12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்

    20 x 1 = 20
  1. முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது______.

    (a)

    நிறுமம்

    (b)

    அரசு

    (c)

    சிறிய அளவிலான தனிஆள் வணிகம்

    (d)

    பன்னாட்டு நிறுவனங்கள்

  2. இரட்டைப்பதிவு முறையை கட்டாயமாகப் பின்பற்றாத நிறுவனங்களின் கணக்கேடுகள் அந்நிறுவனத்தின் ________ மற்றும் _______ களின் தேவை மற்றும் விருப்பத்திற்கேற்ப பராமரிக்கப்படுகின்றன.

    (a)

    உரிமையாளர்கள், தொழிலாளர்கள் 

    (b)

    உரிமையாளர்கள், வங்கியர் 

    (c)

    தொழிலாளர்கள், கணக்காளர்கள் 

    (d)

    உரிமையாளர்கள், கணக்காளர் 

  3. உயில்கொடை ஒரு_____.

    (a)

    வருவாயினச் செலவு

    (b)

    முதலினச் செலவு

    (c)

    வருவாயின வரவு

    (d)

    முதலின வரவு

  4. கட்டடங்கள் கட்டுவதற்காகவும், சொத்துகளை வாங்குவதற்காகவும் பெறப்படும் மானியமானது எவ்வாறு கருதப்படுகிறது?

    (a)

    முதலின வரவு 

    (b)

    வருவாயின வரவு 

    (c)

    முதலினச் செலவு 

    (d)

    வருவாயினச் செலவு 

  5. கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட்டி______.

    (a)

    வழங்கப்படுவதில்லை

    (b)

    வங்கி வீதத்தில் வழங்கப்படும்

    (c)

    ஆண்டுக்கு 5 % வழங்கப்படும்

    (d)

    ஆண்டுக்கு 6% வழங்கப்படும்

  6. கூட்டாண்மையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை

    (a)

    25

    (b)

    50

    (c)

    10

    (d)

    20

  7. சராசரி இலாபம் ரூ.25,000 மற்றும் சாதாரண இலாபம் ரூ.15,000 ஆக இருக்கும் போது, உயர் இலாபம் _____.

    (a)

    ரூ.25,000

    (b)

    ரூ.5,000

    (c)

    ரூ.10,000

    (d)

    ரூ.15,000

  8. ______ என்பது தொடர்ச்சியான இடைவெளிகளில் தொடர்ந்து சீராக பெறப்படும் ரொக்க ஓட்டத்தைக் குறிக்கும்

    (a)

    ஆண்டுத்தொகை

    (b)

    கூட்டுத் தொகை

    (c)

    சராசரி தொகை

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  9. கூட்டாளி சேர்ப்பின் போது சொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்யும் போது ஏற்படும் இலாபம் அல்லது நட்டம் யாருடைய முதல் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?

    (a)

    பழைய கூட்டாளிகள்

    (b)

    புதிய கூட்டாளி

    (c)

    அனைத்து கூட்டாளிகள்

    (d)

    தியாகம் செய்த கூட்டாளிகள்

  10. எதிர்கால இலாபங்களில் பங்கெடுக்கும் உரிமை பெற புதிய கூட்டாளி பழைய கூட்டாளிகளுக்கு வழங்கும் தொகை _____ என்று அழைக்கப்படுகிறது

    (a)

    நற்பெயர்

    (b)

    மறுமதிப்பீடு

    (c)

    இவை இரண்டும்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  11. X, Y மற்றும் Z என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2019, ஏப்ரல் 1 அன்று X இறந்து விட்டார். 2018 இல் இலாபம் ரூ.36,000 என்ற அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்குரிய இலாபத்தில் X ன் பங்கினைக் கண்டறியவும்.

    (a)

    ரூ. 1,000

    (b)

    ரூ. 3,000

    (c)

    ரூ.12,000

    (d)

    ரூ.36,000

  12. கூட்டாளி விலகளின்பொழுது, நற்பெயர் மதிபெற்றம் அனைத்துக் கூட்டாளிகளின் முதல் கணக்குகளில் _______ பக்கம் மாற்றப்படும்

    (a)

    பற்று

    (b)

    வரவு

    (c)

    இரண்டு பக்கங்களிலும்

    (d)

    இவை எதுவுமில்லை

  13. சொத்துகளை வாங்கி பங்குகள் வெளியிடும்போது வரவு வைக்கப்படும் கணக்கு_____.

    (a)

    விற்பனையாளர் க/கு

    (b)

    பற்பல சொத்துகள் க/கு

    (c)

    பங்குமுதல் க/கு

    (d)

    வங்கி க/கு

  14. ______ என்பது தன்னார்வமாக செயல்படும் நபர்களின் சங்கம்.

    (a)

    தனியாள் வணிகம் 

    (b)

    கூட்டாண்மை 

    (c)

    கூட்டுறவுச் சங்கம் 

    (d)

    நிறுமம் 

  15. பின்வருவனவற்றில் எது நிதிநிலைப் பகுப்பாப்பாய்வின் ஒரு கருவி அல்ல?

    (a)

    போக்குப் பகுப்பாய்வு

    (b)

    பொது அளவு அறிக்கை

    (c)

    ஒப்பீட்டு அறிக்கை

    (d)

    நிர்ணயிக்கப்பட்ட அடக்கவிலையியல்

  16. ஒப்புநோக்கு அறிக்கை எத்தனை பத்திகளைக் கொண்டது?

    (a)

    இரண்டு 

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஐந்து 

  17. ஒரு இனம் மற்றொரு இனத்தோடு பெற்றிருக்கும் தொடர்பினை கணிதவியல் முறையில் கூறுவது______.

    (a)

    முடிவு

    (b)

    விகிதம்

    (c)

    மாதிரி

    (d)

    தீர்மானம்

  18. ________ என்பது ஒரு வணிக நிறுவனம்  தனது நடப்புப் பொறுப்புகளை எப்போது செலுத்த வேண்டுமோ அப்போது, அதை எதிர்கொள்ளும் திறனைக் குறிக்கிறது.

    (a)

    நடப்பு விகிதம் 

    (b)

    விரைவு விகிதம் 

    (c)

    உரிமையாளர் விகிதம் 

    (d)

    முதல் உந்துதிறன் விகிதம் 

  19. சம்பளக் கணக்கு பின்வரும் எந்த தலைப்பின் கீழ் வரும்? 

    (a)

    நேரடி வருமானங்கள் 

    (b)

    நேரடி செலவினங்கள் 

    (c)

    மறைமுக வருமானங்கள் 

    (d)

    மறைமுக செலவினங்கள் 

  20. _________ விரைவாகவும் துல்லியமாகவும் எடுக்க கணக்கியல் முறை வழிவகை செய்கிறது.

    (a)

    தரவுநிலை மற்றும் தகவல்களை 

    (b)

    அறிக்கைகளை 

    (c)

    ஊதியப் பட்டியலை 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 2 = 14
  22. கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

    விவரம் ரூ.
    ஆண்டின் தொடக்க முதல் (ஏப்ரல் 1, 2018) 5,00,000
    ஆண்டின் இறுதி முதல் (மார்ச் 31, 2019) 8,50,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 1,20,000
    அவ்வாண்டில் எடுப்புகள் 70,000
  23. இலாபநோக்கமற்ற அமைப்புகள் எந்த கணக்குகளையெல்லாம் தயாரிக்கின்றன?

  24. வட்டிக்குரிய காலம் என்றால் என்ன?

  25. கூட்டாண்மை நிறுவனத்தில் நற்பெயரை மதிப்பிடும் ஏதேனும் இரண்டு சூழ்நிலைகளைத் தரவும்.

  26. கூட்டாளி சேர்ப்பு என்றால் என்ன? அவர் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகிறார்?

  27. நவீன், ரவி மற்றும் குமார் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை முறையே 1/2, 1/4 மற்றும் 1/4 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். குமார் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார் மற்றும் அவருடைய பங்கை நவீன் மற்றும் ரவி சமமாக எடுத்துக் கொண்டார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்

  28. பொது வெளியீடு என்றால் என்ன?

  29. நடைமுறை முதல் என்றால் என்ன?

  30. கடன் வசூலிப்பு காலம் என்றால் என்ன?

  31. கணக்கியல் தகவல் அமைப்பு என்றால் என்ன?

  32. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 3 = 21
  33. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    31.3.2019 அன்று இறுதி முதல் 1,90,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 50,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 30,000
    1.4.2018 அன்று தொடக்க முதல் ?
    31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் 40,000
  34. இலாப நோக்கமற்ற அமைப்புகளின் இயல்புகள் யாவை?

  35. இராஜன் மற்றும் தேவன் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவர்களின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடவும்..

    2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     பல்வகைச் சொத்துகள் 2,20,000
    இராஜன் 1,00,000      
    தேவன் 80,000 1,80,000    
    இலாபநட்டப் பகிர்வு கணக்கு   40,000    
        2,20,000   2,20,000

     2018, ஏப்ரல் 1 அன்று இராஜன் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ.40,000 மற்றும் 2018, செப்டம்பர் 1 அன்று தேவன் கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.30,000. அவ்வாண்டின் எடுப்புகள் முறையே இராஜன் ரூ.20,000, தேவன் ரூ.10,000 ஆகும். அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.70,000.

  36. நற்பெயரின் வகைகளை எழுத விளக்குக.

  37. நற்பெயருக்கான கணக்கியல் செயல்முறை குறித்து சிறு குறிப்பு தரவும்.

  38. விலகும் கூட்டாளிக்குரிய தொகையை எவ்வகையில் தீர்க்கப்படலாம்?

  39. ஒறுப்பிழப்பு செய்த பங்குகளின் மறுவெளியீடு என்றால் என்ன?  

  40. நிதிநிலை அறிக்கைகளின் முக்கியத்துவத்தினை எழுதுக (ஏதேனும் மூன்று).

  41. ஹரிணி நிறுமத்தின் கடன் விற்பனை மூலம் பெற்ற வருவாய் தொகை ரூ.9,60,000. அந்த கணக்காண்டின் இறுதியில் இதன் வியாபார கடனாளிகள் மற்றும் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு தொகை முறையே ரூ.1,00,000 மற்றும் ரூ.60,000. கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகளின் சுழற்சி விகிதம் மற்றும் கடன் வசூலிப்புக் காலம் (மாதங்களில்) கணக்கிடவும்.

  42. Tally.ERP 9-ல் பொதுவாக பயன்படுத்தப்படும் சான்றாவணங்களின் வகைகளை குறிப்பிடவும்.

  43. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    7 x 5 = 35
    1. அருண் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 
      (i) புற அக பொறுப்புகள் விகிதம் 
      (ii) உரிமையாளர் விகிதம் மற்றும் 
      (iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்.

      அருண் நிறுவனத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
      விவரம்  ரூ 
      பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்   
      1. பங்குதாரர் நிதி   
        (அ) பங்குமுதல்   
        நேர்மைப் பங்குமுதல்  1,50,000
        8% முன்னுரிமைப் பங்குமுதல்  2,00,000
        (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி  1,50,000
      2. நீண்டகாலப் பொறுப்புகள்   
        நீண்டகால கடன்கள் (9% கடனீட்டுப் பாத்திரங்கள்) 4,00,000
      3. நடப்பு பொறுப்புகள்   
        (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள்  25,000
        (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்  75,000
        மொத்தம்  10,00,000
      II  சொத்துகள்   
      1. நீண்ட காலச் சொத்துகள்   
        நிலைச் சொத்துகள்  7,50,000
      2. நடப்புச் சொத்துகள்  1,20,000
        (அ) சரக்கிருப்பு  1,20,000
        (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள்  1,000,000
        (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவர்கள்  27,500
        (ஈ) இதர நடப்புச் சொத்துகள்   
        செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது  2,500
        மொத்தம்  10,00,000
    2. பின்வரும் இருப்பு நிலைக்குறிப்பு பியர்ல் என்பவரின் ஏடுகளிலிருந்து 1-4-2018-ம் நாளன்று தயார் செய்யப்பட்டது.
      அவ்வாண்டில் நடைபெற்ற நடவடிக்கைகள் பின்வருமாறு 

      பொறுப்புகள்  ரூ  சொத்துகள்  ரூ 
      முதல் பற்பல கடனீந்தோர்: 1,60,000 கட்டடம்  40,000
      மாயா க/கு  20,000 அறைகலன்  20,000
          சரக்கிருப்பு  10,000
          பற்பல கடனாளிகள்:  
          பீட்டர்  20,000
          கை ரொக்கம்  30,000
          வாங்கி ரொக்கம்  60,000
        1,80,000   1,80,000

      (அ) கூலி ரொக்கமாக வாங்கியது ரூ. 4,000
      (ஆ) சம்பளம் காசோலை மூலம் வழங்கியது ரூ. 10,000
      (இ) ரொக்கக்  கொள்முதல் மேற்கொண்டது ரூ. 4,000
      (ஈ) யாழினியிடம் கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ. 30,000
      (உ) ஜோதிக்கு கடனுக்கு சரக்கு விற்றது ரூ. 40,000
      (ஊ) யாழினிக்கு NEFT மூலம் செலுத்தியது ரூ. 6,000
      (எ) பீட்டரிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ. 10,000
      (ஏ) ரொக்க விற்பனை மேற்கொண்டது ரூ. 4,000
      (ஐ) கட்டடம் மீதான தேய்மானம் 20%
      (ஒ) 31-3-2019 அன்றைய இறுதி சரக்கிருப்பு ரூ. 9,000
      31-3-2019 நாளேடு முடிவடையும் ஆண்டிற்கான வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கையும், இருப்புநிலைக் குறிப்பையும் Tally உதவியுடன் தயார் செய்யவும்.

    1. ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் முத்து, முரளி மற்றும் மனோஜ் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபத்தினை 3 : 1 : 2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

      பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ
      முதல் கணக்குகள்     இயந்திரம் 45,000
      முத்து 20,000   அறைகலன் 5,000
      முரளி 25,000   கடனாளிகள் 30,000
      மனோஜ் 20,000 65,000 சரக்கிருப்பு 20,000
      பொதுக்காப்பு   6,000    
      கடனீந்தோர்   29,000    
          1,00,000   1,00,000

      பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு 2018, டிசம்பர் 31 அன்று மனோஜ் விலகுகிறார்:
      (i) முத்துவும் முரளியும் இலாப நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
      (ii)சொத்துகள் பின்வருமாறு மதிப்பீடு செய்யப்படவேண்டும்.
      இயந்திரம் ரூ.43,000, சரக்கிருப்பு ரூ.27,000, கடனாளிகள் ரூ.28,000.
      (iii) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது.
      (iv) மனோஜ் -க்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை  உடனடியாக செலுத்தப்படவில்லை.
      மனோஜ் விலகலுக்குப் பின் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டிய தேவையான பேரேட்டுக் கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்கவும்.

    2. மோகன்ராஜ், நாகராஜ், பாக்கியராஜ் என்ற கூட்டாளிகள் 5 : 3 : 2 எனும் விகிதத்தில் இலாப நட்டங்கள் பகிர்ந்து வந்தனர். 31.12.2014 அன்று நிறுவன ஏடுகளில் காப்பு நிதி ரூ.30,000 மற்றும் பகிர்ந்து தரா நட்டம் ரூ.20,000 உள்ளன. பாக்கியராஜ் 1.1.2015 அன்று விலக்கினார். காப்பு நிதி, பகிர்ந்து தரா நாட்டம் ஆகியவற்றை பழைய கூட்டாளிகளின் கணக்குகளுக்கு மாற்றுவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.

    1. செல்வம் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

      விவரம் 1-1-2018
      ரூ.
      31.12.2018
      ரூ.
      இயந்திரம் 60,000 60,000
      வங்கி ரொக்கம் 25,000 33,000
      பற்பல கடனாளிகள் 70,000 1,00,000
      சரக்கிருப்பு 45,000 22,000
      பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 20,000 38,000
      வங்கிக் கடன் 45,000 45,000
      பற்பல கடனீந்தோர் 25,000 21,000

      கூடுதல் தகவல்கள்:

        ரூ.   ரூ.
      ரொக்க விற்பனை 20,000 கடன் விற்பனை 1,80,000
      ரொக்கக் கொள்முதல் 8,000 கடன் கொள்முதல் 52,000
      கூலி 6,000 சம்பளம் 23,500
      விளம்பரம் 7,000 வங்கிக் கடன்மீது வட்டி 4,500
      எடுப்புகள் 60,000 கூடுதல் முதல் 21,000

      சரிக்கட்டுதல்கள்:
      இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.

    2. மயிலாடுதுறை மனமகிழ் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

      விவரம் ரூ  விவரம் ரூ 
      தொடக்க ரொக்க இருப்பு 15,000 காவலாளிக்குச் சம்பளம் கொடுத்தது 12,000
      தொடக்க வங்கி இருப்பு 25,000 மன்ற ஆண்டு விழாச் செலவுகள் 15,000
      நன்கொடைகள் பெற்ற 48,000 ஒளியூட்டுச் செலவுகள்  16,500
      பழைய உபகரணங்கள் விற்றது 26,000 பொழுதுபோக்குச் செலவுகள் 13,500
      சிற்றுண்டிச் செலவுகள்  13,000 பில்லியார்ட்ஸ் மேசை வங்கியது 5,000
      மன்ற ஆண்டு விழா வசூல் 18,000 அறக்கொடை நாடகக்காட்சி செலவுகள்  3,000
      டென்னிஸ் மைதான கட்டுமானச் செலவுகள்  7,000 முதலீடுகள் விற்றது 12,000
      அறக்கொடை நாடகக்காட்சி வசூல் 4,000 இறுதி ரொக்க இருப்பு 12,000
      வாடகைச் செலுத்தியது 1,000    
    1. தமிழ் கல்வியில் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

      விவரம்  ரூ. விவரம்  ரூ.
      தொடக்க ரொக்க இருப்பு (1.4.2018) 15,000 சந்தா பெற்றது  40,000
      வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) 9,000 பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல்  7,500
      அச்சு மற்றும் எழுதுபொருள்  2,500 போக்குவரத்துச் செலவுகள்  2,750
      வட்டி செலுத்தியது  5,250 புத்தகங்கள் வாங்கியது  10,000
      முதலீடுகள் விற்றது  4,000 காப்பீட்டு முனைமம் செலுத்தியது  4,000
      சிற்றுண்டி வாங்கியது  2,500 பல்வகை வரவுகள்  650
      கொடுபட வேண்டிய சம்பளம்  6,000 அரசிடமிருந்து பெற்ற மானியம்  6,000
      அறக்கொடை நிதி பெற்றது  6,000 சிற்றுண்டி விற்றது  1,500
      ஒளியூட்டுக் கட்டணம்  3,300 கட்டடம் மீதான தேய்மானம்  3,000
          வங்கி ரொக்கம் (31.3.2019) 2,000
    2. ஜான் மற்றும் சுரேஷ் என்ற இரு கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, ஜனவரி 1 அன்று அவர்களின் முதல் கணக்குகளின் இருப்புகள் ஜான் ரூ.60,000 மற்றும் சுரேஷ் 40,000 ஆகும். 2018, ஏப்ரல் 1 அன்று ஜான் கூடுதல் முதலாக ரூ.10.000 கொண்டு வந்தார். அவ்வாண்டில் சுரேஷ் ரூ.50,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். 2018 டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% எனக் கணக்கிடவும்.

    1. ஒரு கூட்டாண்மை நிறுவனம் கடந்த மூன்று வருடங்களாக ஈட்டிய நிகர இலாபங்கள் பின்வருமாறு:
      2016: ரூ.20,000; 2017: ரூ.17,000 மற்றும் 2018: ரூ.23,000.
      மேற்குறிப்பிட்ட காலம் முழுவதும் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.80,000. நிறுவனம் கொண்டுள்ள இடரினைக் கருத்தில் கொண்டு, பயன்படுத்தப்பட்ட முதல் மீதான சாதாரண இலாப வீதம் 15% என கருதப்பட்டது. உயர் இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

    2. அன்பு மற்றும் சங்கர் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3:2 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:

      பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
      முதல் கணக்குகள்:     கணிப்பொறி 40,000
      அன்பு 4,00,000   வாகனம் 1,60,000
      சங்கர் 3,00,000 7,00,000 சரக்கிருப்பு 4,00,000
      இலாப நட்ட க/கு   1,20,000 கடனாளிகள் 3,60,000
      கடனீந்தோர்   1,20,000 வங்கி ரொக்கம் 40,000
      தொழிலாளர் ஈட்டு நிதி   60,000    
          10,00,000   1,40,000

      பின்வரும் விவரங்கள் அடிப்படையில் இராஜேஷ் என்பவர் 1/5 பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார்.
      (i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.75,000 என மதிப்பிடப்பட்டது. இராஜேஷ் நற்பெயரில் தன்னுடைய பங்கினை ரொக்கமாகக் கொண்டு வந்தார்.
      (ii) இராஜேஷ் ரூ.1,50,000 முதலாகக் கொண்டு வந்தார்.
      (iii) வாகனம் ரூ.2,00,000, சரக்கிருப்பு ரூ.3,80,000, கடனாளிகள் ரூ.3,50,000 என மதிப்பிடப்பட்டது.
      (iv) எதிர்பார்க்கப்படும் தொழிலாளர் ஈட்டு நிதி மீதான கோரிக்கை ரூ.10,000.
      (v) பதிவுறா முதலீடு ரூ.5,000 கணக்கில் கொண்டுவரப்பட்டது.
      மறுமதிப்பீடு கணக்கு, முதல் கணக்கு மற்றும் இராஜேஷின் சேர்ப்பிற்கு பின்வரும் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

    1. சரண்யா வரையறு நிறுமம் பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.10 வீதம், 20,000 நேர்மைப் பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகளுக்கானத் தொகை கீழ்கண்டவாறு செலுத்தப்பட வேண்டும்.

      விண்ணப்பத்தின் போது ரூ.3
      ஒதுக்கீட்டின் போது ரூ.4
      முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.3

      30,000 பங்குகளுக்கான தொகை விண்ணப்பத்தின் போது பெறப்பட்டது. கூடுதலான விண்ணப்பத் தொகை திருப்பி, உடனடியாக அனுப்பப்பட்டது. இதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

    2. பின்வரும் விவரங்களைக் கொண்டு குறிஞ்சி வரையறு நிறுவனத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.

      விவரம் ரூ. ஆயிரங்களில்
      2015-16 2016-17 2017-18
      விற்பனை மூலம் பெற்ற வருவாய் 120 132 156
      இதர வருமானம் 50 38 65
      செலவுகள் 100 135 123
    1. பின்வரும் விவரங்களிலிருந்து சிவசாமி & கோ நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கை தயார் செய்யவும்.

      விவரம்  2016-17 2017-18
      ரூ. ரூ.
      விற்பனை மூலம் பெற்ற வருவாய்  4,00,000 5,00,000
      இதர வருமானங்கள்  1,00,000 80,000
      செலவுகள்  3,00,000 2,40,000
    2. பின்வரும் தகவல்களிலிருந்து மொத்த இலாபம் கணக்கிடவும்:
      விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.1,00,000, விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.80,000 மற்றும் கொள்முதல் ரூ.62,500.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Public Exam Model Question Paper with Answer key  - 2021

Write your Comment