மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி I

    25 x 2 = 50
  1. சாந்தி என்பவரின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புகள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 6,000 பற்பல கடனீந்தோர் 25,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 4,000 சரக்கிருப்பு 45,000
    இயந்திரம் 60,000 கடனாளிகள் 70,000
    அறைகலன் 10,000 ரொக்கம் 4,000

    2018, டிசம்பர் 31ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரித்து அந்நாளைய முதலை கணக்கிடவும்.

  2. கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

    விவரம் ரூ.
    ஆண்டின் தொடக்க முதல் (ஏப்ரல் 1, 2018) 5,00,000
    ஆண்டின் இறுதி முதல் (மார்ச் 31, 2019) 8,50,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 1,20,000
    அவ்வாண்டில் எடுப்புகள் 70,000
  3. ஊட்டி மனமகிழ் மன்றத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்.

    பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ
    தொடக்க இருப்பு   விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது 10,000
    கைரொக்கம்  5,000 எழுதுபொருளுக்காக செலுத்தியது 7,000
    வாடகைப் பெற்றது 10,000 கணிப்பொறி வாங்கியது 25,000
    முதலீடுகள் விற்றது 8,000 சம்பளம்  20,000
    சந்தா பெற்றது 54,000 இறுதி இருப்பு  
        கைரொக்கம் 15,000
      77,000   77,000
  4. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் சந்தா எவ்வாறு தோன்றும் என்பதைக் காட்டவும்.
    2018-ல் பெற்ற சந்தா ரூ16,000-ல் 2017 ஆம் ஆண்டுக்கான ரூ.3,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கானரூ.5,000 அடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 4,000. 2017 ஆம் ஆண்டில் 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது ரூ.2,000.

  5. இலாப நோக்கற்ற அமைப்பின் முதலின வரவுகளில் ஏதேனும் நான்கினைத் தரவும்.

  6. மதிப்பூதியம் என்றால் என்ன?

  7. 2017, ஜனவரி 1 அன்று அறிவழகன் மற்றும் சீனிவாசன் என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகள் முறையே ரூ.15,000 மற்றும் ரூ.10,000 இருப்பினைக் காட்டியது. 2017, ஜுலை 1 அன்று அறிவழகன் கூடுதல் முதலாக ரூ.5,000 கொண்டு வந்தார் மற்றும் 2017, செப்டம்பர் 1 அன்று சீனிவாசன் கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.10,000.
    2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 கணக்கிடவும்.

  8. இலாபநட்டப் பகிர்வு கணக்கு ஏன் தயாரிக்கப்பட வேண்டும்?

  9. வாங்கப்பட்ட நற்பெயர் என்றால் என்ன?

  10. ஹமீது மற்றும் கோவிந்த் என்ற இரு கூட்டாளிகள் 5:3 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜான் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். ஜான் ஹமீதிடமிருந்து 1/5 பங்கும், கோவிந்திடமிருந்து 1/5 பங்கும் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  11. அரவிந்த் மற்றும் பாலாஜி இருவரும் 3:2 விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வரும் கூட்டாளிகள். அவர்கள் அனிருத் என்பவரை புதிய கூட்டாளியாகச் சேர்க்க அனுமதித்தனர். புதிய இலாபப்பகிர்வு விகிதமாக 1:1:1 என்பதை மூவரும் ஒப்புக் கொள்கின்றனர். அனிருத் செலுத்த வேண்டிய நற்பெயர் மதிப்பு ரூ.20,000 என்று மதிப்பிடப்படுகிறது. அதில், அவர் ரூ.12,000 ரொக்கம் செலுத்துகிறார். மாறுபடும் முதல் முறையில் கணக்குகள் உள்ளதெனக் கொண்டு நற்பெயருக்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  12. பிரவீணா மற்றும் தான்யா என்ற இரு கூட்டாளிகள் 7:3 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் மாலினி என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பிரவீணா, தான்யா மற்றும் மாலினி அவர்களின் புதிய இலாப விகிதம் 5:2:3. தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

  13. செல்வம் மற்றும் செந்தில் இருவரும் 2:3 என்ற விகிதத்தில் இலாபம் பகிரும் கூட்டாளிகள். இதில், சிவா என்பவர் 1/5 பங்கு விகிதத்தில் கூட்டாளியாக சேருகிறார். சிவா, இப்பங்கினை செல்வம் மற்றும் செந்தில் இருவரிடமும் சமமாக பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கண்டறியவும்.

  14. ராகுல், ரவி மற்றும் ரோஹித் எனும் கூட்டாளிகள் முறையே 5 : 3 : 2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் ரோஹித் விலகினார். அவருடைய பங்கு ராகுல் மற்றும் ரவி ஆகியோரால் 3: 2 எனும் விகிதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கணக்கிடவும்.

  15. கயல், மாலா மற்றும் நீலா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 2:2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கயல் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். மாலா மற்றும் நீலாவுக்கும் இடையே உள்ள புதிய இலாபப் பகிர்வு விகிதம் 3:2. ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.

  16. கான் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 50,000 பங்குகளை விண்ணப்பத்தின் போது ரூ.4, ஒதுக்கீட்டின் போது ரூ.4 மற்றும் முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.2 என செலுத்தும் வகையில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. 65,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இயக்குனர்கள் 50,000 பங்குகளை விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யவும், மிகுதியாகப் பெற்ற விண்ணப்பத் தொகையை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தி கொள்ளவும் முடிவு செய்தனர். அனைத்துத் தொகைகளும் பெறப்பட்டன எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  17. குறை ஒப்பம் என்றால் என்ன?

  18. பின்வரும் விவரங்களிலிருந்து அப்துல் வரையறு நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.

    விவரம் 2015-16
    ரூ.
    2016-17
    ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 3,00,000 3,60,000
    இதர வருமானம் 1,00,000 60,000
    செலவுகள் 2,00,000 1,80,000
    வருமான வரி 30% 30%
  19. நிதிநிலை அறிக்கைகள் யாவை?

  20. கிடைமட்ட பகுப்பாய்வு என்றால் என்ன?

  21. மகேஷ் நிறுமத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      நேர்மைப் பங்குமுதல் 2,00,000
    2. நீண்டகால பொறுப்புகள்  
      நீண்டகாலக் கடன்கள் 50,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
    (அ) குறுகிய காலக் கடன்கள் 17,000
    (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 25,000
    (இ) இதர நடப்புப் பொறுப்புகள்  
      கொடுபட வேண்டிய செலவுகள் 3,000
    (ஈ) குறுகியகால ஒதுக்குகள் 5,000
    மொத்தம் 3,00,000
    சொத்துகள்  
    1. நீண்டகால சொத்துகள்  
    (அ) நிலைச் சொத்துகள்  
      புலனாகும் சொத்துகள் 1,50,000
    2. நடப்புச் சொத்துகள்  
    (அ) சரக்கிருப்பு 45,000
    (ஆ) கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகள் 70,000
    (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 30,000
    (ஈ) இதர நடப்புச் சொத்துகள்  
      முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் 5,000
    மொத்தம் 3,00,000

    (i) நடப்பு விகிதம்
    (ii) நீர்மை விகிதம் கணக்கிடவும்.

  22. பயோனியர் நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து உரிமையாளர் விகிதத்தைக் கணக்கிடவும்.

    பயோனியர் நிறுமத்தின் 31.3.2019 அன்றைய இருப்புநிலைக் குறிப்பு
    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      (அ) பங்குமுதல்  
         (i) நேர்மைப் பங்குமுதல் 1,00,000
          (ii) முன்னுரிமைப் பங்குமுதல் 75,000
       (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 25,000
    2. நீண்டகால பொறுப்புகள்  
       நீண்டகாலக் கடன்கள் -
    3. நடப்புப் பொறுப்புகள்  
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 2,00,000
    மொத்தம் 4,00,000
    II. சொத்துகள்  
    1. நீண்டகாலச் சொத்துகள்  
      (அ) நிலைச் சொத்துகள் 2,75,000
      (ஆ) நீண்டகால முதலீடுகள் 50,000
    2. நடப்புச் சொத்துகள்  
    ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 75,000
    மொத்தம் 4,00,000
  23. நடப்பு விகிதம் என்றால் என்ன?

  24. ஏதேனும் ஐந்து கணக்கியல் அறிக்கைகள் கூறு.

  25. மேலாண்மை தகவல் அமைப்பு என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Sample 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment