12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி I

    50 x 1 = 50
  1. உரிமையாளரின் சொத்துகள் ரூ. 85,000 மற்றும் பொறுப்புகள் ரூ. 21,000 எனில் அவருடைய முதல்தொகை_____.

    (a)

    ரூ. 85,000

    (b)

    ரூ. 1,06,000

    (c)

    ரூ. 21,000

    (d)

    ரூ. 64,000

  2. எந்தப் பதிவேட்டில் சில நடவடிக்கைகள் முழுமையாகப் பதிவு செய்யப்படுகின்றன?

    (a)

    ஒற்றைப்பதிவு முறை 

    (b)

    இரட்டைப்பதிவு முறை 

    (c)

    முழுமைபெறா 

    (d)

    முழுமைபெற்ற 

  3. இரட்டைப்பதிவு முறையை கட்டாயமாகப் பின்பற்றாத நிறுவனங்களின் கணக்கேடுகள் அந்நிறுவனத்தின் ________ மற்றும் _______ களின் தேவை மற்றும் விருப்பத்திற்கேற்ப பராமரிக்கப்படுகின்றன.

    (a)

    உரிமையாளர்கள், தொழிலாளர்கள் 

    (b)

    உரிமையாளர்கள், வங்கியர் 

    (c)

    தொழிலாளர்கள், கணக்காளர்கள் 

    (d)

    உரிமையாளர்கள், கணக்காளர் 

  4. ரொக்கக் கொள்முதல் மற்றும் ரொக்க விற்பனை போன்ற விடுபட்ட தகவல்களைக் கண்டறிய _______ ஏட்டினைத் தயாரிப்பது அவசியமானது.

    (a)

    ரொக்க 

    (b)

    கொள்முதல் 

    (c)

    விற்பனை 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  5. ஆயத்த ஆடைகள் நிறுவனத்தின் பொறுப்புகள் ரூ.60,000 அவரது முதல் ரூ.3,40,000 எனில் அந்நிறுவனத்தில் சொத்துக்கள் ________ ஆகும்.

    (a)

    ரூ.2,80,000

    (b)

    ரூ.2,00,000

    (c)

    ரூ.4,00,000

    (d)

    ரூ.5,00,000

  6. நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது_____.

    (a)

    ஒரு சொத்து

    (b)

    ஒரு பொறுப்பு

    (c)

    ஒரு செலவு 

    (d)

    தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று 

  7. வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு ஆகியவற்றை எதன்படி தயாரிக்க வேண்டும்?

    (a)

    இந்திய நிறுமச்சட்டம், 2018, பட்டியல் III ன் படி 

    (b)

    இந்திய ஒப்பந்தச்சட்டம் 1986ன் படி 

    (c)

    இந்திய பட்டயக்கணக்காளர் நிறுமச்சட்டம் 2013 ன் படி 

    (d)

    இந்திய நிறுமச்சட்டம், 20133 பட்டியல் III ன் படி 

  8. நடப்பாண்டின் இறுதியில் உள்ள கொடுபட வேண்டிய செலவுகள் இருப்புநிலைக் குறிப்பின் எந்த பக்கம் பதியப்பட வேண்டும்?

    (a)

    சொத்துகள் பக்கம் 

    (b)

    பொறுப்புகள் பக்கம் 

    (c)

    இரண்டு பக்கமும் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  9. பயன்படுத்தப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் ______ எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    (a)

    முதலின செலவு 

    (b)

    வருவாயினச் செலவு 

    (c)

    முதலின வரவு 

    (d)

    வருவாயின வரவு 

  10. கூட்டாண்மை நிறுவனத்தில், நிலைமுதல் முறை பின்பற்றப்படும்போது, பின்வருவனவற்றுள் எது முதல் கணக்கில் காட்டப்படும்?

    (a)

    கூடுதல் முதல் கொண்டுவந்தது

    (b)

    முதல் மீது வட்டி

    (c)

    எடுப்புகள் மீது வட்டி

    (d)

    இலாபப் பகிர்வு

  11. ஒவ்வொரு கூட்டாளிக்கும் எத்தனை கணக்குகள் பராமரிக்கப்பட வேண்டும்?

    (a)

    ஒன்று

    (b)

    இரண்டு

    (c)

    மூன்று

    (d)

    நான்கு

  12. தனியாள் வணிகத்தில் இலாபநட்டக் கணக்கில் உள்ள இலாபம் அல்லது நட்டம், தனியாள் வணிகரின் ______ கணக்கிற்கு நேரடியாக மாற்றப்படுகிறது.

    (a)

    சொத்து

    (b)

    முதல்

    (c)

    எடுப்பு

    (d)

    கடனாளிகள்

  13. கூட்டாளிகளின் _______ கணக்குகள் நிலை அல்லது மாறுபடும் முதலாக இருக்கும்.

    (a)

    முதல்

    (b)

    எடுப்பு

    (c)

    ரொக்க

    (d)

    கடன்

  14. சரியற்ற இணையினை அடையாளம் காணவும்.

    (a)

    சராசரி இலாபமுறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

    (b)

    உயர் இலாப முறையில் நற்பெயர் = உயர் இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

    (c)

    ஆண்டுத்தொகை முறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு

    (d)

    கூட்டு சராசரி இலாப முறையில் நற்பெயர் = கூட்டு சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

  15. ________ தொழில் நிறுவனத்தின் இலாபத்தன்மையைப் பொறுத்து திட்டவட்டமான மதிப்பைக் கொண்டுள்ளது

    (a)

    காப்புரிமை

    (b)

    பொதுநிதி

    (c)

    நற்பெயர்

    (d)

    ரொக்கம்

  16. கூட்டாளி சேர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானதல்ல?

    (a)

    பொதுவாக கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகள் மாறும்

    (b)

    முந்தைய ஆண்டுகளின் இலாபம் மற்றும் நட்டங்கள் பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

    (c)

    கூட்டாண்மை நிறுவனமானது புதிய ஒப்பந்தத்தின் கீழ் மறு கட்டமைக்கப்படும்

    (d)

    ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது

  17. ஒரு கூட்டாளியைச் சேர்க்கும் போது எதை நிர்ணயிக்க வேண்டும்?

    (a)

    பழைய இலாபப்பகிர்வு விகிதம்

    (b)

    தியாக விகிதம்

    (c)

    புதிய இலாபப் பகிர்வு விகிதம்

    (d)

    இவை அனைத்தும்

  18. ________ என்பது நிறுவனத்தின் வருங்கால இலாபத்தை புதிய கூட்டாளி உட்பட அனைத்துக் கூட்டாளிகளும் பகிர்ந்துகொள்ள ஒப்புக் கொண்ட விகிதம் ஆகும்.

    (a)

    புதிய இலாபப் பகிர்வு விகிதம்

    (b)

    பழைய இலாபப் பகிர்வு விகிதம்

    (c)

    தியாக விகிதம்

    (d)

    முதல் விகிதம்

  19. கூட்டாளி சேர்க்கையின் பொழுது சொத்துக்களையும், பொறுப்புகளையும் மாரு மதிப்பீடு செய்து அவற்றை  _______ பதிய வேண்டியது நியாயமான செயல் முறையாகும்.

    (a)

    அடக்க விலையில்

    (b)

    அடக்கத்திலிருந்து தேய்மானம் கழித்த தொகையில்

    (c)

    உண்மை மதிப்பில் (நடப்பு மதிப்பில்)

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  20. வாரா ஐயக்கடன் ஒதுக்கு கணக்கு குறையும் போது, மறுமதிப்பீட்டு கணக்கில் _______ பக்கத்தில் தோன்றும்

    (a)

    வரவு

    (b)

    பற்று

    (c)

    இரண்டு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  21. மறுமதிப்பீட்டின்போது, பொறுப்புகளின் அதிகரிப்பு தருவது_____.

    (a)

    ஆதாயம்

    (b)

    நட்டம்

    (c)

    இலாபம்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  22. X, Y மற்றும் Z என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2019, ஏப்ரல் 1 அன்று X இறந்து விட்டார். 2018 இல் இலாபம் ரூ.36,000 என்ற அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்குரிய இலாபத்தில் X ன் பங்கினைக் கண்டறியவும்.

    (a)

    ரூ. 1,000

    (b)

    ரூ. 3,000

    (c)

    ரூ.12,000

    (d)

    ரூ.36,000

  23. கூட்டாளி இறப்பின் போது அவருக்குச் சேர வேண்டியத் தொகை யாரிடம் வழங்கப்படும்?

    (a)

    உரிமையாளரிடம்

    (b)

    பணியாளர்களிடம்

    (c)

    நிறைவேற்றாளரிடம்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  24. தொழிலாளர் ஈட்டு நிதியில் எதிர்நோக்கக் கூடிய இழப்பீடுகளை சரி செய்த பின்னர் மீதமுள்ள தொகை கூட்டாளிகளின் _______  கணக்குக்கு மாற்றப்பட வேண்டும்.

    (a)

    முதல்

    (b)

    கடன்

    (c)

    நடப்பு

    (d)

    மறுமதிப்பீடு

  25. கூட்டாளி விலகளின்பொழுது, நற்பெயர் மதிபெற்றம் அனைத்துக் கூட்டாளிகளின் முதல் கணக்குகளில் _______ பக்கம் மாற்றப்படும்

    (a)

    பற்று

    (b)

    வரவு

    (c)

    இரண்டு பக்கங்களிலும்

    (d)

    இவை எதுவுமில்லை

  26. ஒறுப்பிழப்புச் செய்த பங்குகளை மறுவெளியீடு செய்த பிறகு, பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கின் இருப்பு மாற்றப்படுவது_____.

    (a)

    பொதுக்காப்பு கணக்கிற்கு

    (b)

    முதலினக் காப்பு கணக்கிற்கு

    (c)

    பத்திர முனைமக் கணக்கிற்கு

    (d)

    உபரி கணக்கிற்கு

  27. ரூ.8 செலுத்தப்பட்ட, ரூ.10 மதிப்புள்ள பங்கு ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது எனில், அதன் குறைந்த அளவு மறுவெளியீட்டு விலை_____.

    (a)

    பங்கொன்று ரூ.10

    (b)

    பங்கொன்று ரூ.8

    (c)

    பங்கொன்று ரூ.5

    (d)

    பங்கொன்று ரூ.2

  28. நிறுமங்கள் வெளியிடும் பங்குகளை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?

    (a)

    இரண்டு 

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஐந்து 

  29. ______ முதல் பல்வேறு சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.

    (a)

    நிறுமங்களின் 

    (b)

    கூட்டாளிகளின் 

    (c)

    தனியாள் வணிகத்தின் 

    (d)

    கூட்டாண்மையின் 

  30. விண்ணப்பத் தொகையானது பங்கின் பெயரளவு மதிப்பில் குறைந்தது _______ சதவீதமாக இருக்க வேண்டும்.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  31. ஒறுப்பிழப்பு செய்வதற்கு பிறகு அந்த நபர் _______ என்ற தகுதியை இழக்கிறார்.

    (a)

    பங்குதாரர் 

    (b)

    மேலாளர் 

    (c)

    இயக்குநர் 

    (d)

    வாடிக்கையாளர் 

  32. அட்டவணை A-யின்படி அழைப்பு முன் பணத்திற்கு செலுத்திடும் வட்டி _______ ஆகும்.

    (a)

    4%

    (b)

    5%

    (c)

    6%

    (d)

    10%

  33. ஒறுபிழப்புக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகை ரூ.900 ஒறுபிழப்பு செய்த பங்குகளை மறுவெளியீடு செய்த வகையில் தள்ளுபடி ரூ.400 எனில், முதலின காப்பு ரூ._______ ஆகும்.

    (a)

    ரூ.400

    (b)

    ரூ.500

    (c)

    ரூ.600

    (d)

    ரூ.900

  34. இருப்புநிலைக் குறிப்பு, வணிக நிறுவனத்தின் நிதிநிலை பற்றிய  ________ தகவல்களை வழங்குகிறது.

    (a)

    ஒரு காலக்கட்டத்திற்கு மேலான

    (b)

    ஒரு குறிப்பிட்ட நாளுக்குரிய

    (c)

    ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான

    (d)

    குறிப்பிட்ட கணக்காண்டிற்குரிய

  35. ஒரு பொது அளவு இருப்புநிலைக் குறிப்பில், நீண்டகாலச் சொத்துகளின் சதவீதம் 75 எனில், நடப்புச் சொத்துகளின் சதவீதம் எவ்வளவு?

    (a)

    175

    (b)

    125

    (c)

    25

    (d)

    100

  36. நிறுவனத்தின் பல துறைகள் மற்றும் பிரிவுகள் ஆகியவற்றை ஒப்பீடு செய்வது எது?

    (a)

    நிறுவனத்திற்குள்ளேயான ஒப்பீடு 

    (b)

    நிறுவங்களுக்கு இடையிலான ஒப்பீடு 

    (c)

    இரண்டும் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  37. ஒரு கணக்காண்டின் இறுதியில் வியாபாரத்தின் இயக்க முடிவுகள் மற்றும் நிதிநிலையை அறிந்து கொள்ள தயாரிக்கப்படும் அறிக்கைகள் ________ ஆகும்.

    (a)

    இலாப நட்ட அறிக்கைகள் 

    (b)

    நிதி நிலை அறிக்கைகள் 

    (c)

    முதல் நிலை அறிக்கைகள் 

    (d)

    இவை அனைத்தும் 

  38. ________ என்பது இயக்கம் என்பதைக் குறிக்கும்.

    (a)

    போக்கு 

    (b)

    நிதி 

    (c)

    விகிதம் 

    (d)

    ஓட்டம் 

  39. புற அக பொறுப்புகள் அளவிடுவது ______.

    (a)

    குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்

    (b)

    நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்

    (c)

    இலாபம் ஈட்டும் திறன்

    (d)

    செயல்திறன்

  40. பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாதது எது?

    (a)

    நீர்மை விகிதம் – விகிதாச்சாரம்

    (b)

    மொத்த இலாப விகிதம் – சதவீதம்

    (c)

    நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் – சதவீதம்

    (d)

    புற அக பொறுப்புகள் விகிதம் – விகிதாச்சாரம்

  41. எளிதாக ரொக்கமாக மாற்றக்கூடிய திறனைக் குறிப்பது எது?

    (a)

    நீர்மைத் தன்மை விகிதம் 

    (b)

    சுழற்சி விகிதம் 

    (c)

    இலாபத் தன்மை விகிதம் 

    (d)

    நீண்டகால கடன் தீர்க்கும் விகிதம் 

  42. வணிகத்தின் செயல்பாட்டு நடவடிக்கைகளின் தொடர்புடைய அடக்க விலை எது? 

    (a)

    இயக்க அடக்க விலை 

    (b)

    இயக்கச் செலவுகள் 

    (c)

    கொள்முதல் விலை 

    (d)

    விற்பனை விலை 

  43. விகிதங்கள் கணக்கியல் தகவல்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் போது,அவை ________ என்று அழைக்கப்படுகின்றன.

    (a)

    விகிதம் 

    (b)

    கணக்கியல் விகிதங்கள் 

    (c)

    சதவீதம் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  44. அனைத்து செயல்பாட்டு விகிதங்களும் ________ ஆகக் கொடுக்கப்படும்.

    (a)

    விகிதாச்சாரம் 

    (b)

    மடங்கு 

    (c)

    சதவீதம் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  45. ______ என்பது கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளை வசூலிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் சராசரி காலம் ஆகும்.

    (a)

    கடன் வசூலிப்புக் காலம் 

    (b)

    சரக்கிருப்பு மாற்று காலம் 

    (c)

    சரக்கிருப்பு காலம் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  46. ______ நிறுவனத்தின் குறுகிய நீர்மைத் தன்மையை அளவிட உதவுகிறது.

    (a)

    நடப்பு விகிதங்கள் 

    (b)

    நீர்மை விகிதங்கள் 

    (c)

    துல்லிய நீர்மை விகிதங்கள் 

    (d)

    இலாப விகிதங்கள் 

  47. Tally-யில் முன்பே வரையறுக்கப்பட்ட பேரேடு(கள்) ?
    (i) ரொக்கம் 
    (ii) இலாப நட்டக் க/கு 
    (iii) முதல் க/கு 

    (a)

    (i) மட்டும் 

    (b)

    (ii) மட்டும் 

    (c)

    (i) மற்றும் (ii) இவை இரண்டும் 

    (d)

    (ii) மற்றும் (iii) இவை இரண்டும் 

  48. நிதியியல் தரவுகளை சேகரித்து அதை செயலாக்கப் பெறச் செய்து பல்வேறு பயனர்களுக்கு தகவல் அளிப்பது எது?

    (a)

    கணக்கியல் தகவல் அமைப்பு 

    (b)

    இலாப அறிக்கை 

    (c)

    குறிப்பிட்ட நோக்க அறிக்கை 

    (d)

    ரொக்க ஓட்ட அறிக்கை 

  49. ______ கணக்கியல் முறையில் கணக்கோடுகளை எளிதாகவும் திறம்பட நீண்ட காலங்களுக்கு பராமரிக்கலாம்.

    (a)

    தரநிலை 

    (b)

    இந்தியபட்டய கணக்காளர் 

    (c)

    கணினிமயக்

    (d)

    இவை அனைத்தும் 

  50. ________ சான்றாவணம் ரொக்க மற்றும் சரக்கு கடன் சரக்கு கொள்முதல் பதிவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    குறிப்பேடு 

    (b)

    பேரேடு 

    (c)

    சான்றாவணம் 

    (d)

    இருபாய்வு 

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus One mark Important Questions with Answer key  - 2021(Public Exam)

Write your Comment