12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

    பகுதி I

    50 x 2 = 100
  1. சாந்தி என்பவரின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புகள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 6,000 பற்பல கடனீந்தோர் 25,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 4,000 சரக்கிருப்பு 45,000
    இயந்திரம் 60,000 கடனாளிகள் 70,000
    அறைகலன் 10,000 ரொக்கம் 4,000

    2018, டிசம்பர் 31ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரித்து அந்நாளைய முதலை கணக்கிடவும்.

  2. கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

    விவரம் ரூ.
    ஆண்டின் தொடக்க முதல் (ஏப்ரல் 1, 2018) 5,00,000
    ஆண்டின் இறுதி முதல் (மார்ச் 31, 2019) 8,50,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 1,20,000
    அவ்வாண்டில் எடுப்புகள் 70,000
  3. ஊட்டி மனமகிழ் மன்றத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்.

    பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ
    தொடக்க இருப்பு   விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது 10,000
    கைரொக்கம்  5,000 எழுதுபொருளுக்காக செலுத்தியது 7,000
    வாடகைப் பெற்றது 10,000 கணிப்பொறி வாங்கியது 25,000
    முதலீடுகள் விற்றது 8,000 சம்பளம்  20,000
    சந்தா பெற்றது 54,000 இறுதி இருப்பு  
        கைரொக்கம் 15,000
      77,000   77,000
  4. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் சந்தா எவ்வாறு தோன்றும் என்பதைக் காட்டவும்.
    2018-ல் பெற்ற சந்தா ரூ16,000-ல் 2017 ஆம் ஆண்டுக்கான ரூ.3,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கானரூ.5,000 அடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 4,000. 2017 ஆம் ஆண்டில் 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது ரூ.2,000.

  5. இலாப நோக்கற்ற அமைப்பின்பொருள் தரவும்.

  6. இலாப நோக்கற்ற அமைப்பின் முதலின வரவுகளில் ஏதேனும் நான்கினைத் தரவும்.

  7. சேலம் விளையாட்டு மன்றத்தின் 2019, ஏப்ரல் 1 அன்றைய முதல் நிதியைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ  விவரம் ரூ 
    விளையாட்டு உபகரணங்கள் 30,000 பரிசு நிதி 10,000
    கணிப்பொறி 25,000 பரிசுநிதி முதலீடுகள் 10,000
    2018-2019 ஆம் ஆண்டில் சந்தா பெறவேண்டியது 5,000 கைரொக்கம்  7,000
    2019-20 ஆம் ஆண்டிற்காக முன்கூட்டிப் பெற்ற சந்தா 8,000 வங்கி ரொக்கம்  21,000
  8. மதிப்பூதியம் என்றால் என்ன?

  9. அந்தோணி மற்றும் அக்பர் என்ற இரு கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, ஜனவரி 1 அன்று அவர்களின் முதல் கணக்குகளின் இருப்புகள் அந்தோணி ரூ.60,000 மற்றும் அக்பர் ரூ.40,000 ஆகும். 2018, ஏப்ரல் 1 அன்று அந்தோணி கூடுதல் முதலாக ரூ.10,000 கொண்டு வந்தார். அவ்வாண்டில் அக்பர் ரூ.5,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 % எனக் கணக்கிடவும்.

  10. வேலன் என்ற கூட்டாளி 2018, ஏப்ரல் 1 அன்று ரூ.20,000 எடுத்துக்கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட வேண்டும். மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு 2018, டிசம்பர் 31அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிட்டு அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளையும் தரவும்.

  11. நிலைமுதல் முறை என்றால் என்ன?

  12. மணி என்ற கூட்டாளி 2018, செப்டம்பர் 1 அன்று ரூ.30,000 எடுத்துக்கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% என கணக்கிடப்பட வேண்டும். 2018, டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிட்டு அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  13. 2018 ஆம் ஆண்டில் மேத்யூ என்ற கூட்டாளி எடுத்த எடுப்புகள் ரூ.20,000. எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட்டது. 2018, டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.

  14. வட்டிக்குரிய காலம் என்றால் என்ன?

  15. நற்பெயர் என்றால் என்ன?

  16. கூட்டாண்மை நிறுவனத்தில் நற்பெயரை மதிப்பிடும் ஏதேனும் இரண்டு சூழ்நிலைகளைத் தரவும்.

  17. மாலா மற்றும் விமலா எனும் கூட்டாளிகள் முறையே 3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 31.03.2017 அன்று வர்ஷினி என்பவரை கூட்டாளியாக சேர்த்தனர். அவர் சேர்ந்த நாளில் நிறுவன ஏடுகளில் காப்பு நிதி ரூ.50,000 எனக் காட்டியது. காப்புநிதியை பகிர்ந்தளிக்க குறிப்பேட்டுப் பதிவு தரவும்.

  18. ஹரி மற்றும் சலீம் என்ற இரு கூட்டாளிகள் 5:3 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜோயல் என்பவரை \(\frac{1}{8}\) பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அவர் அப்பங்கு முழுவதையும் ஹரி என்பவரிடம் பெற்றுக் கொண்டார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  19. பிரசாந்த் மற்றும் நிஷா என்ற இரு கூட்டாளிகள் 3:2 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ரம்யா என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். பிரசாந்த் தன்பங்கில் 2/5 பங்கும், நிஷா தன் பங்கில் 2/5 பங்கும் தியாகம் செய்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  20. மகேஷ் மற்றும் தனுஷ் என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் அருண் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அருண் தன்னுடைய பங்கை மகேஷ் மற்றும் தனுஷ் ஆகிய இரு கூட்டாளிகளிடமிருந்தும் சம விகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  21. புதிய கூட்டாளி சேர்க்கையின்போது, பகிர்ந்துதரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் எவ்வாறு கூட்டாளிகளிக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது?

  22. இராஜா மற்றும் இரவி என்ற இரு கூட்டாளிகள் 3:2 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இராம் என்பவரை ¼ இலாபப் பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். இராம், 1/20 பங்கினை இராஜாவிடமும், 4/20 பங்கினை இரவியிடமும் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  23. கார்த்திக் மற்றும் கண்ணன் இருவரும் இலாபத்தை சமமாக பகிர்ந்து கொள்ளும் கூட்டாளிகள். அவர்கள் கைலாஷ் என்பவரை 1/4 இலாபப் பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். கைலாஷ் தனது பங்கை பழைய கூட்டாளிகளிடமிருந்து 7:3 என்ற விகிதத்தில் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  24. கூட்டாளி சேர்ப்பு என்றால் என்ன? அவர் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகிறார்?

  25. மேரி, மீனா மற்றும் மரியம் எனும் கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் இலாபநட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1-1-2019 அன்று மேரி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளில், அந்நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு சொத்துகள் பக்கத்தில் ரூ. 75,000 பகிர்ந்து தரா நட்டம் எனக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  26. ஆர்யா, பெனின் மற்றும் சார்லஸ் என்ற கூட்டாளிகள் முறையே 3:3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் சார்லஸ் என்பவர் விலகினார். அவருடைய பங்கு முழுவதையும் ஆர்யா எடுத்துக் கொண்டார். ஆர்யா மற்றும் பெனின் ஆகியோரின் புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.

  27. கூட்டாளி விலகல் என்றால் என்ன?

  28. கயல், மாலா மற்றும் நீலா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 2:2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கயல் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். மாலா மற்றும் நீலாவுக்கும் இடையே உள்ள புதிய இலாபப் பகிர்வு விகிதம் 3:2. ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.

  29. புதிய இலாப விகிதம் என்றால் என்ன?

  30. தாய் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 நேர்மைப் பங்குகளை வெளியீடு செய்தது. விண்ணப்பத்தின்போது ரூ.5; ஒதுக்கீட்டின்போது ரூ.2; முதல் அழைப்பின்போது ரூ.2 மற்றும் இறுதி அழைப்பின்போது ரூ.1 செலுத்தவேண்டும். அனைத்து பங்குகளும் ஒப்பப்பட்டு தொகை பெறப்பட்டது. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.

  31. ஜாய் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 10,000 நேர்மைப் பங்குகளை விண்ணப்பத்தின் போது ரூ.5, ஒதுக்கீட்டின் போது ரூ.3, முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.2 செலுத்தும் வகையில் வெளியிட்டது. 9,000 பங்குகளை வாங்க பொதுமக்கள் விண்ணப்பித்தனர். இயக்குனர்கள் 9,000 பங்குகளையும் ஒதுக்கீடு செய்து அதற்கான தொகையையும் பெற்றுக் கொண்டனர். தேவையான குறிப்பேட்ப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  32. கான் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 50,000 பங்குகளை விண்ணப்பத்தின் போது ரூ.4, ஒதுக்கீட்டின் போது ரூ.4 மற்றும் முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.2 என செலுத்தும் வகையில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. 65,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இயக்குனர்கள் 50,000 பங்குகளை விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யவும், மிகுதியாகப் பெற்ற விண்ணப்பத் தொகையை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தி கொள்ளவும் முடிவு செய்தனர். அனைத்துத் தொகைகளும் பெறப்பட்டன எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  33. பங்கு என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.

  34. பத்திர முனைமக் கணக்கு பற்றி சிறுகுறிப்பு வரையவும்

  35. பொது வெளியீடு என்றால் என்ன?

  36. சந்திரா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக்குறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக்குறிப்பினைத் தயார் செய்யவும்.

    விவரம் 2016, மார்ச் 31 2017, மார்ச் 31
    ரூ. ரூ.
    I.பங்குமூலதனம் மற்றும்பொறுப்புகள்    
      பங்குதாரர் நிதி 1,00,000 2,60,000
      நீண்ட காலப் பொறுப்புகள் 50,000 60,000
      நடப்புப் பொறுப்புகள் 25,000 30,000
    மொத்தம் 1,75,000 3,50,000
    II. சொத்துகள்    
      நிலைச் சொத்துகள் 1,00,000 2,00,000
      நடப்புச் சொத்துகள் 75,000 1,50,000
    மொத்தம் 1,75,000 3,50,000
  37. பின்வரும் மலர் நிறுமத்தின் 2016, மார்ச் 31 மற்றும் 2017, மார்ச் 31 ஆம் நாளைய ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்

    விவரம் 2016, மார்ச் 31 2017, மார்ச் 31
    ரூ. ரூ.
    I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள்    
    1. பங்குதாரர் நிதி    
      அ) பங்கு முதல் 2,00,000 2,50,000
      ஆ) காப்பும் மிகுதியும் 50,000 50,000
    2. நீண்ட காலப் பொறுப்புகள்    
      நீண்ட காலக் கடன்கள் 30,000 60,000
    3. நடப்புப் பொறுப்புகள்    
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 20,000 60,000
    மொத்தம் 3,00,000 4,20,000
    II. சொத்துகள்    
    1. நீண்ட காலச் சொத்துகள்    
      அ) நிலைச் சொத்துகள் 1,00,000 1,50,000
      ஆ) நீண்ட கால முதலீடுகள் 50,000 75,000
    2. நடப்புச் சொத்துகள்    
      சரக்கிருப்பு 75,000 1,50,000
      ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் 75,000 45,000
    மொத்தம் 3,00,000 4,20,000
  38. நடைமுறை முதல் என்றால் என்ன?

  39. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் பொருள் எழுதுக.

  40. செங்குத்துப் பகுப்பாய்வு என்றல் என்ன?

  41. மகேஷ் நிறுமத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      நேர்மைப் பங்குமுதல் 2,00,000
    2. நீண்டகால பொறுப்புகள்  
      நீண்டகாலக் கடன்கள் 50,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
    (அ) குறுகிய காலக் கடன்கள் 17,000
    (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 25,000
    (இ) இதர நடப்புப் பொறுப்புகள்  
      கொடுபட வேண்டிய செலவுகள் 3,000
    (ஈ) குறுகியகால ஒதுக்குகள் 5,000
    மொத்தம் 3,00,000
    சொத்துகள்  
    1. நீண்டகால சொத்துகள்  
    (அ) நிலைச் சொத்துகள்  
      புலனாகும் சொத்துகள் 1,50,000
    2. நடப்புச் சொத்துகள்  
    (அ) சரக்கிருப்பு 45,000
    (ஆ) கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகள் 70,000
    (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 30,000
    (ஈ) இதர நடப்புச் சொத்துகள்  
      முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் 5,000
    மொத்தம் 3,00,000

    (i) நடப்பு விகிதம்
    (ii) நீர்மை விகிதம் கணக்கிடவும்.

  42. பின்வரும் தகவல்களிலிருந்து புற அக பொறுப்புகள் விகிதம் கணக்கிடவும்:

    31.03.2018 அன்றைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய)
    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      (அ) பங்கு முதல்  
      நேர்மைப் பங்குமுதல் 1,00,000
      (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 60,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்  
      நீண்ட காலக் கடன்கள் (கடனீட்டுப் பத்திரங்கள்) 80,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
      (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 50,000
      (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் கொடுபடவேண்டிய செலவுகள் 30,000
    மொத்தம் 3,20,000
  43. கீழ்வரும் தகவல்களிலிருந்து முதல் உந்து திறன் விகிதத்தைக் கணக்கிடவும்.

    31.03.2018 அன்றைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய)
    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
    (அ) பங்குமுதல்  
      நேர்மைப் பங்குமுதல் 2,00,000
      6% முன்னுரிமைப் பங்குமுதல் 1,00,000
    (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி  
      பொதுக் காப்பு 1,25,000
      மிகுதி 75,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்  
       நீண்டகாலக் கடன்கள் (8% கடனீட்டுப் பத்திரங்கள்) 2,00,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்யவை 1,50,000
      வரி ஒதுக்கு 50,000
    மொத்தம் 9,00,000
  44. புற அக பொறுப்பு விகிதம் என்றால் என்ன?

  45. விகித பகுப்பாய்வின் ஏதேனும் இரண்டு குறைபாடுகளைத் தரவும்.

  46. நடப்பு விகிதம் என்றால் என்ன?

  47. கணக்கியல் அறிக்கைகள் என்றால் என்ன?

  48. Tally.ERP 9-ல் குழு என்றால் என்ன?

  49. கணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன?

  50. மேலாண்மை தகவல் அமைப்பு என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam)

Write your Comment