12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

    பகுதி I

    50 x 2 = 100
  1. பின்வரும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    ஆண்டு தொடக்கத்தில் முதல் (1 ஏப்ரல், 2016) 2,00,000
    ஆண்டு இறுதியில் முதல் (31 மார்ச், 2017) 3,50,000
    அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் 70,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 40,000
  2. பின்வரும் விவரங்களைக் கொண்டு அவ்வாண்டின் மொத்த விற்பனையைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 50,000
    அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 1,50,000
    உள்திருப்பம் 15,000
    வாராக்கடன் 5,000
    2019, மார்ச் 31 அன்று கடனாளிகள் 70,000
    ரொக்க விற்பனை 1,40,000
  3. பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலைக் கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனீந்தோர் 50,000
    வெளித் திருப்பம் 6,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 1,60,000
    2019, மார்ச் 31 அன்று கடனீந்தோர் 70,000
  4. பின்வரும் விவரங்களிலிருந்து பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரிக்கவும் மற்றும் கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டுத் தொகையினைக் கணக்கிடவும். 

    விவரம் ரூ.
    ஆண்டு தொடக்கத்தில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 1,40,000
    ஆண்டு முடிவில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 2,00,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது 3,90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 30,000
  5. பின்வரும் விவரங்கள் ஒரு சங்கத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?

    ப 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு 
    பெறுதல்கள் ரூ ரூ செலுத்தல்கள் ரூ
    சந்தா        
    2017-2018 5,000      
    2018-2019 48,000      
    2019-2020 3,000 56,000    
             

    இச்சங்கத்தில் 300 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ஆண்டுச் சந்தாவாக ரூ. 200 செலுத்துகின்றனர். இன்னும் பெறவேண்டிய 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.1,000.

  6. ஒரு சங்கத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018 ஆம் ஆண்டு சந்தா மூலம் பெற்ற வருமானத்தைக் கணக்கிடவும்.

    விவரம் 1.1.2018
    ரூ
    31.12.2018
    ரூ
    பெறவேண்டிய சந்தா  10,000 7,000
    முன்கூட்டிப் பெற்ற சந்தா  3,000 5,000

    2018 ஆம் ஆண்டில் பெற்ற சந்தா ரூ.1,50,000.

  7. இலாப நோக்கற்ற அமைப்பின் முதலின வரவுகளில் ஏதேனும் நான்கினைத் தரவும்.

  8. பின்வரும் விவரங்கள் ஒரு மன்றத்தின் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும். அந்த மன்றம் 2016-2017 ஆம் ஆண்டில் பெற்ற சந்தா : ரூ.40,000. இதில் 2015-2016 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ.5,000 மற்றும் 2017-2018 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ.3,000 உள்ளடங்கியுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ.1,000 இன்னும் பெற வேண்டியுள்ளது

  9. இலாபநோக்கமற்ற அமைப்புகள் எந்த கணக்குகளையெல்லாம் தயாரிக்கின்றன?

  10. இருப்புநிலைக் குறிப்பு என்றால் என்ன?

  11. அந்தோணி மற்றும் அக்பர் என்ற இரு கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, ஜனவரி 1 அன்று அவர்களின் முதல் கணக்குகளின் இருப்புகள் அந்தோணி ரூ.60,000 மற்றும் அக்பர் ரூ.40,000 ஆகும். 2018, ஏப்ரல் 1 அன்று அந்தோணி கூடுதல் முதலாக ரூ.10,000 கொண்டு வந்தார். அவ்வாண்டில் அக்பர் ரூ.5,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 % எனக் கணக்கிடவும்.

  12. வேலன் என்ற கூட்டாளி 2018, ஏப்ரல் 1 அன்று ரூ.20,000 எடுத்துக்கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட வேண்டும். மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு 2018, டிசம்பர் 31அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிட்டு அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளையும் தரவும்.

  13. கூட்டாண்மை ஒப்பாவணம் என்றால் என்ன?

  14. மணி என்ற கூட்டாளி 2018, செப்டம்பர் 1 அன்று ரூ.30,000 எடுத்துக்கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% என கணக்கிடப்பட வேண்டும். 2018, டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிட்டு அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  15. 2018 ஆம் ஆண்டில் மேத்யூ என்ற கூட்டாளி எடுத்த எடுப்புகள் ரூ.20,000. எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட்டது. 2018, டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.

  16. முதல் மீதான வட்டி என்றால் என்ன?

  17. கூட்டாண்மை நிறுவனத்தில் நற்பெயரை மதிப்பிடும் ஏதேனும் இரண்டு சூழ்நிலைகளைத் தரவும்.

  18. ஹரி மற்றும் சலீம் என்ற இரு கூட்டாளிகள் 5:3 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜோயல் என்பவரை \(\frac{1}{8}\) பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அவர் அப்பங்கு முழுவதையும் ஹரி என்பவரிடம் பெற்றுக் கொண்டார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  19. சுரேஷ் மற்றும் தினேஷ் என்ற இரு கூட்டாளிகள் 3:2 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இரமேஷ் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். சுரேஷ் என்பவர் தன்பங்கில் 1/5 பங்கும், தினேஷ் என்பவர் தன் பங்கில் 2/5 பங்கும் தியாகம் செய்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  20. பிரசாந்த் மற்றும் நிஷா என்ற இரு கூட்டாளிகள் 3:2 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ரம்யா என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். பிரசாந்த் தன்பங்கில் 2/5 பங்கும், நிஷா தன் பங்கில் 2/5 பங்கும் தியாகம் செய்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  21. புதிய கூட்டாளி சேர்க்கப்படும் போது, ஏற்கனவே உள்ள நற்பெயரை பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  22. பிரவீணா மற்றும் தான்யா என்ற இரு கூட்டாளிகள் 7:3 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் மாலினி என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பிரவீணா, தான்யா மற்றும் மாலினி அவர்களின் புதிய இலாப விகிதம் 5:2:3. தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

  23. கோவிந்த் மற்றும் கோபால் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் 5:4 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இரஹீம் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். கோவிந்த் தன் பங்கில் 2/9 பாகத்தினையும், கோபால் தன் பங்கில் 1/9 பாகத்தினையும் இரஹீமிற்காக தியாகம் செய்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதத்தையும் மற்றும் தியாக விகிதத்தையும் கணக்கிடவும்.

  24. மாலா மற்றும் அனிதா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். மெர்சி என்பவர் 1/5 இலாப விகிதத்தில் கூட்டாண்மையில் கூட்டாளியாக சேருகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  25. கூட்டாளி சேர்ப்பு என்றால் என்ன? அவர் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகிறார்?

  26. மேரி, மீனா மற்றும் மரியம் எனும் கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் இலாபநட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1-1-2019 அன்று மேரி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளில், அந்நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு சொத்துகள் பக்கத்தில் ரூ. 75,000 பகிர்ந்து தரா நட்டம் எனக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  27. கிரண், வினோத் மற்றும் விமல் எனும் கூட்டாளிகள் 5:3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். கிரண் விலகினார். வினோத் மற்றும் விமல் ஆகியோரின் புதிய இலாப விகிதம் 2:1 ஆகும். ஆதாய விகிதத்தை கணக்கிடவும்

  28. குமார், கேசவன் மற்றும் மனோகர் எனும் கூட்டாளிகள் முறையே \(\frac {1}{2},\frac {1}{3}\) மற்றும் \(\frac {1}{6}\) எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். மனோகர் விலகினார். அவருடைய பங்கினை குமார் மற்றும் கேசவன் இருவரும் சமமாக எடுத்துக் கொண்டனர். புதிய இலாப விகிதத்தையும் மற்றும் ஆதாய விகிதத்தையும் கணக்கிடவும்

  29. ஆதாய விகிதம் கணக்கிடுவதன் நோக்கம் என்ன?

  30. கயல், மாலா மற்றும் நீலா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 2:2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கயல் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். மாலா மற்றும் நீலாவுக்கும் இடையே உள்ள புதிய இலாபப் பகிர்வு விகிதம் 3:2. ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.

  31. நவீன், ரவி மற்றும் குமார் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை முறையே 1/2, 1/4 மற்றும் 1/4 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். குமார் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார் மற்றும் அவருடைய பங்கை நவீன் மற்றும் ரவி சமமாக எடுத்துக் கொண்டார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்

  32. பாரத் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:

    விண்ணப்பத்தின் போது பங்கொன்றிற்கு ரூ.5
    ஒதுக்கீட்டின் போது பங்கொன்றிற்கு ரூ.3
    முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது பங்கொன்றிற்கு ரூ.2

    1,20,000 பங்குகளுக்கு விண்ணப்பத் தொகை பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திருப்பிச் செலுத்தப்பட்டது. மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்

  33. அருணா ஆலைகள் வரையறு நிறுமத்தின் பதிவு செய்யப்பட்ட பங்கு முதல் ரூ.5,00,000. அதில் 20,000 பங்குகளை ரூ.10 வீதம் பின்வருமாறு செலுத்ததக்க வகையில் வெளியிட்டது. விண்ணப்பத்தின் மீது
    ரூ.4; ஒதுக்கீட்டின் மீது ரூ.4; முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.2. வெளியிட்டப் பங்குகள் அனைத்தும் ஒப்பப்பட்டன. அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. ஆனால், ஒரு பங்குதாரர் தான் வைத்துள்ள 300 பங்குகளுக்கான அனைத்து தொகைகளையும் ஒதுக்கீட்டின்போதே முழுவதுமாக செலுத்தி விட்டார்.
    குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  34. மிகை ஒப்பம் என்றால் என்ன?

  35. பொது வெளியீடு என்றால் என்ன?

  36. பின்வரும் விவரங்களிலிருந்து அப்துல் வரையறு நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.

    விவரம் 2015-16
    ரூ.
    2016-17
    ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 3,00,000 3,60,000
    இதர வருமானம் 1,00,000 60,000
    செலவுகள் 2,00,000 1,80,000
    வருமான வரி 30% 30%
  37. சந்திரா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக்குறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக்குறிப்பினைத் தயார் செய்யவும்.

    விவரம் 2016, மார்ச் 31 2017, மார்ச் 31
    ரூ. ரூ.
    I.பங்குமூலதனம் மற்றும்பொறுப்புகள்    
      பங்குதாரர் நிதி 1,00,000 2,60,000
      நீண்ட காலப் பொறுப்புகள் 50,000 60,000
      நடப்புப் பொறுப்புகள் 25,000 30,000
    மொத்தம் 1,75,000 3,50,000
    II. சொத்துகள்    
      நிலைச் சொத்துகள் 1,00,000 2,00,000
      நடப்புச் சொத்துகள் 75,000 1,50,000
    மொத்தம் 1,75,000 3,50,000
  38. பின்வரும் மலர் நிறுமத்தின் 2016, மார்ச் 31 மற்றும் 2017, மார்ச் 31 ஆம் நாளைய ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்

    விவரம் 2016, மார்ச் 31 2017, மார்ச் 31
    ரூ. ரூ.
    I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள்    
    1. பங்குதாரர் நிதி    
      அ) பங்கு முதல் 2,00,000 2,50,000
      ஆ) காப்பும் மிகுதியும் 50,000 50,000
    2. நீண்ட காலப் பொறுப்புகள்    
      நீண்ட காலக் கடன்கள் 30,000 60,000
    3. நடப்புப் பொறுப்புகள்    
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 20,000 60,000
    மொத்தம் 3,00,000 4,20,000
    II. சொத்துகள்    
    1. நீண்ட காலச் சொத்துகள்    
      அ) நிலைச் சொத்துகள் 1,00,000 1,50,000
      ஆ) நீண்ட கால முதலீடுகள் 50,000 75,000
    2. நடப்புச் சொத்துகள்    
      சரக்கிருப்பு 75,000 1,50,000
      ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் 75,000 45,000
    மொத்தம் 3,00,000 4,20,000
  39. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் கருவிகளைப் பட்டியலிடவும்.

  40. கிடைமட்ட பகுப்பாய்வு என்றால் என்ன?

  41. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆனந்த் கட்டுமான நிறுமத்தின் தகவல்களிலிருந்து, விரைவு விகிதத்தைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ
    மொத்த நடப்புப் பொறுப்புகள் 1,00,000
    மொத்த நடப்புச் சொத்துகள் 2,50,000
    சரக்கிருப்பு 50,000
    முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் 15,000
  42. மகேஷ் நிறுமத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      நேர்மைப் பங்குமுதல் 2,00,000
    2. நீண்டகால பொறுப்புகள்  
      நீண்டகாலக் கடன்கள் 50,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
    (அ) குறுகிய காலக் கடன்கள் 17,000
    (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 25,000
    (இ) இதர நடப்புப் பொறுப்புகள்  
      கொடுபட வேண்டிய செலவுகள் 3,000
    (ஈ) குறுகியகால ஒதுக்குகள் 5,000
    மொத்தம் 3,00,000
    சொத்துகள்  
    1. நீண்டகால சொத்துகள்  
    (அ) நிலைச் சொத்துகள்  
      புலனாகும் சொத்துகள் 1,50,000
    2. நடப்புச் சொத்துகள்  
    (அ) சரக்கிருப்பு 45,000
    (ஆ) கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகள் 70,000
    (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 30,000
    (ஈ) இதர நடப்புச் சொத்துகள்  
      முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் 5,000
    மொத்தம் 3,00,000

    (i) நடப்பு விகிதம்
    (ii) நீர்மை விகிதம் கணக்கிடவும்.

  43. பயோனியர் நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து உரிமையாளர் விகிதத்தைக் கணக்கிடவும்.

    பயோனியர் நிறுமத்தின் 31.3.2019 அன்றைய இருப்புநிலைக் குறிப்பு
    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      (அ) பங்குமுதல்  
         (i) நேர்மைப் பங்குமுதல் 1,00,000
          (ii) முன்னுரிமைப் பங்குமுதல் 75,000
       (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 25,000
    2. நீண்டகால பொறுப்புகள்  
       நீண்டகாலக் கடன்கள் -
    3. நடப்புப் பொறுப்புகள்  
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 2,00,000
    மொத்தம் 4,00,000
    II. சொத்துகள்  
    1. நீண்டகாலச் சொத்துகள்  
      (அ) நிலைச் சொத்துகள் 2,75,000
      (ஆ) நீண்டகால முதலீடுகள் 50,000
    2. நடப்புச் சொத்துகள்  
    ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 75,000
    மொத்தம் 4,00,000
  44. கீழ்வரும் தகவல்களிலிருந்து முதல் உந்து திறன் விகிதத்தைக் கணக்கிடவும்.

    31.03.2018 அன்றைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய)
    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
    (அ) பங்குமுதல்  
      நேர்மைப் பங்குமுதல் 2,00,000
      6% முன்னுரிமைப் பங்குமுதல் 1,00,000
    (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி  
      பொதுக் காப்பு 1,25,000
      மிகுதி 75,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்  
       நீண்டகாலக் கடன்கள் (8% கடனீட்டுப் பத்திரங்கள்) 2,00,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்யவை 1,50,000
      வரி ஒதுக்கு 50,000
    மொத்தம் 9,00,000
  45. கணக்கியல் விகிதங்கள் என்றால் என்ன?

  46. முதலீடுகள் மீதான வருவாய் விகிதம் எதைக் குறிப்பிடுகிறது?

  47. கணக்கியல் விகிதங்களின் வடிவங்களை எழுதுக.

  48. நடப்பு விகிதம் என்றால் என்ன?

  49. ஏதேனும் ஐந்து கணக்கியல் அறிக்கைகள் கூறு.

  50. மேலாண்மை தகவல் அமைப்பு என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Two mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment