துணை ஏடுகள் - II ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    15 x 1 = 15
  1. ரொக்க ஏடு ஒரு

    (a)

    துணை ஏடு

    (b)

    முதன்மை ஏடு

    (c)

    உரிய குறிப்பேடு

    (d)

    துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு

  2. சாதாரண ரொக்க ஏட்டை வைத்திருக்கும் ஒரு நிறுவனம், எந்த கணக்கை தயாரிக்க தேவை இல்லை?

    (a)

    பேரேட்டில் விற்பனைக் கணக்கு

    (b)

    பேரேட்டில் கொள்முதல் கணக்கு

    (c)

    பேரேட்டில் முதல் கணக்கு

    (d)

    பேரேட்டில் ரொக்கக் கணக்கு

  3. தள்ளுபடி, ரொக்கம் மற்றும் வங்கி பத்திகளுடைய ரொக்க ஏட்டை இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    சாதாரண ரொக்க ஏடு

    (b)

    இருபத்தி ரொக்க ஏடு

    (c)

    முப்பத்தி ரொக்க ஏடு

    (d)

    சில்லறை ரொக்க ஏடு

  4. கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ப்பதிவாக பதிவு செய்யப்படும்?

    (a)

    சொந்த செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம் 

    (b)

    அலுவலக செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம் 

    (c)

    வாடிக்கையாளர், நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்திய தொகை 

    (d)

    வங்கி எடுத்துக் கொண்ட வட்டி

  5. ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகளை ரொக்க ஏட்டில் பதிந்தால், அது

    (a)

    எதிர்ப்பதிவு

    (b)

    கூட்டுப் பதிவு

    (c)

    ஒற்றைப் பதிவு

    (d)

    சாதாரணப் பதிவு

  6. சில்லறை ரொக்க ஏட்டின் இருப்பு

    (a)

    ஒரு செலவு

    (b)

    ஒரு இலாபம்

    (c)

    ஒரு சொத்து 

    (d)

    ஒரு பொறுப்பு 

  7. எந்தச் செலவிற்கு சில்லறை ரொக்கத்திலிருந்து கொடுக்கலாம்?

    (a)

    தபால் செலவு மற்றும் பயணச் செலவுகள்

    (b)

    மேலாளரின் ஊதியம்

    (c)

    அறைகலன் மற்றும் பொருத்துகைகள் வாங்க

    (d)

    மூலப் பொருட்கள் வாங்க 

  8. சிறிய செலவினங்களைப் பதியும் ஏடு

    (a)

    ரொக்க ஏடு

    (b)

    கொள்முதல் ஏடு

    (c)

    செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு ஏடு

    (d)

    சில்லறை ரொக்க ஏடு

  9. ரொக்கத்திற்கு சரக்கு வாங்குதல் பதியப்படும் ஏடு 

    (a)

    ரொக்க ஏடு 

    (b)

    கொள்முதல் ஏடு 

    (c)

    முதற்குறிப்பேடு 

    (d)

    பேரேடு 

  10. முப்பத்தி ரொக்க ஏட்டில் அலுவலகத் தேவைக்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது தோன்றுவது 

    (a)

    ரொக்க ஏட்டின் பற்றுப் பக்கத்தில் மட்டும் 

    (b)

    ரொக்க ஏட்டின் வரவுப் பக்கத்தில் மட்டும் 

    (c)

    ரொக்க ஏட்டின் இரு பக்கங்களிலும் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  11. ஜனவரி 1,2018 அன்று சில்லறைக் காசாளரிடம் ரூ.1,000 தரப்பட்டது. ஜனவரி மாதம் அவர் ரூ.860 செலவழித்தார் பிப்ரவரி 1அன்று அவர் முன் பண மீட்புக்காக பெறும் காசோலையின் தொகை ரூ.________ .

    (a)

    1000

    (b)

    860

    (c)

    1860

    (d)

    140

  12. சில்லறை ரொக்க ஏட்டினைப் பராமரிப்பவர் _________என அழைக்கப்படுகிறார்.

    (a)

    உரிமையாளர் 

    (b)

    வங்கியர் 

    (c)

    சில்லறைக் காசாளர் 

    (d)

    அலுவலகர் 

  13. சில்லறை ரொக்க ஏடு _________வகைப்படும் 

    (a)

    இரண்டு 

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஐந்து 

  14. வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட காசோலை அவமதிக்கப்பட்டால் பற்று வைக்க வேண்டிய கணக்கு.

    (a)

    ரொக்க க/கு 

    (b)

    வங்கி க/கு 

    (c)

    வாடிக்கையாளர் க/கு 

    (d)

    சரக்களித்தோர்  க/கு 

  15. பெறப்பட்ட காசோலை அன்றே வங்கியில் செலுத்தப்பட்டால் பற்று வைக்க வேண்டிய கணக்கு 

    (a)

    வங்கி க/கு 

    (b)

    ரொக்க க/கு 

    (c)

    வாடிக்கையாளர் க/கு 

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை 

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் துணை ஏடுகள் - II ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Accountancy Subsidiary Books - II One Marks Question And Answer )

Write your Comment