12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி I

    25 x 5 = 125
  1. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கடனாளிகள் கணக்கு, மொத்தக் கடனீந்தோர் கணக்கு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு மற்றம் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரித்து கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் கண்டறியவும்.

    விவரம் தொடக்க இருப்பு ரூ. இறுதி இருப்பு ரூ.
    கடனாளிகள் 60,000 55,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 5,000 1,000
    கடனீந்தோர் 25,000 28,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 2,000 3,000
    பிற தகவல்கள் ரூ.
    கடளாளிகளிடமிருந்து ரொக்கம் பெற்றது 1,30,000
    வாடிக்கையாளருக்கு அளித்த தள்ளுபடி 5,500
    கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம் 70,000
    சரக்களித்தோர் வழங்கிய தள்ளுபடி 3,500
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்குரிய ரொக்கம் செலுத்தியது 7,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்கான ரொக்கம் பெற்றது 14,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 1,200
    வாராக்கடன் 3,500
  2. பாண்டியன் தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    விவரம் 1-1-2018
    ரூ.
    31-12-2018
    ரூ.
    அறைகலன் 30,000 30,000
    கைரொக்கம் 10,000 17,000
    கடனாளிகள் 40,000 60,000
    சரக்கிருப்பு 28,000 11,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 12,000 35,100
    வங்கிக் கடன் 25,000 25,000
    கடனீந்தோர் 15,000 16,000

    கூடுதல் தகவல்கள்:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    ரொக்க விற்பனை 11,200 கடன் விற்பனை 88,800
    ரொக்கக் கொள்முதல் 4,250 கடன் கொள்முதல் 35,750
    கொள்முதல் மீதான தூக்குக்கூலி 3,000 விற்பனை மீதான தூக்குக்கூலி 700
    கழிவு பெற்றது 600 வங்கிக் கடன் மீது வட்டி 2,500
    எடுப்புகள் 8,000 கூடுதல் முதல் 14,000
    சம்பளம் 8,900 அலுவலக வாடகை 2,400

    சரிக்கட்டுதல்கள்:
    அறைகலன் மீது 5% தேய்மானம் போக்கெழுதவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.

  3. இராகேஷ் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    விவரம் 31.3.2018
    ரூ.
    31.3.2019
    ரூ.
    சரக்கிருப்பு 2,20,000 1,60,000
    கடனாளிகள் 5,30,000 6,40,000
    வங்கி ரொக்கம் 60,000 10,000
    இயந்திரம் 80,000 80,000
    பற்பல கடனீந்தோர் 3,70,000 4,20,000

    பிற தகவல்கள்: 

    விவரம் ரூ. விவரம் ரூ.
    வாடகை செலுத்தியது 1,20,000 கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 12,50,000
    பெற்ற தள்ளபடி 35,000 எடுப்புகள் 1,00,000
    அளித்த தள்ளுபடி 25,000 ரொக்க விற்பனை 20,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 11,00,000 1.4.2018 அன்று முதல் 5,20,000
  4. சென்னை விளையாட்டு மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்
     

    விவரம் ரூ  விவரம் ரூ ரூ
    தொடக்க  இருப்பு (1.4.2017) 10,000 சந்தா பெற்றது    
    தொடக்க வங்கி இருப்பு (1.4.2017) 15,000 2016 – 2017 4,500  
    வட்டி செலுத்தியது 5,000 2017 – 2018 65,000  
    தொலைபேசி செலவுகள்  7,000 2018 – 2019 5,000 74,500
    மைதானம் பராமரித்தது  22,500 தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள்    12,500
    ஆயுள் உறுப்பினர் கட்டணம் பெற்றது 5,500 தொடர் விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள்    15,000
    மட்டைகள் மற்றும் பந்துகள் வாங்கியது  13,000 இறுதிரொக்க இருப்பு (31.3.2018)   5,000
  5. சேலம் பொழுதுபோக்கு மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு.

    பெறுதல்கள்  ரூ ரூ செலுத்தல்கள்  ரூ
    இருப்பு கீ/கொ     அறைகலன் 15,000
    கைரொக்கம்   9,000 எழுதுபொருள்கள் 2,400
    சந்தா      முதலீடு 12,500
    2018 – 2019 12,500   அஞ்சல் செலவுகள் 1,000
    2019 – 2020 400 12,900 இருப்பு கீ/இ  
    பொழுதுபோக்குக மூலமாக பெற்ற வருமானம்   12,000 கைரொக்கம் 3,500
    பல்வகை வரவுகள்    500    
        34,400   34,400

    கூடுதல் தகவல்கள்:
    (i)  மன்றத்தில் 450 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு சந்தா ரூ. 30 செலுத்துகின்றனர்.
    (ii) எழுதுபொருள்கள் இருப்பு 2018, மார்ச் 31-ல் ரூ300 மற்றும் 2019, மார்ச் 31-ல் ரூ.500.
    (iii) 2018, ஏப்ரல் 1 அன்று முதல்நிதி ரூ  9,300 
    2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.

  6. கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

    விவரம்  ரூ ரூ விவரம் ரூ
    வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018)   6,000 மதிப்பூதியம் செலுத்தியது 2,800
    கைரொக்கம்    1,000 நீர் மற்றும் மின்சாரக் கட்டணம்  700
    மைதான பராமரிப்பிற்காக     விளையாட்டுப் போட்டிச் செலவுகள் 2,600
    கூலி செலுத்தியது   2,000 விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது 1,900
    சந்தா பெற்றது: முந்தை்தைய ஆண்டு 500   விளையாட்டுப் போட்டி நிதி நிதி வரவுகள் 5,200
    நடப்பு ஆண்டு 9,600   உயில்கொடைப் பெற்றது 2,000
    எதிர்வரும் ஆண்டு  400 10,500 ரொக்க இருப்பு (31.3.2019) 300
    கூலி கொடுபட வேண்டியது   2,200 அரங்கம் அமைப்பதற்காக பெற்ற நன்கொடை 2,000
    கடன்மீதான வட்டி செலுத்தியது   2,000  
  7. கீழ்க்காணும் தென்காசி திருவள்ளுவர் மன்றத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கைத் தயார் செய்யவும்.

    பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ
    தொடக்க இருப்பு   சம்பளம்  20,000
    கைரொக்கம்  14,000 வாடகை  24,000
    வட்டிப் பெற்றது 5,000 பயணச் செலவுகள் 2,000
    சந்தா  55,000 அச்சு மற்றும் எழுதுபொருள் 6,000
    உயில்கொடை  48,000 முதலீடுகள் செய்தது 50,000
    நுழைவுக் கட்டணம் 7,000 விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது 33,000
    அறைகலன் விற்றது 16,000 இருப்பு கீ/இ  
    (ஏட்டு மதிப்பு ரூ.17,000)   கைரொக்கம்  10,000
  8. நெய்வேலி அறிவியல் சங்கத்தின் 2018, டிசம்பர் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு.

    ப 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ.
    பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ ரூ
    இருப்பு கீ/கொ   இருப்பு கீ/கொ    
    கைரொக்கம்  2,400 வங்கி மேல்வரைப்பற்று    1,000
    சந்தா 8,700 தபால் செலவுகள்    200
    ஆயுள் உறுப்பினர் கட்டணம் 5,000 அறிவியல் உபகரணங்கள் வாங்கியது   10,000
    கண்காட்சி நிதி வரவுகள் 7,000 ஆய்வகச் செலவுகள்   2,400
    அறிவியல் உபகரணங்கள் விற்றது 6,000 செயலாளருக்கான மதிப்பூதியம்   5,000
    (ஏட்டு மதிப்பு ரூ.5,000)   தணிக்கைக் கட்டணம்   3,600
    இதர வரவுகள் 500 பொதுச் செலவுகள்   1,800
        கண்காட்சி செலவுகள்   5,000
        இருப்பு கீ/இ    
        கையிருப்பு ரொக்கம் 200  
        வங்கி ரொக்கம் 400 600
      29,600     29,600

    கூடுதல் தகவல்கள்:
    (i)தொடக்க முதல் நிதி ரூ.6,400
    (ii) சந்தா தொகையில் 2019 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ. 600 உள்ளடங்கியுள்ளது.
    (iii) 1.1.2018 அன்று அறிவியல் உபகரணங்கள் இருப்பு ரூ.5,000.
    (iv) கண்காட்சியின் உபரித்தொகை புதிய கலையரங்கத்திற்கான ஒதுக்காக உருவாக்கப்பட வேண்டும்.
    2018, டிசம்பர், 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

  9. தமிழ் கல்வியில் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

    விவரம்  ரூ. விவரம்  ரூ.
    தொடக்க ரொக்க இருப்பு (1.4.2018) 15,000 சந்தா பெற்றது  40,000
    வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) 9,000 பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல்  7,500
    அச்சு மற்றும் எழுதுபொருள்  2,500 போக்குவரத்துச் செலவுகள்  2,750
    வட்டி செலுத்தியது  5,250 புத்தகங்கள் வாங்கியது  10,000
    முதலீடுகள் விற்றது  4,000 காப்பீட்டு முனைமம் செலுத்தியது  4,000
    சிற்றுண்டி வாங்கியது  2,500 பல்வகை வரவுகள்  650
    கொடுபட வேண்டிய சம்பளம்  6,000 அரசிடமிருந்து பெற்ற மானியம்  6,000
    அறக்கொடை நிதி பெற்றது  6,000 சிற்றுண்டி விற்றது  1,500
    ஒளியூட்டுக் கட்டணம்  3,300 கட்டடம் மீதான தேய்மானம்  3,000
        வங்கி ரொக்கம் (31.3.2019) 2,000
  10. பிரகதீஷ் மற்றும் நரேஷ் ஆகிய கூட்டாளிகள் தங்கள் முதல் கணக்குகளை நிலைமுதல் முறையில் பராமரித்து வருகின்றனர். கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு கூட்டாளிகளின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.

    விவரம் பிரகதீஷ் ரூ. நரேஷ் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று முதல் 4,00,000 6,00,000
    2018, ஏப்ரல் 1 அன்று நடப்புக் கணக்கு 20,000(வ) 15,000(ப)
    அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் 50,000 -
    அவ்வாண்டின் எடுப்புகள் 45,000 60,000
    எடுப்புகள் மீது வட்டி 2,000 3,000
    அவ்வாண்டின் இலாபப் பங்கு 80,000 1,20,000
    முதல் மீது வட்டி 20,000 30,000
    கழிவு 17,000 -
    ஊதியம் - 38,000
  11. பின்வரும் விவரங்களிலிருந்து, உயர் இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
    (அ) நிறுவனத்தின் மொத்த சொத்துகள் ரூ.5,00,000
    (ஆ) நிறுவனத்தின் பொறுப்புகள் ரூ.2,00,000
    (இ) இவ்வகைத் தொழில்களின் சாதாரண இலாப விகிதம் 12.5%
    (ஈ) நிறுவனத்தின் சராசரி இலாபம் ரூ.60,000

  12. வெற்றி மற்றும் இரஞ்சித் இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களது 31-12-2017 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்     அறைகலன் 25,000
    வெற்றி 30,000   சரக்கிருப்பு 20,000
    இரஞ்சித் 20,000 50,000 கடனாளிகள் 10,000
    காப்பு நிதி   5,000 கைரொக்கம் 35,000
    பற்பல கடனீந்தோர்   45,000 இலாப நட்ட க/கு (நட்டம்) 10,000
        1,00,000   1,00,000

    பின்வரும் சரிக்கட்டுதல்களில் 01.01.2018 அன்று சூரியா என்பவர் நிறுவனத்தின் புதிய கூட்டாளியாக சேர்கிறார்.
    (i) சூரியா 1/4 இலாபப் பங்கிற்காக ரூ.10,000 முதல் கொண்டுவருகிறார்.
    (ii) சரக்கிருப்பு 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது.
    (iii) கடனாளிகள் ரூ.7,500 என மதிப்பிடப்படுகிறது.
    (iv) அறைகலன் மதிப்பு ரூ.40,000 என மாற்றி அமைக்கப்படுகிறது.
    (v) கொடுபட வேண்டிய கூலி ரூ.4,500 இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
    புதிய கூட்டாளி சேர்க்கைக்கு பின் நிறுவனத்தின் மறுமதிப்பீடு கணக்கு, கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.

  13. அமல் மற்றும் விமல் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 7:5 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 அன்றைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 80,000
    அமல் 70,000   அறைகலன் 20,000
    விமல் 50,000 1,20,000 சரக்கிருப்பு 25,000
    பற்பல கடனீந்தோர்   30,000 கடனாளிகள் 30,000
    இலாப நட்ட க/கு   24,000 வங்கி 19,000
        1,74,000   1,74,000

    1.4.2019 இல் நிர்மல் புதிய கூட்டாளியாக சேருகிறார். அவர் ரூ.30,000 முதலுடன் எதிர்கால இலாபப்பங்கில் 1/3 விகிதத்தில், பின்வரும் சரிக்கட்டலுடன் கூட்டாளியாகிறார்.
    அ) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.5,000 குறைக்கப்பட வேண்டும்.
    (ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.3,000 உருவாக்கப்பட வேண்டும்.
    (இ) கட்டடம் ரூ.20,000 மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்.
    மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின்பான கூட்டாளி முதல் கணக்கு தயார் செய்யவும்.

  14. இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து கொள்ளும் ஜேம்ஸ் மற்றும் ஜஸ்டினாவின் 1.1.2017 ம் நாளன்றைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 70,000
    ஜேம்ஸ் 40,000   சரக்கிருப்பு 30,000
    ஜஸ்டினா 50,000 90,000 கடனாளிகள் 20,000
    கடனீந்தோர்   35,000 வங்கி ரொக்கம் 15,000
    காப்பு நிதி   15,000 முன்கூட்டிச் செலுத்திய
    காப்பீடு
    5,000
        1,40,000   1,40,000

    மேற்கூறிய நாளில் பாலன் என்பவரை எதிர்கால இலாபத்தில் 1/5 பங்கிற்கு பின்வரும் விவரங்கள் அடிப்படையில் கூட்டாளியாக சேர்த்தனர்.
    (i) பாலன் ரூ.25,000 முதல் கொண்டுவந்தார்.
    (ii) நற்பெயரில் அவருடைய பங்காக ரூ.10,000 ரொக்கமாக கொண்டுவந்தார்.
    (iii) சொத்துகள் கீழ்க்கண்டவாறு மதிப்பிடப்பட்டன:
    கட்டடம் ரூ.80,000; கடனாளிகள் ரூ.18,000; சரக்கிருப்பு ரூ.33,000.
    தேவையான பேரேட்டுக் கணக்குகளை தயார் செய்து கூட்டாளி சேர்ப்பிற்கு பின்வரும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.

  15. மணி, ரமா மற்றும் தேவன் ஆகியோர் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள். தங்கள் இலாப நட்டங்களை முறையே 5:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு

    பொறுப்புகள்  ரூ. ரூ. சொத்துகள்  ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 80,000
    மணி  50,000   சரக்கிருப்பு 20,000
    ரமா  50,000   அறைகலன்  70,000
    தேவன்  50,000 1,50,000 கடனாளிகள்  20,000
    பற்பல கடனீந்தோர்   20,000 கைரொக்கம்  10,000
    இலாபநட்டக் க/கு   30,000    
        2,00,000   2,00,000

    பின்வரும் சரிகட்டுதல்களுக்குட்பட்டு மணி 31.03.2019 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகுகிறார்
    (i) சரக்கிருப்பில் ரூ.5,000 மதிப்பு குறைக்கப்பட வேண்டும்
    (ii) வாரா ஐயக்கடனுக்கு ரூ.1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
    (iii) கட்டடத்தின் மதிப்பு ரூ. 16,000 அதிகரிக்கப்பட வேண்டும்
    (iv) மணிக்குச் சேரவேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை
    மறுமதிப்பீட்டு கணக்கு மற்றும் கூட்டாளி விலகலுக்குப் பின் உள்ள முதல் கணக்கினைத் தயாரிக்கவும்.

  16. இரமேஷ், இரவி மற்றும் ஆகாஷ் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாப நட்டங்களை தங்கள் முதல் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 31.12.2017 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு

    31.12.2017 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ
    முதல் கணக்குகள்      பொறி மற்றும் இயந்திரம் 45,000
    இரமேஷ் 30,000   சரக்கிருப்பு 22,000
    இரவி 30,000   கடனாளிகள் 15,000
    ஆகாஷ் 20,000 80,000 வங்கி ரொக்கம்  10,000
    பொதுக்காப்பு   8,000 கைரொக்கம்  4,000
    கடனீந்தோர்   8,000    
        96,000   96,000

    31.3.2018 அன்று ஆகாஷ் இறந்து விட்டார். ஆகாஷின் இறப்பின்போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டன.
    (i) பொறி மற்றும் இயந்திரம் ரூ 54,000 என மதிப்பிடப்பட்டது.
    (ii) சரக்கிருப்பின் மதிப்பில் ரூ.1,000 குறைக்கப்பட வேண்டும்.
    (iii) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.24,000 என மதிப்பிடப்பட்டது.
    (iv) கடந்த கடந்த நிதியாண்டின் இறுதியில் இருந்து கூட்டாளி இறந்த நாள் வரை உள்ள இலாபத்தின் பங்கு, கூட்டாளியின் இறப்பிற்கு முன் உள்ள மூன்று முழு ஆண்டுகளின் சராசரி இலாப அடிப்படையிலானது.
    2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான இலாபம் முறையே ரூ 66,000, ரூ.60,000 மற்றும் ரூ.66,000 ஆகும்.
    ஆகாஷ் இறப்பிற்குப் பின் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டிய பேரேட்டுக் கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்க

  17. விஜயன், சுதன் மற்றும் சுமன் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை தங்கள் முதல் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களுடைய 31.12.2018 அன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு

    31.12.2018 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ  ரூ  சொத்துகள் ரூ
    முதல் கணக்குகள்     கட்டடம் 80,000
    விஜயன் 70,000   சரக்கிருப்பு 45,000
    சுதன் 50,000   கடனாளிகள் 25,000
    சுமன் 30,000 1,50,00 வங்கி ரொக்கம்  20,000
    பொதுக்காப்பு   18,000 கைரொக்கம்  15,000
    கடனீந்தோர்    17,000    
        1,85,000   1,85,000

    சுமன் 31.3.2019 அன்று இறந்து விட்டார். சுமனின் இறப்பின் போது, பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டன.
    (i) கட்டடம் ரூ.1,00,000 என மதிப்பிடப்பட வேண்டும்.
    (ii) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.5,000 குறைக்க வேண்டும்.
    (iii) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.36,000 என மதிப்பிடப்பட்டது.
    (iv) கடந்த கடந்த நிதியாண்டின் இறுதியில் இருந்து கூட்டாளி இறந்த நாள் வரை உள்ள இலாபத்தின் பங்கு, கூட்டாளியின் இறப்பிற்கு முன் உள்ள மூன்று முழு ஆண்டுகளின் சராசரி இலாப அடிப்படையிலானது.
    2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான இலாபங்கள் முறையே ரூ.40,000,ரூ. 50,000 மற்றும் ரூ.30,000 ஆகும். சுமனின் இறப்பிற்குப் பின் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டிய பேரேட்டுக் கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்கவும்.

  18. இலக்ஷித் என்பவர் ரூ.10 மதிப்புள்ள 50 பங்குகளை தன்வசம் வைத்துள்ளார். அவர் அதற்கென விண்ணப்பத்தின் மீது ரூ.2 செலுத்தியுள்ளார். ஆனால், ஒதுக்கீட்டின் மீது ரூ.4 மற்றும் முதலாவது அழைப்பின் மீது ரூ.2 செலுத்தவில்லை. முதலாவது அழைப்பிற்கு பின் இயக்குனர்கள் பங்கினை ஒறுப்பிழப்பு செய்தனர். ஒறுப்பிழப்பு செய்த பங்குகளுக்கான குறிப்பேட்டு பதிவினைத் தரவும்

  19. பின்வரும் விவரங்களைக் கொண்டு குறிஞ்சி வரையறு நிறுவனத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ. ஆயிரங்களில்
    2015-16 2016-17 2017-18
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 120 132 156
    இதர வருமானம் 50 38 65
    செலவுகள் 100 135 123
  20. டேனியல் நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து, ஒப்பீட்டு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்

    விவரம் 2015-16
    ரூ.
    2016-17
    ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 40,000 50,000
    இயக்கச் செலவுகள் 25,000 27,500
    வருமான வரி % (வரிக்கு முன்னர் உள்ள இலாபத்தில்) 30 30
  21. ராணி நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து பொது அளவு நிதிநிலை அறிக்கையினைத் தயார் செய்யவும்.

    விவரம் 2016, மார்ச் 31 2017, மார்ச் 31
    ரூ. ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்    
      பங்குதாரர் நிதி 5,40,000 6,00,000
      நீண்டகாலப் பொறுப்புகள் 2,70,000 2,50,000
      நடப்புப் பொறுப்புகள் 90,000 1,50,000
      மொத்தம் 9,00,000 10,00,000
    II. சொத்துகள்    
      நீண்டகாலச் சொத்துகள் 7,20,000 8,00,000
      நடப்புச் சொத்துகள் 1,80,000 2,00,000
      மொத்தம் 9,00,000 10,00,000
  22. மரியா நிறுமத்தின் 2018 மார்ச் 31 ஆம் நாளைய இலாப நட்ட அறிக்கை பின்வருமாறு. இயக்க அடக்க விலை விகிதம் கணக்கிடவும்.

    இலாப நட்ட அறிக்கை
    விவரம் குறிப்பு எண் தொகை
    ரூ.
    I. விற்பனை மூலம் பெற்ற வருவாய்   8,00,000
    II. இதர வருமானம்   20,000
    III. மொத்த வருவாய் (I +II)   8,20,000
    IV. செலவுகள்:    
      கொள்முதல் செய்த சரக்குகள்   4,50,000
      சரக்கிருப்பு மாற்றம்   (-)40,000
      பணியாளர் நலன்களுக்கான செலவுகள் 1 22,000
      இதர செலவுகள் 2 68,000
      மொத்த செலவுகள்   5,00,000
    V. வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III-IV)   3,20,000
    கணக்குகளுக்கான குறிப்புகள்
    விவரம் தொகை
    ரூ.
    1. பணியாளர் நலன்களுக்கான செலவுகள்  
      கூலி (நேரடி) 10,000
      சம்பளம் 12,000
      மொத்தம் 22,000
    2. இதர செலவுகள்  
      நிர்வாகச் செலவுகள் 20,000
      விற்பனை மற்றும் பகிர்வுச் செலவுகள் 28,000
      நிலைச்சொத்து விற்றதில் ஏற்பட்ட நட்டம் 20,000
    மொத்தம் 68,000
  23. பாபு நிறுமத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய) பின்வருமாறு:

    விவரம் தொகை
    ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
     (அ) பங்குமுதல் 70,000
     (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 25,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்  
      நீண்டகாலக் கடன்கள் 30,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
      (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 20,000
      (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் 15,000
      (இ) குறுகியகால ஒதுக்குகள் 42,000
    மொத்தம் 2,02,000

     அவ்வாண்டில் வட்டி மற்றும் வரிக்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ரூ.25,000. அவ்வாண்டின் முதலீடு மீதான வருவாய் கணக்கிடவும்.

  24. பின்வரும் தகவல்களிலிருந்து முதல் உந்துதிறன் விகிதத்தைக் கணக்கிடவும்.

    2018 மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய)
    விவரம் தொகை
    ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      அ) பங்கு முதல்  
      நேர்மைப்பங்கு முதல் 4,00,000
      5% முன்னுரிமைப்பங்கு முதல் 1,00,000
    (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி  
      பொதுக்காப்பு 2,50,000
      மிகுதி 1,50,000
    2. நீண்டகாலப்பொறுப்புகள்  
      நீண்டகாலக்கடன்கள் (6% கடனீட்டுப்பத்திரங்கள்) 3,00,000
    3. நடப்புப்பொறுப்புகள்  
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,20,000
      வரி ஒதுக்கு 30,000
      மொத்தம் 13,50,000
  25. ஒரு வணிக நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து நிகர இலாப விகிதம் கணக்கிடவும்

    விவரம் ரூ.
    விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் 9,60,000
    விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை 5,50,000
    அலுவலக மற்றும் நிர்வாகச் செலவுகள் 1,45,000
    விற்பனை மற்றும் பகிர்வுச் செலவுகள் 25,000

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Creative Five mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment