12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்

    20 x 1 = 20
  1. பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள் ______.

    (a)

    நட்டம்

    (b)

    ரொக்கம்

    (c)

    முதல்

    (d)

    இலாபம்

  2. ஒற்றைப்பதிவு முறையில் கணக்கேடுகள் பராமரிப்பு என்று அழைக்கப்படுவது எது?

    (a)

    முழுமை பெறா பதிவேடுகள் 

    (b)

    நிலையறிக்கை 

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (d)

    குறிப்பேடுகள் 

  3. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை_____.

    (a)

    வருவாயின வரவு

    (b)

    முதலின வரவு

    (c)

    வருவாயினச் செலவு

    (d)

    முதலினச் செலவு

  4. இலாபநோக்கற்ற அமைப்புகள் செய்யும் முதலீடுகளிலிருந்து பெறப்படும் வட்டி ஒரு _______ ஆகும்.

    (a)

    செலவின வரவு 

    (b)

    வருவாயின வரவு 

    (c)

    வருவாயின செலுத்தல்கள் 

    (d)

    முதலின வரவு 

  5. எடுப்பு மீது வட்டி, முதல் மீது வட்டி மற்றும் ஊதியம் கழித்தபின் உள்ள இலாபம் ரூ.10,500. கீதா என்ற கூட்டாளி கழிவுக்குப்பின் உள்ள நிகர இலாபத்தில் 5% கழிவு பெற உரியவராயின் கழிவுத்தொகையை கண்டறியவும்.

    (a)

    ரூ.50

    (b)

    ரூ.150

    (c)

    ரூ.550

    (d)

    ரூ.500

  6. _______ என்பது கூட்டாளிகளின் முதல் மீது அனுமதிக்கப்படும் வட்டி ஆகும்.

    (a)

    எடுப்பு மீது வட்டி

    (b)

    முதல் மீது வட்டி

    (c)

    கடன் மீது வட்டி

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  7. 2017- ல் கணக்கேட்டின்படி இலாபம் ரூ.35,000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.1,000 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ரூ.2,000 எனில், சரிக்கட்டப்பட்ட இலாபம்_____.

    (a)

    ரூ.36,000

    (b)

    ரூ.35,000

    (c)

    ரூ.38,000

    (d)

    ரூ.34,000

  8. சாதாரண இலாபத்தை விட சராசரி இலாபம் மிகுதிக்கு ______ என்று பெயர்.

    (a)

    மொத்த இலாபம்

    (b)

    நிகர இலாபம்

    (c)

    உயர் இலாபம்

    (d)

    இவதில் எதுவுமில்லை

  9. மறுமதிபீட்டுக் கணக்கு ஒரு_____.

    (a)

    சொத்து க/கு

    (b)

    பெயரளவு க/கு

    (c)

    ஆள்சார் க/கு

    (d)

    ஆள்சாரா க/கு

  10. நற்பெயர் என்பது பழைய கூட்டாளிகளின் ________ கால முயற்சிகளின் பலன் ஆகும்

    (a)

    கடந்த

    (b)

    நிகழ்

    (c)

    வருங்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  11. கூட்டாளி விலகலின் பொதுக்காப்பு மாற்றப்படுவது _____.

    (a)

    அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு

    (b)

    மறுமதிப்பீட்டுக் கணக்கிற்கு

    (c)

    தொடரும் கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு

    (d)

    நினைவுக் குறிப்பு மறுமதிப்பீட்டு கணக்கிற்கு

  12. ________ கணக்கு ஒரு தற்காலிக கணக்கு ஆகும்

    (a)

    இலாப நட்ட அனாமத்து

    (b)

    மறுமதிப்பீட்டு 

    (c)

    நற்பெயர்

    (d)

    முதல்

  13. ஒறுப்பிழப்பு செய்யும்போது பங்கு முதல் கணக்கு எதில் பற்று வைக்கப்படுகிறது?

    (a)

    முகமதிப்பு

    (b)

    பெயரளவு மதிப்பு

    (c)

    செலுத்தப்பட்ட தொகை

    (d)

    அழைக்கப்பட்ட தொகை

  14. ரூ.100 வீதம் 50000 பங்குகள் பொது மக்களுக்கு வெளியீடு செய்யப்பட்டது. அவற்றில் 45,000 பங்குகள் பொதுமக்களால் ஒப்பப்பட்டது எனில் ஒப்பாத முதல் ரூ. ________ ஆகும்.

    (a)

    ரூ.4,50,000

    (b)

    ரூ.5,00,000

    (c)

    ரூ.50,000

    (d)

    ரூ.45,000

  15. நிதி என்னும் சொல் குறிப்பிடுவது_____.

    (a)

    நடப்புப் பொறுப்புகள்

    (b)

    நடைமுறை முதல்

    (c)

    நிலைச் சொத்துகள்

    (d)

    நீண்டகாலச் சொத்துகள்

  16. ______ வணிக நிறுவனத்தின் செயல்பாடுகளையும், நிதிநிலைகளையும் புரிந்து கொள்வதற்கு வழி செய்கிறது.

    (a)

     நிதிநிலை பகுப்பாய்வு 

    (b)

    நிதிநிலை தொகுப்பாய்வு 

    (c)

    இரண்டும் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  17. பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாதது எது?

    (a)

    நீர்மை விகிதம் – விகிதாச்சாரம்

    (b)

    மொத்த இலாப விகிதம் – சதவீதம்

    (c)

    நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் – சதவீதம்

    (d)

    புற அக பொறுப்புகள் விகிதம் – விகிதாச்சாரம்

  18. சரக்கிருப்பை விற்பனை செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்படும் எது?

    (a)

    சரக்கிருப்பு காலம் 

    (b)

    சரக்கிருப்பு மாற்று காலம் 

    (c)

    கடன் வசூலிப்புக் காலம் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  19. அலுவலகப் பயன்பாட்டிற்காக  ரூ. 25,000 வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது. எந்த வகை சான்றாவணத்தில் இந்த நடவடிக்கை பதியப்படும்?  

    (a)

    எதிர்பதிவு சான்றாவணம் 

    (b)

    பெறுதல்கள் சான்றாவணம் 

    (c)

    செலுத்தல்கள் சான்றாவணம் 

    (d)

    விற்பனை சான்றாவனம் 

  20. சரக்கிருப்பு,சரக்கிருப்பு அளவுகள் போன்றவற்றின் மேம்படுத்தப்பட்ட தகவல்களை உடனுக்கு உடன் எடுக்க உதவுவது எது?

    (a)

    கணினிமயக் கணக்கியல் 

    (b)

    கணக்கோடுகள் 

    (c)

    ஒற்றைப்பதிவு முறை 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 2 = 14
  22. பின்வரும் விவரங்களிலிருந்து பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரிக்கவும் மற்றும் கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டுத் தொகையினைக் கணக்கிடவும். 

    விவரம் ரூ.
    ஆண்டு தொடக்கத்தில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 1,40,000
    ஆண்டு முடிவில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 2,00,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது 3,90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 30,000
  23. அரசு மற்றும் இதர அமைப்புகளிடமிருந்து பெறப்படும் மானியம் பற்றி குறிப்பு வரைக.

  24. கூட்டாண்மை பொருள் தருக.

  25. நற்பெயர் என்றால் என்ன?

  26. கூட்டாளி சேர்ப்பு என்றால் என்ன? அவர் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகிறார்?

  27. ஆதாய விகிதம் கணக்கிடுவதன் நோக்கம் என்ன?

  28. நிறுமம் வரைவிலக்கணம் தருக.

  29. பின்வரும் விவரங்களிலிருந்து தருண் & கோ நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கை தயார் செய்யவும்.

    விவரம் 2016-17 2017-18
    ரூ. ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 2,00,000 2,50,000
    இதர வருமானங்கள் 50,000 40,000
    செலவுகள் 1,50,000 1,20,000
  30. கணக்கியல் விகிதங்களின் வடிவங்களை எழுதுக.

  31. தானியங்கும் கணக்கியல் முறை என்றால் என்ன?

  32. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 3 = 21
  33. முழுமை பெறா பதிவேடுகளின் இயல்புகள் யாவை?

  34. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கை தயாரிப்பதற்கான படிநிலைகளை எழுதுக.

  35. அருளப்பன் மற்றும் நல்லசாமி இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை 4:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2018, ஜனவரி 1அன்று அவர்களுடைய முதல் முறையே ரூ.20,000 மற்றும் ரூ.10,000. கூட்டாண்மை ஒப்பாவணம் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது:
    (அ) முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5 % அனுமதிக்க வேண்டும்.
    (ஆ) அருளப்பன் மற்றும் நல்லசாமி இருவருக்கும் விதித்த எடுப்புகள் மீதான வட்டி முறையே ரூ.200 மற்றும் ரூ.300 ஆகும்.
    (இ) முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீதான வட்டி கழிப்பதற்கு முன் உள்ள நிறுவனத்தின் நிகர இலாபம் ரூ.18,000.
    கூட்டாளிகளுடைய முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும் மற்றும் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இலாபநட்டப் பகிர்வு கணக்கையும் தயார் செய்யவும்.

  36. நற்பெயரை மதிப்பீடு செய்வதற்கான தேவைகள் யாவை?

  37. நற்பெயருக்கான கணக்கியல் செயல்முறை குறித்து சிறு குறிப்பு தரவும்.

  38. கூட்டாளியின் இறப்பின் போது செய்ய வேண்டிய சரிக்கட்டுதல்கள் யாவை?

  39. X நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 10,000 நேர்மைப் பங்குகளை வெளியீடு செய்தது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:
    விண்ணப்பத்தின் போது = ரூ.2
    ஒதுக்கீட்டின் போது = ரூ.4
    முதல் அழைப்பின் போது = ரூ.2
    இறுதி அழைப்பின் போது = ரூ.2
    30,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 10,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள விண்ணப்பங்கள் விகிதச்சார அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மிகுதியாகப் பெற்ற விண்ணப்பத் தொகையை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தி கொள்ளப்பட்டது. இயக்குனர்கள் இரண்டு அழைப்புகளையும் மேற்கொண்டனர். 600 பங்குகளின் இரண்டாம் அழைப்புத் தொகையை தவிர அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. பின்னர் அப்பங்ப்பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அவற்றில், 400 பங்குகள் ஒரு பங்கிற்கு ரூ.7 பெற்றுக் கொண்டு, முழுமையாக செலுத்திய பங்காக மறுவெளியீடு செய்யபட்டன. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.

  40. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் நோக்கங்களை எழுதுக.

  41. ஹரிணி நிறுமத்தின் கடன் விற்பனை மூலம் பெற்ற வருவாய் தொகை ரூ.9,60,000. அந்த கணக்காண்டின் இறுதியில் இதன் வியாபார கடனாளிகள் மற்றும் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு தொகை முறையே ரூ.1,00,000 மற்றும் ரூ.60,000. கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகளின் சுழற்சி விகிதம் மற்றும் கடன் வசூலிப்புக் காலம் (மாதங்களில்) கணக்கிடவும்.

  42. கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடுகளில் ஏதேனும் ஐந்தினை விளக்கவும்.

  43. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    7 x 5 = 35
    1. அருண் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 
      (i) புற அக பொறுப்புகள் விகிதம் 
      (ii) உரிமையாளர் விகிதம் மற்றும் 
      (iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்.

      அருண் நிறுவனத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
      விவரம்  ரூ 
      பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்   
      1. பங்குதாரர் நிதி   
        (அ) பங்குமுதல்   
        நேர்மைப் பங்குமுதல்  1,50,000
        8% முன்னுரிமைப் பங்குமுதல்  2,00,000
        (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி  1,50,000
      2. நீண்டகாலப் பொறுப்புகள்   
        நீண்டகால கடன்கள் (9% கடனீட்டுப் பாத்திரங்கள்) 4,00,000
      3. நடப்பு பொறுப்புகள்   
        (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள்  25,000
        (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்  75,000
        மொத்தம்  10,00,000
      II  சொத்துகள்   
      1. நீண்ட காலச் சொத்துகள்   
        நிலைச் சொத்துகள்  7,50,000
      2. நடப்புச் சொத்துகள்  1,20,000
        (அ) சரக்கிருப்பு  1,20,000
        (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள்  1,000,000
        (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவர்கள்  27,500
        (ஈ) இதர நடப்புச் சொத்துகள்   
        செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது  2,500
        மொத்தம்  10,00,000
    2. பின்வரும் நடவடிக்கைகளை Tally-ல் பதிவு செய்யவும்.
      (1) ரூ. 4,00,000 முதலுடன் தேவி தொழில் தொடங்கினர்.
      (2) இந்தியன் வங்கியில் கணக்கு துவங்கப்பட்டு ரூ. 60,000 செலுத்தியது.
      (3) ரொக்கத்திற்கு அறைகலன்  வாங்கியது ரூ. 15,000
      (4) சுமதியிடம் இருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ. 50,000
      (5) ரொக்க விற்பனை மேற்கொண்டது ரூ. 10,000
      (6) இராஜாவிடம் சரக்கு கொள்முதல் செய்து காசோலை மூலம் செலுத்தியது ரூ. 5000.
      (7) அருணுக்கு கடனாக விற்ற சரக்கு ரூ. 70,000.
      (8) அலுவலக செலவிற்காக  வங்கியிலிருந்து பணம் எடுத்தது ரூ. 25,000
      (9) சுமதிக்கு காசோலை மூலம் பகுதி தொகை செலுத்தியது ரூ. 30,000
      (10) அருண் பகுதி தொகையாக செலுத்திய ரொக்கம் ரூ. 10,000
      (11) பணியாளர்களுக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 36,000
      (12) கொள்முதல் மீதான துக்குக்கூலி ரொக்கமாக செலுத்தியது ரூ. 6,000
      (13) முத்து நிறுவனத்திடமிருந்து கடனுக்கு கணினி வாங்கியது ரூ. 44,000

    1. அகமது முறையான கணக்கேடுகளைப் பராமரிப்பதில்லை. 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

      விவரம் 1.4.2017 31.3.2018
      ரூ. ரூ.
      வங்கி இருப்பு 14,000 (வ) 18,000 (ப)
      கைரொக்கம் 800 1,500
      சரக்கிருப்பு 12,000 16,000
      கடனாளிகள் 34,000 30,000
      பொறித்தொகுதி 80,000 80,000
      அறைகலன் 40,000 40,000
      கடனீந்தோர் 60,000 72,000

      அகமது தனது சொந்தப் பயனுக்காக ரூ. 40,000 எடுத்துக்கொண்டார். தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக அவர் ரூ. 16,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்க வேண்டும். பொறித்தொகுதி மீது 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.

    2. நண்பர்கள் கால்பந்து மன்றத்தின் 31.03.2017 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து, 31.03.2017 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
      ப நண்பர்கள் கால்பந்து மன்றத்தின் ஏடுகளில் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ

      பெறுதல்கள்  ரூ ரூ செலுத்தல்கள் ரூ ரூ
      இருப்பு கீ/கொ      அறைகலன்   7,000
      ரொக்கம் 1,000   விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது   800
      வங்கி 10,000 11,000 சிறப்பு விருந்துக்கான செலவுகள்   1,500
      சந்தா   5,000 மின்கட்டணம்   900
      உயில்கொடை    6,000 இருப்பு கீ/இ    
      சிறப்பு விருந்து     கைரொக்கம்  1,800  
      கட்டண வசூல்   2,000 வங்கி ரொக்கம்  12,000 13,800
          24,000     24,000

      கூடுதல் தகவல்கள்:
      (i) 2016, ஏப்ரல் 1 அன்று மன்றத்தில் இருந்த அறைகலன் ரூ12,000.அறைகலன் மீதான தேய்மானம் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை.
      (ii) 2016-2017-ல் பெற வேண்டிய சந்தா ரூ. 600.
      (iii) 31.3.2017 அன்று விளையாட்டுப் பொருள்கள் இருப்பு ரூ.100
      (iv) 2016, ஏப்ரல் 1 அன்றைய முதல் நிதி ரூ.23,000

    1. திருச்சி இலக்கிய மன்றத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு:

      திருச்சி இலக்கிய மன்றம் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு
      பெறுதல்கள்  ரூ. ரூ. செலுத்தல்கள்  ரூ. ரூ.
      இருப்பு கீ/கொ      மைதான பராமரிப்பு    33,000
      ரொக்கம்  1,000   விளையாட்டுப் போட்டிச் செலவுகள்    38,000
      வங்கி  14,000   பல்வகைச் செலவுகள்    22,000
      சந்தா (2016-17ஆம் ஆண்டிற்கான ரூ.4,000 உட்பட)   60,000 அறைகலன்    40,000
      உயில்கொடை    18,000 இருப்பு கீ/இ     
      விளையாட்டுப் போட்டி நிதி    20,000 கைரொக்கம்  3,000  
      வரவுகள்   45,000 வங்கி ரொக்கம்  22,000 25,000
          1,58,000     1,58,000

      கூடுதல் தகவல்கள்:
      2017, ஏப்ரல் 1 அன்று மன்றத்தின் முதலீடு ரூ.80,000 ஆக இருந்தது. மன்றத்தின் விளையாட்டுப் போட்டி நிதிக் கணக்கின் வரவிருப்பில் ரூ.60,000 இருந்தது. 2018, மார்ச் 31-ல் பெறவேண்டிய சந்தா ரூ.8,000 மற்றும் 2018, மார்ச் 31 அன்று பெறவேண்டிய சந்தா ரூ.9,000 இறுதிக் கணக்குகளைத் தயார் செய்யவும்.

    2. அன்பு என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி, கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% கணக்கிடப்படுகிறது. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:

      நாள் ரூ.
      மார்ச் 1 8,000
      ஜூன் 1 6,000
      செப்டெம்பர் 1 4,000
      டிசம்பர் 1 3,000

      பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்

    1. பின்வரும் விவரங்களிலிருந்து, உயர் இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
      (அ) நிறுவனத்தின் மொத்த சொத்துகள் ரூ.5,00,000
      (ஆ) நிறுவனத்தின் பொறுப்புகள் ரூ.2,00,000
      (இ) இவ்வகைத் தொழில்களின் சாதாரண இலாப விகிதம் 12.5%
      (ஈ) நிறுவனத்தின் சராசரி இலாபம் ரூ.60,000

    2. அமல் மற்றும் விமல் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 7:5 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 அன்றைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

      பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
      முதல் கணக்குகள்:     கட்டடம் 80,000
      அமல் 70,000   அறைகலன் 20,000
      விமல் 50,000 1,20,000 சரக்கிருப்பு 25,000
      பற்பல கடனீந்தோர்   30,000 கடனாளிகள் 30,000
      இலாப நட்ட க/கு   24,000 வங்கி 19,000
          1,74,000   1,74,000

      1.4.2019 இல் நிர்மல் புதிய கூட்டாளியாக சேருகிறார். அவர் ரூ.30,000 முதலுடன் எதிர்கால இலாபப்பங்கில் 1/3 விகிதத்தில், பின்வரும் சரிக்கட்டலுடன் கூட்டாளியாகிறார்.
      அ) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.5,000 குறைக்கப்பட வேண்டும்.
      (ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.3,000 உருவாக்கப்பட வேண்டும்.
      (இ) கட்டடம் ரூ.20,000 மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்.
      மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின்பான கூட்டாளி முதல் கணக்கு தயார் செய்யவும்.

    1. ஒரு கூட்டடாண்மை நிறுவனத்தில் சரண், அருண் மற்றும் கரண் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 4:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2016, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

      பொறுப்புகள் ரூ  ரூ  சொத்துகள் ரூ ரூ
      முதல் கணக்குகள்     கட்டடம்   60,000
      சரண்  60,000   இயந்திரம்   40,000
      அருண் 50,000   முதலீடுகள்   20,000
      கரண்  40,000 1,50,000 சரக்கிருப்பு   12,000
      பொதுக்காப்பு   15,000 கடனாளிகள் 25,000  
      கடனீந்தோர்    35,000 கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு 1000 24,000
            வங்கி ரொக்கம்    44,000
          2,00,000     2,00,000

      1.1.2017 அன்று கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு கரண் விலகினார்.
      (i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.21,000 என மதிப்பிடப்பட்டது.
      (ii) இயந்திரம் மீது 10% மதிப்பேற்றம் செய்ய வேண்டும்.
      (iii) கட்டடம் ரூ.80,000 ஆக மதிப்பிட வேண்டும்.
      (iv) வாராக்கடன் ஒதுக்கு ரூ.2,000 ஆக அதிகரிக்க வேண்டும்.
      (v) சரக்கிருப்பு மதிப்பில் ரூ.2,000 குறைக்க வேண்டும்.
      (vi) கரணுக்கு செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
      தேவையான பேரேட்டுக் கணக்குகளை தயார் செய்யவும் மற்றும் விலகலுக்குப் பின் உள்ள கூட்டாண்மை நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்

    2. ராகுல், ரவி மற்றும் ரோஹித் எனும் கூட்டாளிகள் முறையே 5 : 3 : 2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் ரோஹித் விலகினார். அவருடைய பங்கு ராகுல் மற்றும் ரவி ஆகியோரால் 3 : 2 எனும் விகிதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கணக்கிடவும்

    1. சரண்யா வரையறு நிறுமம் பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.10 வீதம், 20,000 நேர்மைப் பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகளுக்கானத் தொகை கீழ்கண்டவாறு செலுத்தப்பட வேண்டும்.

      விண்ணப்பத்தின் போது ரூ.3
      ஒதுக்கீட்டின் போது ரூ.4
      முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.3

      30,000 பங்குகளுக்கான தொகை விண்ணப்பத்தின் போது பெறப்பட்டது. கூடுதலான விண்ணப்பத் தொகை திருப்பி, உடனடியாக அனுப்பப்பட்டது. இதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

    2.  பரணி நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து, ஒப்பீட்டு வருமான அறிக்கையைத் தயாரிக்கவும்.

      விவரம் 2015-17
      ரூ.
      2016-18
      ரூ.
      விற்பனை மூலம் பெற்ற வருவாய் 30,000 45,000
      இதர வருமானம் 4,000 6,000
      செலவுகள் 10,000 15,000
      வருமான வரி 30% 30%
    1. குப்தா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைகுறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடைவடியும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.

        விவரம்  2016, மார்ச் 31 2017, மார்ச் 31
          ரூ. ரூ.
      பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்     
        பங்குதாரர் நிதி  2,00,000 5,20,000
        நீண்டகாலப் பொறுப்புகள்  1,00,000 1,20,000
        நடப்புப் பொறுப்புகள்  50,000 60,000
        மொத்தம்  3,50,000 7,00,000
      II  சொத்துகள்     
        நிலைச் சொத்துகள்  2,00,000 4,00,000
        நடப்புச் சொத்துகள்  1,50,000 3,00,000
        மொத்தம்  3,50,000 7,00,000
    2. அப்துல் நிறுமத்தின் 2019 மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய) பின்வருமாறு

      விவரம் ரூ.
      I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
      1. பங்குதாரர் நிதி  
        (அ) பங்குமுதல் 2,00,000
        (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 50,000
      2. நீண்டகால பொறுப்புகள்  
        நீண்டகால கடன்கள் 1,50,000
      3. நடப்புப் பொறுப்புகள்  
        (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,30,000
        (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் 5,000
        (இ) குறுகிய கால ஒதுக்குகள் 20,000
      மொத்தம் 5,55,000

      அவ்வாண்டில் வட்டி மற்றும் வரிக்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ரூ.60,000.
      அவ்வாண்டில் பயன்படுத்திய முதலிலிருந்து பெற்ற வருவாய் விகிதம் கணக்கிடவும்.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Annual  Exam Model Question Paper with Answer key  - 2021

Write your Comment