12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி I

    25 x 5 = 125
  1. பாரதி தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிக்கவில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    ப ரொக்க ஏடு வ
    பெறுதல்கள் ரூ. செலுத்தல்கள் ரூ.
    இருப்பு கீ/கொ 32,000 கொள்முதல் க/கு 56,000
    விற்பனை க/கு 1,60,000 கடனீந்தோர் க/கு 80,000
    கடனாளிகள் க/கு 1,20,000 பொதுச் செலவுகள் க/கு 24,000
        கூலி க/கு 10,000
        இருப்பு கீ/இ 1,42,000
      3,12,000   3,12,000

    பிற தகவல்கள்:

    விவரம் 1.4.2018 ரூ. 31.3.2019 ரூ.
    சரக்கிருப்பு 40,000 60,000
    கடனாளிகள் 38,000 ?
    கடனீந்தோர் 58,000 52,000
    இயந்திரம் 1,70,000 1,70,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) கடன் கொள்முதல் 74,000
    (ii) கடன் விற்பனை 1,40,000
    (iii) தொடக்க முதல் 2,22,000
    (iv) இயந்திரம் மீது ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கவும்.

  2. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கடனாளிகள் கணக்கு, மொத்தக் கடனீந்தோர் கணக்கு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரித்து கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் கணக்கிடவும்.

    விவரம் ரூ. விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று இருப்புகள்   2019, மார்ச் 31 அன்று இருப்புகள்  
    பற்பல கடனாளிகள் 2,40,000 பற்பல கடனாளிகள் 2,20,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 30,000 பற்பல கடனீந்தோர் 1,50,000
    பற்பல கடனீந்தோர் 1,20,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 8,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 10,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 20,000
    பிற தகவல்கள்: ரூ.   ரூ.
    கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 6,00,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்குச் செலுத்தியது 30,000
    வாடிக்கையாளருக்கு அளித்த தள்ளுபடி 25,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது 60,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 3,20,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 4,000
    சரக்களித்தோரால் அளிக்கப்பட்ட தள்ளுபடி 10,000 வாராக்கடன் 16,000
  3. செல்வம் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    விவரம் 1-1-2018
    ரூ.
    31.12.2018
    ரூ.
    இயந்திரம் 60,000 60,000
    வங்கி ரொக்கம் 25,000 33,000
    பற்பல கடனாளிகள் 70,000 1,00,000
    சரக்கிருப்பு 45,000 22,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 20,000 38,000
    வங்கிக் கடன் 45,000 45,000
    பற்பல கடனீந்தோர் 25,000 21,000

    கூடுதல் தகவல்கள்:

      ரூ.   ரூ.
    ரொக்க விற்பனை 20,000 கடன் விற்பனை 1,80,000
    ரொக்கக் கொள்முதல் 8,000 கடன் கொள்முதல் 52,000
    கூலி 6,000 சம்பளம் 23,500
    விளம்பரம் 7,000 வங்கிக் கடன்மீது வட்டி 4,500
    எடுப்புகள் 60,000 கூடுதல் முதல் 21,000

    சரிக்கட்டுதல்கள்:
    இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.

  4. பூம்புகார் இலக்கிய மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்

    விவரம்  ரூ  விவரம்  ரூ 
    தொடக்க இருப்பு (1.4.2018) 5,000 சந்தா பெற்றது 20,000
    வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) 4,000 பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் 2,500
    அச்சு மற்றும் எழுதுபொருள் 1,500 போக்குவரத்துச் செலவுகள்  2,750
    வட்டி செலுத்தியது 3,250 புத்தகங்கள் வாங்கியது 10,000
    சிற்றுண்டி வாங்கியது 1,500 பல்வகை வரவுகள் 750
    கொடுபட வேண்டிய சம்பளம்  2,000 அரசிடமிருந்து பெற்ற மானி 6,000
    அறக்கொடை நிதி பெற்றது 2,000 சிற்றுண்டி விற்றது. 1,500
    ஒளியூட்டுக் கட்டணம் 1,300 கட்டடம் மீதான தேய்மானம் 2,000
        வங்கி ரொக்கம் (31.3.2019) 2,000
  5. கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றத்தின் 2016, மார்ச் 31-ல் முடிவடையும் ஆண்டிற்கான பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து, 2016, மார்ச் 31-ல் முடிவடையும் ஆண்டிற்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

    ப கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றம் 2016, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரியபெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
    பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ
    இருப்பு கீ/கொ   பராமரிப்புச் செலவுகள் 5,000
    வங்கி ரொக்கம் 8,000 அறைகலன் 15,000
    சந்தா 11,000 தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் 1,400
    பழைய மட்டைகள் மற்றும் பந்துகள்   செயலாளர் மதிப்பூதியம் 4,500
    விற்றது 100 மட்டை கள் மற்றும் பந்துகள் 7,400
    தொடர் விளையாட்டுப் போட்டிக்கான சந்தா 2,000 இருப்பு கீ/இ  
    உயில்கொடை 20,000 வங்கி ரொக்கம் 7,800
      41,100   41,100

    கூடுதல் தகவல்கள்:
    2015, ஏப்ரல் 1 அன்று மன்றத்தில் பந்துகள் மற்றும் மட்டைகள் இருப்பு ரூ3,000; முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.500. தொடர் விளையாட்டுப் போட்டியின் உபரித்தொகைத் நிரந்தர அரங்கத்திற்கான ஒதுக்காக உருவாக்கப்பட வேண்டும். 31.3.2016 அன்று பெறவேண்டிய சந்தாரூ 2,000. 31.3.2016-ல் மட்டைகள் மற்றும் பந்துகள் இருப்பு ரூ1,000.

  6. கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

    விவரம்  ரூ ரூ விவரம் ரூ
    வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018)   6,000 மதிப்பூதியம் செலுத்தியது 2,800
    கைரொக்கம்    1,000 நீர் மற்றும் மின்சாரக் கட்டணம்  700
    மைதான பராமரிப்பிற்காக     விளையாட்டுப் போட்டிச் செலவுகள் 2,600
    கூலி செலுத்தியது   2,000 விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது 1,900
    சந்தா பெற்றது: முந்தை்தைய ஆண்டு 500   விளையாட்டுப் போட்டி நிதி நிதி வரவுகள் 5,200
    நடப்பு ஆண்டு 9,600   உயில்கொடைப் பெற்றது 2,000
    எதிர்வரும் ஆண்டு  400 10,500 ரொக்க இருப்பு (31.3.2019) 300
    கூலி கொடுபட வேண்டியது   2,200 அரங்கம் அமைப்பதற்காக பெற்ற நன்கொடை 2,000
    கடன்மீதான வட்டி செலுத்தியது   2,000  
  7. கீழ்க்காணும் தென்காசி திருவள்ளுவர் மன்றத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கைத் தயார் செய்யவும்.

    பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ
    தொடக்க இருப்பு   சம்பளம்  20,000
    கைரொக்கம்  14,000 வாடகை  24,000
    வட்டிப் பெற்றது 5,000 பயணச் செலவுகள் 2,000
    சந்தா  55,000 அச்சு மற்றும் எழுதுபொருள் 6,000
    உயில்கொடை  48,000 முதலீடுகள் செய்தது 50,000
    நுழைவுக் கட்டணம் 7,000 விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது 33,000
    அறைகலன் விற்றது 16,000 இருப்பு கீ/இ  
    (ஏட்டு மதிப்பு ரூ.17,000)   கைரொக்கம்  10,000
  8. ஏற்காடு இளைஞர் சங்கத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2019, மார்ச் 31-ம் நாlளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.

    ப 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
    பெறுதல்கள்  ரூ செலுத்தல்கள் ரூ
    இருப்பு கீ/கொ   சம்பளம்  14,000
    கைரொக்கம்  9,600 அலுவலகச் செலவுகள் 7,200
    புத்தகம் வாங்குவதற்காக பெற்ற   புத்தகங்கள் வாங்கியது 15,000
    அரசு மானியம் 10,000 எழுதுபொருள்கள் வாங்கியது 1,800
    சந்தா 24,800 செய்தித்தாள் வாங்கியது 2,100
    சேர்க்கைக் கட்டணம் 2,000 பரிசுகள் வழங்கியது 5,000
    பரிசுநிதி வரவுகள் 6,000 இருப்பு கீ/இ  
    வங்கி வட்டி 1,500 கைரொக்கம் 9,900
    பழைய செய்தித்தாள்கள் விற்றது 1,100    
      55,000   55,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) தொடக்க முதல் நிதி ரூ.20,000
    (ii) புத்தகங்கள் இருப்பு (1.4.2018) ரூ.9,200
    (iii) கூடியுள்ள சந்தா பெறப்படாதது ரூ1,700
    (iv) 1.4. 2018 அன்று எழுதுபொருள்கள் இருப்பு ரூ.1,200 மற்றும் 31.3.2019 அன்று எழுதுபொருள்கள் இருப்பு ரூ.2,000.

  9. சிவகாசி ஓய்வூதியர் மனமகிழ் மன்றத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.

    ப 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
    பெறுதல்கள் ரூ ரூ செலுத்தல்கள் ரூ
    இருப்பு கீ/கொ     வாடகையும், வரியும் 18,000
    கைரொக்கம்  10,000   மின் கட்டணம் 17,000
    வங்கி ரொக்கம் 20,000 30,000 அறைகலன் வாங்கியது 12,000
    சந்தா     பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது 70,000
    2016 – 2017 5,000   பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல்  16,000
    2017 – 2018 25,000   சிறப்பு விருந்து செலவுகள் 4,000
    2018 – 2019 6,000 36,000 பற்பலச் செலவுகள் 2,000
    உயில்கொடை   40,000 இருப்பு கீ/இ  
    அரங்க வாடகை   14,000 கைரொக்கம்  1,000
    பாதுகாப்பு பெட்டக வாடகை    5,000    
    சிறப்பு விருந்திற்கான வசூல்   12,000    
    இருப்பு கீ/இ        
    வங்கி மேல்வரைப்பற்று   3,000    
        1,40,000   1,40,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) சங்கத்தின் 300 உறுப்பினர்கள் தலா ரூ100 வீதம் ஆண்டுச்சந்தா செலுத்துகின்றனர்.
    (ii) 1.4.2017 அன்று சங்கத்தின் அறைகலன் இருப்பு ரூ10,000
    (iii) 2016-2017 ஆம் ஆண்டிற்கான கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ரூ.1,000.

  10. பின்வரும் தகவல்களிலிருந்து சாந்தி மற்றும் சுமதி என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகளை அவர்களின் முதல், நிலை முதலாக இருக்கும் போது தயாரிக்கவும்.

    விவரம் சாந்தி ரூ. சுமதி ரூ.
    2018, ஜனவரி 1 அன்று முதல் 1,00,000 80,000
    2018, ஜனவரி 1 அன்று நடப்புக் கணக்கு (வ) 5,000 3,000
    2018, ஜுன் 1 கூடுதல் முதல் கொண்டு வந்தது 10,000 20,000
    2018 ஆம் ஆண்டில் எடுப்புகள் 20,000 13,000
    எடுப்புகள் மீது வட்டி 500 300
    2018 – ல் இலாபப் பங்கு 10,000 8,000
    முதல் மீது வட்டி 6,300 5,400
    ஊதியம் 9,000 -
    கழிவு - 1,200
  11. பின்வரும் தகவல்களிலிருந்து, மன்னன் மற்றும் சேவகன் எனும் கூட்டாளிகளின் முதல் கணக்குகளை அவர்களின் முதல் மாறுபடும் முதலாக இருக்கும்போது தயாரிக்கவும்.

    விவரம் மன்னன் ரூ. சேவகன் ரூ.
    2018, ஜனவரி 1 அன்று முதல் (வரவிருப்பு) 2,00,000 1,75,000
    2018 ஆம் ஆண்டின் எடுப்புகள் 40,000 35,000
    எடுப்புகள் மீதான வட்டி 1,000 500
    2018 ஆம் ஆண்டின் இலாபப் பங்கு 21,000 16,500
    முதல் மீது வட்டி 12,000 10,500
    ஊதியம் 18,000 -
    கழிவு - 2,500
  12. பின்வரும் தகவல்களிலிருந்து ரூபன் மற்றும் டெரி அவர்களின் முதல், நிலை முதல் எனக்கொண்டு, அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.

    விவரம் ரூபன் ரூ. டெரி ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று முதல் 70,000 50,000
    2018, ஏப்ரல் 1 அன்று நடப்புக் கணக்கு (வ) 25,000 15,000
    கூடுதல் முதல் கொண்டு வந்தது 18,000 16,000
    2018 – 2019 – ல் எடுப்புகள் 10,000 6,000
    எடுப்புகள் மீது வட்டி 500 300
    இலாபப் பங்கு (2018 – 2019) 35,000 25,800
    முதல் மீது வட்டி 3,500 2,500
    சம்பளம் - 18,000
    கழிவு 12,000 -
  13. பின்வரும் தகவல்களிலிருந்து, பத்மினி, மற்றும் பத்மா என்ற கூட்டாளிகளின் முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.

    விவரம் பத்மினி ரூ. பத்மா ரூ.
    2018, ஜனவரி 1 அன்று முதல் (வரவிருப்பு) 5,00,000 4,00,000
    2018 ஆம் ஆண்டில் எடுப்புகள் 70,000 40,000
    எடுப்புகள் மீது வட்டி 2,000 1,000
    2018 – ல் இலாபப் பங்கு 52,000 40,000
    முதல் மீது வட்டி 30,000 24,000
    ஊதியம் 45,000 -
    கழிவு - 21,000
  14. பின்வரும் தகவல்களிலிருந்து, உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
    (அ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.4,00,000
    (ஆ) சாதாரண இலாப விகிதம் 10%
    (இ) இலாபம் 2016: ரூ.62,000; 2017: ரூ.61,000 மற்றும் 2018: ரூ.63,000

  15. பின்வரும் தகவல்களிலிருந்து மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் காணவும்.
    (அ) சராசரி இலாபம் ரூ.20,000
    (ஆ) சாதாரண இலாப விகிதம் 10%
    (இ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.1,50,000

  16. ஆனந்த் மற்றும் பாலு என்ற கூட்டாளிகள் முறையே 7 : 3 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 31 மார்ச், 2018 ஆம் நாளைய அவர்களது இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     நிலம் 60,000
    ஆனந்த் 50,000   சரக்கிருப்பு 40,000
    பாலு 30,000 80,000 கடனாளிகள் 20,000
    பற்பல கடனீந்தோர்   20,000 கைரொக்கம் 10,000
    இலாப நட்ட க/கு   30,000    
        1,30,000   1,30,000

    2018 ஏப்ரல் 1 ஆம் நாளன்று அவர்கள் சந்துரு என்பவரை கீழ்க்காணும் சரிக்கட்டுதல்களுக்கு ஒப்புக்கொண்டு 1/4 பங்குக்கு கூட்டான்மையில் சேர்த்துக் கொண்டனர்
    (அ) சரக்கிருப்பு மதிப்பை ரூ.3,000 குறைப்பது
    (ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.2,000 உருவாக்குவது
    (இ) நிலத்தின் மதிப்பை ரூ.10,000 மதிப்பேற்றம் செய்வது
    மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் முதல் கணக்கினை கூட்டாளி சேர்ப்பிற்குப் பின் தயாரிக்கவும்.

  17. 2018, மார்ச் 31 ஆம் நாளைய ரேகா மற்றும் மேரியின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 50,000
    ரேகா 50,000   சரக்கிருப்பு 8,000
    மேரி 30,000 80,000 பற்பல கடனாளிகள் 60,000
    பொதுக் காப்பு   40,000 வங்கி ரொக்கம் 32,000
    தொழிலாளர் ஈட்டு நிதி   10,000    
    பற்பல கடனாளிகள்   20,000    
        1,50,000   1,50,000

     ரேகா, மேரி இருவரும் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்கின்றனர். அவர்கள் கவிதாவை 1/4 பங்கு விகிதத்தில் கூட்டாண்மையில் சேர்த்துக்கொண்டு, இப்பங்கு முழுவதையும் ரேகாவிடமிருந்து பெற ஒப்புகின்றனர்.
    பின்வரும் சரிக்கட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன:
    (i) கவிதா ரூ.20,000 முதலாக கொண்டு வர வேண்டும். அவருடைய பங்கான நற்பெயர் ரூ.4,000 என மதிப்பிடப்படுகிறது. அவர் நற்பெயருக்கென ரொக்கம் கொண்டுவரவில்லை.
    (ii) கட்டடத்தின் மீது 10% தேய்மானம் உருவாக்கவும்.
    (iii) சரக்கிருப்பு ரூ.6,000 என மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.
    (iv) வாரா ஐயக்கடன் ஒதுக்கு 5% உருவாக்கவும்.
    கூட்டாளி சேர்க்கைக்கு பின் பேரேட்டு கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.

  18. அமல் மற்றும் விமல் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 7:5 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 அன்றைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 80,000
    அமல் 70,000   அறைகலன் 20,000
    விமல் 50,000 1,20,000 சரக்கிருப்பு 25,000
    பற்பல கடனீந்தோர்   30,000 கடனாளிகள் 30,000
    இலாப நட்ட க/கு   24,000 வங்கி 19,000
        1,74,000   1,74,000

    1.4.2019 இல் நிர்மல் புதிய கூட்டாளியாக சேருகிறார். அவர் ரூ.30,000 முதலுடன் எதிர்கால இலாபப்பங்கில் 1/3 விகிதத்தில், பின்வரும் சரிக்கட்டலுடன் கூட்டாளியாகிறார்.
    அ) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.5,000 குறைக்கப்பட வேண்டும்.
    (ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.3,000 உருவாக்கப்பட வேண்டும்.
    (இ) கட்டடம் ரூ.20,000 மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்.
    மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின்பான கூட்டாளி முதல் கணக்கு தயார் செய்யவும்.

  19. மணி, ரமா மற்றும் தேவன் ஆகியோர் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள். தங்கள் இலாப நட்டங்களை முறையே 5:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு

    பொறுப்புகள்  ரூ. ரூ. சொத்துகள்  ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 80,000
    மணி  50,000   சரக்கிருப்பு 20,000
    ரமா  50,000   அறைகலன்  70,000
    தேவன்  50,000 1,50,000 கடனாளிகள்  20,000
    பற்பல கடனீந்தோர்   20,000 கைரொக்கம்  10,000
    இலாபநட்டக் க/கு   30,000    
        2,00,000   2,00,000

    பின்வரும் சரிகட்டுதல்களுக்குட்பட்டு மணி 31.03.2019 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகுகிறார்
    (i) சரக்கிருப்பில் ரூ.5,000 மதிப்பு குறைக்கப்பட வேண்டும்
    (ii) வாரா ஐயக்கடனுக்கு ரூ.1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
    (iii) கட்டடத்தின் மதிப்பு ரூ. 16,000 அதிகரிக்கப்பட வேண்டும்
    (iv) மணிக்குச் சேரவேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை
    மறுமதிப்பீட்டு கணக்கு மற்றும் கூட்டாளி விலகலுக்குப் பின் உள்ள முதல் கணக்கினைத் தயாரிக்கவும்.

  20. ஒரு கூட்டண்மை நிறுவனத்தில் மஞ்சு, சாரு மற்றும் லாவண்யா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, மார்ச் 31 ஆம் நாளைய அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ
    முதல் கணக்குகள்:     கட்டடம் 1,00,000
    மஞ்சு 70,000   அறைகலன் 80,000
    சாரு 70,000   சரக்கிருப்பு 60,000
    லாவண்யா 70,000 2,10,000 கடனாளிகள் 40,000
    பற்பல கடனீந்தோர்   40,000 கைரொக்கம்  20,000
    இலாப நட்டக் கணக்கு   50,000    
        3,00,000   3,00,000

    பின்வரும் சரிக்கட்டுதல்களுக்கு உட்பட்டு மஞ்சு என்பவர் 31.03.2018 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
    (i) சரக்கிருப்பின் மதிப்பில் ரூ.10,000 குறைக்க வேண்டும்.
    (i) ஐயக்கடன் ஒதுக்கு ரூ .3,000 உருவாக்க வேண்டும்.
    (i) கட்டடத்தில் ரூ. 28,000 மதிப்பேற்றம் செய்ய வேண்டும்.
    (ii) மஞ்சுவுக்கு செலுத்த வேண்டிய இறுதித் தொகை இன்னும்செலுத்தப்படவில்லை.மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் விலகலுக்குப் பின் கூட்டாளிகளின் முதல் கணக்கினைத் தயார் செய்யவும்.

  21. சம்பத் நிறுமம் 25,000 பங்குகளை, பங்கு ஒன்று ரூ.10 என பொதுமக்களுக்கு வெளியிட்டது. விண்ணப்பத்தின் போது ரூ.3, ஒதுக்கீட்டின் போது ரூ.4, முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.3 செலுத்தப்பட வேண்டும். பொதுமக்களால் 24,000 பங்குகள் ஒப்பப்பட்டன. இயக்குனர்கள் அனைத்து பங்குகளையும் ஒதுக்கீடு செய்தனர். அதற்காக தொகை முழுவதும் முறையாகப் பெறப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  22. வைரம் வரையறு நிறுமம் ஒன்று ரூ.10 வீதம் 60,000 பங்குகளை ரூ.2 முனைமத்தில் பின்வரும் செலுத்துதலுக்கேற்ப வெளியிட்டது.

    விண்ணப்பத்தின் போது ரூ.6
    ஒதுக்கீட்டின் போது ரூ.4 (முனைமம் உள்பட)
    முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.2

    அனைத்துப் பங்குகளும் ஏற்கப்பட்டன. சரிதாவின் 100 பங்குகளுக்கான ஒதுக்கீடு, முதலாவது அழைப்பு மற்றும் இறுதி அழைப்பிற்கானத் தொகை தவிர, ஏனைய அனைத்தும் பெறப்பட்டன. அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட அனைத்து பங்குகளும் பரிமளா என்பவருக்கு பங்கு ஒன்று ரூ.7 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.

  23. முத்து நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கவு

    விவரம் 2017, மார்ச் 31 2018, மார்ச் 31
    ரூ. ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்    
      பங்குதாரர் நிதி 4,00,000 4,40,000
      நீண்ட காலப் பொறுப்புகள் 1,50,000 1,65,000
      நடப்புப் பொறுப்புகள் 75,000 82,500
    மொத்தம் 6,25,000 6,87,500
    II. சொத்துகள்    
      நீண்டகாலச் சொத்துகள் 5,00,000 6,00,000
      நடப்புச் சொத்துகள் 1,25,000 87,500
    மொத்தம் 6,25,000 6,87,500
  24. யாஸ்மின் மற்றும் சக்தி நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து பொது அளவு நிதிநிலை அறிக்கையினைத் தயார் செய்யவும்

    விவரம் யாஸ்மின் நிறுமம் சக்தி நிறுமம்
    ரூ. ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்    
    1. பங்குதாரர் நிதி    
      (அ) பங்கு முதல் 2,00,000 3,00,000
      (ஆ) காப்பும் மிகுதியும் 50,000 60,000
    2.நீண்டகாலப் பொறுப்புகள்    
      நீண்ட காலக் கடன்கள் 1,50,000 1,80,000
    3. நடப்புப் பொறுப்புகள்    
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,00,000 60,000
    மொத்தம் 5,00,000 6,00,000
    II. சொத்துகள்    
      1.நீண்டகாலச் சொத்துகள்    
      (அ) நிலைச் சொத்துகள் 2,00,000 3,00,000
      (ஆ) நீண்டகால முதலீடுகள் 50,000 1,20,000
    2. நடப்புச் சொத்துகள்    
      சரக்கிருப்பு 2,00,000 90,000
    ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 50,000 90,000
    மொத்தம் 5,00,000 6,00,000
  25. முகேஷ் நிறுமத்தின் பின்வரும் இலாபம் நட்ட அறிக்கையிலிருந்து
    (I) மொத்த இலாப விகிதம்
    (ii) நிகர இலாப விகிதம் கணக்கிடவும்.

    முகேஷ் நிறுமத்தின் இலாப நட்ட அறிக்கை
    விவரம் தொகை
    ரூ.
    I. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 5,00,000
    II. இதர வருமானம்  
      முதலீடு மூலம் வருவாய் 40,000
    III. மொத்த வருவாய் (I + II) 5,40,000
    IV. செலவுகள்  
      கொள்முதல் செய்த சரக்குகள் 1,80,000
      சரக்கிருப்பு மாற்றம் 20,000
      பணியாளர் நலன்களுக்கான செலவுகள் 30,000
      இதர செலவுகள் 1,10,000
      வரி ஒதுக்கு 50,000
      மொத்த செலவுகள் 3,90,000
    V. அவ்வாண்டிற்கான இலாபம் 1,50,000

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Five mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment