% என்ற விகிதத்தில் 2018 ஆம் ஆண்டுக்கு தேய்மானத் தொகையை கணக்கிடவும். கணக்குகள் மார்ச் 31 ல் முடிக்கப்பெற்றன.

  12. ஜாய் என்ற நிறுவனம் 1.4.2016 அன்று ரூ. 75,000-க்கு இயந்திரம் ஒன்றை வாங்கியது. 31.3.2018
    அன்று ரூ.62,000-க்கு அவ்வியந்திரத்தை விற்பனை செய்தது. நிலைத் தவணை முறையில்
    தேய்மானம் ஆண்டுக்கு 10% நீக்கப்படவேண்டும். ஆண்டுதோறும் கணக்குகள் மார்ச் 31-ல் முடிக்கப்படுகிறது. விற்ற இயந்திரத்தின் மீதான இலாபம் அல்லது நட்டத்தை கணக்கிடுக

  13. தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?

  14. 2 x 5 = 10
  15. ஆனந்த் என்பவர் 1.1.2015 அன்று ரூ. 1,00,000 மதிப்புள்ள ஒரு இயந்திரத்தை வாங்கினார். 1.7.2016 அன்று ரூ. 50,000 மதிப்புள்ளள்ள மற்றொரு இயந்திரத்தை வாங்கினார். மேலும் 1.10.2017 அன்று
    ரூ. 20,000 மதிப்புள்ள மற்றொரு இயந்திரத்தை வாங்கினார். நேர்க்கோட்டு முறையில் 10% தேய்மானம் ஆண்டுதோறும் நீக்கப்பட வேண்டும். 2015 முதல் 2017 வரை இயந்திரக் கணக்கினைத் தயாரிக்கவும். கணக்குகள் ஆண்டுதோறும் டிசம்பர் 31-ல் முடிக்கப் பெறுகின்றன.

  16. ஒரு தயாரிப்பு நிறுமம், ஏப்ரல் 1, 2010 அன்று பொறி வகை மற்றும் இயந்திரம் ரூ. 4,50,000க்கு வாங்கி, நிறுவுதல் செலவாக ரூ. 50,000 செலவழித்தது. மூன்று ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு, அச்சொத்தானது ரூ. 3,85,000 க்கு விற்கப்பட்டது. தேய்மானம் ஆண்டுதோறும் 15% நிலைத் தவணை முறையில் நீக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31-ல் முடிக்கப்படுகின்றன. விற்ற இயந்திரத்தின் மீதான இலாபம் அல்லது நட்டத்தைக் கணக்கிடவும்.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் - தேய்மானக் கணக்கியல் Book Back Questions ( 11th Standard Accountancy - Depreciation Accounting Book Back Questions )

Write your Comment