+1 Public Exam March 2019 Important Creative Questions and Answers

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 200
    53 x 2 = 106
  1. கணக்கியலை வரையறு.

  2. கணக்கியல் தகவல்களில் ஆர்வமுடைய நபர்கள் யாவர்?

  3. முதல் என்றால் என்ன?

  4. குறிப்பு வரைக: அ. வருவாய், ஆ. செலவு

  5. கணக்கியல் கருத்துக்கள் என்றால் என்ன?

  6. கணக்கியலில் முழு வெளியீட்டு கொள்கை என்றால் என்ன?

  7. கணக்கேடுகள் பராமரிப்பின் இயல்புகள் யாவை?

  8. "உண்மை ஆதாரக் கருத்தது" - குறிப்பு வரைக.

  9. ஆதார ஆவணங்கள் என்றால் என்ன?

  10. சொத்து கணக்கு என்றால் என்ன?

  11. பற்று குறிப்பு என்றால் என்ன (Debit Note)?

  12. ரொக்க நடவடிக்கை என்றால் என்ன?

  13. இரட்டைப்பதிவுமுறையின் வரைவிலக்கணம் எழுதுக.

  14. எடுத்தெழுதுதல் என்றால் என்ன?

  15. கணக்கை இருப்புக் கட்டுதல் என்றால் என்ன?

  16. இறுதி இருப்பு என்றால் என்ன?

  17. இருப்பாய்வின் படிவம் தருக

  18. இருப்பாய்வு வரைவிலக்கணம் தருக.

  19. இருப்பாய்வின் நன்மைகளைக் கூறுக.

  20. கொள்முதல் ஏடு என்றான்றால் என்ன?

  21. பற்றுக்குறிப்பு என்றால் என்ன?

  22. மாற்றுச் சீட்டின் வரைவிலக்கணம் தருக.

  23. வியாபாரத் தள்ளுபடி என்றால் என்ன?    

  24. மாற்றுப் பதிவுகள் என்றால் என்ன?  

  25. மாற்றுச் சீட்டை ஒய்வுபடுத்துதல் பற்றி குறிப்பு எழுதுக.

  26. ரொக்க ஏட்டின் வகைகள் யாவை?

  27. இருபத்தி ரொக்க ஏட்டின் படிவம் தருக.

  28. சில்லறை ரொக்க ஏடு என்றால் என்ன?

  29. பாகுப்படுத்தப்பட்ட சில்லரை ரொக்க ஏட்டின் மாதிரிப்படிவம் தருக.

  30. சாதாரண சில்லறை ரொக்க ஏட்டின் ஏடு என்றால் என்ன?

  31. வங்கிச் சரிகட்டும் பட்டியல் என்றால் என்ன?

  32. வங்கி சரிகட்டும் பட்டியலின் தேவை யாது?  

  33. செல்லேட்டில் குறைவான  இருப்பை  விளைவிக்கக் கூடிய  ஐந்து இனங்களை வரிசைப்படுத்துக.     

  34. விதிப்பிழை என்றால் என்ன?

  35. ஈடுசெய் பிழைகள் என்றால் என்ன?

  36. பின்வரும் பிழைகளை, இருப்பாய்வு தயாரித்த பின் திருத்தம் செய்யவும்.
    (அ) ராமுவிற்கு ரூ.1,000 சம்பளம் செலுத்தியது தவறாவறாக அவரின் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
    (ஆ) கடனுக்கு பாலுவுக்கு ரூ.450 க்கு சரக்கு விற்றது பாலபாலன் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது

  37. விடுபிழை என்றால் என்ன?

  38. ஒரு நிறுமம் ரூ. 1,80,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவுகைச் செலவாக
    ரூ. 10,000 செலவழித்தது. எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 5 ஆண்டுகள் மற்றும் இறுதி மதிப்பு
    ரூ. 15,000. ஆண்டுதோறும் நீக்கப்படவேண்டிய தேய்மானத் தொகையை நேர்க்கோட்டு முறையில் கணக்கிடவும்.

  39. தேய்மானம் கணக்கிடும் முறைகள் யாவை?

  40. தேய்மான நிதிமுறை என்றால் என்ன?

  41. நிலைத் தவணை முறை என்றால் என்ன? 

  42. மறு மதிப்பீட்டு முறை குறிப்பு வரைக.

  43. பின்வருபவை முதலினச் செலவா, வருவாயினச் செலவா அல்லது நீள்பயன் வருவாயினச் செலவா என்பதை காரணத்துடன் விளக்கவும்.
    (i) புதிய பொருளை அறிமுகப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட விளம்பரச்செலவுகள் ரூ 10 கோடி
    (ii) புதிய இயந்திரத்தைக் கொள்முதல் செய்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து நிறுவுவதற்கானச் செலவு.
    (iii) புதிதாக இயந்திரம் வாங்கியதன் மீதான ஏற்றிச் செல் செலவு, காப்பீட்டுக் கட்டணம் மற்றும் வண்டிக் கட்டணம்.

  44. முதலினச் செலவு என்றால் என்ன?

  45. நிலைச் சொத்துகள் என்றால் என்ன?

  46. வியாபாரக் கணக்கு தயாரிப்பதன் நோக்கங்கள் யாவை?

  47. தொடக்கச் சரக்கிருப்பு என்றால் என்ன?    

  48. இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கப்படும் முறைகள் யாவை?   

  49. கொடுபட வேண்டிய செலவு என்றால் என்ன?

  50. பயன்தீரா வருமானம் என்றால் என்ன? 

  51. வன்பொருள் என்றால் என்ன?

  52. ஆயத்த மென்பொருள்களுக்கான உதாரணங்களில் ஏதேனும் இரண்டைத் தரவும்

  53. கணக்கியலில் கணினியின் பயன்பாட்டினை எழுதுக. 

  54. 31 x 3 = 93
  55. கணக்கியலின் பிரிவுகளை சுருக்கமாக கூறுக.

  56. கணக்கியல் தகவல்களில் பின்வரும் பயனீட்டாளர்கள் ஏன் ஆர்வமாக உள்ளனர்? (அ) முதலீட்டாளர்கள்  (ஆ) அரசு

  57. கணக்கியலின் பண்புகளை எழுதுக.

  58. ‘பணம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே கணக்கியலில் பதியப்படுதல் வேண்டும்’ – விவரி.

  59. கணக்கியல் தரநிலைகள் குறித்து சிறு குறிப்பு வரைக.

  60. நிலைத்தன்மை மரபு குறித்து சிறு குறிப்பு வரைக

  61. பின்வருவனவற்றை கணக்கியல் சமன்பாட்டின் படி பதிவு செய்து காட்டுக.

     (அ) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது       ரூ 60,000
     (ஆ) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது   ரூ 20,000
     (இ) ரூ 10,000 மதிப்புள்ள சரக்கினை விற்பனைச் செய்தது       ரூ 15,000
     (ஈ) வாடகை ரொக்கமாக செலுத்தப்பட்டது   ரூ 500
  62. ஆள்சார் கணக்கின் மூன்று வகைகளைக் கூறுக.

  63. இரட்டைப்பதிவு கணக்கு முறையின் விதிகள் யாவை?

  64. பேரேடு என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் யாவை?

  65. பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து 2018 ஜனவரி மாதத்திற்கான ரொக்க கணக்கைத் தயாரிக்கவும்.

    ஜன 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.62,000
    3 ரொக்கம் கொடுத்து சரக்கு வாங்கியது ரூ.12,000
    10 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது ரூ.10,000
    12 கூலி ரொக்கமாகச் செலுத்தியது ரூ.4,000
    25 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது ரூ.6,000
  66. முரளி என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினை தயாரிக்கவும்

    விவரம் ரூ விவரம் ரூ
    விற்பனை 35,000 தணிக்கைக் கட்டணம் 1,000
    வட்டி செலுத்தியது 350 நகர நுழைவு வரி 8,000
    உள் திருப்பம் 2,500 நிலம் 90,000
    தேய்மானம் 2,400 முதல் 60,000
    அலுவலக வாடகை 2,000 வங்கி மேல்வரைப்பற்று 11,250
  67. இருப்பாய்வின் குறைபாடுகள் யாவை?

  68. இருப்பாய்வு தயாரிக்கும் முறைகளை விளக்குக.

  69. சிறு குறிப்பு வரைக
    (அ) மாற்றுச்சீட்டில் மேலெழுதுதல்
    (ஆ) மாற்றுச்சீட்டை தள்ளுபடி செய்தல்

  70. பின்வரும் நடவடிக்கைகளை குணால் என்பவரின் தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.

    2017 ஜன    ரூ
    1 கை இருப்பு ரொக்கம் 11,200
    5 இரமேஷ் என்பவரிடமிருந்து பெற்றது 300
    7 வாடகை செலுத்தியது 30
    8 ரொக்கத்திற்கு சரக்குகளை விற்றது 300
    10 மோகனுக்கு செலுத்தியது 700
    27 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது 200
    31 சம்பளம் கொடுத்தது 100
  71. ‘காசோலை இன்னும் முன்னிலைப்படுத்தவில்லை’ என்பதன் பொருள் என்ன?

  72. வங்கிச் சரிகட்டும் பட்டியலில் கால இடைவெளிகளால் ஏற்படும் வேறுபாடுகளை எடுத்துக்காட்டுடன் தருக.

  73. பின்வரும் தகவல்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க:
    (அ) வங்கி அறிக்கையின் படி இருப்பு ரூ  25,000.
    (ஆ) மறுக்கப்பட்ட காசோலை  ரூ  250 குறித்து ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை.
    (இ) வங்கியில் செலுத்திய காசோலை தொகை  ரூ 3,500 இன்னும் வசூலிக்கப்படவில்லை.
    (ஈ) வங்கிக் கட்டணம் ரூ  300 ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை.
    (உ) விடுத்த காசோலை ரூ  9,000 செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.

  74. பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்துக.
    (அ) ஆனந்துக்கு ரூ.1,000 த்துக்கு கடனுக்கு சரக்கு விற்றது, விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்படவில்லை.
    (ஆ) இயந்திரம் பழுதுபார்ப்புக்கு ரூ.400 செலுத்தியது, தவறாக இயந்திரக் கணக்கில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (இ) காந்திராஜ்-க்கு ரூ.2,000 சம்பளம் செலுத்தியது, பேரபேரேட்டில் தவறாக அவருடைய கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.

  75. இருப்பாய்வு வெளிப்படுத்தாத பிழைகள் யாவை?

  76. ஜாய் என்ற நிறுவனம் 1.4.2016 அன்று ரூ. 75,000-க்கு இயந்திரம் ஒன்றை வாங்கியது. 31.3.2018
    அன்று ரூ.62,000-க்கு அவ்வியந்திரத்தை விற்பனை செய்தது. நிலைத் தவணை முறையில்
    தேய்மானம் ஆண்டுக்கு 10% நீக்கப்படவேண்டும். ஆண்டுதோறும் கணக்குகள் மார்ச் 31-ல் முடிக்கப்படுகிறது. விற்ற இயந்திரத்தின் மீதான இலாபம் அல்லது நட்டத்தை கணக்கிடுக

  77. குறைந்து செல் மதிப்பு முறையின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளைக் கூறவும்.

  78. முதலின வரவு மற்றும் வருவாயின வரவு வேறுபடுத்தவும்.

  79. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்.

    விவரம் ரூ. விவரம் ரூ.
    தொடக்கச் சரக்கிருப்பு 4,00,000 கொள்முதல் மீதான தூக்குக்கூலி 2,00,000
    கொள்முதல் 20,00,000 விற்பனை மீதான தூக்குக்கூலி 1,00,000
    நிகர விற்பனை 48,00,000 விளம்பரம் 1,20,000
    ஏற்றிச்செல் செலவு மற்றும் உள் நுழைவு வரி 65,000 அலுவலக வாடகை 75,000
    விற்பனைச் செலவுகள் 1,10,000 கொள்முதல் செய்த சரக்குகள் மீதான இறக்குமதி வரி 7,28,000
    நிலக்கரி, எரிவாயு மற்றும் நீர் 22,000    
    கொள்முதல் திருப்பம் 1,20,000    

    இறுதிச் சரக்கிருப்பு ரூ.6,00,000 என மதிப்பிடப்பட்டது.

  80. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து விற்பனைத் தொகையைக் காணவும்

    விவரம் ரூ
    தொடக்கச் சரக்கிருப்பு 20,000
    நிகர கொள்முதல் 70,000
    நேரடிச் செலவுகள் 10,000
    இறுதிச் சரக்கிருப்பு 30,000
    மொத்த இலாப விகிதம் (விற்பனையில்) 20%
  81. “இருப்பு நிலைக் குறிப்பு ஓர் கணக்கல்ல” – விளக்குக

  82. சஞ்சயின் ஏடுகளில் 31, டிசம்பர் 2017ம் ஆண்டிற்கான வியாபாரக் கணக்கினை தயாரிக்கவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    தொடக்கச் சரக்கிருப்பு 570 கொள்முதல் 15,800
    விற்பனை 26,200 கொள்முதல் திருப்பம் 90
    விற்பனைத் திருப்பம் 60 இறுதிச் சரக்கிருப்பு 860
  83. கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்கு 2018, மார்ச் 31 ம் நாளன்று சரிக்கட்டுப் பதிவுகள் தருக.
    (i) எடுப்புகள் மீதான வட்டி ரூ 50
    (ii) வாராக்கடன் ரூ 500 போக்கெழுதவும்
    (iii) அறைகலன் மீதான தேய்மானம் ரூ 1,000.

  84. வாரா ஐயக்கடன் ஒதுக்கு என்றால் என்ன? ஏன் அது உருவாக்கப்பட வேண்டும்?

  85. ஒரு போட்டித் தேர்வில் சில மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு இருந்தன. விரிதாளிலுள்ள உரிய செயற்கூறுகளை கொண்டு சராசரி, அதிகப்படியான மற்றும் குறைந்த மதிப்பெண்ணை கண்டுபிடிக்கவும்.

      B C D E F G H
    1 NAME Anbu Balu Gobu Ramu Somu Raju Anu
    2 SCORES 60 80 164 192 104 64 204

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Accountancy Public Exam March 2019 Important Creative Questions and Answers )

Write your Comment