11th Public Exam March 2019 Model Question Paper

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?

    (a)

    கடனீந்தோர்

    (b)

    பணியாளர்

    (c)

    வாடிக்கையாளர்

    (d)

    அரசு

  2. பேரேட்டுக் கணக்குகளில் கணக்கியல் துல்லியத் தன்மையை அறிவதற்கு தயாரிக்கப்படுவது _______________  

    (a)

    இருப்பாய்வு

    (b)

    இருப்பு நிலைக்குறிப்பு

    (c)

    இலாப நட்டக் கணக்கு

    (d)

    வியாபாரக் கணக்கு 

  3. வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது

    (a)

    வணிக தனித்தன்மை கருத்து

    (b)

    நிறுவன தொடர்ச்சி கருத்து

    (c)

    கணக்கியல் கால அனுமானம்

    (d)

    முன்னெச்சரிக்கை கொள்கை

  4. எடுப்புக் கணக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது

    (a)

    சொத்து கணக்கு

    (b)

    ஆள்சார் கணக்கு

    (c)

    பெயரளவு கணக்கு

    (d)

    பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

  5. உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது

    (a)

    ரொக்க கணக்கு

    (b)

    எடுப்புக் கணக்கு

    (c)

    முதல் கணக்கு

    (d)

    அனாமத்து கணக்கு

  6. குறிப்பேட்டிலிருந்து பதிவுகளை பேரேட்டில் மாற்றி எழுதும் முறைக்கு _______ என்று பெயர்.

    (a)

    கூட்டுதல்

    (b)

    குறிப்பேட்டில் பதிதல்

    (c)

    இருப்பு கட்டுதல்

    (d)

    எடுத்தெழுதுதல்

  7. கீழ்கண்டவற்றில் எது / எவை இருப்பாய்வு தயாரிப்பதன்நோக்கங்களாகும்

    (a)

    அனைத்து பேரேட்டுக் கணக்குகளின் சுருக்கத்தைத் தருவது.

    (b)

    இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது

    (c)

    கணக்குகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையைப் பரிசோதிப்பது

    (d)

    (அ), (ஆ) மற்றும் (இ)

  8. விற்பனை ஏடு எதைப் பதிவு செய்ய உதவுகிறது?

    (a)

    அனைத்து சரக்குகளின் விற்பனை

    (b)

    அனைத்து சொத்துக்களின் கடன் விற்பனை

    (c)

    அனைத்து சரக்குகளின் கடன் விற்பனை

    (d)

    அனைத்து சொத்துக்கள் மற்றும் சரக்குகள் விற்பனை

  9. கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ப்பதிவாக பதிவு செய்யப்படும்?

    (a)

    சொந்த செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம் 

    (b)

    அலுவலக செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம் 

    (c)

    வாடிக்கையாளர், நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்திய தொகை 

    (d)

    வங்கி எடுத்துக் கொண்ட வட்டி

  10. பின்வருபவற்றில் எது வங்கிச் சரிகட்டும் பட்டியலின் சிறப்பியல்பு அல்ல

    (a)

    காசோலை தீர்வடைவதில் ஏற்படும் கால தாமதத்தை சரிகட்டும் பட்டியல் காண்பிக்கு

    (b)

    சரிகட்டும் பட்டியல் கணக்காளர் ரொக்கத்தை கையாளும் போது செய்யக்கூடிய மோசடிகளை தடுக்கிறது

    (c)

    வங்கி இருப்பின் உண்மையான நிலையை அறிய பயன்படுகிறது

    (d)

    சரிகட்டும் பட்டியல் கணக்காண்டின் இறுதியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது

  11. அதியமானிடமிருந்து கடனுக்கு அறைகலன் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?

    (a)

    கொள்ள்முதல் கணக்கு

    (b)

    அறைகலன் கணக்கு

    (c)

    அதியமான் கணக்கு

    (d)

    இவை ஏதுமில்லை

  12. இருப்பக்கத்தையும் பாதிக்கும் பிழைகளை  _________________ வெளிப்படுத்துவதில்லை.

    (a)

    குறிப்பேடு

    (b)

    பேரேடு

    (c)

    இருப்பாய்வு

    (d)

    இறுதிக்கணக்குகள்

  13. எந்நாள் முதற்கொண்டு தேய்மானம் கணக்கிடப்பட வேண்டும்

    (a)

    சொத்தினை பயன்பாட்டிற்கு இட்ட நாள்முதல்

    (b)

    சொத்தினை வாங்குவதற்காதற்கான ஆணை பிறப்பித்த நாள்முதல்

    (c)

    சொத்தினை வியாபார வளாகத்திற்குள் பெற்ற நாநாள்முதல்

    (d)

    சொத்தின் இடாப்பு பெற்றெற்ற நாள் முதல்

  14. நடைமுறை முதலை அதிகரிப்பதற்காக இந்திய தொழில் வளர்ச்சி வங்கியிடம் பெற்ற நடுத்தர காலக் கடன் தொகை.

    (a)

    முதலினச் செலவுகள்

    (b)

    வருவாயினச் செலவுகள்

    (c)

    வருவாயின வரவுகள்

    (d)

    முதலின வரவுகள்

  15. விளம்பரத்திற்கு அதிகமாக செலவு செய்தது, ஒரு__________________ 

    (a)

    முதலினச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவு 

    (d)

    முதலின வரவு

  16. வங்கி மேல்வரைப்பற்று எதில் காண்பிக்கப்படும்?

    (a)

    வியாபாரக் கணக்கில்

    (b)

    இலாப நட்டக் கணக்கில்

    (c)

    கடன் பக்கத்தில்

    (d)

    சொத்து பக்கத்தில்

  17. இறுதிச் சரக்கிருப்பு மதிப்பிடப்படுவது.

    (a)

    அடக்க விலையில்

    (b)

    சந்தை விலையில்

    (c)

    அடக்க விலை அல்லது சந்தை விலை இதில் எது அதிகமோ அந்த விலையில்

    (d)

    அடக்க விலை அல்லது நிகரத் தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்

  18. இறுதிக் கணக்குகள் தயார் செய்யப்படுகையில், சரிக்கட்டுதலில் தரப்படும் அனைத்து இனங்களும் _______ தோன்றும்.  

    (a)

    ஒரு இடம் 

    (b)

    இரு இடங்களில் 

    (c)

    மூன்று இடங்களில் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  19. பின்வருவனவற்றில் எந்த ஒன்று, கணக்குகளை குறிமுறையாக்கம் செய்யும் முறைகளில் இல்லாதது?

    (a)

    அணுகக் குறிமுறை

    (b)

    தொடர்ச்சியான குறிமுறை

    (c)

    தொகுப்புக் குறிமுறை

    (d)

    மதியயோட்டுக் குறிமுறை

  20. ________ பராமரிக்கப்படுவது யைரல் எழுதும் முறையானாலும் அல்லது கணினிமயக் கணக்கியல் முறையானாலும், கணக்கியளலின் அடிப்படைகள் மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.   

    (a)

    நிதி அறிக்கைகள் 

    (b)

    இருப்பாய்வு 

    (c)

    கணக்குகள் 

    (d)

    கணக்கேடுகள் 

  21. 7 x 2 = 14
  22. குறிப்பு வரைக: அ. கடனாளிகள், ஆ. கடனீந்தோர் 

  23. கணக்கேடுகள் பராமரிப்பின் இயல்புகள் யாவை?

  24. இரட்டைப் பதிவு கணக்கியல் முறையின் பொன்னான விதிகளைத் தருக.

  25. வரவு குறிப்பு என்றால் என்ன?

  26. வியாபாரத் தள்ளுபடி என்றால் என்ன?

  27. முழு விடு பிழை என்றால் என்ன?

  28. ஜுலை 1, 2016 அன்று, அறைகலன் ரூ. 60,000 க்கு வாங்கப்பட்டது. அதன் வாழ்நாள் 5 ஆண்டுகள். 5 ஆண்டுகள் முடிவில் அதன் இறுதி மதிப்பு ரூ. 4,000. நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க

  29. பின்வருபவை முதலின, வருவாயின, இனங்களா என்பதை கூறுக.
    (i) ஏற்கனவே உள்ள கட்டடத்தோடு கூடுதலாகக்கட்டியது ரூ 5,000
    (ii) பழைய மகிழுந்து வாங்கியது ரூ 30,000 மேலும், அதனை உடனடியாக பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ 2,000
    (iii) புதிய தொழிற்சாலையை வண்ணம் பூசுவதற்கானச் செலவு ரூ 10,000
    (iv) புதிய இயந்திரம் மீதான ஏற்றிச் செல் செலவு, வண்டிக்கட்டணம் ரூ 150 மற்றும் நிறுவுகைச் செலவுகள் ரூ 200
    (v) வாங்கிய பழைய வாகனத்தை பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ .150.

  30. இலாப நட்டக் கணக்கு வரையறு.   

  31. கணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன?

  32. 7 x 3 = 21
  33. கணக்கியலின் பணிகளை விளக்குக.

  34. கணக்கியல் சமன்பாட்டினை நிரப்புக

     (அ)   சொத்துகள்    =    முதல்    +    பொறுப்புகள் 
       ரூ 1,00,000   =  ரூ 80,000 + ?
     (ஆ)  சொத்துகள்  = முதல்  + பொறுப்புகள் 
      ரூ 2,00,000 = ? + ரூ 40,000
    (இ) சொத்துகள்  = முதல்  + பொறுப்புகள் 
      ? = ரூ 1,60,000 + ரூ 80,000
  35. பேரேட்டுக் கணக்கின் இருப்புகட்டுதலின் வழிமுறையை விளக்குக.

  36. முரளி என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினை தயாரிக்கவும்

    விவரம் ரூ விவரம் ரூ
    விற்பனை 35,000 தணிக்கைக் கட்டணம் 1,000
    வட்டி செலுத்தியது 350 நகர நுழைவு வரி 8,000
    உள் திருப்பம் 2,500 நிலம் 90,000
    தேய்மானம் 2,400 முதல் 60,000
    அலுவலக வாடகை 2,000 வங்கி மேல்வரைப்பற்று 11,250
  37. பின்வரும் நடவடிக்கைகளை குணால் என்பவரின் தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.

    2017 ஜன    ரூ
    1 கை இருப்பு ரொக்கம் 11,200
    5 இரமேஷ் என்பவரிடமிருந்து பெற்றது 300
    7 வாடகை செலுத்தியது 30
    8 ரொக்கத்திற்கு சரக்குகளை விற்றது 300
    10 மோகனுக்கு செலுத்தியது 700
    27 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது 200
    31 சம்பளம் கொடுத்தது 100
  38. ‘காசோலை இன்னும் முன்னிலைப்படுத்தவில்லை’ என்பதன் பொருள் என்ன?

  39. இருப்பாய்வு தயாரிக்கப்பட்டு வித்தியாசம் அனாமத்துக் கணக்குக்கு எடுத்துச் செல்லப்பட்டது எனக் கருதி பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
    (அ) விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை ரூ.250 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
    (ஆ) கொள்முதல் ஏட்டில் ரூ.120 குறைவாகக் கூட்டப்பட்்பட்டுள்ளது.
    (இ) விற்பனை ஏட்டில் ரூ.130 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
    (ஈ) பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ஏட்டில் ரூ.75 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
    (உ) கொள்முதல் ஏட்டில் ரூ.35 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது

  40. நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் கணக்கிடுதலின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை?

  41. நிலைச் சொத்தின் வகைகளை விளக்குக.                             

  42. 2017, டிசம்பர் 31 ஆம் நாளன்று, கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப்பதிவுகள் தருக.
    (i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 1200
    (ii) கொடுபட வேண் டிய வாடகை ரூ 300
    (iii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 450
    (iv) முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி ரூ 400
    (v) போக்கெழுத வேண்டிய வாராக்கடன் ரூ 200.

  43. 7 x 5 = 35
  44. பின்வரும் நடவடிக்கைகளுக்கு கணக்கியல் சமன்பாட்டினை உருவாக்குக.
    (i) இராகேஷ் ரூ 1,50,000 முதலுடன் தொழில் தொடங்கினார்.
    (ii) வங்கியில் இட்ட தொகை ரூ 80,000.
    (iii) மகேஷிடமிருந்து கடன் அட்டை மூலம் சரக்கு வாங்கியது ரூ 25,000.
    (iv) 10,000 மதிப்புள்ள சரக்குகள் ரூ 14,000க்கு மோகனிடம் விற்பனை செய்யப்பட்டது. இத்தொகையினை அவர் எடுப்பு அட்டை மூலம் செலுத்தினார் .
    (v) காசோலை மூலம் பெறப்பட்ட கழிவு ரூ 2,000 உடனடியாக வங்கியில் வசூலிப்பதற்காக செலுத்தப்பட்டது.
    (vi) அலுவலக வாடகை மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தியது ரூ 6,000.
    (vii) இராமனுக்கு விற்ற சரக்கின் மதிப்பு ரூ 15,000-ல், ரூ 5,000 உடனடியாக பணமாகப் பெறப்பட்டது.

  45. கீழ்கண்ட குறிப்பேட்டுப் பதிவுகளுக்குரிய நடவடிக்கைகளைத் தருக.

    அ] ரொக்கக் க/கு
           அறைகலன் க/கு   
    ஆ] வாடகை க/கு
            ரொக்கக் க/கு  
    இ] வங்கி க/கு
           ரொக்கக் க/கு  
    ஈ) தமிழ்ச் செல்வி க/கு
            விற்பனை க/கு  
  46. கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எடுத்தெழுதவும்

    2015 மார்ச் 1 சோமு என்பவருக்கு கடனாக சரக்கு விற்றது ரூ.5,000
    7 ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது 300
    15 வட்டி பெற்றது 1,800
  47. ரோகினி என்பவரது ஏடுகளிலிருந்து 31.3.2016 அன்று எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்கவும்

      ரூ   ரூ
    முதல் 60,000 விற்பனை 82,000
    பெற்றத் தள்ளுபடி 3,250 மின்கட்டணம் 800
    கொள்முதல் 58,000 எடுப்புகள் 5,250
    பொறி இயந்திரம் 40,000 வாகனச் செலவுகள் 1,200
    விளம்பரச் செலவுகள் 5,000 மகிழுந்து 35,000
  48. பின்வரும் கடன் நடவடிக்கைகளை பல்பொருள் வணிகம் செய்யும் மனோகரன் அவர்களின் கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க.

    2017  
    மே 2 வாசுவிடமிருந்து மூட்டை ஒன்று ரூ. 800 வீதம் 100 மூட்டைகள் அரிசி வாங்கியது
    மே 8 செய்யாறு, சர்க்கரை ஆலையிடமிருந்து மூட்டை ஒன்று ரூ. 2,600 வீதம்
    20 மூட்டைகள் சர்க்கரை வாங்கியது
    மே 10 கோவை, இராம் மாவு உற்பத்தி ஆலையிடம், மூட்டை ஒன்றின் விலை
    ரூ. 750 வீதம் 10 மூட்டைகள் கோதுமை மாவு வாங்கியது
    மே 15 நீலகிரியிலுள்ள நீலகிரி தேயிலை நிறுவனத்திடமிருந்து பெட்டி ஒன்றின் விலைரூ. 900 வீதம் 15 பெட்டிகள் தேயிலைத் தூள் வாங்கியது.
    மே 25 சாய்ராம் காபித்தூள் நிறுவனத்திடம் ஒரு கிலலோ ரூ. 190 வீதம்
    100 கிலலோ காபித்தூள் வாங்கியது.
    மே 29 X நிறுவனத்திடம் ரூ. 2,000 மதிப்புள்ள அறைகலன்கள் வாங்கியது
  49. இராமலிங்கம் என்பவரின் 2017 ஜுலை மாதத்திற்கான பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து தனிப்பத்தி ரொக்க ஏட்டைத் தயாரிக்கவும்.

    2017 ஜூலை   ரூ
    1 கை ரொக்கம் 32,000
    5 கீர்த்தனாவிடமிருந்து ரொக்கம் பெற்றது 5,000
    6 கட்டுமச் செலவுக்காக பணம் கொடுத்தது 300
    7 ரொக்கக் கொள்முதல் 12,400
    8 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது 2,600
    10 மேலாளருக்கு சம்பளம் ரொக்கமாகத் தரப்பட்ட்பட்டது 7,000
    11 பாலா என்பவருக்கு ரொக்கம் கொடுத்தது 3,000
    12 போஸ் என்பவரிடமிருந்து கடனுக்கு கொள்முதல் செய்தது 2,500
    24 பணம் வைப்பு இயந்திரத்தின் மூலம் வங்கிக்கு செலுத்திய ரொக்கம் 4,000
    27 வங்கியிலிருந்து பணம் எடுத்தது 2,000
    31 அலுவலக வாடகை ரொக்கமாகச் செலுத்தியது 6,000
  50. கீழே  கொடுக்கப்பட்டுள்ள  விவரங்களிலிருந்து ஜான் வியாபார நிறுவனத்தின் 2018 மார்ச் 31-ம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்கவும்.
    (அ) வங்கி அறிக்கையின் படி வங்கி மேல்வரைப்பற்று ரூ 4,000
    (ஆ) ரொக்க  ஏட்டில் பதிவு செய்யப்பட்டு 2018 மார்ச் 26 அன்று வங்கியில் செலுத்தப்பட்ட காசோலை ரூ 2,000, 2018 ஏப்ரல் 4 அன்று வங்கி அறிக்கையில் பதியப்பட்டது
    (இ) பணம் வைப்பு இயந்திரம் வழியாக வங்கியால் பெறப்பட்ட தொகை  ரூ 5,000 ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை
    (ஈ) ஜான் நிறுவனத்தின் கணக்கில் ரூ 3,000 வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்டது குறித்த தகவல்கள் எதுவும் தெரியப்படுத்தவில்லை
    (உ) 2017 மார்ச் 29 அன்று வரை வங்கியால் வசூலித்து வரவு வைக்கப்பட்ட மாற்றுச்சீட்டு ரூ 4,000 குறித்த தகவல்கள் ஏதும் ஜான் நிறுவனத்திற்கு தரப்படவில்லை
    (ஊ) இணைய வங்கி வாயிலாக செலுத்திய மின்சாரக்ன்சாரக் கட்டணம் ரூ 900 ரொக்க  ஏட்டின் வங்கிப்பத்தியில் பதிவதற்கு பதிலாக ரொக்கப்பத்தியில் தவறுதலாக பதியப்பட்டது.
    (எ) ரொக்க  விற்பனை தவறுதலாக ரொக்க  ஏட்டின் வங்கிப்பத்தியில் பதியப்பட்டது ரூ 4,000

  51. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து திரு.உதயக்குமார் அவர்களின் வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்க.
    [அ] ரொக்க எட்டின்படி இருப்பு ரூ1,500
    [ஆ] வங்கியில் செலுத்தியும் வசூலாகாதது ரூ 100
    [இ] அளித்த காசோலைகள் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை ரூ 150
    [ஈ] வங்கி அளித்த வட்டி ரூ 20    

  52. பின் வரும் பிழைகள் கணக்காளரால் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தம் செய்யவும்.
    (அ) ரொக்கக் ஏட்டின் பற்றுப் பக்கத்தில் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத் தொகை ரூ.1,100 இன்னும் பேரேட்டில் எடுத்து எழுதப்படாமல் உள்ளது.
    (ஆ) ரொக்க ஏட்டின் வரவரவுப் பக்கத்தில் உள்ள தள்ளுபடிப் பத்தியின் மொத்தத்தில் ரூ.500 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
    (இ) அன்புச் செல்வனிடமிருந்து ரூ.700 க்கு கடனுக்கு சரக்கு வாங்கியது அவரின் கணக்கில் பற்று பக்கத்தில் எடுத்து எழுதப்பட்டுள்ளள்ளது.
    (ஈ) பொன்முகிலுக்கு கடனுக்கு ரூ.78 க்கு சரக்கு விற்றது அவருடைய பேரேட்டுக் கணக்கில் ரூ.87 என எடுத்து எழுதப்பட்டுள்ளது..
    (உ) விற்பனைத் திருப்ப ஏட்டின் மொத்தம் ரூ.550 இருமுறை பேரேட்டில் எடுத்து எழுதப்பட்டுள்ளது

  53. ஆனந்த் என்பவர் 1.1.2015 அன்று ரூ. 1,00,000 மதிப்புள்ள ஒரு இயந்திரத்தை வாங்கினார். 1.7.2016 அன்று ரூ. 50,000 மதிப்புள்ளள்ள மற்றொரு இயந்திரத்தை வாங்கினார். மேலும் 1.10.2017 அன்று
    ரூ. 20,000 மதிப்புள்ள மற்றொரு இயந்திரத்தை வாங்கினார். நேர்க்கோட்டு முறையில் 10% தேய்மானம் ஆண்டுதோறும் நீக்கப்பட வேண்டும். 2015 முதல் 2017 வரை இயந்திரக் கணக்கினைத் தயாரிக்கவும். கணக்குகள் ஆண்டுதோறும் டிசம்பர் 31-ல் முடிக்கப் பெறுகின்றன.

  54. பின்வரும் நடவடிக்கைகளை முதலினம், மற்றும் வருவாயினமாக வகைப்படுத்தவும்.
    (i) சரக்கு விற்பனை வாயிலாகப் பெற்றது ரூ 75,000.
    (ii) வங்கியிடமிருந்து பெற்றக் கடன் ரூ 2,50,000.
    (iii) முதலீடு விற்பனைச் செய்தது ரூ 1,20,000.
    (iv) கழிவுப் பெற்றது ரூ 30,000.
    (v) புதிய இயந்திரம் நிறுவுவதற்கான கூலி செலுத்தியது ரூ 1,400.

  55. கணேஷ் என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்ப்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து, வியாபார இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    சரக்கிருப்பு (01.01.2017) 8,000 வாராக்கடன் 1,200
    கொள்முதல் 22,000 வியாபாரச் செலவுகள் 1,200
    விற்பனை 42,000 அளித்த தள்ளுபடி 600
    கொள்முதல் மீதான செலவுகள் 2,500 கழிவு கொடுத்தது 1,100
    நிதிசார் செலவுகள் செலுத்தியது 3,500 விற்பனைச் செலவுகள் 600
    விற்பனை மீதான செலவுகள் 1,000 அலுவலக வாகனங்கள் மீதான
    பழுதுபார்ப்புச் செலவுகள்
    600

    2017 டிசம்பர் 31 அன்றைய இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 4,500

  56. தாமஸ் என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புகள் கீழே தரப்பட்டுள்ளன:

     பற்று இருப்புகள்   ரூ   வரவு இருப்புகள்   ரூ 
      கொள்முதல்     75,000   முதல்      60,000
      உள் திருப்பம் 2,000   கடனீந்தோர் 30,000
      தொடக்கச் சரக்கிருப்பு    10,000   விற்பனை 1,20,000
      உள் ஏற்றிச்செல் செலவு    4,000   வெளித் திருப்பம்   1,000
      கூலி  2,000     
      முதலீடுகள் 10,000    
      வங்கிக் கட்டணம் 1,000    
      நிலம் 30,000    
      இயந்திரம் 30,000    
      கட்டடம்  25,000    
      வங்கி ரொக்கம் 18,000    
      கை ரொக்கம் 4,000    
      2,11,000   2,11,000

    கூடுதல் தகவல்கள்:
    (அ) இறுதிச் சரக்கிருப்பு ரூ 9,000
    (ஆ) இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்குக
    (இ) முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி ரூ 2,000
    வியாபார, இலாபநட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்க.

  57. கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு இடாப்பு தயாரிக்கவும்.
    1. Financial Accounting – RL Gupta - 40 Nos.
    2. Advanced Accounting – MC Shukla - 20 Nos.
    3. Income Tax Law & Practice – HC Mehrothra - 20 Nos.
    4. Practical Auditing – B N Tandon - 30 Nos.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Accountancy Public Exam March 2019 Model Question Paper )

Write your Comment