துணை ஏடுகள் - I Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  4 x 1 = 4
 1. கொள்முதல் ஏட்டில் பதிவு செய்வது

  (a)

  அனைத்து சரக்குகளின் கொள்முதல்

  (b)

  அனைத்து சொத்துக்களின் கடன் கொள்முதல்

  (c)

  அனைத்து சரக்குகளின் கடன் கொள்முதல்

  (d)

  அனைத்து சொத்துக்களின் கொள்முதல்

 2. விற்பனை ஏட்டின் மொத்தம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரவு வைக்கப்படுவது

  (a)

  விற்பனை கணக்கு

  (b)

  ரொக்க கணக்கு

  (c)

  கொள்முதல் கணக்கு

  (d)

  உரிய குறிப்பேடு

 3. நிலைச்சொத்துக்கள் கடனுக்கு வாங்கியது பதிவு செய்ய வேண்டிய ஏடு

  (a)

  கொள்முதல் ஏடு

  (b)

  விற்பனை ஏடு

  (c)

  கொள்முதல் திருப்ப ஏடு

  (d)

  உரிய குறிப்பேடு

 4. இறுதிப்பதிவுகள் பதிவு செய்யுமிடம்

  (a)

  ரொக்க ஏடு

  (b)

  பேரேடு

  (c)

  உரிய குறிப்பேடு

  (d)

  கொமுதல் ஏடு

 5. 5 x 2 = 10
 6. ஏதேனும் நான்கு துணைஏடுகளின் வகைகளைக் குறிப்பிடுக.

 7. கொள்முதல் திருப்ப ஏடு என்றால் என்ன?

 8. பற்றுக்குறிப்பு என்றால் என்ன?

 9. உரிய குறிப்பேடு என்றால் என்ன?

 10. இடாப்பு என்றால் என்ன?

 11. 2 x 3 = 6
 12. துணை ஏடுகளின் நன்மைகள் யாவை?

 13. சிறு குறிப்பு வரைக
  (அ) மாற்றுச்சீட்டில் மேலெழுதுதல்
  (ஆ) மாற்றுச்சீட்டை தள்ளுபடி செய்தல்

 14. 2 x 5 = 10
 15. பின்வரும் நடவடிக்கைகளை சாந்தி அறைகலன் நிறுவனத்தின் கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க:

  2017
  மார்ச் 1
  மதுரை, மோகன் அறைகலன் நிறுவனத்திடமிருந்து வாங்கியது
    20 நாற்காலிகள் ஒன்று ரூ.450 வீதம்
    2 மேசைகள் ஒன்று ரூ.1,000 வீதம்
    இதில், 10% வியாபரத் தள்ளுபடி நீக்குக
  மார்ச்  7 இராயப்பேட்டை, இரமேஷ் நிறுவனத்திடமிருந்து வாங்கியது
    2 மர நாற்காலிகள் ஒன்று ரூ.500 வீதம்
    10 மடக்கு நாற்காலிகள் ஒன்று ரூ.200 வீதம்
  மார்ச் 21 காரைக்கால், கமால் நிறுவனத்திடமிருந்து வாங்கியது
    10 நாற்காலிகள் ஒன்று ரூ.750 வீதம்
    15 இரும்பு அலமாமாரிகள் ஒன்று ரூ.1,500 வீதம்
    இதற்கு, கட்டுமம் மற்றும் அளிப்புச் செலவு ரூ.250
    இதில், 10% வியாபாரத் தள்ளுபடி நீக்குக.
  மார்ச் 25 சென்னை, ஜெமினி விற்பனையகத்திடமிருந்து
    2 தட்டச்சு இயந்திரங்கள் ஒன்று ரூ.7,750 வீதம்
  அலுவலகப் பணிக்கென வாங்கப்பட்டது.
 16. பின்வரும் விவரங்களை விஜய் மின் பொருள் விற்பனையகத்தின் கொள் முதல் ஏடு, கொள் முதல் திருப்ப ஏடு, விற்பனை ஏடு, விற்பனைத்திருப்ப ஏடு ஆகியவற்றில் பதிவு செய்க.

  2017  
  ஜனவரி 1 பிரித்தி நிறுவனத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது
    25 மேசை விசிறிகள் ஒன்று ரூ. 1,400 வீதம்
    10 மின்விசிறிகள் ஒன்று ரூ. 2,000 வீதம்
    ஆட்டோ கட்டணம் ரூ. 100 சேர்க்க்க்கவும்
  ஜனவரி 5 ஷீலா விற்பனையகத்திற்கு கடனுக்கு விற்றது
    10 மின் தேய்ப்பான்கள் ஒன்று ரூ. 1,250 வீதம்
    20 மின் அடுப்புகள் ஒன்று ரூ. 450 வீதம்
    வியாபாரத்தள்ளுபடி 10% குறைக்கவும்
  ஜனவரி 10 பிருந்தா நிறுவனத்திடமிருந்து ரொக்கத்திற்கு வாங்கியது
    10 மின் அடுப்புகள் ஒன்று ரூ. 1,300 வீதம்
  ஜனவரி 18 பிரித்தி நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பியது
    5 மேசை விசிறிகள் குறைபாட்டுடன் இருந்தன. அதற்கான்கான ரொக்கம் பெறப்படவில்லை
  ஜனவரி 20 சத்யா மின் பொருளகத்திடமிருந்து வாங்கியது.
    10 மின்விசிறிகள் ஒன்று ரூ. 1,200 வீதம்
    வியாபாரத்தள்ளுபடி 5% நீக்கவும்
  ஜனவரி 21 ஷீலா விற்பனையகித்திடமிருந்து 3 மின் தேய்ப்பான்கள் குறைபாடு காரணமாக திருப்பி வந்தது. அதற்கான ரொக்கம் செலுத்தப்படவில்லை
  ஜனவரி 23 எலிசபெத் நிறுவனத்திடமிருந்து 10 நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று ரூ. 4,700 வீதம் கடனுக்கு வாங்கப்பட்டது
  ஜனவரி 25 பவானி நிறுவனத்திற்கு கடனுக்கு விற்றது 7 மின் விசிறிகள் ஒன்று ரூ. 1,450 வீதம்
  ஜனவரி 27 சத்யா மின் பொருளகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட 2 சேதமடைந்த மின் விசிறிகளுக்கான ரொக்கம் பெறப்படவில்லை.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் - துணை ஏடுகள் - I Book Back Questions ( 11th Standard Accountancy - Subsidiary Books - I Book Back Questions )

Write your Comment