11th Public Exam March 2019 Important One Marks Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 60
    60 x 1 = 60
  1. பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது

    (a)

    நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்

    (b)

    வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்

    (c)

    நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்

    (d)

    வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்

  2. பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.

    (a)

    நிதிநிலைக் கணக்கியல்

    (b)

    மேலாண்மைக் கணக்கியல்

    (c)

    மனிதவளக் கணக்கியல்

    (d)

    மேற்கண்ட ஏதுமில்லை

  3. நிறுவனம் பிறர்க்கு கொடுக்க வேண்டிய கடன்கள்.

    (a)

    பொறுப்பாகும்

    (b)

    செலவாகும்

    (c)

    வருமானமாகும்

    (d)

    கடனீந்தோர் ஆவர்

  4. நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.

    (a)

    கணக்கு

    (b)

    நடவடிக்கை

    (c)

    சான்றுச்சீட்டு

    (d)

    இடாப்பு

  5. _______________________ நிதிநிலை அறிக்கைகளான வியாபாரக் கணக்கு இலாபநட்டக் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு ஆகியவற்றை தயாரிப்பதன் முடிவடைகிறது. 

    (a)

    அடக்கவில்லைக் கணக்கியல்

    (b)

    நிதி ஆலோசகர்

    (c)

    வரி மேலாளர்

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  6. கணக்காளரின் பணி __________________ 

    (a)

    ஏடுகளைப் பராமரிப்பவர் 

    (b)

    நிதி ஆலோசகர்

    (c)

    வரி மேலாளர்

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  7. வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து

    (a)

    பண மதிப்பீட்டுக் கருத்து

    (b)

    அடக்கவிலை கருத்து

    (c)

    வணிகத்தனித்தன்மை கருத்து

    (d)

    இரட்டைத்தன்மை கருத்து

  8. வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது

    (a)

    வணிக தனித்தன்மை கருத்து

    (b)

    நிறுவன தொடர்ச்சி கருத்து

    (c)

    கணக்கியல் கால அனுமானம்

    (d)

    முன்னெச்சரிக்கை கொள்கை

  9. இரட்டைத் தன்மைக் கருத்துப்படி ஒவ்வொரு வணிக நடவடிக்கையும்

    (a)

    மூன்று தன்மைகளை கொண்டுள்ளது

    (b)

    ஒரு தன்மையுடையது

    (c)

    இரு தன்மையுடையது

    (d)

    ரொக்கத் தன்மையுடையது

  10. ASP என்பது _______ 

    (a)

    கணக்கியல் தரநிலை வாரியம்

    (b)

    கணக்கியல் தரநிலை வியாபாரம்

    (c)

    கணக்கியல் தரநிலை புத்தகம்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  11. முதல் - _______ ________

    (a)

    சொத்துக்கள் பொறுப்புகள்

    (b)

    சொத்துக்கள் - பொறுப்புகள்

    (c)

    சொத்துக்கள் கடனீந்தோர்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  12. ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள் மதிப்பு ரூ 1,00,000 மற்றும் அதன் வெளியாட்களுடனான பொறுப்புகள் ரூ 60,000 எனில், அந்நிறுவனத்தில் முதல்____________

    (a)

    ரூ 1,60,000

    (b)

    ரூ 60,000

    (c)

    ரூ 1,00,000

    (d)

    ரூ 40,000

  13. கணக்கியல் சமன்பட்டின்படி சரியாக இல்லாதது.

    (a)

    சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல்

    (b)

    சொத்துக்க ள் = முதல் + பொறுப்புகள்

    (c)

    பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்

    (d)

    முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்

  14. பின்வருனவற்றில் பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு எது?

    (a)

    கட்டடம் கணக்கு

    (b)

    கொடுபட வேண்டிய சம்பள கணக்கு

    (c)

    மகேஷ் கணக்கு

    (d)

    பாலன் நிறுவனம்

  15. ஒரு நடவடிக்கையின் பெறுதல் தன்மை அழைக்கப்படுவது

    (a)

    பற்றுத்தன்மை

    (b)

    வரவப்புதன்மை

    (c)

    ரொக்கத்தன்மை

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  16. நற்பெயர் எடுத்துக்காட்டாக இருப்பது

    (a)

    பெயரளவுக் கணக்கிற்கு

    (b)

    ஆள்சார் கணக்கிற்கு

    (c)

    புலனாகும் சொத்து கணக்கிற்கு

    (d)

    புலனாக சொத்து கணக்கிற்கு

  17. எடுப்புக் கணக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது

    (a)

    சொத்து கணக்கு

    (b)

    ஆள்சார் கணக்கு

    (c)

    பெயரளவு கணக்கு

    (d)

    பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

  18. ஒரு தொழிலின் பொறுப்புகள் மதிப்பு ரூ.60,00/- அதன் உரிமையாளரின் முதல் ரூ.1,40,000 எனில் சொத்துக்களின் மதிப்பு

    (a)

    ரூ.1,40,000

    (b)

    ரூ.80,000

    (c)

    ரூ.60,000

    (d)

    ரூ.2,00,000

  19. நடவடிக்கைகள் தோற்றம் பெறுவது

    (a)

    ஆதார ஆவணங்கள்

    (b)

    குறிப்பேடு

    (c)

    கணக்கியல் சமன்பாடு

    (d)

    கணக்கியல் கருத்துக்கள்

  20. கு.ப.எ. என்பது

    (a)

    பேரேட்டு பக்க எண்

    (b)

    குறிப்பேட்டு பக்க எண்

    (c)

    சான்று சீட்டு எண்

    (d)

    ஆணை எண்

  21. உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது

    (a)

    ரொக்க கணக்கு

    (b)

    எடுப்புக் கணக்கு

    (c)

    முதல் கணக்கு

    (d)

    அனாமத்து கணக்கு

  22. பேரேடு ஒரு _________.  

    (a)

    தோற்றப் பதிவு ஏடு 

    (b)

    இறுதிப்  பதிவு ஏடு  

    (c)

    ரொக்க நடவடிக்கைகள் ஏடு 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  23. கணக்கின் இருப்பை அடுத்த காலத்தின் முதல் நாளில் எழுதப்படுவது _________. 

    (a)

    இருப்பு கீ/கொ  

    (b)

    இருப்பு கீ/இ 

    (c)

    இருப்பு மு/தூ  

    (d)

    இருப்பு பி/தூ  

  24. நிதி ஆண்டின் ஆரம்பத்தில் கணக்கு ஏடுகளில் பதியக் கூடிய பதிவுக்கு ______ என்று பெயர். 

    (a)

    சரிக்கட்டுப்பதிவு 

    (b)

    இறுதிப் பதிவு 

    (c)

    தொடக்கப் பதிவு 

    (d)

    குறிப்பேடு 

  25. கணக்கு இருப்புக் கடும் பொழுது இருப்புக் கடும் நாளில் ______ என எழுதப்படுகின்றது.

    (a)

    இருப்பு பி/தூ

    (b)

    இருப்பு மு/தூ

    (c)

    இருப்பு கீ/இ

    (d)

    இருப்பு கீ/கொ

  26. இருப்பாய்வு என்பது ஒரு

    (a)

    அறிக்கை

    (b)

    கணக்கு

    (c)

    பேரேடு

    (d)

    குறிப்பேடு

  27. இருப்பாய்வு தயாரிக்கும்போது, கணக்காளர் இருப்பாய்வின் வரவு பக்கத்தில் மொத்த தொகை ரூ. 200 குறைவாக இருப்பதைக் கண்டறிந்தார். அந்த வேவேறுபாட்டினை அவர் என்ன செய்வார்

    (a)

    அனாமத்து கணக்கில் பற்று செய்வார்

    (b)

    அனாமத்து கணக்கில் வரவு செய்வார்

    (c)

    ஏதேனும் பற்று இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்

    (d)

    ஏதேனும் வரவு இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்

  28. அனாமத்துக் கணக்கின் பற்று இருப்பு, இருப்பு நிலைக் குறிப்பில் ______ பக்கத்தில் தோன்றும்.

    (a)

    சொத்துக்கள்

    (b)

    பொறுப்புகள்

    (c)

    இரண்டும்

    (d)

    எவை எதுவுமில்லை

  29. அனாமத்துக் கணக்கு பதியப்படும் இடம் _____ 

    (a)

    வியாபாரக் கணக்கு

    (b)

    இலாப, நட்டக் கணக்கு

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு

    (d)

    இருப்பாய்வு

  30. இருப்பாய்வு தயாரிப்பதில் ________ முறையே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    இருப்பு முறை

    (b)

    மொத்தக் தொகை முறை

    (c)

    மொத்தத் தொகை மற்றும் இருப்பு முறை

    (d)

    அ மற்றும் ஆ

  31. விற்பனை ஏட்டில் பதிவு செய்வதற்கு பயன்படும் அடிப்படை ஆவணம்

    (a)

    பற்றுக் குறிப்பு

    (b)

    வரவு குறிப்பு

    (c)

    இடாப்பு

    (d)

    ரொக்க இரசீது

  32. பின்வரும் வாக்கியங்களில் எது உண்மையல்ல ?

    (a)

    ரொக்கத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது

    (b)

    சொத்துகள் கடனுக்கு வாங்கியது உரிய குறிப்பேட்டில் பதிவு செய்யப்படுகிறது

    (c)

    வியாபாரத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது

    (d)

    மாற்றுச்சீட்டின் செலுத்தற்குரிய நாளை கணக்கிடும்போது மூன்று நாட்கள் சலுகை
    நாட்களாகக் கூட்டப்படுகின்றன

  33. மறுப்புச் சான்றிதழை வழங்குபவர்

    (a)

    பொதுக்குறிப்பர்

    (b)

    எழுதுநர் 

    (c)

    எழுதுப்பெறுநர் 

    (d)

    செலுத்தப் பெறுநர்

  34. இயந்திரம் வாங்கியது பதிவு செய்யப்படுவது

    (a)

    விற்பனை ஏடு

    (b)

    கொள்முதல் ஏடு

    (c)

    கொள்முதல் திருப்ப எடு

    (d)

    முறையான குறிப்பேடு

  35. வாடிக்கையாளர் திருப்பிய சரக்கு பதிவு செய்யப்படுவது

    (a)

    விற்பனை ஏடு

    (b)

    விற்பனை திருப்ப ஏடு

    (c)

    கொள்முதல் ஏடு

    (d)

    கொள்முதல் திருப்ப ஏடு

  36. ரொக்கக் தள்ளுபடி வழங்கப்படுவதன் நோக்கம்

    (a)

    ரொக்க விற்பனையை அதிகப்படுத்துதல்

    (b)

    தவணை நாளுக்குள் தொகையை செலுத்துவதை ஊக்குவித்தல்

    (c)

    பொருட்களை அதிக எண்ணிக்கையில் வாங்கிச் செய்தல்

    (d)

    மேற்கூரிய அனைத்தும்

  37. ரொக்க ஏடு ஒரு

    (a)

    துணை ஏடு

    (b)

    முதன்மை ஏடு

    (c)

    உரிய குறிப்பேடு

    (d)

    துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு

  38. ரொக்க ஏடு பதிவு செய்வது

    (a)

    அனைத்து ரொக்கப் பெறுதல்கள்

    (b)

    அனைத்து ரொக்கச் செலுத்தல்கள்

    (c)

    (அ), (ஆ) ஆகிய இரண்டும்

    (d)

    அனைத்து கடன் நடவடிக்கைகள்

  39. ரொக்கத்திற்கு சரக்கு வாங்குதல் பதியப்படும் ஏடு 

    (a)

    ரொக்க ஏடு 

    (b)

    கொள்முதல் ஏடு 

    (c)

    முதற்குறிப்பேடு 

    (d)

    பேரேடு 

  40. பெறப்பட்ட காசோலை அன்றே வங்கியில் செலுத்தப்பட்டால் பற்று வைக்க வேண்டிய கணக்கு 

    (a)

    வங்கி க/கு 

    (b)

    ரொக்க க/கு 

    (c)

    வாடிக்கையாளர் க/கு 

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை 

  41. பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?

    (a)

    செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது

    (b)

    விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது

    (c)

    வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை

    (d)

    ரொக்க  ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த

  42. செல்லேட்டின் நகல்   

    (a)

    வாடிக்கையாளர் ரொக்க ஏட்டின் ரொக்கப் பத்தி   

    (b)

    வாடிக்கையாளர் ரொக்க ஏட்டின் வங்கி பத்தி 

    (c)

    வங்கி பேரேட்டில் உள்ள வாடிக்கையாளர் கணக்கு     

    (d)

    இவை எதுவுமில்லை 

  43. வங்கிக் கணக்கறிக்கை ரூ 2,000 மேல்வரைப் பற்று காட்டுகிறது.கடனீந்தோருக்கு அளித்த காசோலை ரூ 500 இதுவரை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.கடனீந்தோர் காசோலை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தும் பொழுது வங்கிக் கணக்கு இருப்பு.    

    (a)

    ரூ 1,500 

    (b)

    ரூ 2,500 (மேல் வரை)

    (c)

    ரூ 2,500

    (d)

    ரூ 7,500

  44. ரொக்க  ஏட்டின்படி  இருப்பு ஆரம்ப  நிலையாக  இருக்கும் பொழுது  வங்கி நேரடியாக  செலுத்துபவை    

    (a)

    சரிகட்ட வேண்டும் 

    (b)

    கூட்டப்பட வேண்டும்   

    (c)

    கழிக்கப்பட வேண்டும்   

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை 

  45. கொள்முதல் ஏட்டின் மொத்தத் தொகை அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?

    (a)

    கொள்முதல் கணக்கு

    (b)

    அனாமத்துக் கணக்கு

    (c)

    கடனீந்தோர் கணக்கு

    (d)

    மேற்கண்டது ஏதும் இல்லை

  46. பிழைகளைக் கண்டறிந்து அவற்றைத் திருத்தும் வரை _______________ ஏடுகளில் இருக்கும். 

    (a)

    முதல் கணக்கு

    (b)

    பேரேட்டுக் கணக்கு

    (c)

    அனாமத்துக் கணக்கு

    (d)

    இவை எதுவுமில்லை

  47. குறைந்து செல் மதிப்பு முறையில், தேய்மானத் தொகையானது

    (a)

    அனைத்து ஆண்டுகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும்

    (b)

    ஆண்டுதோறும் குறையும்

    (c)

    ஆண்டுதோறும் அதிகரிக்கும்

    (d)

    மேற்கூறியவற்றில் எதுவுமில்லை

  48. 'தேய்மானம் என்பது எக்காரணத்தினாலும் ஒரு சொத்தின் மதிப்பிலுண்டாகும் படிப்படியான நிலையான குறைவே ஆகும்' என்று கூறியவர் யார்?

    (a)

    கார்டர் 

    (b)

    ஸ்பைசர் 

    (c)

    பெக்லர் 

    (d)

    கோஹ்லர் 

  49. வருமான வரி விதிக்கும் அதிகாரிகள் ஏற்கும் முறை _________.

    (a)

    நேர்க்கோட்டு முறை 

    (b)

    ஆண்டுத் தொகை முறை 

    (c)

    குறைந்து செல் மதிப்பு முறை 

    (d)

    இவை எதுவுமில்லை 

  50. புதிதாக நிறுவப்பட்ட இயந்திரத்தினைச் சோதனை ஓட்டம் மேற்கொள்வதற்குச் செய்த செலவு ரூ 20,000.

    (a)

    தொடக்கச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    முதலினச் செலவு

    (d)

    நீள்பயன் வருவாயினச் செலவு

  51. வெங்கடேசன் விற்பனை செய்வதற்காக ரூ 80,000 மதிப்புள்ள சரக்கை கொள்முதல் செய்தது ஒரு _______________ 

    (a)

    முதலினச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவு

    (d)

    இவை எதுவுமில்லை

  52. தொழிலில் கிடைக்கப் பெற்ற நிகர நட்டம், ஒரு 

    (a)

    வருவாயின நட்டம்

    (b)

    முதலின நட்டம்

    (c)

    முதலின வரவு

    (d)

    வருவாயின வரவு

  53. பின்வருவனவற்றில் எது நடப்புச் சொத்துகளில் சேராதது?

    (a)

    ரொக்கம்

    (b)

    சரக்கிருப்பு

    (c)

    அறைகலன்

    (d)

    முன்கூட்டிச் செலுத்திய செலவு

  54. நிலைச் சொத்துகள்_______ கொண்டது.   

    (a)

    குறுகிய வாழ்நாள் 

    (b)

    நீண்ட வாழ்நாள் 

    (c)

    வாழ்நாள் இன்மை 

    (d)

    நிலையான வாழ்நாள் 

  55. முன் கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் தோன்றுவது.

    (a)

    வியாபாரக் கணக்கில் பற்றுப் பக்கம்

    (b)

    இலாப நட்டக் கணக்கில் வரவுப் பக்கம்

    (c)

    இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்

    (d)

    இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்

  56. நிறுவன உரிமையாளருக்காகச் செலுத்தப்பட்ட வருமான வரி எதிலிருந்து கழிக்கப்படுகிறது? 

    (a)

    இலாபத்திலிருந்து 

    (b)

    முதலிலிருந்து 

    (c)

    எடுப்பிலிருந்து 

    (d)

    கை ரொக்கத்திலிருந்து 

  57. பெற வேண்டிய பங்காதாயம் இருப்பு நிலைக்குறிப்பில் எங்குக் காட்டப்பட வேண்டும்? 

    (a)

    பற்றுப் பக்கத்தில் 

    (b)

    பொறுப்புக்கள் பக்கத்தில் 

    (c)

    சொத்துக்கள் பக்கத்தில் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  58. பின்வருவனவற்றில் எந்த ஒன்று, கணக்குகளை குறிமுறையாக்கம் செய்யும் முறைகளில் இல்லாதது?

    (a)

    அணுகக் குறிமுறை

    (b)

    தொடர்ச்சியான குறிமுறை

    (c)

    தொகுப்புக் குறிமுறை

    (d)

    மதியயோட்டுக் குறிமுறை

  59. ________ பராமரிக்கப்படுவது யைரல் எழுதும் முறையானாலும் அல்லது கணினிமயக் கணக்கியல் முறையானாலும், கணக்கியளலின் அடிப்படைகள் மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.   

    (a)

    நிதி அறிக்கைகள் 

    (b)

    இருப்பாய்வு 

    (c)

    கணக்குகள் 

    (d)

    கணக்கேடுகள் 

  60. கணினி அமைப்பின் மிக முக்கியமான கூறு அதன் ________. 

    (a)

    உரிமையாளர் 

    (b)

    பணியாளர்கள்  

    (c)

    பயனாளிகள் 

    (d)

    இவை எதுவுமில்லை 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Accountancy Public Exam March 2019 Important One Marks Questions )

Write your Comment