New ! கணிதம் MCQ Practise Tests



இருபரிமாண பகுமுறை வடிவியல் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. ஒரு புள்ளிக்கும் y அச்சிற்கும் இடைப்பட்ட தூரமானது, அப்புள்ளிக்கும் ஆதிக்கும் இடைப்பட்ட தூரத்தில் பாதி எனில் அப்புள்ளியின் நியமப்பாதை ______.

    (a)

    x2+3y2=0

    (b)

    x2-3y2=0

    (c)

    3x2+y2=0

    (d)

    3x2-y2=0

  2. (1, 2) மற்றும் (3, 4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் செங்குத்து இருசமவெட்டியானது ஆய அச்சுகளுடன் ஏற்படுத்தும் வெட்டுத் துண்டுகள் ______.

    (a)

    5, –5

    (b)

    5, 5

    (c)

    5, 3

    (d)

    5, –4

  3. (1, 2) மற்றும் (3, 4) ஆகிய இரு புள்ளியிலிருந்து சமத் தொலைவிலும், 2x-3y=5 என்ற கோட்டின் மீதும் அமைந்துள்ள புள்ளி______.

    (a)

    (7, 3)

    (b)

    (4, 1)

    (c)

    (1, –1)

    (d)

    (–2, 3)

  4. 4 x 2 = 8
  5. \(\left( 0,-\frac { 3 }{ 2 } \right) \), (1,-1) மற்றும் \(\left( 2,-\frac { 1 }{ 2 } \right) \) என்ற புள்ளிகள் ஒரு கோடமைப் புள்ளிகள் என காட்டுக.

  6. \(\sqrt { 3 } \)x-y+4=0 என்ற கோட்டை கீழ்க்காணும் சமான வடிவத்திற்கு மாற்றுக. சாய்வு மற்றும் வெட்டுத்துண்டு வடிவம்.

  7. 3 x 3 = 9
  8. (5, 7) மற்றும் (7, 5) என்ற புள்ளிகள் வழியே செல்லக்கூடிய நேர்க்கோட்டின் சாய்வைக் காண்க. மேலும் x-அச்சுடன் ஏற்படுத்தும் சாய்வுக் கோணத்தைக் காண்க.

  9. ஒரு நேர்க்கோடு x-அச்சுடன் ஏற்படுத்தும் கோணம் 150 மற்றும் y -அச்சைக் குறை திசையில் 5 அலகு தொலைவில் வெட்டுகிறது எனில், நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.

  10. y -அச்சின் வெட்டுத்துண்டு 7 மற்றும் நேர்கோட்டிற்கும் y -அச்சுக்கும் இடைப்பட்ட கோணம் 300 எனில், நேர்க்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க.

  11. 2 x 5 = 10
  12. ஒரு குறிப்பிட்ட வகை குறுந்தகடு ஒன்றின் விலை ரூ 8 ஆக இருக்கும் போது 22,000 குறுந்தகடுகளை வாடிக்கையாளர்கள் வாங்குவார்கள். ஒரு குறுந்தகட்டின் விலை ரூ30 அல்லது அதற்கு மேல் விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். அதே சமயத்தில் ஒரு குறுந்தகட்டின் விலை ரூ6 அல்லது அதற்கு குறைவாக இருக்கும் போது உற்பத்தியாளர் விற்பனை செய்ய மாட்டார். இருப்பினும், குறுந்தகடு ஒன்றின் விலை ரூ14 ஆக இருக்கும் போது உற்பத்தியாளரால் 24,000 குறுந்தகடுகளை வழங்க இயலும். தேவை மற்றும் வழங்கல் அளவுகள், விலைக்கு நேர்விகித சமமாக எடுத்துக்கொண்டால் பின்வருவனவற்றை எவ்வாறு காணலாம்.
    (i) தேவைச் சமன்பாடு (Demand Equation)
    (ii) வழங்கல் சமன்பாடு (Supply Equation)
    (iii) சந்தையின் சமநிலையில் குறுந்தகடுகளின் எண்ணிக்கை மற்றும் விலை
    (iv) ஒரு குறுந்தகட்டின் விலை ரூ10 எனில் தேவை மற்றும் வழங்கல் அளவு.

  13. x2+y2+4x-3y+7 =0 என்ற நியமப்பாதையின் மீது Q என்ற புள்ளி அமைந்துள்ளது. P என்ற புள்ளி கோட்டுத்துண்டு OQ-ஐ வெளிப்புறமாக 3:4 என்ற விகிதத்தில் பிரிக்கும் எனில் புள்ளி P-ன் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க. இங்கு O என்பது ஆதிப்புள்ளியாகும்.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணிதம் - இருபரிமாண பகுமுறை வடிவியல் Book Back Questions ( 11th Standard Maths - Two Dimensional Analytical Geometry Book Back Questions )

Write your Comment