New ! கணிதம் MCQ Practise Tests



11th First Revision Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

    I. சரியானவிடையைத்தேர்ந்தெடுத்துஎழுதுக.

       
    20 x 1 = 20
  1. \(A=\{ (x,y);y=\sin x,x \in R \}\) மற்றும் \(B=\{(x,y);y=\cos x, x\in R \}\) எனில், \(A \cap B\) -ல் ________.

    (a)

    உறுப்புகளில்லை

    (b)

    எண்ணிலடங்கா உறுப்புகள் உள்ளன

    (c)

    ஓரே ஒரு உறுப்பு உள்ளது

    (d)

    தீர்மானிக்க இயலாது

  2. R மெய்யெண்களின் கணம் என்க. R × R –ல் கீழ்க்கண்ட உட்கணங்களைக் கருதுக.
    S = {(x,y);y=x+1 மற்றும் 0< x < 2 }; T = {(x,y);x-y \(\in\) Z} எனில் கீழ்க்காணும் கூற்றில் எது மெய்யானது?

    (a)

    T சமானத் தொடர்பு ஆனால், S சமானத் தொடர்பு அல்ல.

    (b)

    S, T இரண்டுமே சமானத் தொடர்பு அல்ல.

    (c)

    S, T இரண்டுமே சமானத் தொடர்பு.

    (d)

    S சமானத் தொடர்பு ஆனால், T சமானத் தொடர்பு அல்ல.

  3. x, y மற்றும் b ஆகியவை மெய்யெண்கள் மற்றும் ,x  < y , b  >  0 எனில், _______.

    (a)

    xb

    (b)

    xb>yb

    (c)

    xb≤yb

    (d)

    \(\frac{x}{b}\ge\frac{y}{b}\)

  4. cos 1o + cos2o + cos 3o + ........ + cos 179o = _______.

    (a)

    0

    (b)

    1

    (c)

    -1

    (d)

    89

  5. 30 மாணவர்களைக் கொண்ட வகுப்பில் கணிதத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது, இயற்பியலில் முதலாவது மற்றும் இரண்டாவது, வேதியியலில் முதலாவது மற்றும் ஆங்கிலத்தில் முதலாவது என பரிசுகளை வழங்கும் மொத்த வழிகளின் எண்ணிக்கை ______.

    (a)

    304x292

    (b)

    303x293

    (c)

    302x294

    (d)

    30x295

  6. அடுத்தடுத்த r மிகை முழு எண்களின் பெருகற்பலன் எதனால் வகுபடும்.

    (a)

    r!

    (b)

    (r-1)!

    (c)

    (r+1)!

    (d)

    rr

  7. இரு எண்களின் கூட்டுச்சராசரி a மற்றும் பெருக்குச் சராசரி g எனில் ______.

    (a)

    a≤g

    (b)

    a≥g

    (c)

    a=g

    (d)

    a>g

  8. (at2, 2at) என்ற புள்ளியின் நியமப்பாதை ______.

    (a)

    \(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } \)=1

    (b)

    \(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } \)=1

    (c)

    x2+y2=a2

    (d)

    y2=4ax

  9. y= –x என்ற கோட்டிற்கு (2, 3) என்ற புள்ளியின் பிம்பப்புள்ளி ______.

    (a)

    (–3, –2)

    (b)

    (–3, 2 )

    (c)

    (–2, –3)

    (d)

    ( 3, 2 )

  10. \({ a }_{ ij }=\frac { 1 }{ 2 } (3i-2j)\) மற்றும் \(A=[{ a }_{ ij }{ ] }_{ 2\times 2 }\) எனில், A  என்பது ______.

    (a)

    \(\left[ \begin{matrix} \frac { 1 }{ 2 } & 2 \\ -\frac { 1 }{ 2 } & 1 \end{matrix} \right] \)

    (b)

    \(\left[ \begin{matrix} \frac { 1 }{ 2 } & -\frac { 1 }{ 2 } \\ 2 & 1 \end{matrix} \right] \)

    (c)

    \(\left[ \begin{matrix} 2 & 2 \\ \frac { 1 }{ 2 } & -\frac { 1 }{ 2 } \end{matrix} \right] \)

    (d)

    \(\left[ \begin{matrix} -\frac { 1 }{ 2 } & \frac { 1 }{ 2 } \\ 1 & 2 \end{matrix} \right] \)

  11. A,B என்பன n வரிசையுள்ள சமச்சீர்  அணிகள், இங்கு \(A\neq B\) எனில் ______.

    (a)

    A+B ஆனது ஓர் எதிர்  சமச்சீர்  அணி

    (b)

    A+B என்பது ஓர் சமச்சீர் அணி

    (c)

    A+B என்பது ஒரு மூலைவிட்ட  அணி

    (d)

    A+B என்பது ஒரு பூஜ்ஜிய  அணி

  12. ஒரு வெக்டர்\(\overrightarrow { OP } \)  அனைத்து x மற்றும் y அச்சுகளின் மிகைத் திசையில் முறையே 60மற்றும் 450-ஐ ஏற்படுத்துகின்றது .\(\overrightarrow { OP } \) ஆனது z= அச்சுடன் ஏற்படுத்தும் கோணம் ______.

    (a)

    450

    (b)

    600

    (c)

    900

    (d)

    300

  13. \(\hat { i } +3\hat { j } +\lambda \hat { k } \)-ன் மீது \(5\hat { i } -\hat { j } -3 \hat { k } \) வீழலும்  \(5\hat { i } -\hat { j } -3 \hat { k } \)-ன் மீது \(\hat { i } +3\hat { j } +\lambda \hat { k } \) வீழலும் சமம் எனில் \(\lambda \)-ன் மதிப்பு ______.

    (a)

    \(\pm 4\)

    (b)

    \(\pm 3\)

    (c)

    \(\pm 5\)

    (d)

    \(\pm 1\)

  14. சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
    \(\lim _{ \theta \rightarrow 0 }{ \frac { \sin { \sqrt { \theta } } }{ \sqrt { \sin { \theta } } } } \) ______.

    (a)

    1

    (b)

    -1

    (c)

    0

    (d)

    2

  15. சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்
     ______.

    (a)

    \(x=\frac { 1 }{ 2 } \)-ல் தொடர்ச்சியற்றது 

    (b)

    \(x=\frac { 1 }{ 2 } \)-ல் தொடர்ச்சியானது 

    (c)

    எல்லா இடங்களிலும் தொடர்ச்சியானது

    (d)

    எல்லா இடங்களிலும் தொடர்ச்சியற்றது

  16. சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
    \(\log _{ x }{ 10 } \)-ஐ பொறுத்து \(\log _{ 10 }{ x } \)-ன் வகைக்கெழு ______.

    (a)

    1

    (b)

    \(-{ (\log _{ 10 }{ x } ) }^{ 2 }\)

    (c)

    \({ (\log _{ x }{ 10 } ) }^{ 2 }\)

    (d)

    \(\frac { { x }^{ 2 } }{ 100 } \)

  17. சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
     ,x = 1 ல் வகைமையானது எனில் ______. 

    (a)

    \(a=\frac { 1 }{ 2 } ,\quad b=\frac { -3 }{ 2 } \)

    (b)

    \(a=\frac { -1 }{ 2 } ,\quad b=\frac { 3 }{ 2 } \)

    (c)

    \(a=-\frac { 1 }{ 2 } ,\quad b=-\frac { 3 }{ 2 } \)

    (d)

    \(a=\frac { 1 }{ 2 } ,\quad b=\frac { 3 }{ 2 } \)

  18. \(\int { \frac { { e }^{ 6logx }-{ e }^{ 5logx } }{ { e }^{ 4logx }-{ e }^{ 3logx } } } dx=\) ______.

    (a)

    x+c

    (b)

    \(\frac { { x }^{ 3 } }{ 3 } +c\)

    (c)

    \(\frac { 3 }{ { x }^{ 3 } } +c\)

    (d)

    \(\frac { 1 }{ { x }^{ 2 } } +c\)

  19. \(\int { \frac { { \sec }^{ 2 }x }{ { \tan }^{ 2 }x-1 } } dx\) = ______.

    (a)

    \(2log\left| \frac { 1-tanx }{ 1+tanx } \right| +c\)

    (b)

    \(log\left| \frac { 1+tanx }{ 1-tanx } \right| +c\)

    (c)

    \(\frac { 1 }{ 2 } log\left| \frac { tanx+1 }{ tanx-1 } \right| +c\)

    (d)

    \(\frac { 1 }{ 2 } log\left| \frac { tanx-1 }{ tanx+1 } \right| +c\)

  20. வரிசை 2 உடைய அணிகள் கணத்தில் அணியின் உறுப்புகள் 0 அல்லது 1 மட்டுமே உள்ளது எனில் தேர்ந்தெடுக்கப்படும் அணியின் அணிக்கோவை மதிப்பு பூச்சியமற்றதாகக் கிடைப்பதற்கான நிகழ்தகவு ______.

    (a)

    \(\frac {3}{16}\)

    (b)

    \(\frac {3}{8}\)

    (c)

    \(\frac {1}{4}\)

    (d)

    \(\frac {5}{8}\)

  21. II. எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிவினா எண் 30க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.  

    7 x 2 =14
  22. கீழ்க்கண்ட அசமன்பாட்டுத் தொகுப்பினைத் தீர்க்க 3x - 9 ≥ 0, 4x - 10 ≤ 6

  23. cos(A + B + C)ஐ விரிவாக்கு.இங்கு A+ B+ C = \(\frac { \pi }{ 2 } \) எனில் cos A cos B cos C = sin A sin B cos C + sin B sin C cos A + sin C sin A cos B என நிறுவுக. 

  24. மதிப்பினைக் காண்க : 6!

  25. ஒரு நேர்க்கோட்டிற்கு ஆதியிலிருந்து வரையப்படும் செங்குத்தின் நீளம் 12 மற்றும் x -அச்சுடன் மிகை திசையில் ஏற்படுத்தும் கோணம் 1500 எனில், கோட்டின் சமன்பாட்டைக் காண்க.

  26. 3 x 4 வரிசை உடைய ஒரு அணி A  மாறும் B  என்ற இரண்டு அணிகளும் \({ A }^{ T }B\) மற்றும் \(B{ A }^{ T }\)  ஆகிய இரண்டையும் வரையறை செய்யுமாறுள்ள அணிகள் எனில், B  அணியின் வரிசையைக் காண்க. 

  27. பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க:\(\lim _{ x\rightarrow \infty }{ { \left( 1+\frac { 1 }{ x } \right) }^{ 7x } } \)

  28. \(y={ (\cos ^{ -1 }{ x } ) }^{ 2 }\) எனில், \((1-{ x }^{ 2 })\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } -x\frac { dy }{ dx } -2=0\)என நிரூபிக்க.மேலும் \(x=0\) -ன் போது \({ y }_{ 2 }\) மதிப்பைக் காண்க.

  29. மதிப்பிடுக: \(\int{a^{x}e^{x}dx}\)

  30. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் A, B மற்றும் C ஆகியோர் மேலாளர் ஆவதற்கான வாய்ப்புகள் முறையே 5:3:2 என்ற விகிதத்தில் உள்ளனர். A, B மற்றும் C ஆகியோர் மேலாளர்களாக இருந்தால் அலுவலக உணவகத்தினை மேம்படுத்துவதற்கான நிகழ்தகவுகள் முறையே 0.4, 0.5 மற்றும் 0.3 ஆகும். B என்பவரை மேலாளராக நியமனம் செய்தால் அலுவலக உணவகம் மேம்படுத்துவதற்கான நிகழ்தகவு என்ன?

  31. II. எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிவினா எண்40க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.  

    7 x 3 = 21
  32. \(f(x)={\sqrt{4-x^3}\over \sqrt{x^2-9}}\) என்ற சார்பின் மீப்பெரு சார்பகத்தைக் காண்க

  33. log 428x = 2log28  - ன் தீர்வு காண்க.

  34. தீர்க்க \(\sin { x } -3\sin { 2x } +\sin { 3x } =\cos { x } -3\cos { 2x } +\cos { 3x } \)

  35. கணிதத் தொகுத்தறிதல் மூலம் என உள்ள எந்த ஒரு முழு எண்ணுக்கும் n≥2, 3n ≥n2 என நிரூபி.

  36. ஒரு பெருக்குத் தொடரின் k ஆவது உறுப்பு tk எனில், k-ன் எல்லா மிகை முழு எண்ணுக்கும் tn-k, tn, tn+k என்பனவும் ஒரு பெருக்குத் தொடர் என நிறுவுக.

  37. 3x-2y+2=0 என்ற கோடு, 3x2+5xy-2y2+4x+5y=0 என்ற இரட்டைக் கோடுகளை வெட்டும் இரு புள்ளிகளை ஆதியுடன் இணைக்கும் கோடுகள் செங்குத்தானவை எனக் காண்க

  38. \(\vec { a } =4\hat { i } -\hat { j } +3\hat { k } \) மற்றும் \(\vec { b } =-2\hat { i } +\hat { j } -2\hat { k } \) எனில், இரு வெக்டர்களுக்கும் செங்குத்தான 6 எண்ணளவு உள்ள வெக்டர்களைக் காண்க. 

  39. பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க:\(\lim _{ x\rightarrow 0 }{ { \frac { \sin { x(1-\cos { x) } } }{ { x }^{ 3 } } } } \)

  40. x = a(t - sin t), y = a(1 - cos t) எனில், \(\frac { dy }{ dx } \)காண்க.

  41. x - ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
    \(\frac{8^{1+x}+4^{1-x}}{2^{x}}\)

  42. IV.அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    7 x 5 =35
    1. கீழ்க்காணும் சார்புகள் ஒன்றுக்கொன்று மற்றும் மேற்கோர்த்தல் சார்புகளா எனச் சரிபார்க்கவும்
      (i) f:N ➝ N  எனும் சார்பு f(n) = n + 2 என வரையறுக்கப்படுகிறது.
      (ii) f:N U{-1,0} ⟶ N எனும் சார்பு f(n) = n + 2 என வரையறுக்கப்படுகிறது.

    2. k(x-1)2 = 5x - 7 என்பதன் ஒரு மூலம் மற்றதன் இருமடங்கு எனில், k = 2 அல்லது -25 எனக் காண்க.

    1. இரண்டு வட்டங்களில், ஓரே அளவு கொண்ட வில்லின் நீளங்கள் 60° மற்றும் 75°-ஐ மையக் கோணங்களாகத் தாங்கும்போது அவ்விருவட்டங்களுக்கான ஆரங்களின் விகிதம் காண்க.

    2. ஒரு வட்ட கோணப்பகுதியின் சுற்றளவும் அதே ஆரமுடைய அரைவட்டத்தின் வில்லின் நீளமும் சமம் எனில், அவ்வட்டக் கோணப் பகுதியின் மை யக் கோணத்தைப் பாகை , கலை மற்றும் விகலையில் காண்க.

    1. ஒரு தளத்தில் 11 புள்ளிகள் உள்ளன. இவற்றில் 4 புள்ளிகளைத் தவிர மற்ற எந்த 3 புள்ளிகளும் ஒரே கோட்டில்  அமையவில்லை எனில், கீழ்க்கண்டவற்றைக் காண்க.
      (i) இப்புள்ளிகளில் ஒரு சோடி புள்ளிகளினால் அமையும் கோடுகள் எத்தனை?
      (ii) இந்த புள்ளிகளை முனைப் புள்ளிகளாகக் கொண்டு எத்தனை முக்கோணங்களை அமைக்கலாம்?

    2. (1 + x)n -ன் விரிவில் 5 ஆவது, 6 ஆவது மற்றும் 7 ஆவது உறுப்புகளின் கெழுக்கள் ஒரு கூட்டுத் தொடர் எனில், n-ன் மதிப்புகளை க் காண்க .

    1. 5x2+6xy+y2= 0என்ற இரட்டை நேர்க்கோட்டின் தனித்தனி சமன்பாடுகளைக் காண்க

    2.  \(\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ x & y & z \\ { x }^{ 2 } & { y }^{ 2 } & { z }^{ 2 } \end{matrix} \right| =(x-y)(y-z)(z-x)\) என நிறுவுக.

    1. \(\vec { a } =(2\hat { i } +3\hat { j } +6\hat { k } ),\vec { b } =(6\hat { i } +2\hat { j } -3\hat { k } ),\vec { b } =(3\hat { i } -6\hat { j } +2\hat { k } )\) ஆகியவை ஒன்றுக்கொன்று செங்குத்து என நிரூபிக்க.

    2. ஒரு விலங்கின் கண்பாவையின் விட்டம் \(f(x)=\frac { 160{ x }^{ -0.4 }+90 }{ 4{ x }^{ -0.4 }+15 } \) என்ற சார்பாகத் தரப்பட்டுள்ளது. இங்கு x என்பது ஒளியின் செறிவினைக் குறிக்கின்றது மற்றும் \(f(x)\) மி.மீ-இல் தரப்பட்டுள்ளது. அந்தப் கண்பாவையின் விட்டத்தை, ஒளியின் செறிவு குறைவாக காண்க.

    1. \({ x }^{ 4 }+{ x }^{ 2 }{ y }^{ 3 }-{ y }^{ 5 }=2x+1\) எனில், \(\frac { dy }{ dx } \)காண்க. 

    2. ஒரு நபரின் உயரம் h செ.மீ மற்றும் எடை w கிகி. அவரின் எடையின் மாறும் வீதம் உயரத்தைப் பொருத்துத் தோராயமாக \(\frac{dw}{dh}=4.364\times 10^{-5}h^{2}\)எனக் கொடுக்கப்பட்டுள்ளது எனில், எடையை உயரத்தின் சார்பாகக் காண்க.மேலும் ஒரு நபரின் உயரம் 150 செ.மீ-ஆக இருக்கும் போது எடையைக் காண்க.         

    1. 52 சீட்டுகள்கொண்ட ஒரு சீட்டுக்கட்டிலிருந்து இரண்டு சீட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக எடுக்கப்படுகின்றன. எடுக்கப்படும் இரு சீட்டுகளும் ஜாக் (Jack -ஆக இருக்க நிகழ்தகவினை பின்வரும் நிபந்தனைகள் படிக் காண்க.
      (i) முதலில் எடுக்கப்பட்ட சீட்டு மீண்டும் சீட்டுக் கட்டில் வைக்கப்படுகிறது.
      (ii) முதலில் எடுக்கப்பட்ட சீட்டு மீண்டும் சீட்டுக் கட்டில் வைக்கப்படவில்லை.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் முதல் திருப்புதல் தேர்வு ( 11th Maths First Revision Test )

Write your Comment