" /> -->

All Chapter 2 Marks

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 180
  Answer The Following Question:
  90 x 2 = 180
 1. எவ்வுயிரினத்தின் செல் பிரிதலே இனப்பெருக்க முறையாகச் செயல்புரிகிறது?

 2. கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன?விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.

 3. இருபெரும் இனப்பெருக்க முறைகள் எவை?

 4. குட்டி ஈனும் உயிரிகள் என்றால் என்ன?

 5. புதிதாய் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் கருவளர்ச்சியின் எந்நிலையில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது?

 6. தாய்சேய் இணைப்புத்திசு ஒரு நாளமில்லாச் சுரப்பித் திசு – நியாயப்படுத்து

 7. ஏரியோலார் சுரப்பிகள் எங்குள்ளன?அவற்றின் முக்கியதுவம் கூறு.

 8. அண்டகத்தின் முதன்மைப் பணிகள் எப்போது நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது?

 9. கீழ்வரும் கூற்றுகளின் பிழைகளைத் திருத்துக
  அ) கொடையாளியிடமிருந்து பெறப்பட்ட அண்டத்தை கருப்பை நாளத்திற்கு இடமாற்றம் செய்யும் முறை ZIFT ஆகும்.
  ஆ) 8 கருக்கோளச் செல்களுக்கு மேல் உள்ள கருவை கருப்பைக்குள் பொருத்தும் முறை GIFT எனப்படும்.
  இ )மல்டிலோட்  375 என்பது ஒரு ஹார்மோன் வெளிவிடு IUD ஆகும்.

 10. குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்துநீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ  அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெறஎம்முறையை பரிந்துரை செய்வீர்?

 11. பாகாடீரிய பால்வினை நோய்களுக்கு எடுத்துக்காட்டு தருக.

 12. கருவின் இயல்புக்கு மாறான இதயத்துடிப்பு வீதம் எதைக் காட்டும்?

 13. லையோனைசேஷன் என்றால் என்ன?

 14. குறுக்கு மறுக்கு மரபுகடத்தல் என்றால் என்ன?

 15. ஒரு பண்பானது இரண்டுக்கும் மேற்பட்ட அல்லீல்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது?விவாதி?

 16. Zw - Zz வகை பால்நிர்ணய உயிரிகளில் பெண்கள் வேறுபட்ட இனச்சொல் பண்பினை உடையவர்கள் உதாரணம் தருக.

 17. மரபணு குறியீடு ‘உலகம் முழுவதும்ஏற்றுக்கொள்ளத் தக்கது’. – காராரணங்கள் கூறு.

 18. வேறுபடுத்துக – வார்ப்புரு இழை மற்றும்குறியீட்டு இழை

 19. 1850 முதல் 2010 வரையிலான மரபணு முக்கியத்துவ காலண்டரைத் தருக.

 20. TATA பெட்டி & பிரிப்னோ பெட்டி வேறுபடுத்துக.

 21. தொன்மையான பூமியில் காணப்பட்ட வாயுக்களைப் பட்டியலிடுக. 

 22. உயிரினங்கள் தகுதிநிலையை டார்வின் எவ்வாறு விளக்குகிறார்?

 23. வார்ப்புகள் என்றால் என்ன?

 24. பெருவெடிப்புக் கோட்பாடு என்றால் என்ன?

 25. பேசில்லரி சீதாபேதி மற்றும் அமீபிக் சீதபேதி ஒப்பீட்டு வேறுபடுத்துக..

 26. கீழ்க்காணும் அட்டவணையை நிறைவு செய்.

  நோய்கள் நோய்க்காரணி நோய்த்தொற்று இடம் அடைகாக்கும் காலம் 
  புட்டாளம்மை      
  சின்னம்மை      
  டெங்கு காய்ச்சல்      
 27. எவ்வாறு நாம் பாக்டீரியாவின் எதிர்ப்புத்திறனை குறைக்க முடியும்?

 28. எதிர்பொருள் தூண்டியின் திறன் என்ன?

 29. நோய்த்தடைகாப்பு மண்டலம் எவ்வாறுசெயல்படுகிறது.

 30. மேக்ரோஃபேஜ்கள்  சார்ந்த தடை வகையைகூறி அதனை விளக்கு.

 31. பால் எவ்வாறு தயிராக மாற்றப்படுகிறது? தயிர் உருவாகும் முறையினை விளக்குக.

 32. நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் உயிரிய செயல்திறனுள்ள மூலக்கூறுகள் இரண்டினையும்,அவற்றின் பயன்களையும் கூறு.

 33. பாக்டீரியாக்களால் உருவாக்கப்படும் நோய்களுக்கு எதிராக எவ்வகை நுண்ணுயிரிகள் செயல்படுகின்றன என்பதை தகுந்த எடுத்துக்காட்டுடன் கூறு.

 34. பூஞ்சையிலிருந்து உருவாகும் ஏதேனும் இரு கரிம அமிலங்களை குறிப்பிடுக.

 35. மரபுப் பொறியியல் மூலம் உருவாக்காக்கப்பட்ட இன்சுலின் என்பது யாது?

 36. rDNA தொழில்நுட்ப வருகைக்கு முன் இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது? எத்தகைய பிரச்சனைகள் எதிர்கொள்ளொள்ளப்பட்டன?

 37. 'டயாபடிஸ் மெலிடஸ்' என்றால் என்ன? எப்படி அது உருவாகிறது?

 38. எலைசா உயிர் வேதி முறையின் பல்வேறு வகைகள் யாவை?

 39. வரையறு – சூழலியல் ஒதுக்கிடம்/சிறுவாழிடம்

 40. புதிய சூழலுக்கு இணங்கல் என்றால் என்ன?

 41. பெர்க்மானின் விதியை வரையறு.

 42. ஜோர் டாவின் விதியை வரையறு.

 43. ராவவோல்ஃபியா வாமிடோரியா எனும் மருத்துவ  தாவரத்தில் உள்ள செயல்படு வேதிப்பொருளின் பெயர் என்ன? இது எந்தவகை பல்வகைத்தன்மையை சார்ந்துள்ளது?

 44. "அமேசான்காடுகள் பூமிக்கோளின் நுரையீரலாக கருதப்படுகிறது”-இந்த சொற்றொடரை நியாயப்படுத்து

 45. அமேசான் மழைக்காடுகளில் உயிரினங்கள் குறைவதற்கான மனித செயல்பாடுகள் இரண்டினைக் கூறு.

 46. முதலை பண்ணை அறக்கட்டளை பற்றி நீவிர் அறிவது என்ன?

 47. புகைப்பனி என்றால் என்ன? அது நமக்கு எந்த வகையில் தீங்களிக்கின்றது?

 48. குறிப்பு வரைக.
  அ) மிகை உணவூட்டம்
  ஆ) பாசிப் பெருக்கம்

 49. மாசுபடுதல் என்றால் என்ன?

 50. இயற்கை வேளாண்மையின் பயன்கள் யாவை?

 51. இனப்பெருக்கம் என்றால் என்ன?

 52. தாவர கருவியலின் மைல்கற்களை வெளிக்கொணர்க.

 53. நுண் வித்துருவாக்கம் என்றால் என்ன?

 54. எக்சைன், இன்டைன் வேறுபடுத்துக்க?

 55. மெண்டலின் ஏழு வேறுபட்ட பண்புகளைக் கூறுக.

 56. மரபியல் - வரையறு.

 57. புறத்தோற்ற வகையம் என்றால் என்ன?

 58. மூலக்கூறு பாரம்பரியவியல் என்றால் என்ன?

 59. ஒரே பெற்றோரிடமிருந்து பெறப்படும் வேறுபட்ட மரபணுக்கள் ஒன்றாகவே காண ப்படும் பொழுது,
  i) நிகழ்வின் பெயர் என்ன?
  ii) தகுந்த எடுத்துக்காட்டுடன் கலப்பினை வரைக .
  iii) புறத்தோற்ற விகிதத்தை எழுதுக.

 60. வ.எண் கேமீட்டுகளின்
  வகைகள்
  வழித்தோன்றல்களின்
  எண்ணிக்கை
  1. ABC 349
  2. Abc 114
  3. abC 124
  4. AbC 5
  5. aBc 4
  6. aBC 116
  7. ABc 128
  8. abc 360

  i) இந்தச் சோதனைக் கலப்பின் பெயர் என்ன?
  ii) மேலே கொடுக்கப்பட்டுள்ள தரவுகளைக் கொண்டு மரபணு வரைபடத்தை எவ்வாறு
  உருவாக்குவாய் ?
  iii) மரபணுக்களின் சரியான வரிசையைக் கண்டுபிடி.

 61. இணை சடுதி மாற்றிகள் (Co-mutagens) என்றால் என்ன?

 62. பிணைதலின் பலம் & பலமற்ற தன்மை யாது?

 63. உயிரிதொழில்நுட்பவியல் ஆய்வகத்தில் ஈகோலை பாக்டீரியத்தைப் பயன்படுத்தி ஆய்வு செய்கிறாய். நியூக்ளியோடைடு தொடர்வரிசையை நீ எவ்வாறு துண்டிப்பாய்?

 64. நியூக்ளியோடைடு தொடர்வரிசையின் முனை மற்றும் உள்ளாக அமைந்த பாஸ்போ டை எஸ்டர் பிணைப்பை துண்டிக்க என்ன நொதிகளைப் பயன்படுத்துவாய்?

 65. எச்சோநியுக்ளியேஸ் மற்றும் எண்டோநியுக்ளியேஸ் நொதி வேறுபடுத்துக.

 66. உயிரி வழித் திருத்தத்தின் வரம்புகள் யாவை?

 67. கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையின் பெயர் என்ன? அதன் 4 வகைகள் யாவை?

 68. வளர்ப்பு செயல்முறையின் போது, வளர்ப்பு ஊடகத்தில் நுண்ணுயிர்களின் வளர்ச்சியினை நீர் எவ்வாறு தவிர்ப்பாய்? நுண்ணுயிர்களை நீக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமுறைகள் யாவை?

 69. நாஃப்ஸ் உப்புக் கரைசலின் கூறுகள் யாவை?

 70. பிரிகூறு என்றால் என்ன?

 71. சூழ்நிலையியல் படிநிலைகள் என்றால் என்ன? பல்வேறு சூழ்நிலையியல் படிநிலைகளை எழுதுக.

 72. புவி வாழிடம் மற்றும் செயல் வாழிடம் வேறுப்படுத்துக.

 73. விரிவகல தாவரக்கூட்டம் மற்றும் குத்துயர தாவரக் கூட்ட மண்டலம் யாவை?

 74. சில வாழிடங்களில் தேவைக்கு அதிகமான நீர் கொண்டிருந்தாலும் நீரை வேர்கள் உறிஞ்ச முடிவதில்லை. ஏன்? இதை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 75. நிகர முதல்நிலை உற்ப த்தி திறனை விட மொத்த முதல்நிலை உற்ப த்தித்திறன் மிகவும் திறன் வாய்ந்தது. விவாதி

 76. சூழல்மண்டலத்திருந்து அனைத்து உற்பத்தியாளர்களையும் நீக்கிவிட்டால் என்ன நடைபெறும்? 

 77. நிலைத்த உயிரித்தொகுப்பு என்றால் என்ன?

 78. நீல கார்பன் மற்றும் கருமை கார்பன் இவை எந்த மூலங்களில் சேமிக்கப்படுகிறது?

 79. ஓசோன் துளை என்றால் என்ன?

 80. கார்பன் கவரப்படுதல் மற்றும் சேகரித்தல் (CCS) என்றால் என்ன?

 81. ஓசோனில் துளைகள் காணப்படுகின்றனவா?

 82. மரபபுல்வெளி என்றால் என்ன? (அல்லது) நிலையிழந்த வனங்கள் மற்றும் பொழுதுபோக்குக் காடுகளைப் புனரமைத்தல் என்றால் என்ன?

 83. முதல்நிலை அறிமுகப்படுத்துதலையு ம் இரண்டாம்நிலை அறிமுகப்படுத்துதலையும் வேறுபடுத்துக.

 84. மண்வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரி உட்செலுத்திகள் எவ்வாறு பயன்படுகின்றன?

 85. இயற்கை வேளாண்மை என்றால் என்ன?

 86. பயிர்பெருக்கத்தின் மூலம் பூச்சி எதிர்க்கும் திறன் கொண்ட தாவரங்களை எவ்வாறு உருவாக்கலாம்?

 87. பொய் தானியம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

 88. இயற்கை வேளாண்மையின் வரையறையைத் தருக.

 89. சோளத்தின் பயன்கள் கூறு.

 90. தென்னிந்தியக் கலாசாரத்தில் ஆரோக்கியமான எண்ணையாக சமையிலும், மருத்துவத்துறையிலும் குறிப்பிடப்படுவது எது?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட இரண்டு  மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Biology All Chapter Two Marks Important Questions 2020 )

Write your Comment