+1 Public Exam March 2019 Important Creative 3 Mark Questions and Answers

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 150
    50 x 3 = 150
  1. கணக்கியலின் நோக்கங்கள் யாவை?

  2. கணக்கியல் சுழலின் படிநிலைகளை விளக்குக.

  3. கணக்கியலின் நோக்கங்கள் யாவை?

  4. கணக்கியலின் பணிகளை விளக்குக.

  5. அகப் பயனீட்டாளர்களை பற்றி எழுதுக.

  6. வணிகத்தன்மை கருத்து பற்றி விளக்குக.

  7. நிலைத்தன்மை மரபு குறித்து சிறு குறிப்பு வரைக

  8. முன்னெச்சரிக்கை மரபு பற்றி விளக்குக.

  9. அடக்கவிலைக் கருத்துகளின் குறைபாடுகள் யாவை?

  10. குறிப்பு வரைக: (i) அடக்கவிலைக் கருத்து
    (ii) வருவாய் தீர்வு கருத்து

  11. கணக்கியல் தரநிலைகளின் தேவை யாது?

  12. குறிப்பு வரைக (i) பற்றுக் குறிப்பு
    (ii) வரவுக் குறிப்பு

  13. நடவடிக்கை என்றால் என்ன/ அதன் வகைகளை எழுதி விளக்குக.

  14. குறிப்பேட்டின் நன்மைகள் யாவை?

  15. இருப்பாய்வின் இயல்புகள் யாவை?

  16. இருப்பாய்வு தயாரிக்கும் முறைகளை விளக்குக.

  17. அனா மத்துக் கணக்கு என்றால் என்ன? அது எப்பொழுதும் தோற்றுவிக்கப்படுகிறது?

  18. மாற்றுச் சீட்டின் தன்மைகள் யாவை?    

  19. குறிப்பு வரைக : அ) பெருதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு  ஆ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு  

  20. விற்பனை ஏட்டின் படிவத்தினைத் தருக.

  21. வியாபாரத் தள்ளுபடிக்கும், ரொக்கத் தள்ளுபடிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

  22. ரொக்க ஏட்டின் முக்கியத்துவம் யாவை?

  23. ரொக்க ஏட்டின்  நன்மைகள் யாவை?

  24. சில்லறை ரொக்க ஏடு எவ்வாறு இருப்பு கட்டப்படுகிறது?

  25. சில்லறை ரொக்க ஏட்டிலிருந்து எடுத்தெழுதல் பற்றி குறிப்பு வரைக.

  26. எப்போது வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுகிறது?  

  27. ரொக்க ஏட்டில் பதிவு செய்வதில் ஏற்படும் தவறுகள் யாவை? 

  28. மாதிரி வங்கிச் சரிகட்டும் பட்டியல் ஒன்றைத் தருக.   

  29. கீழ்க்காணும் தகவல்கலிருந்து  திரு.உதயக்குமார்  அவர்களின்  வங்கிச் சரிகட்டும்  பட்டியலைத் தயாரிக்க .

    ரொக்க ஏட்டின் இருப்பு  ரூ,15,000
    வங்கியில் செலுத்தியும் வசூலாகாதவை    ரூ. 1,000
    அளித்த காசோலைகள் செலுத்துகைக்கு  முன்னிலைப்படுத்தப்படாதவை        ரூ. 1,500 
    வங்கி அளித்த வட்டி  ரூ . 200
  30. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து. 2003 மார்ச்  31 - ல்  திரு முத்து அவர்களின்  ரொக்க ஏடு உணர்த்தும்  வங்கியிருப்பை கண்டுபிடி.
    1. 31.03.2008 - ல் வங்கி அறிக்கையின் வரவிருப்பு  ரூ 5,000
    2. வங்கிக் கட்டணம்  ரூ 120 ரொக்க ஏட்டில்  பதியப்படவில்லை.
    3. ஏற்கனவே ரூ 7,000 - க்கு  செலுத்திய  காசோலைகளில்  ரூ 2, 000 காசோலை  இன்னும்  வங்கியாளரால்  வரவு வைக்கப்படவில்லை.
    4. ஏற்கனவே  ரூ 9,000 - க்கு  விடுத்த காசோலைகளில்  ரூ 7,600 - க்கான  காசோலைகள்  மட்டுமே  வங்கியில்  முன்னிலைப்படுத்தபட்டிருக்கின்றன.
    5. வாங்கியாளர்  நேரடியாக  வசூலித்த  பங்கா தாயம்  ரூ 800 இன்னும் ரொக்க  ஏட்டில்  பதியப்படவில்லை.
    6. 31.03.08 - க்கு  முன்னர் காசோலை  அவமதிக்கப்பட்டது. ரூ 1,200 ரொக்க  ஏட்டில்  பதியவில்லை.                                            

  31. 2016 மார்ச் 31 - ல் சுதா நிறுவனத்தின்  ரொக்க ஏடு  ரூ 3,000 வங்கி ரொக்க  இருப்பைக் காட்டியது.ஆனால் வங்கியில் பணம் பெற  முன்னிலைப்படுத்தப்படாத  காசோலைகள்  ரூ 370, ரூ 350 மற்றும் ரூ 200 ஆகும்  மற்றும்  820 மதிப்புள்ள  காசோலைகள் வங்கியில் செலுத்தியும் பணமாக்கப்படவில்லை.அந்நாளில்  வங்கி  அறிக்கையின் படியான  இருப்பைக் கணக்கிடுக.                

  32. திரு.மணிகண்டன் அவர்களின் பின்வரும் விவரங்களைக் கொண்டு  .2017 மார்ச்  31 - க்கு  வங்கி  சரிகட்டும்  பட்டியல் தயாரிக்கவும்.
    1. பின்வரும் காசோலைகள் மார்ச்  மாதத்தில் நிறுவனத்தின் நடப்புக் கணக்கில்  செலுத்தப்பட்டாலும்  வங்கி  ஏப்ரலில் வரவு செய்தது.
    2. பின்வரும் காசோலைகள் மார்ச்  மாதத்தில் விடுக்கப்[பட்டன.அனால் ஏப்ரல் மாதத்தில் பணமாக்கப்பட்டது.
    3. வாடிக்கையாளரிடமிருந்து  பெறப்பட்ட  ரூ 200 - க்கான  காசோலை  மார்ச்  ,மாதத்தில் ரொக்க ஏட்டின்  வங்கிப்  பத்தியில்  பதிவு செய்யப்பட்டது.அனால் ஏப்ரல் மாதத்தில் தான் வங்கியில் செலுத்தப்பட்டது.
    4. வங்கி அறிக்கையானது வட்டிக்காக  வரவாக  ரூ 500 ம்  வங்கிக் கட்டணத்திற்காக  பற்றாக  ரூ 200 -ம் காட்டியது.
    5.31 03.017 ம் நாளைய  ரொக்க ஏட்டின் படி இருப்பு  ரூ 36,000                                                   

  33. பின்வரும் விவரங்களைக் கொண்டு , 31 டிசம்பர் 2016 - க்கான  உதயம் நிறுவனத்தின்  வங்கி செல்லேட்டில்  காணக்கூடிய  இருப்பினைக் காணக்கிடவும்.
    1.31 டிசம்பர்  2016 ரொக்க  ஏட்டின்படி  வங்கிமேல்வரைப்பற்று  ரூ 63,400
    2. 31  டிசம்பரில் முடியும் 6 மாதத்திற்கான மேல்வரைப்பற்று  மீதான வட்டி  ரூ 1,600 செல்லேட்டில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.
    3. வங்கிக் கட்டணம் ரூ300 செல்லேட்டில் பதியப்பட்டுள்ளது.
    4. ரூ 11,680 மதிப்பு கொண்ட காசோலை  விடுக்கப்பட்டும்  டிசம்பர்  31 வரை பணமாக்கப்பதவில்லை.
    5. ரூ 21,700 மதிப்புள்ள  காசோலைகள்  வங்கியில் செலுத்தப்பட்டு  . இன்னும் வசூலாகவில்லை.
    6. வங்கி வசூலித்த முதலீடுகள்  மீதான வட்டி  ரூ 12,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.                                               

  34. திரு.இனியன் என்பவரின் ரொக்க ஏடு  ரூ 16,000 வங்கி மேல்வரை  பற்றிருப்பை  31 ஆகஸ்ட் 2017 - ல்  காட்டியது.ரொக்க ஏட்டையும்  வங்கி அறிக்கையும்  ஒப்புநோக்கும் போது  . பின்வருபவை தெரிய வந்தன.
    1. வங்கியில் செலுத்திய  ரூ 2,800 - க்கான  காசோலை 31 ஆகஸ்ட்  வரை வசுலாகவில்லை.
    2. விடுத்த காசோலைகளில்  ரூ 1,440 ஆகஸ்ட் 31 வரை  செலுத்ததகைக்கு  முன்னிலைப்படுத்தப் படவில்லை.
    3. வங்கியால் பதிவு செய்த மேல்வரைப்பற்று மீதான வட்டி  ரூ 220 ரொக்க ஏட்டில்  பதியப்படவில்லை.
    4. ஜூலை  1 - ல் தள்ளுபடி செய்த ரூ 1,600 மதிப்புள்ள பெறுதற்குரிய  மாற்றுச்சீட்டுக்கு  பணம்  மறுக்கப்பட்டது.
    5. வாடிக்கையாளர்  வங்கியில்  நேரடியாக  செலுத்தியது  ரூ 900 க்கு  ரொக்க ஏட்டில்  பதிவு இல்லை .31-08-2017 ல் வங்கி சரிகட்டும்  பட்டியல் தயாரிக்கவும்.                            

  35. பின்வரும் விவரங்களிலிருந்து  திரு.ஜோசப்  அவர்களின்  வங்கி அறிக்கையின்  படியான  இருப்பினை  2018 மார்ச்  31 -ல் காண்க.
    1. 2018 மார்ச்  31 - ல் ரொக்க  ஏட்டின் படியான வங்கியிருப்பு  ரூ 11,500
    2. விடுத்த காசோலைகள்  பணமாக்கப்படாதவை  ரூ 1,750
    3. வங்கியில்  செலுத்திய  காசோலைகள்  31 மார்ச்  2018 - ல் தீர்வு செய்யப்படாது  ரூ 2,150.
    4. வாங்கி வசூல் செய்த  முதலீடுகள்  மீது வட்டி  ரூ 275 குறித்து  ரொக்க  ஏட்டில்  பதிவு இல்லை.
    5. உள்ளுர்  காசோலை  நேரடியாக வங்கியில்  செலுத்தியது. ரூ 250 குறித்து  எட்டில்  பதிவு இல்லை .
    6. வங்கி அறிக்கையின்படி வங்கிக் கட்டணம் ரூ 95/                         

  36. கணக்கியலின் பல்வேறு நிலைகளில் நிகழும் பிழைகளை எழுதுக.

  37. இருப்பாய்வு தயாரிக்கும் முன் பிழைகளைக் கண்டறிய செய்ய வேண்டியன யாவை? 

  38. தேய்மானத்தின் இயல்புகள் யாவை?

  39. தேய்மானத் தொகையை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?

  40. திரு.அப்துல் 2001 ஏப்ரல் 1,அன்று ரூ. 2,00,000 மதிப்புள்ள இயந்திரத்தை வாங்கினார். மூன்று ஆண்டுகள் அவ்வியந்திரம் பயன்படுத்தப்பட்ட பிறகு ரூ.1,60,000 க்கு விற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தேய்மானம் 10% குறைந்து செல் இருப்புமுறையில் விளக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கணக்கேடுகள் மார்ச் 31அன்று முடிக்கப் பெறுகின்றன. இயந்திரம் விற்பனை மீதான இலாபம் அல்லது நட்டம் காண்க.

  41. முதலினா மற்றும் வருவாயினச் செலவுகளைத் தீர்மானிக்கும் கருதுகோள்கள் யாவை?

  42. வருவாயினச் செலவின் இயல்புகள் யாவை?

  43. நீள்பயன் வருவாயினச் செலவின் இயல்புகள் யாவை?

  44. வியாபாரக் கணக்கு தயாரிக்க வேண்டியதன் தேவையை விளக்குக.

  45. 2. இருப்பு நிலைக் குறிப்பின் இயல்புகள் யாவை?.                                                                     

  46. நிலைச் சொத்தின் வகைகளை விளக்குக.                             

  47. பொறுப்புகளின் வகைகளை எழுதுக..                                            

  48. 31 டிசம்பர் 2017ல் முடியும் ஆண்டிற்கான வியாபார கணக்கினை தயாரிக்கவும்.

      ரூ
    தொடக்க சரக்கிருப்பு  5,700
    கொள்முதல்  1,58,000
    கொள்முதல் திருப்பம்  900
    விற்பனை  2,62,000
    விற்பனை திருப்பம்      600

      இறுதி சரக்கிருப்பு ரூ 86,000 என கணக்கிடப்பட்டுள்ளது.    

  49. 2015 மார்ச் 31 ஆம் நாளைய இருப்பாய்வின்படி சம்பளம் கொடுத்தது ரூ 1,50,000, மார்ச் 2005 க்கான சம்பளம் ரூ4,000 இன்னமும் கொடுபடவில்லை. உரிய சரிக்கட்டுப்பதிவு தந்து இவை இறுதிக் கணக்குகளில் எவ்வாறு இடம் பெறும் எனக் காட்டுக.   

  50. 31.3.2016 அன்றை இருப்பாய்வு ரூ 40,000 காப்பீட்டு முனைமம் செலுத்தியாக காட்டியது முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 5,000.
    சரிகட்டுப்பதிவு தந்து இவ்விவரம் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.    

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Accountancy Public Exam March 2019 Important Creative 3 Mark Questions and Answers )

Write your Comment