இருப்பாய்வு Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. இருப்பாய்வு என்பது ஒரு

    (a)

    அறிக்கை

    (b)

    கணக்கு

    (c)

    பேரேடு

    (d)

    குறிப்பேடு

  2. இருப்பாய்வு கீழ்க்கண்ட எந்த கணக்குகளை உள்ளடக்கி இருக்கும்

    (a)

    ஆள்சார் கணக்குகள் மட்டும்

    (b)

    சொத்துக் கணக்குகள் மட்டும் 

    (c)

    பெயரளவு கணக்குகள் மட்டும்

    (d)

    அனைத்து கணக்குகளும்

  3. பற்று இருப்புகளும் மற்றும் வரவு இருப்புகளும் சமமாக இருக்கின்றனவா என அறிய அனைத்துப் பேரேட்டுக் கணக்குகளையும் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பட்டியல்

    (a)

    குறிப்பேடு

    (b)

    நாளேடு

    (c)

    இருப்பாய்வு

    (d)

    இருப்பு நிலைக் குறிப்பு

  4. பின்வரும் எந்த முறை அல்லது முறைகளில் இருப்பாய்வு தயாரிக்கப்படுகிறது?

    (a)

    இருப்பு முறை

    (b)

    மொத்தத் தொகை முறை

    (c)

    மொத்தத் தோகை முறை மற்றும் இருப்பு முறை

    (d)

    (அ), (ஆ) மற்றும் (இ)

  5. ஒரு இருப்பாய்வு தயாரிக்கப்படுவது

    (a)

    ஆண்டு இறுதியில்

    (b)

    ஒரு குறிப்பிட்ட நாளில்

    (c)

    ஒரு பருவ காலம் முடிந்தது

    (d)

    இவை ஏதும் இல்லை

  6. 3 x 2 = 6
  7. இருப்பாய்வு என்றால் என்ன?

  8. இருப்பாய்வு தயாரிக்கும் முறைகள் யாவை?

  9. கீழே கொடுக்கப்பட்டுள்ள கணக்குகளின் இருப்புகளைக் கண்டறிந்து, அவை இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் இடம்பெறுமா அல்லது வரவு பத்தியில் இடம் பெறுமா எனக் காட்டுக.
    (i) பற்பல கடனாளிகள்
    (ii) பற்பல கடனீந்தோர்
    (iii) கை ரொக்கம்
    (iv) வங்கி மேல்வரைப்பற்று
    (v) சம்பளம்
    (vi) தள்ளுபடி அளித்தது
    (vii) பொறி இயந்திரம்
    (viii) அறைகலன்

  10. 3 x 3 = 9
  11. கீழ்க்கண்ட இருப்பாய்வில் சில பிழைகள் உள்ளன. அவற்றைவற்றை சரிசெய்து மீண்டும் ஒரு இருப்பாய்வைத் தயாரிக்கவும்.

    31-03-2017 -ஆம் நாளைய இருப்பாய்வு
    கணக்கின் பெயர் பற்று ரூ வரவு ரூ
    கட்டடம் 60,000  
    இயந்திரம் 17,000  
    கொள்முதல் திருப்பம் 2,600  
    வாராக்கடன் 2,000  
    ரொக்கம் 400  
    பெற்றெற்றத் தள்ளுபடி 3,000  
    வங்கி மேல்வரைப்பற்று 10,000  
    கடனீந்தோர் 50,000  
    கொள்முதல் 1,00,000  
    முதல்   72,800
    பொருத்துகைகள்   5,600
    விற்பனை   1,04,000
    கடனாளிகள்   60,000
    வட்டி பெற்றெற்றது   2,600
    மொத்தம் 2,45,000 2,45,000
  12. இருப்பாய்வு தயாரிப்பதின் நோக்கங்கள் யாவை?

  13. இருப்பாய்வின் குறைபாடுகள் யாவை?

  14. 2 x 5 = 10
  15. பியர்ல் என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    முதல் 44,000 முதலீடு மீதான வட்டி 2,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 5,000 சுங்க வரி 3,000
    கூலி 800 கணிப்பொறி 20,000
    எடுப்புகள் 4,000 விற்பனை 72,000
    கொள்முதல் 75,000 தொடக்கச் சரக்கிருப்பு 10,200
  16. பின்வரும் இருப்புகளைக் கொண்டு இருப்பாய்வு தயாரிக்கவும்.

    கணக்கின் பெயர் ரூ கணக்கின் பெயர் ரூ
    வங்கிக் கடன் 2,00,000 கொள்முதல் 1,80,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 1,80,000 விற்பனை 3,00,000
    சரக்கிருப்பு 70,000 கடனாளி 4,00,000
    முதல் 2,50,000 வங்கி 2,00,000

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் - இருப்பாய்வு Book Back Questions ( 11th Standard Accountancy - Trial Balance Book Back Questions )

Write your Comment