11th Public Exam March 2019 Important 5 Marks Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 200
    40 x 5 = 200
  1. கணக்கியலின் பணிகள் கீழ்கண்டவாறு விவரிக்கப்படுகின்றன.

  2. கணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை?

  3. செல்வி அறைகலன் விற்பனைச் செய்பவர். பின்வரும் நடவடிக்கைகளை கணக்கியல் சமன்பாட்டின்படி பதிவு செய்க.

     (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது       ரூ 1,00,000
     (ii) வங்கியில் செலுத்திய ரொக்கம் ரூ 60,000
     (iii) வங்கியிலிருந்து கடன் பெற்றது ரூ 25,000
     (iv) காசோலை செலுத்தி சரக்கு வாங்கியது   ரூ 10,000
     (v) சொந்த பயன்பாட்டிற்காக ரொக்கம் எடுத்தது      ரூ 5,000
     (vi) அலுவலகத் தேவைக்காக வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது     ரூ 3,000
  4. பின்வரும் நடவடிக்கைகளின் கணக்கியல் சமன்பாட்டு விளைவுகளை பதிவிட்டு காட்டுக.
    (அ) இராஜ் ரூ 40,000 ரொக்கத்துடன் வணிகத்தைத் தொடங்கினார் .
    (ஆ) ரூ 30,000 வைப்புத் தொகையுடன் வங்கியில் கணக்கினை ஆரம்பித்தார் .
    (இ) ஹரி என்பவரிடமிருந்து ரூ 12,000க்கு கடனுக்கு சரக்கு வாங்கப்பட்டது.
    (ஈ) இராஜ் தமது சொந்த பயன்பாட்டிற்காக ரூ 1,000 எடுத்துக்கொண்டார் .
    (உ) பற்று அட்டையினைப் பயன்படுத்தி ரூ 10,000-க்கு அறைகலன்கள் வாங்கப்பட்ட து.
    (ஊ) முருகன் என்பவருக்கு சரக்கு விற்பனை செய்யப்பட் டு, ரூ 6,000 பெறப்பட்டது.
    (எ) அலுவலகத் தேவைக்காக வங்கியிலிருந்து பணம் எடுக்கப்பட்டது ரூ 1,000.

  5. பின்வரும் நடவடிக்கைகளை கணக்கியல் சமன்பாடாக உருவாக்கவும்.
    (i) ஜனவரி 1, 2018 அன்றைய தொடக்க இருப்புகள் ரொக்கம் ரூ 20,000, சரக்கிருப்பு ரூ 50,000 மற்றும் வங்கியிருப்பு ரூ 80,000.
    (ii) சுரேஷிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது 10,000.
    (iii) வங்கிக் கட்டணம் ரூ 500.
    (iv) கடன் அட்டை மூலம் சுரேஷிற்கு ரூ 9,700 கொடுத்து கணக்குத் தீர்க்கப்பட்டது.
    (v) பிலிப்பிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ 15,000.
    (vi) பிலிப்பிற்கு சரக்கு திருப்பியனுப்பியது ரூ 4,000.

  6. குறிப்பேட்டில் கீழ்க்கண்ட தொடக்கப் பதிவினைப் பதிவு செய்க.

    ரொக்கம் ரூ 2,000
    இயந்திரம் ரூ 50,000
    அறைகலன் ரூ 5,000
    கடனீந்தோர்கள் ரூ 13,000
    கடனாளிகள் ரூ 18,000
  7. கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிவு செய்து, அவற்றை பேரேட்டில் எடுத்து எழுதுக.

    2017 ஜூன் 1 பாசு ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.50,000
    4 ரொக்கம் செலுத்தி அறைகலன் வாங்கியது ரூ.6,000
    7 ஹரிஸ் என்பவரிடமிருந்து இயந்திரம் ஒன்றை கடனாக வாங்கியது ரூ.10,000
    10 ரொக்கம் செலுத்தி சரக்குகள் வாங்கியது ரூ.4,000
    18 காப்பீட்டு முனைமம் செலுத்தியது ரூ.100
  8. குறிப்பேட்டுப் பதிவுகளைத் தந்து, ரொக்க கணக்கில் எடுத்து எழுதுக.
     

    2016 ஜூன் 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.1,10,000
    10 கூடுதல் முதல் இட்டது 50,000
    28 சொந்த செலவுக்கு ரொக்கம் எடுத்துக் கொண்டது 20,000
  9. கீழ்க்கண்ட நடவடிக்கைகளை திரு.கார்த்திக் அவர்களின் பேரேட்டில் நேரடியாகப் பதிவு செய்து இருப்புகளைக் காண்க.

    2018
    ஜனவரி
      ரூ
    1 இரமெஷிடமிருந்து பெற்றது  1,60,000
    5 சரக்கு வாங்கியது  60,000
    6 சுரேஷிற்கு விற்பனை செய்தது  30,000
    15 தாளனிடமிருந்து கொள்முதல் செய்தது  40,000
    18 கணேசனுக்கு விற்பனை செய்தது  50,000
    20 சொந்தப் பயனுக்கு எடுத்தது  18,000
    25 கழிவு பெற்றது  20,000
    30 வாடகை செலுத்தியது  5,000
    31 ஊதியம் வழங்கியது  10,000
  10. கீழ்க்கண்ட நடவடிக்கைகளை திரு.அமர் அவர்களின் பேரேட்டில் நேரடியாகப் பதிவு செய்து இருப்புகளைக் காண்க.

    2018 மார்ச்    ரூ 
    1 ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது  25,000
    2 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது  50,000
    3 கோபி என்பவரிடமிருந்து கடன் போரில் சரக்கு வாங்கியது  19,000
    5 இராபர்ட் என்பவருக்கு கடன் பேரில் சரக்கு விற்றது   8,000
    7 இராபர்ட்டிடமிருந்து பெற்றது  6,000
    9 கோபிக்கு செலுத்தியது  5,000
    20 ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது   7,000
  11. 2017 ஜனவரி அன்று துளசி என்பவரின் ஏடுகளில் கீழ்க்கண்ட இருப்புகள் காணப்பட்டன. ரொக்க இருப்பு ரூ.90000, சரக்கிருப்பு ரூ.100000, அறைகலன் ரூ.100000, பாரதி என்பவரிடமிருந்து பெற வேண்டியது ரூ.70000, தேவி என்பவருக்கு செலுத்த வேண்டியது ரூ.20000. தொடக்கப்பதிவினைத் தந்து பேரேட்டுக் கணக்குகள் தயாரிக்கவும்.

  12. பின்வரும் விவரங்களிலிருந்து அறைகலன் கணக்கினைத் தயாரிக்கவும்.

    2017 டிசம் 1 கையில் உள்ள அறைகலன் மதிப்பு ரூ.50000
    2017 டிசம் 5 கணேஷ் என்பவரிடம் கடன் பேரில் வாங்கிய அறைகலன் ரூ.7000
    2017 டிசம் 8 பழுதடைந்ததன் காரணமாக அறைகலன் விற்றது ரூ.5000
    2017 டிசம் 15 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது ரூ.15000
  13. பியர்ல் என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    முதல் 44,000 முதலீடு மீதான வட்டி 2,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 5,000 சுங்க வரி 3,000
    கூலி 800 கணிப்பொறி 20,000
    எடுப்புகள் 4,000 விற்பனை 72,000
    கொள்முதல் 75,000 தொடக்கச் சரக்கிருப்பு 10,200
  14. பாலன் ஒட்டுநர் பயிற்சிப் பள்ளி கீழ்க்கண்ட பேரேட்டு இருப்புகளைத் தருகிறது. அவற்றிலிருந்து 31.12.2016 ஆம் நாளன்றைய இருப்பாய்வு தயாரிக்கவும்.

      ரூ   ரூ
    கணிப்பொறிகள் 26,000 நிலம் 30,000
    ஓட்டுநர்கள் ஊதியம் 4,000 வங்கிக் கடன் 15,000
    வரிகளும் காப்பீடும் 16,500 கட்டணம் பெற்றது 18,150
    எரிபொருள் மற்றும் சக்தி 2,000 முதல் 53,850
    வரிகளும் மற்றும் வீதங்களும் 1,500 விளம்பரம் 7,000
  15. கீழே கொடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் கொண்டு குமார் எழுதுபொருள் நிறுவனத்தின் ஜூலை 2017 க்குரிய விற்பனை ஏட்டினை தயார் செய்க.

    2017  
    ஜூலை 5 சாயல்குடி, சரவணா நிறுவனத்திற்கு கடனுக்கு விற்பனைச் செய்தது
      10 A4 தாள்கள் கட்டுகள், ஒரு கட்டு ரூ. 250 வீதம்
      10 டஜன் எழுது அட்டை, ஒரு டஜன் ரூ. 850 வீதம்
      இரண்டிற்கும் 10% தள்ளுபடி அனுமதிக்கவும்
    ஜூலை  8 இராஜாவிற்கு ரொக்கத்திற்கு விற்றது
      15 A4 தாள்கள் கட்டுகள், ஒரு கட்டு ரூ. 250 வீதம்
    ஜூலை 20 முதுகுளத்தூர், மோகனுக்கு விற்றது
      5 வெள்ளை அட்டைகள், ஒரு அட்டை ரூ. 2,200 வீதம்
      10 டஜன் எழுது பலகை, ஒரு டஜன் ரூ. 850 வீதம்
    ஜூலை 23 பழைய சிற்றுந்தை நாராயணனுக்கு கடனுக்கு விற்றது ரூ. 5,000
    ஜூலை 28 குமரனுக்கு ரொக்கத்திற்கு விற்றது 15 பெட்டி குறியீட்டு பேனா,
    ஒரு பெட்டி ரூ. 250 வீதம்.
  16. கீழ்க்கண்ட நடவடிக்கைகளைக் கொண்டு ஜூலை 2003 க் கான திரு.இராம் அவர்களின் கொள்முதல் ஏடு தயார் செய்க.கொள்முதல் ஏட்டோடு தொடர்புடைய பேரேட்டுக் கணக்குகளையும் தயார் செய்க. 

    2018 பிப் 3   கண்ணன்  & கோவிடமிருந்து கடனுக்கு வாங்கியது 
      50 சலவைப் பெட்டிகள், பெட்டி ஒன்று ரூ 500 வீதம்  
       10 மாவரைக்கும் இயந்திரங்கள் -இயந்திரம்  ஒன்று ரூ 3000 வீதம்  
    6 சிவா & பிரதர்ஸிடமிருந்து ரொக்கத்திற்கு வாங்கியது   
      25 மின் விசிறிகள்  - மின்விசிறி ஒன்று  ரூ  1,250 விதம் 
    10 பாலன் & சன்ஸிடமிருந்து கடனுக்கு வாங்கியது    
      20 மாவரைக்கும் இயந்திரங்கள் இயந்திரம் ஒன்று ரூ 2,500 வீதம்  
      10 மிக்ஸகள்  - மிக்ஸீ ஒன்று 3000 விதம்      
    20 குமாரரிடமிருந்து  கடனுக்கு கணிப்பொறி ஒன்று வாங்கியது ரூ 35,000

               

  17. 2017 ஜுன் மாதத்திற்கான பாண்டீஸ்வரி என்பவரின் பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து தனிப்பத்தி ரொக்க ஏட்டைத் தயாரிக்கவும்

    2017 ஜூன்   ரூ
    1 ரொக்கத்துடன் வணிகம் தொடங்கியது 50,000
    8 வாடகை ரொக்கமாகச் செலுத்தியது 4,000
    10 ரொக்கம் செலுத்தி அச்சுப்பொறி வாங்கியது 7,500
    11 ரொக்கக் கொள்முதல் 15,000
    14 ரொக்க விற்பனை 10,000
    17 ரொக்கமாகப் பெற்ற கழிவு 6,000
    19 கடன் மீதான வட்டி ரொக்கமாகச் செலுத்தியது 2,000
    20 சொந்த செலவுக்கு பணம் எடுத்தது 3,000
    21 துரித அஞ்சல் கட்டணம் ரொக்கமாகச் செலுத்தியது 3,500
  18. 2017 மே மாதத்திற்கான பாத்திமா என்பவரின் தள்ளுபடி, ரொக்கம் மற்றும் வங்கி பத்திகளுடைய ரொக்க ஏட்டில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளைப் பதிவு செய்க.

    2017 மே   ரூ
    1 ரொக்க இருப்பு 17,200
      வங்கி ரொக்கம் 43,000
    4 ராஜ்குமாரிடமிருந்து பெற்ற காசோலை 6,500
    9 குமாருக்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது 12,000
    15 மடிக்கணினி, அலுவலகப் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டு அதற்குரிய
    தொகையை தேசிய மின்னணு நிதிபரிமாற்றம் மூலம் செலுத்தியது
    21,000
    17 வங்கியிலிருந்து பணம் எடுத்தது 9,600
    24 சரக்கு ரொக்கத்திற்கு வாங்கியது சரக்கு காசோலை மூலம் வாங்கியது 18,200
    25 ரொக்கம் வங்கியில் செலுத்தியது 14,000
    28 அலவலர்களுக்கான சம்பளம் காசசோலை மூலம் வழங்கப்பட்டது 8,000
    29 பங்காதாயம் ரொக்கமாகப் பெறப்பட்டது 4,700
    30 அலுவலக வாடகை ரொக்கமாகச் செலுத்தியது 12,000
  19. பின்வரும் நடவடிக்கைகளைக் கொண்டு ரொக்கம்,வங்கி மற்றும் தள்ளுபடி பத்திகள் கொண்ட ரொக்க எடு தயார் செய்க.

        ரூ
    2018 ஜனவரி 1 ரொக்க இருப்பு  75,000
      வங்கி இருப்பு  45,000
    3 வங்கியில் செலுத்தியது  60,000
    4 அறைகலன் வாங்கி காசோலை விடுத்தது   7,500
    5 பழுதுபார்ப்புச் செலவு  650
    6 காசோலை விடுத்து வாங்கிய சரக்கு  12,500
    10 சந்திரனிடம் பெற்ற காசோலை  21,000
      தள்ளுபடி அனுமதித்தது  200
    13 முத்துவுக்கு வழங்கிய காசோலை  11,500
      தள்ளுபடி பெற்றது  150
    15 சாரதி நமது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தியது. 15,000
    20 அலுவலகச் செலவிற்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது  2,500
    23 சொந்த தேவைக்கு வங்கியிலிருந்து பணம் எடுத்தது  500
  20. பின்வரும் விவரங்களிலிருந்து காமாட்சி நிறுவனத்தின் 2018 மார்ச் 31-ம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க.
    (அ) ரொக்க  ஏட்டின் படி பற்றிருப்பு ரூ.10,500
    (ஆ) வங்கியில் செலுத்திய காசோலை ரூ.5,500 வங்கியால் வரவு வைக்கப்பட்டது. ஆனால் ரொக்க  ஏட்டில் இரு முறை பதியப்பட்டது.
    (இ) விடுத்த காசோலை ரூ.7,000 செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது குறித்து ரொக்க  ஏட்டில் பதிவு இல்லை.
    (ஈ) காசோலை புத்தகக் கட்டணம் ரூ.200 வங்கியால் பற்று வைக்கப்பட்டது ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை.
    (உ) பணம் வைப்பு இயந்திரம் வாயிலாக வாடிக்கையாளர் செலுத்திய ரூ.1,000 ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை

  21. கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு  வீரா நிறுவனத்தின் 2017 டிசம்பர் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியலைத் தயார் செய்க
    (அ) வங்கி அறிக்கையின் படியான வரவிருப்பு ரூ 6,000
    (ஆ) தேசிய மின்னணு பணப்பரிமாற்றம் (NEFT) வாயிலாக வங்கியால் பெறப்பட்ட தொகை  ரூ 3,500 ரொக்க ஏட்டில் இரு முறை பதிவு செய்யப்பட்டுள்ளது.
    (இ) மறுக்கப்பட்ட காசோலை  தொகை  ரூ 2,500 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.

  22. பின்வரும் தகவல்களைக் கொண்டு  வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்க
    (அ) வங்கி அறிக்கையின் படி வங்கி மேல்வரைப்பற்று ரூ.6,500
    (ஆ) விடுத்த காசோலை  இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது ரூ 8,750
    (இ) செலுத்திய காசோலை  இன்னும் வங்கியால் வரவு வைக்கப்படாதது ரூ.500
    (ஈ) பணம் வைப்பு இயந்திரம் வழியாக வாடிக்கையாளர் நேரடியாக செலுத்தியது ரூ.3,500
    (உ) வங்கிக் கட்டணம் ரொக்க  ஏட்டில் பதியப்படாதது ரூ 2,00
    (ஊ) நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய வாடகை ரூ 1,980

  23. திரு.இளவரசியின் ரொக்க ஏடு ரூ8,000 வங்கி மேல்வரைப் பற்றிருப்பை 31 அக்டோபர் 2015ல் காட்டியது.ரொக்க ஏட்டையும் வங்கி செல்லோட்டையும் ஒப்பு நோக்கும் போது பின்வருபவை தெரிய வந்தன.
    [அ] வங்கியில் செலுத்திய ரூ 1,400 க்கான காசோலை 31 அக்டோபர் வரை வசூலாகவில்லை.
    [ஆ] விடுத்த காசோலைகளில் ரூ 720 அக்டாபர் 31 வரை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.
    [இ] வங்கியால் பதிவு செய்த மேல்வரைப் பற்று மீதான வட்டி ரூ 110 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
    [ஈ] செப்டம்பர் 1ல் தள்ளுபடி செய்த ரூ 800 மதிப்புள்ள பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுக்கு பணம் மறுக்கப்பட்டது.
    [உ] வாடிக்கையாளர் வங்கியில் நேரடியாக செலுத்தியது ரூ 450 க்கு ரொக்க ஏட்டில் பதிவு இல்லை.
    31.3.2015 ல் வங்கி சரிகட்டும் பட்டியலை தயாரிக்கவும். 

  24. பின்வரும் பிழைகள் இருப்பா்பாய்வு தயாரித்த பின் கண்டறியப்பட்டவை. அவற்றைத் திருத்தம் செய்யவும்.
    (அ) அனிதாவுக்கு ரூ.50 செலுத்தியது தவறாக வனிதாவின் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
    (ஆ) ரூ.500-க்கு அறைகலன் விற்றது விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
    (இ) நடராஜனிடமிருந்து கடனுக்கு ரூ.750-க்கு சரக்கு கொள்முதல் செய்தது தவறாக விற்பனை ஏட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
    (ஈ) இயந்திரம் நிறுவுவதற்கு செலுத்திய கூலி ரூ.1,000 கூலிக்கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.

  25. இருப்பாய்வு தயாரிக்கும்போது கண்டறியப்பட்ட, பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
    (அ) ரொக்கக் ஏட்டின் பற்றுப் பக்கத்தில் உள்ள தள்ளுபடிப் பத்தியின் மொத்தம் ரூ.225 இருமுறை பேரேட்டில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (ஆ) பொன்னரசனால் ரூ.75 மதிப்புள்ள சரக்கு திருப்பித் தரப்பட்டு அவர் கணக்கில் எடுத்து எழுதப்படாமல் உள்ளது.
    (இ) யாழினியிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ.1,000 பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
    (ஈ) வட்டி பெற்றது ரூ.300 இன்னும் பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
    (உ) ரூ.100 வாடகை செலுத்தியது வாடகைக் கணக்கில் ரூ.10 என எடுத்து எழுதப்பட்டுள்ளது.

  26. இராம் ஆடை நிறுவனம் ஏப்ரல் 1, 2014 அன்று ரூ. 2,00,000 மதிப்புள்ள ஓர் இயந்திரத்தை நிலா நிறுவனத்திடமிருந்து கடனாக வாங்கியது. அதற்கு நிறுவுகைச் செலவாக ரூ. 10,000 செலவழித்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கப்பட்டது. முதல் மூன்று ஆண்டுகளுக்கு இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கினை தயாரிக்கவும். கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ல் முடிக்கப் பெறுகின்றன.

  27. ஜனவரி 1, 2015 அன்று பயன்படுத்தப்பட்ட ஒரு இயந்திரம் ரூ. 58,000க்கு வாங்கப்பட்டு பழுதுபார்ப்புக்காக ரூ. 2,000 செலவு செய்யப்பட்டது. ஜுலை 1, 2017 அன்று அந்த இயந்திரம் ரூ. 28,600க்கு விற்கப்பட்டது. குறைந்து செல் மதிப்பு முறையில் தேய்மானம் ஆண்டுக்கு 10% எனக்கொண்டு 2011 முதல் 2013 வரை இயந்திரக் கணக்கினை தயாரிக்கவும். கணக்குகள் ஆண்டுதோறும் டிசம்பர் 31ல் முடிக்கப் பெறுகின்றன.

  28. கணேஷ் அன்ட் கோ 2010 அக்டோபர் 1,அன்று ரூ. 3,00,000 மதிப்புள்ள இயந்திரத்தை வாங்கியது இயந்திரத்தை நிறுவுவதற்காக ரூ.20,000 செலவு செய்யப்பட்டது. நிறுவனம் ஆண்டுதோறும் 10% வீதம் நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் நீக்கியது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று கணக்குகள் முடிக்கப் பெறுகின்றன.
    இயந்திரம் கணக்கையும், தேய்மானம் கணக்கையும் முதல் மூன்று ஆண்டுகளுக்குத் தயார் செய்யவும்.

  29. பின்வருவனவற்றை முதலினம் அல்லது வருவாயினம் என வகைப்படுத்தவும்.
    (i) இரயில்வேத் துறைக்கு, இரயில் தண்டவாளம் அமைக்க செலுத்திய தொகை ரூ 50,000.
    (ii) பழைய அறைகலன் விற்றதில் ஏற்பட்ட நட்டம்.
    (iii) சரக்கு விற்பனையின் பேரில் செலுத்திய ஏற்றிச்செல் கட்டணம்.

  30. பாரத் நிறுமம் கீழ்க்கண்ட செலவுகளைச் செய்ததது. முதலின, வருவாயின மற்றும் நீள்பயன் வருவாயினச் செலவுகளாகப் பிரிக்கவும்.
    1. விற்பனையைப் பெருக்குவதற்கு விற்பனை மேலாளர் ஐப்பான் சென்றுவர பயணச் செலவு செய்தது  ரூ 60,000
    2. இயந்திரம் நிறுவுவதற்கு செலவு செய்தது ரூ 500.
    3. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக செலவு செய்தது ரூ 6,00,000
    4. எரிபொருள் வாங்க செலவு செய்தது ரூ 500.   

  31. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து அப்துல் ரகுமான் என்பவரின் 2016, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.
    31.12.2016 அன்று இறுதிச் சரக்கிருப்பு ரூ 2,000 என்று மதிப்பிடப்படுகிறது

    விவரம் ரூ விவரம் ரூ
    தொடக்கச் சரக்கிருப்பு 500 கொள்முதல் 1,300
    விற்பனை 5,000 கூலி 700
    பெற்ற தள்ளுபடி 500 சம்பளம் 500
    கட்டடம் 50,000 முதல் 50,000
    கைரொக்கம்  4,500    
  32. 2016, மார் ச் 31 ஆம் நாளைய இருப்பாய்வின் ஒரு பகுதி:

     விவரம்   பற்று ரூ 
     பற்பல கடனாளிகள்          52,000
     வாராக்கடன்  1,000

    சரிக்க ட்டுதல்க ள்:
    (i) கூடுதல் வாராக்கடன் ரூ 2,000
    (ii) கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும் உரிய சரிக்கட்டுப் பதிவு தந்து இவ்விரங்கள் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

  33. பின்வரும் இருப்புகளிலிருந்து 2017, டிசம்பர் 31 ற்கான இலாபநட்டக் கணக்கு தயாரிக்க.

     விவரம்   ரூ   விவரம்   ரூ 
      மொத்த இலாபம்        50,000   பெற்ற வாடகை       2,000
      சம்பளம் 18,000   பெற்ற தள்ளுபடி 3,000
      அலுவலக வாடகை செலுத்தியது    12,000   வெளித் தூக்குக் கூலி   2,500
      விளம்பரம் 8,000   தீக்காப்பீட்டு முனைமம்    6,500

    சரிக்கட்டுதல்கள்:
    (அ) பெற வேண்டிய வாடகை இன்னமும் பெறப்படாதது ரூ 500
    (ஆ) தீக்காப்பீட்டு முனைமம் முன்கூட்டிச் செலுத்தியது ரூ 1,500
    (இ) மேலாளருக்கான கழிவு, அக்கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபத்தில் 10% அனுமதிக்கவும்.

  34. கீழ்க்கண்ட விவரங்கள் இருப்பாய்விலிருந்து பெறப்பட்டன.

    விவரம் பற்று ரூ வரவு ரூ
    பற்பல கடனாளிகள் 50,000  
    கடனாளிகள் மீது தள்ளுபடி 1,000  
    வாராக்கடன் 3,000  
    வாரா ஐயக்கடன் ஒதுக்கு   5,000
    கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு   2,000

    கூடுதல் தகவல்கள்:
    (அ) கூடுதல் வாராக்கடன் ரூ 1,000
    (ஆ) கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்
    (இ) கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்கவும் தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து இவ்விவரம் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்

  35. தேவி என்பவரின் 2016 டிசம்பர் 31 ஆம் நாளைய பேரேட்டுக் கணக்குகள் பின்வருமாறு

     விவரம்   ரூ   விவரம்   ரூ 
      கொள்முதல்        35,000   நற்பெயர்        40,000
      சம்பளம் 11,750   பற்பல கடனாளிகள்    20,500
      எடுப்புகள் 4,500   அறைகலன் 31,000
      தொடக்கச் சரக்கிருப்பு    6,250   பொதுச் செலவுகள்  3,250
      முதல்  50,000   பெற்ற கழிவு 2,750
      விற்பனை 78,500   கடன்  44,000
      உள்தூக்குக் கூலி 21,800   வங்கி ரொக்கம் 3,100
      வாராக்கடன் 600   வாராக்கடன் ஒதுக்கு    2,500

    2016, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார இலாபநட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
    (அ) 31.12.2016 அன்று இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 5,800
    (ஆ) வாராக்கடன் ரூ 500 போக்கெழுதவும்
    (இ) வாராக்கடன் ஒதுக்கு 5% உருவாக்கவும்
    (ஈ) கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு 2% உருவாக்கவும்.

  36. சங்கீதாவின் ஏடுகளில் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்க.

     விவரம்   ரூ   விவரம்   ரூ 
      முதல்     20,000   சம்பளம்         6,600
      பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு     8,000   நிறுவுகைச் செலவுகள்    4,500
      செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு     10,500   விளம்பரம் 2,300
      கொள்முதல் 75,000   அறைகலன் 10,000
      விற்பனை 95,000   வங்கி ரொக்கம் 3,200
      தொடக்கச் சரக்கிருப்பு 12,000   இதர வரவுகள் 600
      எடுப்புகள் 4,500    

    சரிக்கட்டுதல்கள்:
    (அ) மார்ச் 31, 2018 அன்று இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 14,200
    (ஆ) சங்கீதாவின் வருமானவரி செலுத்தியது ரூ 800
    (இ) எடுப்புகள் மீது வட்டி 12% ஆண்டுக்கு அனுமதிக்கவும்.
    (ஈ) மேலாளருக் குரிய கழிவு, கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபத்தில் 10% தரப்பட வேண்டும்.

  37. 31.3.2018 அன்றைய இருப்பாய்வின் படி பற்பல கடனாளிகள் ரூ 1,25.000.
    சரிக்கட்டுதல்கள்:
     1.ரூ 5,000 வாராக்கடன் போக்கெழுதுக.
    2.பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.
    3.கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக.
    சரிகட்டுப்பதிவுகள் தந்து இவ்விவரங்கள் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.      

  38. மூன் நிறுமத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான விற்பனை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    (அ) பை விளக்கப்படம்
    (ஆ) டோனட் விளக்கப்படம்

      A B C D E F G
    1 City Chennai Coimbatore Madurai Trichy Tanjore Tirunelveli
    2 SALES
    (ரூ in lakhs)
    500 350 250 250 200 150
  39. கணினிமயக் கணக்கியல் முறையில் இயல்புகள் யாவை? 

  40. கணினி அமைப்புடன் தொடர்புடைய ஆட்கள் பற்றி குறிப்பு வரைக. 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Accountancy Public Exam March 2019 Important 5 Marks Questions )

Write your Comment