முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது

  (a)

  சமூகக் கணக்கியல்

  (b)

  காரியதரிசிகளின் கணக்கியல்

  (c)

  மேலாண்மைக் கணக்கியல்

  (d)

  பொறுப்பு கணக்கியல்

 2. இரட்டைப் பதிவு முறையில் கணக்குகளைப் பதிவு செய்யும் போது நடவடிக்கைகள் பாதிப்பது

  (a)

  குறைந்தபட்சம் இரண்டு கணக்குகள்

  (b)

  ஒரே கணக்கில், வெவ்வேறு தேதிகளில்

  (c)

  ஒரே கணக்கின் இரு பக்கங்களில்

  (d)

  குறைந்த பட்சம் மூன்று கணக்குகள்

 3. உரிமையாளருக்கு சேர வேண்டிய தொகை

  (a)

  சொத்துக்கள் 

  (b)

  பொறுப்புகள்

  (c)

  முதல்

  (d)

  கடன்

 4. நடப்பு ஆண்டின் ஆரம்பத்தில் பதியக் கூடிய பதிவு

  (a)

  தோற்றப் பதிவு

  (b)

  குறிப்பிட்டுப் பதிவு

  (c)

  தொடக்க பதிவு

  (d)

  இறுதிப் பதிவு

 5. முந்தைய ஆண்டின் _______ அடுத்த நிதி ஆண்டின் தொடக்க இருப்பு ஆகும். 

  (a)

  தொடக்க இருப்பு 

  (b)

  இறுதி இருப்பு

  (c)

  இலாபங்கள் 

  (d)

  நட்டங்கள் 

 6. இருப்பாய்வு என்பது ஒரு

  (a)

  அறிக்கை

  (b)

  கணக்கு

  (c)

  பேரேடு

  (d)

  குறிப்பேடு

 7. இருப்பாய்வு தயாரிக்கும்போது, கணக்காளர் இருப்பாய்வின் வரவு பக்கத்தில் மொத்த தொகை ரூ. 200 குறைவாக இருப்பதைக் கண்டறிந்தார். அந்த வேவேறுபாட்டினை அவர் என்ன செய்வார்

  (a)

  அனாமத்து கணக்கில் பற்று செய்வார்

  (b)

  அனாமத்து கணக்கில் வரவு செய்வார்

  (c)

  ஏதேனும் பற்று இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்

  (d)

  ஏதேனும் வரவு இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்

 8. கீழ்க்கண்ட கணக்குகளில் எந்தக் கணக்கின் இருப்பு இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் தோன்றும்?

  (a)

  பற்பல கடனீந்தோர் கணக்கு

  (b)

  செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு

  (c)

  எடுப்புகள் கணக்கு

  (d)

  முதல் கணக்கு

 9. _____ விதிகளின் படி, இருப்பாய்வு கட்டாயம் சமன்பட வேண்டும்.

  (a)

  ஒற்றைப்பதிவு முறை

  (b)

   இரட்டைப் பதிவு முறை

  (c)

  கணக்கியல்

  (d)

  இவை எதுவுமில்லை

 10. இருப்பாய்வு தயாரிக்கப்படுவது  _______

  (a)

  இலாபம்/நட்டம் கண்டறிய

  (b)

  நிதிநிலையை அறிய

  (c)

  கணக்குகளின் சரித்தன்மையை அறிய

  (d)

  இவற்றில் ஏதும் இல்லை

 11. 5 x 2 = 10
 12. விடுபட்ட பகுதிகளை நிரப்புக:

     சொத்துக்கள் ரூ=   பொறுப்புகள் ரூ=   முதல் ரூ 
   (அ)  30,000 20,000 ?
  (ஆ) 60,000 25,000 ?
  (இ) ? 25,000 30,000
  (ஈ) ? 10,000 80,000
  (உ) 25,000 ? 15,000
  (ஊ) 40,000 ? 30,000
 13. கணக்கியல் சமன்பாடு என்றால் என்ன?

 14. ஆள்சார் கணக்குகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

 15. செலுத்துகைச் சீட்டு என்றால் என்ன (Pay-in-slip)?

 16. இருப்பாய்வு தயாரிக்கும் முறைகள் யாவை?

 17. 5 x 3 = 15
 18. கணக்கியலின் நோக்கங்கள் யாவை?

 19. ‘ஒரு வணிக நிறுவனம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்’ – இந்த வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட கணக்கியல் கருத்தை விளக்குக.

 20. நிலைத்தன்மை மரபு குறித்து சிறு குறிப்பு வரைக

 21. கணக்கியல் சமன்பாட்டு முறையில் கணக்குகளை பதிவு செய்யும் முறையினை சுருக்கமாக விளக்குக.

 22. கீழ்க்கண்ட இருப்பாய்வில் சில பிழைகள் உள்ளன. அவற்றைவற்றை சரிசெய்து மீண்டும் ஒரு இருப்பாய்வைத் தயாரிக்கவும்.

  31-03-2017 -ஆம் நாளைய இருப்பாய்வு
  கணக்கின் பெயர் பற்று ரூ வரவு ரூ
  கட்டடம் 60,000  
  இயந்திரம் 17,000  
  கொள்முதல் திருப்பம் 2,600  
  வாராக்கடன் 2,000  
  ரொக்கம் 400  
  பெற்றெற்றத் தள்ளுபடி 3,000  
  வங்கி மேல்வரைப்பற்று 10,000  
  கடனீந்தோர் 50,000  
  கொள்முதல் 1,00,000  
  முதல்   72,800
  பொருத்துகைகள்   5,600
  விற்பனை   1,04,000
  கடனாளிகள்   60,000
  வட்டி பெற்றெற்றது   2,600
  மொத்தம் 2,45,000 2,45,000
 23. 3 x 5 = 15
 24. வீணா ஒரு ஜவுளி வியாபாரி. 2018 ஜனவரி 1 இல் அவருடைய வியாபாரம் பின்வரும் இருப்புகளைக் காட்டியது. கை ரொக்கம் ரூ 20,000; வங்கி இருப்பு ரூ 70,000; சரக்கிருப்பு ரூ 15,000. பின்வரும் நடவடிக்கைகள் ஜனவரி 2018 இல் நடைபெற்றன அந்நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டின்படி காட்டுக.

   (i) சுப்புவிடமிருந்து கடனுக்கு வாங்கிய ஆயத்த சட்டைகள்       ரூ 20,000
   (ii) சுப்புவிடம் பணம் பெறாமல் திருப்பிய சரக்கு ரூ 5,000
   (iii) ஜனனியிடம் ரூ 1,600 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு விற்பனை செய்தது    ரூ 2,000
   (iv) ஜனனி திருப்பியனுப்பிய ஒரு சட்டையின் விற்பனை மதிப்பு  ரூ 500
   (v) ஜனனி வங்கியில் உள்ள பணம் வைப்பு இயந்திரத்தின் மூலம் பணம் செலுத்தியது    ரூ 1,500
   (vi) கட்டடத்திற்கான காப்பீட்டு முனைமம் இணையவங்கி மூலம் செலுத்தியது ரூ 1,000
   (vii) காப்பீட் டு முனைமம் செலுத்தியதில், முன் கூட்டிச் செலுத்தியது ரூ 100
 25. சந்திரமோகன் என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் இருப்புகளைக் கொண்டு 31.3.2017 ஆம் நாளுக்குரிய இருப்பாய்வு தயார் செய்க.

    ரூ   ரூ
  முதல் 1,24,500 வங்கி மேல்வரைப்பற்று 5,800
  எடுப்புகள் 2,000 மகிழுந்து 20,000
  பெற்ற கடன் 7,000 பொதுச் செலவுகள் 2,500
  விற்பனை 53,400 கட்டடம் 1,10,000
  கொள்முதல் 40,000 சரக்கிருப்பு 16,200
 26. பின்வரும் விவரங்களிலிருந்து இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.

    ரூ.
  எடுப்புகள் 23,760
  நிலம் 20,000
  ஆரம்பச் சரக்கிருப்பு 62,000
  பற்பல கடனாளிகள் 90,000
  வங்கி 21,000
  முதல் 34,000
  மகிழ்வுந்து 25,240
  வாடகை 9,000
  பற்பல கடனீந்தோர் 35,000
  கொள்முதல் 4,00,000
  அஞ்சல் செலவு 3,000
  விற்பனை 6,10,000
  பொறி எந்திரம் 25,000

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Accountancy First Mid Term Model Question Paper )

Write your Comment