+1 Second Revision Test 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?

    (a)

    கடனீந்தோர்

    (b)

    பணியாளர்

    (c)

    வாடிக்கையாளர்

    (d)

    அரசு

  2. 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவுகள்_________________

    (a)

    மக்கள் தொகை கட்டுப்பாடு

    (b)

    நாடுகள் பெருக்கம்

    (c)

    இயற்கைச் சீரழிவுகள்

    (d)

    பேரளவு உற்பத்தி மற்றும் கடன் நடவடிக்கைகள்

  3. இறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு

    (a)

    முக்கியத்துவ மரபு

    (b)

    பண மதிப்பீட்டுக் கருத்து

    (c)

    முன்னெச்சரிக்கை மரபு

    (d)

    நிகழ்வு தீர்வு / கருத்து

  4. கணக்கியல் சமன்பாடு எதனுடன் சார்ந்தது?

    (a)

    சொத்துக்களுடன்

    (b)

    பொறுப்புகளுடன்

    (c)

    சொத்துகள் மற்றும் பொறுப்புகளுடன் 

    (d)

    சொத்தகள், பொறுப்புகள் மற்றும் முதல் ஆகியவற்றின்

  5. பற்று மற்றும் வரவு இனங்களை குறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதும் நடைமுறையை இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    கூட்டுதல்

    (b)

    எடுத்தெழுதுதல்

    (c)

    குறிப்பேட்டில் பதிதல்

    (d)

    இருப்புக் கட்டுதல்

  6. ஆள்சார் கணக்குகள் மற்றும் சொத்துக் கணக்குகளின் இருப்புகள் காட்டப்படுவது _________.  

    (a)

    இலாப நட்டக் கணக்கு 

    (b)

    வியாபாரக் கணக்கு

    (c)

    இருப்பு நிலை அறிக்கை 

    (d)

    இவை எதுவுமில்லை 

  7. பின்வரும் எந்த முறை அல்லது முறைகளில் இருப்பாய்வு தயாரிக்கப்படுகிறது?

    (a)

    இருப்பு முறை

    (b)

    மொத்தத் தொகை முறை

    (c)

    மொத்தத் தோகை முறை மற்றும் இருப்பு முறை

    (d)

    (அ), (ஆ) மற்றும் (இ)

  8. பின்வரும் வாக்கியங்களில் எது உண்மையல்ல ?

    (a)

    ரொக்கத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது

    (b)

    சொத்துகள் கடனுக்கு வாங்கியது உரிய குறிப்பேட்டில் பதிவு செய்யப்படுகிறது

    (c)

    வியாபாரத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது

    (d)

    மாற்றுச்சீட்டின் செலுத்தற்குரிய நாளை கணக்கிடும்போது மூன்று நாட்கள் சலுகை
    நாட்களாகக் கூட்டப்படுகின்றன

  9. சாதாரண ரொக்க ஏட்டை வைத்திருக்கும் ஒரு நிறுவனம், எந்த கணக்கை தயாரிக்க தேவை இல்லை?

    (a)

    பேரேட்டில் விற்பனைக் கணக்கு

    (b)

    பேரேட்டில் கொள்முதல் கணக்கு

    (c)

    பேரேட்டில் முதல் கணக்கு

    (d)

    பேரேட்டில் ரொக்கக் கணக்கு

  10. பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?

    (a)

    செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது

    (b)

    விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது

    (c)

    வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை

    (d)

    ரொக்க  ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த

  11. கீழ்க்கண்ட பிழைகளில் எந்தப்பிழை அனாமத்துக் கணக்கைப் பயன்படுத்தி திருத்தம் செய்யப்படும்?

    (a)

    கொள்முதல் திருப்ப ஏட்டில் ரூ.1,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.

    (b)

    நரேந்திரனால் சரசரக்கு திருப்பித் தரப்பட்டது, ஏடுகளில் பதிவுசெய்யப்படாமல் உள்ளது.

    (c)

    அகிலாவால் ரூ.900 மதிப்புள்ள சரக்கு திருப்பித் தரப்பட்டது, விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.90 என பதிவுசெய்யப்பட்டுள்ளது.

    (d)

    ரவிவர்மனுக்கு கடனுக்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்படாமல் உள்ளது

  12. கீழ்கண்ட பிழைகளில் இருப்பாய்வு வெளிப்படுத்தாப் பிழையைக் குறிப்பிடுக.

    (a)

    முழுவிடு

    (b)

    தூக்கி எழுதுதல் பிழை

    (c)

    கூட்டல் பிழை

    (d)

    கழித்தல் பிழை

  13. பின்வரும் எந்த சொத்துகளுக்கு வெறுமையாதல் முறையில் தேய்மானம் நீக்கப்படுகிறது

    (a)

    பொறி மற்றும் பொறி இயந்திரம்

    (b)

    சுரங்கம் மற்றும் கற் சுரங்கங்கள்

    (c)

    கட்டடங்கள்

    (d)

    வணிகக்குறி

  14. புதிதாக நிறுவப்பட்ட இயந்திரத்தினைச் சோதனை ஓட்டம் மேற்கொள்வதற்குச் செய்த செலவு ரூ 20,000.

    (a)

    தொடக்கச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    முதலினச் செலவு

    (d)

    நீள்பயன் வருவாயினச் செலவு

  15. ரூ 8,000 மதிப்புள்ள ஒரு பொறிவகை ரூ 8,500 க்கு விற்பனை செய்தததில் முதலின வரவு. 

    (a)

    ரூ 8,000

    (b)

    ரூ 8,500

    (c)

    ரூ 500

    (d)

    ரூ 16,500

  16. இருப்பாய்வில் காணப்படும் எடுப்புகள்

    (a)

    கொள்முதலோடு கூட்டப்படும்

    (b)

    கொள்முதலிலிருந்து கழிக்கப்படும்

    (c)

    முதலோடு கூட்டப்படும்

    (d)

    முதலிலிருந்து கழிக்கப்படும்

  17. நிகர இலாபம்.

    (a)

    முதல் கணக்கில் பற்று வைக்கப்படும்

    (b)

    முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்

    (c)

    எடுப்புகள் கணக்கில் பற்று வைக்கப்படும்

    (d)

    எடுப்புகள் கணக்கில் வரவு வைக்கப்படும்

  18. பெற வேண்டிய பங்காதாயம் இருப்பு நிலைக்குறிப்பில் எங்குக் காட்டப்பட வேண்டும்? 

    (a)

    பற்றுப் பக்கத்தில் 

    (b)

    பொறுப்புக்கள் பக்கத்தில் 

    (c)

    சொத்துக்கள் பக்கத்தில் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  19. பின்வருனவற்றில் எது கணினி அமைப்பின் கூறு அல்ல?

    (a)

    உள்ளீட்டு அலகு

    (b)

    வெளியீட்டு அலகு

    (c)

    தரவு

    (d)

    மையச் செயல்பாட்டு அலகு

  20. _______ கணினி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கையால் எழுதும் கணக்கியல் முறை,படிப்படியாக மாற்றப்பட்டுள்ளது.  

    (a)

    அறிவியலில் 

    (b)

    வணிகத்தில்

    (c)

    பொருளாதாரத்தில் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  21. 7x 2 =14
  22. சான்றுச் சீட்டு என்றால் என்ன?

  23. "உண்மை ஆதாரக் கருத்தது" - குறிப்பு வரைக.

  24. விடுபட்ட பகுதிகளை நிரப்புக:

       சொத்துக்கள் ரூ=   பொறுப்புகள் ரூ=   முதல் ரூ 
     (அ)  30,000 20,000 ?
    (ஆ) 60,000 25,000 ?
    (இ) ? 25,000 30,000
    (ஈ) ? 10,000 80,000
    (உ) 25,000 ? 15,000
    (ஊ) 40,000 ? 30,000
  25. விற்பனை ஏடு என்றால் என்ன?

  26. ரொக்கத் தள்ளுபடி என்றால் என்ன?

  27. இருப்பாய்வு தயாரித்தபின் கண்டறியப்பட்ட பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
    (அ) கொள்முதல் ஏட்டில் ரூ.900 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
    (ஆ) பழைய அறைகலன் விற்றது ரூ.1,000 விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
    (இ) அருளிடமிருந்து கடனுக்கு ரூ.1,500 க்கு சரக்கு வாங்கியது ஏடுகளில் பதிவு செய்யப்படவில்லை

  28. ஏப்ரல் 1, 2015 அன்று ஒரு நிறுவனம் ரூ. 50,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. அதன் வாழ்நாள் 6 ஆண்டுகள். குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுதோறும் 30% தேய்மானம் நீக்கப்படவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31 - ல் முடிக்கப்பெறுகின்றன. ஏப்ரல் 1, 2015 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கு தயாரிக்கவும்

  29. வருவாயின வரவு பற்றி சிறு குறிப்பு தரவும்.

  30. தொடக்கச் சரக்கிருப்பு என்றால் என்ன?    

  31. கணினி என்றால் என்ன?

  32. 7x 3 =21
  33. கணக்கியல் சுழலின் படிநிலைகளை விளக்குக.

  34. பின்வருவனவற்றை கணக்கியல் சமன்பாட்டின் படி பதிவு செய்து காட்டுக.

     (அ) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது       ரூ 60,000
     (ஆ) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது   ரூ 20,000
     (இ) ரூ 10,000 மதிப்புள்ள சரக்கினை விற்பனைச் செய்தது       ரூ 15,000
     (ஈ) வாடகை ரொக்கமாக செலுத்தப்பட்டது   ரூ 500
  35. பேரேடு என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் யாவை?

  36. இருப்பாய்வு தயாரிப்பதின் நோக்கங்கள் யாவை?

  37. எதிர்ப் பதிவை உதாரணத்துடன் விளக்குக.

  38. ரோனி என்பவர் வீணா புகைப்பட நிலையத்தின் உரிமையாளர் ஆவார். மார்ச் 31, 2018 ஆம் நாளன்று அவருடைய வணிகத்தின் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தி இருப்பு கட்டப்பட்டது. அது
    ரூ12,000 மேல்வரைப்பற்று காட்டியது. வீணா புகைப்பட்பட நிலையத்தின் வங்கி அறிக்கை ரூ 5,000 வரவு இருப்பைக் காட்டியது. பின்வரும் விவரங்களைக் கொண்டு  வங்கிச் சரிக்கட்டும் பட்டியலை தயார் செய்க.
    (அ) வங்கி நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 3,000 ஆனால், இது குறித்து ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை
    (ஆ) 2018 மார்ச் 27 அன்று விடுத்த ரூ 9,000 மதிப்புள்ளள்ள காசோலை . இதில் ரூ 7,000 மதிப்புள்ள காசோலை  2018 மார்ச் 31-ஆம் நாள் வரை செலுத்துகைக்கு முன்னிலைப் படுத்தப்படவில்லை.
    (இ) ரொக்க  ஏட்டின் பற்றிருப்பு ரூ 4,100 வரவிருப்பாக எடுத்தெழுதப்பட்டது.
    (ஈ) வங்கியால் பற்று வைக்கப்பட்ட காசோலை  புத்தகக் கட்டணம் ரூ.200 ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை.
    (உ) வங்கியில் பற்று வைக்கப்பட்ட பாதுகாப்பு பெட்டக வாடகை ரூ1,000 ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை

  39. இருப்பாய்வு வெளிக்காட்டும் பிழைகள் யாவை?

  40. கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு, நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க.
    1.1.2018 அன்று ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இயந்திரம் வாங்கியது ரூ. 38,000
    1.1.2018 அன்று பழுது பார்த்தல் செலவு செய்தது ரூ. 12,000
    இயந்திரத்தின் எதிர் நோக்கும் பயனளிப்பு காலம்: 4 ஆண்டுகள்
    எதிர்நோக்கும் இறுதி மதிப்பு ரூ. 6,000

  41. இறுதிப் பதிவுகள் என்றால் என்ன? அவை ஏன் பதிவு செய்யப்படுகின்றன?

  42. 2017, டிசம்பர் 31 ஆம் நாளன்று, கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப்பதிவுகள் தருக.
    (i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 1200
    (ii) கொடுபட வேண் டிய வாடகை ரூ 300
    (iii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 450
    (iv) முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி ரூ 400
    (v) போக்கெழுத வேண்டிய வாராக்கடன் ரூ 200.

  43. 7x 5 =35
  44. தீபக் எழுதுபொருள் நிறுவனத்தின் நடவடிக்கைகள் 2018 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பின்வருமாறு இருந்தன. அவைகளை குறிப்பேட்டில் பதிவு செய்க.

     ஜனவரி     ரூ 
    1   றோக்கத்துடன் வியாபாரம் தொடங்கியது        2,00,000
    2   வங்கியில் கணக்கு ஆரம்பித்து, பணம் செலுத்தியது    1,00,000
    3   பத்மினி நிறுவனத்திற்கு A4 தாள்களை கடனுக்கு விற்பனைச் செய்தது     60,000
    4   பத்மினி நிறுவனத்திடமிருந்து மேற்கண்ட தொகைக்கு பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு பெறப்பட்டது  
    5   பத்மினி நிறுவனத்தின் மாற்றுச்சீட் டு வங்கியில் கொடுத்து தள்ளுபடி செய்து பணம் பெறப்பட்டது 58,000
     பிப்ரவரி      
    15   பத்மினி நிறுவனத்தின் மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது  
  45. கீழ்கண்ட குறிப்பேட்டுப் பதிவுகளுக்குரிய நடவடிக்கைகளைத் தருக.

    அ] ரொக்கக் க/கு
           அறைகலன் க/கு   
    ஆ] வாடகை க/கு
            ரொக்கக் க/கு  
    இ] வங்கி க/கு
           ரொக்கக் க/கு  
    ஈ) தமிழ்ச் செல்வி க/கு
            விற்பனை க/கு  
  46. ராஜா என்பவரது ஏடுகளில் கீழ்கண்ட நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து அவற்றைப் பேரேட்டில் எடுத்து எழுதுக.

    2018 மார்ச் 1 செந்தில் என்பவருக்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது ரூ.9,000
    5 முரளி என்பவருக்கு கடனுக்கு சரக்கு விற்றது 4,500
    9 ரொக்க விற்பனை 6,000
    18 மணியிடமிருந்து கடன் கொள்முதல் செய்தது 3,200
    23 முரளியின் கணக்கு முழுவதுமாக தீர்க்கப்பட்டு
    அவரிடமிருந்து தொகை பெறப்பட்டது
    4,000
  47. சித்ரா என்பவரது ஏடுகளிலிருந்து 31.3.2017 அன்று எடுக்கப்பட்ட கணக்குகளின் இருப்புகளின் அடிப்படையில் இருப்பாய்வு தயாரிக்கவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    சரிகட்டப்பட்ட கொள்முதல் 60,000 விளம்பரம் 4,000
    வாடகை
    செலுத்தியது
    2,000 பொதுச் செலவுகள் 700
    தள்ளுபடி பெற்றது 1,000 கழிவு செலுத்தியது 1,500
    உள் தூக்குக் கூலி 2,700 முதல் 40,000
    இறுதி சரக்கிருப்பு 18,600 விற்பனை 48,500
  48. கீழே கொடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் கொண்டு குமார் எழுதுபொருள் நிறுவனத்தின் ஜூலை 2017 க்குரிய விற்பனை ஏட்டினை தயார் செய்க.

    2017  
    ஜூலை 5 சாயல்குடி, சரவணா நிறுவனத்திற்கு கடனுக்கு விற்பனைச் செய்தது
      10 A4 தாள்கள் கட்டுகள், ஒரு கட்டு ரூ. 250 வீதம்
      10 டஜன் எழுது அட்டை, ஒரு டஜன் ரூ. 850 வீதம்
      இரண்டிற்கும் 10% தள்ளுபடி அனுமதிக்கவும்
    ஜூலை  8 இராஜாவிற்கு ரொக்கத்திற்கு விற்றது
      15 A4 தாள்கள் கட்டுகள், ஒரு கட்டு ரூ. 250 வீதம்
    ஜூலை 20 முதுகுளத்தூர், மோகனுக்கு விற்றது
      5 வெள்ளை அட்டைகள், ஒரு அட்டை ரூ. 2,200 வீதம்
      10 டஜன் எழுது பலகை, ஒரு டஜன் ரூ. 850 வீதம்
    ஜூலை 23 பழைய சிற்றுந்தை நாராயணனுக்கு கடனுக்கு விற்றது ரூ. 5,000
    ஜூலை 28 குமரனுக்கு ரொக்கத்திற்கு விற்றது 15 பெட்டி குறியீட்டு பேனா,
    ஒரு பெட்டி ரூ. 250 வீதம்.
  49. 2017 ஜுன் மாதத்திற்கான பாண்டீஸ்வரி என்பவரின் பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து தனிப்பத்தி ரொக்க ஏட்டைத் தயாரிக்கவும்

    2017 ஜூன்   ரூ
    1 ரொக்கத்துடன் வணிகம் தொடங்கியது 50,000
    8 வாடகை ரொக்கமாகச் செலுத்தியது 4,000
    10 ரொக்கம் செலுத்தி அச்சுப்பொறி வாங்கியது 7,500
    11 ரொக்கக் கொள்முதல் 15,000
    14 ரொக்க விற்பனை 10,000
    17 ரொக்கமாகப் பெற்ற கழிவு 6,000
    19 கடன் மீதான வட்டி ரொக்கமாகச் செலுத்தியது 2,000
    20 சொந்த செலவுக்கு பணம் எடுத்தது 3,000
    21 துரித அஞ்சல் கட்டணம் ரொக்கமாகச் செலுத்தியது 3,500
  50. 2017 டிசம்பர் 31 அன்று வியாபாரி ஒருவர் பெற்ற வங்கி அறிக்கை மேல்வரைப்பற்று ரூ.12,000 எனக் காட்டியது. அதே நாளில் அவரது ரொக்க  ஏடானது ரூ.2,000 பற்றிருப்பைக் காட்டியது.
    பின்வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்து. வேறுபாட்டிற்கான காரணங்களை காண்பிக்கும் வகையில் வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க.
    (அ) 2017 டிசம்பர் 21 அன்று வங்கியில் செலுத்திய காசோலை  ரூ  2,000, 2017 டிசம்பர் 26 அன்று வரவு வைக்கப்பட்டது.
    (ஆ) 2017 டிசம்பர் 26 அன்று விடுத்த காசோலை  ரூ  2,500, 2018 டிசம்பர் 31 அன்று வரை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.
    (இ) வங்கிக் கட்டணம் ரூ  200 இன்னும் ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை
    (ஈ) இணையம் வழியாக செலுத்திய ரூ 1,500 இரு முறை ரொக்க  ஏட்டில் பதியப்பட்டது.
    (உ) வங்கியில் செலுத்திய காசோலை  ரூ 1,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை. அக்காசோலை வங்கியால் மறுக்கப்பட்டது குறித்து ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை.
    (ஊ) செலுத்திய காசோலை  இன்னும் வங்கியால் வரவு வைக்கப்படாதது ரூ17,800

  51. திரு.சீனிவாசன் அவர்களின் ஏடுகளில் வங்கி சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்க.  

    ரொக்க ஏடு
    ப                                                                                                வ 
    நாள் விவரம் ரூ நாள் விவரம் ரூ
    2003 பிப்.1  இரும்பு கீ/கொ 22,148 2003 பிப்.3 மணி  2,822
    18 குமார்  12,000 15 கிரி  750
    19 விற்பனை [ராம்] 200 20 சிதம்பரம்  87
    28 பாலு 8,345 20 கொள்முதல்[பத்மா] 182
    28 கழிவு[பாபு] 810 26 சம்பளம்[சோமு] 150
      வெங்கடேசன்  3,412 26 சுந்தரம் 8,820
          28 ரங்கன்  2,346
            இருப்பு கீ/இ    31,758
        46,915     46,915
    செல்லேடு
    நாள் விவரம் பற்று எடுப்புகள்
    ரூ
    வரவு வைப்புகள்
    ரூ
    இருப்பு/பற்று
    வரவு 
    2003 பிப்.1  இருப்பு கீ/கொ      22,148
    4 மணி  2,822   19,326
    16 கிரி  750   18,576
    19 குமார்    12,000 30,576
    20 ராம்    200  
    20 சிதம்பரம் 87    
    20 பத்மா  182   30,567
    26 சோமு  150   30,357
    28 காப்பீடு கட்டணம்  92    
      செ.மா.சீட்டு  2,500    
      பாபு    810  
      முத்து    1,200  
      வட்டி    32  
      முதலீடு மீது வட்டி    135  
      பெ.மா.சீட்டு     750 30,692
  52. பின்வரும் பிழைகளை கணக்காளர் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறிந்தார். அவற்றைத் திருத்தம் செய்யவும்.
    (அ) ரூ.3,000-த்திற்கு இயந்திரம் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
    (ஆ) பெற்றெற்ற வட்டி ரூ.200 தரகுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
    (இ) தமிழ்ச்செல்வனுக்கு சம்பளம் ரூ.1,000 செலுத்தியது அவர் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
    (ஈ) ரூ.300-க்கு பழைய அறைகலன் விற்றது விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
    (உ) செளந்தரபாண்டியனிடமிருந்து கடனுக்கு ரூ.800 மதிப்புள்ள சரக்கு வாங்கியது
    ஏடுகளில் பதிவுசெய்யப்படவில்லை

  53. சுதா நிறுமம் ஏப்ரல் 1, 2008 அன்று ரூ. 64,000 மதிப்புள்ள இயந்திரம் வாங்கியது. இயந்திரத்தை நிறுவுவதற்காக ரூ. 28,000 செலவு செய்தது. ஆண்டுக்கு 10% தேய்மானம் நேர்க்கோட்டு முறையில் கணக்கிட வேண்டும். இயந்திரம் பயனற்றுப்போனதால் 30 ஜுன் 2010 அன்று ரூ. 52,000 க்கு விற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர்சம்பர் 31ல் முடிக்கப்பெறுகின்றன. இயந்திரக் கணக்கினைத் தயாரிக்கவும்.

  54. பின்வரும் செலவினங்களை முதலினம், வருவாயினம், நீள்பயன் வருவாயினச் செலவினங்களாக, வகைப்படுத்தவும்.
    (i) மூன்று ஆண்டுகளுக்கு பயனளிக்கும் வகையில் செய்யப்பட்ட விளம்பரச் செலவு.
    (ii) கட்டடம் பதிவு செய்யும் போது செலுத்திய பதிவுக் கட்டணம்.
    (iii) பழைய கட்டடம் வாங்கிய போது, அதனைப் பராமரித்து, வண்ணம் பூசி பயன்படுத்துவதற்கு ஏற்றாற்போல் மாற்றியதற்கானச் செலவு.

  55. கீழ்க்காணும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2016 ஆம் ஆண்டிற்கான இலாப நட்டக் கணக்கினை தயாரிக்கவும்.

    விவரம் ரூ விபரம் ரூ
    மொத்த நட்டம் 60,000 அச்சு மற்றும் எழுது பொருள் (அலுவலகம்) 2,000
    விற்பனை மேம்பாட்டிற்கான செலவுகள் 5,000 சட்டச் செலவுகள் 5,000
    வழங்கல் செலவுகள் 15,000 வாராக்கடன் 1,000
    அளித்த கழிவு 7,000 தேய்மானம்  2,000
    கடன் மீதான வட்டி செலுத்தியது 5,000 வாடகை பெற்றது 4,000
    கட்டுமச் செலவுகள் (விற்பனை மீது) 4,000 காப்பீட்டிற்கு உட்படாத, தீயினால்
    ஏற்பட்ட நட்டம்
    4,000
    பங்காதாயம் பெற்றது 3,000 ஏற்பட்ட நட்டம் 3,000
  56. 2016, டிசம்பர் 31ஆம் நாளைய இருப்பாய்வின் ஒருபகுதி கீழே தரப்பட்டுள்ளது.

     விவரம்   பற்று ரூ   வரவு ரூ 
      வாராக்கடன் போக்கெழுதியது      1,800  
      தள்ளுபடி அளித்தது 600  
      பற்பல கடனாளிகள் 20,000  
      வாரா ஐயக்கடன் ஒதுக்கு   1,500
      கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு        500

    பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு மற்றும் 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்கவும். இவ்விவரங்கள் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

  57. கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவுகள் மூலம்
    i) CONCATENATE செயற்கூற்றைக் கொண்டு B3 ல் முகவரியை நிரப்பவும்.
    ii) C2 வில் கொடுக்கப்பட்டுள்ள KAMARAJAR SALAI என்பதனை C3 ல் சிறிய எழுத்துக்களாக மாற்றவும்
    iii) D2வில் கொடுக்கப் பட்டுள்ள Chennai என்பதனை D3ல் பெரிய எழுத்துக்களாக மாற்றவும்.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019 ( 11th Standard Accountancy Revision Test Paper 2019 )

Write your Comment