12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்

    20 x 1 = 20
  1. கடனாளிகள் தொடக்க இருப்பு: ரூ. 30,000, பெற்ற ரொக்கம்: ரூ. 1,00,000, கடன் விற்பனை: ரூ. 90,000; கடனாளிகள் இறுதி இருப்பு:?

    (a)

    ரூ. 30,000

    (b)

    ரூ. 1,30,000

    (c)

    ரூ. 40,000

    (d)

    ரூ. 20,000

  2. ஒரு தொழில் உரிமையாளரின் மொத்தச் சொத்துக்கள் ரூ.5,00,000; அவருடைய பொறுப்புகள் ரூ.3,50,000; அவருடைய முதல் _____ ஆகும்.

    (a)

    ரூ.1,50,000

    (b)

    ரூ.8,50,000

    (c)

    ரூ.3,50,000

    (d)

    ரூ.2,50,000

  3. வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது ______.

    (a)

    இலாபம் அல்லது நட்டம் 

    (b)

    ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு

    (c)

    உபரி அல்லது பற்றாக்குறை

    (d)

    நிதிநிலை 

  4. ______ கலை, பண்பாடு, கல்வி மற்றும் விளையாட்டு போன்றவற்றை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்படுகின்றன.

    (a)

    வியாபார நிறுவனங்கள் 

    (b)

    நிதி நிறுவனங்கள் 

    (c)

    இலாப நோக்கமற்ற அமைப்புகள் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  5. கூட்டாளிகளிடமிருந்து நிறுவனம் கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களுக்கு இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932 –ன் படி வழங்கப்படும் வட்டி வீதம்______.

    (a)

    ஆண்டுக்கு 8%

    (b)

    ஆண்டுக்கு 12%

    (c)

    ஆண்டுக்கு 5%

    (d)

    ஆண்டுக்கு 6%

  6. கூட்டாண்மையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை

    (a)

    25

    (b)

    50

    (c)

    10

    (d)

    20

  7. ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாபவிகிதமாக கருதப்படுவது _____.

    (a)

    சராசரி இலாபம்

    (b)

    சாதாரண இலாப விகிதம்

    (c)

    எதிர்நோக்கும் இலாப விகிதம்

    (d)

    இவைகளில் ஏதுமில்லை

  8. வாங்கப்பட்ட நற்பெயரானது இருப்புநிலை க் குறிப்பில் எந்த கட்டப்பட வேண்டும்?

    (a)

    பொறுப்புகள்

    (b)

    சொத்துகள்

    (c)

    பற்று

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  9. கூட்டாளி சேர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானதல்ல?

    (a)

    பொதுவாக கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகள் மாறும்

    (b)

    முந்தைய ஆண்டுகளின் இலாபம் மற்றும் நட்டங்கள் பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

    (c)

    கூட்டாண்மை நிறுவனமானது புதிய ஒப்பந்தத்தின் கீழ் மறு கட்டமைக்கப்படும்

    (d)

    ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது

  10. கூட்டாளி சேர்க்கையின் பொழுது, பழைய இலாபப் பகிர்வு விகிதத்திற்கும் இடையேயான வேறுபாடு ________ விகிதம் ஆகும்

    (a)

    புதிய இலாபப்பகிர்வு

    (b)

    பழைய இலாபப் பகிர்வு

    (c)

    தியாக

    (d)

    ஆதாய

  11. ஒரு கூட்டாளி விலகலின்போது, ஆதாய விகிதத்தின் நிர்ணயம் எதற்கு தேவைப்படுகிறது?

    (a)

    மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நட்டம் மாற்றப்படுவதற்கு

    (b)

    பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்தளிப்பதற்கு

    (c)

    நற்பெயரை சரிக்கட்டுவதற்கு 

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை 

  12. கூட்டாளியின் விலகலின் பொழுது இருப்புநிலைக் குறிப்பில் தோன்றக்கூடிய இனங்களாயகிய இலாப நட்டக் கணக்கு மற்றும் பொதுக்காப்பு ஆகியவை மாற்றப்படுவது. 

    (a)

    மறுமதிப்பீட்டுக் கணக்கில்

    (b)

    கூட்டாளிகளின் முதல் கணக்குகளில்

    (c)

    நடப்பு கணக்குகளில்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  13. முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு _____.

    (a)

    பத்திர முனைமக் கணக்கு

    (b)

    அழைப்பு முன்பணக் கணக்கு

    (c)

    பங்குமுதல் கணக்கு

    (d)

    பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு

  14. ஒரு நிறுமத்தின் குறும ஒப்பமாக வெளியிடப்பட்ட முதலில் ______ பெற்று இருக்க வேண்டும்.

    (a)

    30 சதவிகிதம் 

    (b)

    60 சதவிகிதம் 

    (c)

    90 சதவிகிதம் 

    (d)

    100 சதவிகிதம் 

  15. நிதிநிலை அறிக்கைகள் வெளிக்காட்டாதது.

    (a)

    பணம்சாரா தகவல்கள்

    (b)

    கடந்தகால தகவல்கள்

    (c)

    குறுகிய கால தகவல்கள்

    (d)

    நீண்டகால தகவல்கள்

  16. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு செய்வதற்கு பல்வேறு ______ பயன்படுத்தப்படுகின்றன.

    (a)

    கருவிகள் 

    (b)

    தன்மைகள் 

    (c)

    இரண்டும் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  17. புற அக பொறுப்புகள் அளவிடுவது ______.

    (a)

    குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்

    (b)

    நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்

    (c)

    இலாபம் ஈட்டும் திறன்

    (d)

    செயல்திறன்

  18. வணிக நிறுவனங்களின் நிதிநிலை மற்றும் இயக்க செயல்பாட்டை _____ பகுப்பாய்வின் மூலம் அறிய முடியும்.

    (a)

    நிதிநிலை 

    (b)

    போக்கு 

    (c)

    ரொக்க ஓட்டம் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  19. அறைகலன் கடனுக்கு வாங்கியதை Tally-இல் எந்த வகை சான்றாவணத்தில் பதியப்படும்? 

    (a)

    பெறுதல்கள் சான்றாவணம் 

    (b)

    உரிய குறிப்பேடு சான்றாவணம் 

    (c)

    கொள்முதல் சான்றாவணம் 

    (d)

    பெறுதல்கள் சான்றாவணம் 

  20. ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கிய பின்பும் ஒவ்வொரு முறை Tallyஐ துவக்கும் போதும் _______ தோன்றும்.

    (a)

    Tally யின் திரை 

    (b)

    Tally option button 

    (c)

    Image 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

    7 x 2 = 14
  22. கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

    விவரம் ரூ.
    ஆண்டின் தொடக்க முதல் (ஏப்ரல் 1, 2018) 5,00,000
    ஆண்டின் இறுதி முதல் (மார்ச் 31, 2019) 8,50,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 1,20,000
    அவ்வாண்டில் எடுப்புகள் 70,000
  23. மதிப்பூதியம் என்றால் என்ன?

  24. கூட்டாண்மை பொருள் தருக.

  25. நற்பெயர் என்றால் என்ன?

  26. கூட்டாளி சேர்ப்பு என்றால் என்ன? அவர் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகிறார்?

  27. விவின், ஹரி மற்றும் ஜாய் என்ற கூட்டாளிகள் 3:2:1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வருகின்றனர்.
    31-3-2017 அன்று ஹரி விலகினார். அவர் விலகிய நாளில், நிறுவனத்தின் ஏடுகளில் பொதுக்காப்பு
    ரூ.60,000 காட்டியது. பொதுக்காப்பு மாற்றுவதற்கான குறிப்பேட்டுப் பதிவைத் தரவும்.

  28. முனைமத்தில் வெளியிடுதல் என்றால் என்ன?

  29. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் கருவிகளைப் பட்டியலிடவும்.

  30. செயல்பாட்டின் அடிப்படையில் விகிதங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?

  31. கணக்கியல் அறிக்கைகள் என்றால் என்ன?

  32. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

    7 x 3 = 21
  33. 2017, ஏப்ரல் 1 அன்று கணேஷ் ரூ. 75,000 முதலுடன் தன்னுடைய தொழிலைத் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளை பராமரிக்கவில்லை. 31.03.2018 ஆம் நாளைய அவருடைய ஏடுகளின் விவரங்கள் பின்வருமாறு.

    விவரம் ரூ. விவரம் ரூ.
    ரொக்கம் 5,000 கடனாளிகள் 16,000
    சரக்கிருப்பு 18,000 கடனீந்தோர் 9,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 7,000 வங்கி ரொக்கம் 24,000
    அறைகலன் 3,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 6,000
    நிலம் மற்றும் கட்டடங்கள் 30,000    

    அவ்வாண்டில் தன்னுடைய சொந்தப் பயனுக்காக அவர் ரூ. 15,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 20,000. அவருடைய இலாபம் அல்லது நட்டத்தைக் கண்டறியவும்.

  34. குறிப்பு வரைக 
    1) சந்தா 
    2) நன்கொடைகள் 

  35. சிபி மற்றும் மனோஜ் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். சிபி எந்தவொரு கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபத்தில் 20% கழிவாகப் பெற வேண்டும். மனோஜ், அனைத்து கழிவுக்குப் பின் உள்ள நிகர இலாபத்தில் 20% கழிவாகப் பெற வேண்டும். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய கழிவு கணக்கிடுவதற்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ரூ.60,000. சிபி மற்றும் மனோஜின் கழிவினைக் கண்டுபிடிக்கவும். மேலும் இலாபப் பகிர்வினையும் கணக்கிடவும்.

  36. கூட்டு சராசரி முறையில் நற்பெயர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  37. சொத்துகள் மற்றும் பொறுப்புகள் மறுமதிப்பீடு செய்வதற்கான குறிப்பேட்டுப் பதிவுகள் யாவை?

  38. நற்பெயர் சர்க்கட்டப்படுத்தல் பற்றி சிறு குறிப்பு வரைக

  39. ஜெனிபர் நிறுமம் பங்கொன்று ரூ.10 முகமதிப்புள்ள 10,000 பங்குகளை வெளியிட்டது. பங்கொன்றுக்கு விண்ணப்பத்தின் மீது ரூ.3, ஒதுக்கீட்டின் மீது ரூ.3, முதல் அழைப்பின் மீது ரூ.2 மற்றும் இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.2 செலுத்த வேண்டி இருந்தது. சுப்பு என்பவர் 100 பங்குகளுக்கான இரண்டாவது மற்றும் இறுதி அழைப்பினைக் கட்ட தவறினார். எஞ்சிய தொகைகள் அனைத்தும் பெறப்பட்டன. சுப்புவின் பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன மற்றும் அவைகள் ஹேமா என்பவருக்கு பங்கு ஒன்று ரூ.7 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.

  40. நிதிநிலை அறிக்கைகளின் முக்கியத்துவத்தினை எழுதுக (ஏதேனும் மூன்று).

  41. அருணன் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து
    (i) புற அக பொறுப்புகள் விகிதம்
    (ii) உரிமையாளர் விகிதம் மற்றும்
    (iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்

    அருணன் நிறுவனத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      அ) பங்கு முதல்  
      நேர்மைப் பங்குமுதல் 1,50,000
      8% முன்னுரிமைப் பங்குமுதல் 2,00,000
    (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 1,50,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்  
      நீண்டகாலக் கடன்கள் (9% கடனீட்டுப் பத்திரங்கள்) 4,00,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
      (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள் 25,000
      (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 75,000
    மொத்தம் 10,00,000
    II. சொத்துகள்  
    1. நீண்டகாலச் சொத்துகள்  
      நிலைச் சொத்துகள் 7,50,000
    2. நடப்புச் சொத்துகள்  
      (அ) சரக்கிருப்பு 1,20,000
      (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 1,00,000
      (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் 27,500
      (ஈ) இதர நடப்புச் சொத்துகள் செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது 2,500
    மொத்தம் 10,00,000
  42. Tally.ERP 9-ல் பொதுவாக பயன்படுத்தப்படும் சான்றாவணங்களின் வகைகளை குறிப்பிடவும்.

  43. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    7 x 5 = 35
    1. செல்வம் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

      விவரம் 1-1-2018
      ரூ.
      31.12.2018
      ரூ.
      இயந்திரம் 60,000 60,000
      வங்கி ரொக்கம் 25,000 33,000
      பற்பல கடனாளிகள் 70,000 1,00,000
      சரக்கிருப்பு 45,000 22,000
      பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 20,000 38,000
      வங்கிக் கடன் 45,000 45,000
      பற்பல கடனீந்தோர் 25,000 21,000

      கூடுதல் தகவல்கள்:

        ரூ.   ரூ.
      ரொக்க விற்பனை 20,000 கடன் விற்பனை 1,80,000
      ரொக்கக் கொள்முதல் 8,000 கடன் கொள்முதல் 52,000
      கூலி 6,000 சம்பளம் 23,500
      விளம்பரம் 7,000 வங்கிக் கடன்மீது வட்டி 4,500
      எடுப்புகள் 60,000 கூடுதல் முதல் 21,000

      சரிக்கட்டுதல்கள்:
      இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.

    2. சென்னை விளையாட்டு மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்
       

      விவரம் ரூ  விவரம் ரூ ரூ
      தொடக்க  இருப்பு (1.4.2017) 10,000 சந்தா பெற்றது    
      தொடக்க வங்கி இருப்பு (1.4.2017) 15,000 2016 – 2017 4,500  
      வட்டி செலுத்தியது 5,000 2017 – 2018 65,000  
      தொலைபேசி செலவுகள்  7,000 2018 – 2019 5,000 74,500
      மைதானம் பராமரித்தது  22,500 தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள்    12,500
      ஆயுள் உறுப்பினர் கட்டணம் பெற்றது 5,500 தொடர் விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள்    15,000
      மட்டைகள் மற்றும் பந்துகள் வாங்கியது  13,000 இறுதிரொக்க இருப்பு (31.3.2018)   5,000
    1. பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31,2016 மற்றும் மார்ச் 31,2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.

      விவரம்  2015-16
      ரூ.
      2016-17
      ரூ.
      விற்பனை மூலம் பெற்ற வருவாய்  4,00,000 6,00,000
      இதர வருமானங்கள்  50,000 1,50,000
      செலவுகள்  5,00,000 3,00,000
      வருமான வரி % 40 40
    2. அருண் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 
      (i) புற அக பொறுப்புகள் விகிதம் 
      (ii) உரிமையாளர் விகிதம் மற்றும் 
      (iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்.

      அருண் நிறுவனத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
      விவரம்  ரூ 
      பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்   
      1. பங்குதாரர் நிதி   
        (அ) பங்குமுதல்   
        நேர்மைப் பங்குமுதல்  1,50,000
        8% முன்னுரிமைப் பங்குமுதல்  2,00,000
        (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி  1,50,000
      2. நீண்டகாலப் பொறுப்புகள்   
        நீண்டகால கடன்கள் (9% கடனீட்டுப் பாத்திரங்கள்) 4,00,000
      3. நடப்பு பொறுப்புகள்   
        (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள்  25,000
        (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்  75,000
        மொத்தம்  10,00,000
      II  சொத்துகள்   
      1. நீண்ட காலச் சொத்துகள்   
        நிலைச் சொத்துகள்  7,50,000
      2. நடப்புச் சொத்துகள்  1,20,000
        (அ) சரக்கிருப்பு  1,20,000
        (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள்  1,000,000
        (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவர்கள்  27,500
        (ஈ) இதர நடப்புச் சொத்துகள்   
        செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது  2,500
        மொத்தம்  10,00,000
    1. ஒரு சங்கத்தின் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு தோன்றும்? 2016-17 ல் அச்சகம் பெற்ற சந்தா ரூ. 50,000. இதில் 2015-16 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.6,000 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.3,500 சேர்ந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா ரூ.1,500 இன்னும் பெற வேண்டியுள்ளது.

    2. அன்பு மற்றும் சங்கர் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3:2 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:

      பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
      முதல் கணக்குகள்:     கணிப்பொறி 40,000
      அன்பு 4,00,000   வாகனம் 1,60,000
      சங்கர் 3,00,000 7,00,000 சரக்கிருப்பு 4,00,000
      இலாப நட்ட க/கு   1,20,000 கடனாளிகள் 3,60,000
      கடனீந்தோர்   1,20,000 வங்கி ரொக்கம் 40,000
      தொழிலாளர் ஈட்டு நிதி   60,000    
          10,00,000   1,40,000

      பின்வரும் விவரங்கள் அடிப்படையில் இராஜேஷ் என்பவர் 1/5 பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார்.
      (i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.75,000 என மதிப்பிடப்பட்டது. இராஜேஷ் நற்பெயரில் தன்னுடைய பங்கினை ரொக்கமாகக் கொண்டு வந்தார்.
      (ii) இராஜேஷ் ரூ.1,50,000 முதலாகக் கொண்டு வந்தார்.
      (iii) வாகனம் ரூ.2,00,000, சரக்கிருப்பு ரூ.3,80,000, கடனாளிகள் ரூ.3,50,000 என மதிப்பிடப்பட்டது.
      (iv) எதிர்பார்க்கப்படும் தொழிலாளர் ஈட்டு நிதி மீதான கோரிக்கை ரூ.10,000.
      (v) பதிவுறா முதலீடு ரூ.5,000 கணக்கில் கொண்டுவரப்பட்டது.
      மறுமதிப்பீடு கணக்கு, முதல் கணக்கு மற்றும் இராஜேஷின் சேர்ப்பிற்கு பின்வரும் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

    1. மாலு மற்றும் நீது, 2018, ஜனவரி 1 அன்று முறையே ரூ.3,00,000 மற்றும் ரூ.2,00,000 முதலாகக் கொண்டு தொழில் தொடங்கினார்.
      கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி,
      (அ) முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% தரப்பட வேண்டும்
      (ஆ) நீது ஆண்டுக்கு 50,000 ஊதியம் பெற வேண்டும்
      (இ) முதல் மீது வட்டி மற்றும் நீது ஊதியத்தை கழித்த பின், கழிவுக்குப் பின் உள்ள இலாபத்தில் 10% மாலு கழிவாகப் பெற வேண்டும்.
      (ஈ) இரு கூட்டாளிகளுக்கு இடையே இலாபப் பகிர்வு விகிதம் 3:2
      அவ்வாண்டில் நிறுவனம் ஈட்டிய இலாபம் ரூ.3,00,000
      நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் - 31 இல் கணக்கு முடிக்கிறது எனக் கொண்டு இலாபநட்டப் பகிர்வு கணக்கை தயாரிக்கவும்.

    2. பின்வரும் தகவல்களிலிருந்து, உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
      (அ) சாதாரண இலாப விகிதம் 10%
      (ஆ) கடந்த 4 ஆண்டுகளின் இலாபங்கள் ரூ.30,000, ரூ.40,000, ரூ.50,000 மற்றும் ரூ.45,000.
      (இ) மேற்குறிப்பிட்ட இலாபம் ரூ.30,000 ல் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.3,000 சேர்ந்துள்ளது.
      (ஈ) சராசரி பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.3,00,000.

    1. சார்லஸ், முத்து மற்றும் சேகர் என்ற கூட்டாளிகள் முறையே 3:4:2 என்ற விகிதத்தில் இலாபங்களைப் பகிர்ந்து கொண்டனர். 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.

      பொறுப்புகள்  ரூ. ரூ. சொத்துகள்  ரூ.
      முதல் கணக்குகள்:     அறைகலன்  20,000
      சார்லஸ்  30,000   சரக்கிருப்பு 40,000
      முத்து  40,000   கடனாளிகள்  30,000
      சேகர்  20,000 90,000 வங்கி ரொக்கம்  42,000
      தொழிலாளர் ஈட்டு நிதி    27,000 இலாபநட்ட க/கு 18,000
      பற்பல கடனீந்தோர் க/கு   33,000    
          1,50,000   1,50,000

      1.1.2019 அன்று பின்வரும் ஏற்பாடுகளின்படி சார்லஸ் கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
      (i) சரக்கிருப்பின் மதிப்பு 10% அதிகரிக்கப்பட வேண்டும்
      (ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
      (iii) வாராக்கடன் மீது ரூ. 1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
      (iv) கொடுபடா பழுதுபார்ப்புச் செலவு ரூ.10,000 இன்னமும் பதியப்படவில்லை
      (v) சார்லஸிற்கு உரியத்தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது
      மறுமதிப்பீட்டுக் கணக்கு, விலகலுக்குப் பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்

    2. சுந்தர், விவேக், மற்றும் பாண்டியன் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் 2016, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு

      பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
      முதல் கணக்குகள்:     நிலம் 80,000
        சுந்தர் 50,000   சரக்கிருப்பு 20,000
        விவேக் 40,000   கடனாளிகள் 30,000
        பாண்டியன் 10,000 1,00,000 வங்கி ரொக்கம் 14,000
      பொதுக்கப்பு   36,000 இலாப நட்டக் க/கு (நட்டம்) 6,000
      பற்பல கடனீந்தோர்   14,000    
          1,50,000   1,50,000

       1.1.2019 அன்று பாண்டியன் இறந்தது விட்டார் மற்றும் அவரின் இறப்பின் போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டடன
      (i) சரக்கிருப்பின் மதிப்பு 10% தேய்மானம் குறைக்கப்பட வேண்டும்
      (ii) நிலத்தின் மதிப்பு ரூ.11,000 அதிகரிக்கப்பட வேண்டும்
      (iii) கடனாளிகள் மதிப்பு ரூ.3,000 குறைக்க வேண்டும்
      (iv) பாண்டியனுக்கு செலுத்த வேண்டிய இறுதித் தொகை செலுத்தப்படவில்லை
      கூட்டாளியின் இறப்பிற்கு பின் நிருமத்தின் மறுமதிப்பீட்டுக் கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    1. புராகிரஸ் வரையறு நிறுமம் 50,000 சாதாரணப் பங்குகளை, பங்கொன்று ரூ.10 வீதம் வெளியிட்டது. விண்ணப்பத்தின் போது ரூ.2, ஒதுக்கீட்டின் போது ரூ.4 முதலாவது அழைப்பின் போது ரூ.2 மற்றும் இரண்டாவது அழைப்பின் போது ரூ.2 செலுத்தப்பட்ட வேண்டும். அனைத்து பங்குகளும் ஒப்பப்பட்டன மற்றும் அனைத்து தொகைகளும் முறையாக பெறப்பட்டன. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.

    2. பின்வரும் தகவல்களிலிருந்து கலா நிறுமத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடுக.

      விவரம் ரூ. (ஆயிரத்தில்)
      2015-16 2016-17 2017-18
      விற்பனை மூலம் பெற்ற வருவாய் 400 500 600
      இதர வருமானம் 100 150 200
      செலவுகள் 200 290 350
    1.  அருணா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து
      (i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
      (ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
      (iii) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகளின் சுழற்சி விகிதம் மற்றும்
      (iv) நிலைச்சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.

      விவரம் 2018, மார்ச் 31
      ரூ.
      2019, மார்ச் 31
      ரூ.
      சரக்கிருப்பு 3,60,000 4,40,000
      கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 7,40,000 6,60,000
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,90,000 2,30,000
      நிலைச் சொத்துகள் 6,00,000 8,00,000

      கூடுதல் தகவல்கள்:
      (i) அவ்வாண்டில் விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.35,00,000
      (ii) அவ்வாண்டில் கொள்முதல் ரூ.21,00,000
      (iii) விற்பனையிலிருந்து பெற்றபெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.16,00,000.
      விற்பனை மற்றும் கொள்முதலை கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் எனக் கொள்ளவும்.

    2. பின்வரும் இருப்பு நிலைக்குறிப்பு பியர்ல் என்பவரின் ஏடுகளிலிருந்து 1-4-2018-ம் நாளன்று தயார் செய்யப்பட்டது.
      அவ்வாண்டில் நடைபெற்ற நடவடிக்கைகள் பின்வருமாறு 

      பொறுப்புகள்  ரூ  சொத்துகள்  ரூ 
      முதல் பற்பல கடனீந்தோர்: 1,60,000 கட்டடம்  40,000
      மாயா க/கு  20,000 அறைகலன்  20,000
          சரக்கிருப்பு  10,000
          பற்பல கடனாளிகள்:  
          பீட்டர்  20,000
          கை ரொக்கம்  30,000
          வாங்கி ரொக்கம்  60,000
        1,80,000   1,80,000

      (அ) கூலி ரொக்கமாக வாங்கியது ரூ. 4,000
      (ஆ) சம்பளம் காசோலை மூலம் வழங்கியது ரூ. 10,000
      (இ) ரொக்கக்  கொள்முதல் மேற்கொண்டது ரூ. 4,000
      (ஈ) யாழினியிடம் கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ. 30,000
      (உ) ஜோதிக்கு கடனுக்கு சரக்கு விற்றது ரூ. 40,000
      (ஊ) யாழினிக்கு NEFT மூலம் செலுத்தியது ரூ. 6,000
      (எ) பீட்டரிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ. 10,000
      (ஏ) ரொக்க விற்பனை மேற்கொண்டது ரூ. 4,000
      (ஐ) கட்டடம் மீதான தேய்மானம் 20%
      (ஒ) 31-3-2019 அன்றைய இறுதி சரக்கிருப்பு ரூ. 9,000
      31-3-2019 நாளேடு முடிவடையும் ஆண்டிற்கான வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கையும், இருப்புநிலைக் குறிப்பையும் Tally உதவியுடன் தயார் செய்யவும்.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021

Write your Comment