12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி I

    50 x 1 = 50
  1. பாக்டீரியாவில் பால் இனப்பெருக்கம் கீழ்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது ________.

    (a)

    கேமிட் உருவாக்கம் 

    (b)

    எண்டோஸ்போர் உருவாக்கம் 

    (c)

    இணைதல் 

    (d)

    சூஸ்போர் உருவாக்கம் 

  2. விந்து திரவத்தின் பெரும்பான்மைப் பகுதியைச் சுரக்கும் துணைச் சுரப்பி _____.

    (a)

    விந்துப்பை 

    (b)

    பல்போயுரித்ரல் சுரப்பி 

    (c)

    புரோஸ்டேட் சுரப்பி 

    (d)

    கோழைச் சுரப்பி 

  3. குழந்தை பிறந்தவுடன் உடனடியாகச் சுரக்கும் பாலின் பெயர் _____.

    (a)

    கோழை

    (b)

    சீம்பால்

    (c)

    லாக்டோஸ்

    (d)

    சுக்ரோஸ்

  4. கூற்று மற்றும் காரண வினாக்கள்:
    கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று கூற்று (கூ) ஆகும். மற்றொன்று காரணம் (கா). சரியான விடையை கீழ்க்ககாணும் வகையில் குறிப்பிடுக.
    A – விந்து செல்லின் தலைப்பகுதியில் அக்ரோசோம் மற்றும் மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டிருக்கிறது.
    R – அக்ரோசோம் திருகு வடிவிலமைந்த மைட்டோகாண்ட்ரியங்களைக் கொண்டுள்ளது.

    (a)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.

    (b)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் இல்லை.

    (c)

    ‘கூ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.

    (d)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறானவை. 

  5. கீழ் வருவனவற்றுள் சரியான கூற்று எது?

    (a)

    கிளாமிடியாஸிஸ் ஒரு வைரஸ் நோய் 

    (b)

    டிரிபோனிமா பாலிடம் எனும் ஸ்பைரோகீட் பாக்டீரியத்தால் வெட்டைநோய் தோன்றுகிறது.

    (c)

    கிரந்தி நோயின் நோய் வெளிப்படு காலம் ஆண்களில் 2 முதல் 14 நாட்கள், பெண்களில் 7 முதல் 21 நாட்கள்.

    (d)

    எதிர் உயிரி பொருட்களைக் கொண்டு கிரந்தி மற்றும் வெட்டைநோயை எளிதில் குணப்படுத்த இயலும்.

  6. வரிசை I மற்றும் வரிசை II ஐ பொருத்தி சரியான விடைத் தொகுப்பை தெரிவு செய்யவும்.

      வரிசை I   வரிசைII
    தாமிரம் வெளிவிடு IUD i. LNG - 20
    ஹார்மோன் வெளிவிடு IUD ii. லிப்பள் வளைய IUD
    C. மருந்தில்லா IUD iii  சாஹெலி
    மாத்திரைகள் iv  Multiload - 375
    (a)

    A (iv), B (ii), C (i), D (iii)

    (b)

    A (iv), B (i), C (iii), D (ii)

    (c)

    A (i), B (iv), C (ii), D (iii)

    (d)

    A (iv), B (i), C (ii), D (iii)

  7. மனிதனின் ABO  இரத்த வகைகளை கட்டுப்படுத்துவது ____.

    (a)

    பல்கூட்டு அல்லீல்கள்

    (b)

    கொல்லி மரபணுக்கள்

    (c)

    பால் சார்ந்த மரபணுக்கள் 

    (d)

    Y – சார்ந்த மரபணுக்கள்

  8. இரண்டு பெற்றோர்களின் இரத்தவகையும் AB யாக இருக்கும் பொழுது சந்ததிகளின் இரத்தவகை என்னவாக இருக்க முடியும்?

    (a)

    AB மட்டும்

    (b)

    A, B மற்றும் AB

    (c)

    A, B, AB மற்றும் O

    (d)

    A மற்றும் B மட்டும்

  9. கிளைன் ஃபெல்டர்சிண்ட்ரோம் குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?

    (a)

    XYY

    (b)

    XO

    (c)

    XXX

    (d)

    XXY

  10. டி.என்.ஏ மறறும் RNA வில் ஒற்றுமை காணப்படுவது _____.

    (a)

    தையமின் என்ற நைட்ரஜன் காரத்தினைக் கொண்டிருத்தல்.

    (b)

    ஓரிழை உடைய சுருண்ட வடிவம்.

    (c)

    சர்க்கரை, நைட்ரஜன் காரங்கள் மற்றும் பாஸ்பேட் ஆகியவை உடைய நியூக்ளியோடைடுகள்

    (d)

    பீனைல் அலனைன் எனும் அமினோ அமிலத்தில் உள்ள ஒத்த வரிசையில் அமைந்த நியூக்ளியோடைடுகள்

  11. புரதச் சேர்க்கை நிகழ்ச்சி மைய செயல்திட்டத்தின் சரியான வரிசையைக் கண்டறிக.

    (a)

    படியெடுத்தல், மொழிபெயர்த்தல், இரட்டிப்பாதல்

    (b)

    படியெடுத்தல், இரட்டிப்பாதல், மொழிபெயர்த்தல்

    (c)

    நகலாக்கம், மொழிபெயர்த்தல், படியெடுத்தல்

    (d)

    இரட்டிப்பாதல், படியெடுத்தல்,மொழிபெயர்த்தல்

  12. வளர்ப்பு ஊடகத்தில் லாக்டோஸ் இருப்பது எதைக் காட்டுகிறது?

    (a)

    லாக் y, லாக் z, லாக் a மரபணுக்கள் படியெடுத்தல் நடைபெறுதல் 

    (b)

    அடக்கி மரபணு, இயக்கி மரபணுவுடன் இணைய முடியாத நிலை

    (c)

    அடக்கி மரபணு இயக்கி மரபணுவுடன் இணையும் நிலை

    (d)

    ‘அ’ மற்றும் ‘ஆ’ ஆகிய இரண்டு சரி

  13. வளர்கரு பி்ளாசக் (Germplasm) கோட்பாட்டைக் கூறியவர் யார்?

    (a)

    டார்வின்

    (b)

    ஆகஸ்ட் வீஸ்மேன்

    (c)

    லாமார்க்

    (d)

    ஆல்ஃப்ரட் வாலாஸ்

  14. நவீன மனித இனம் எந்த காலத்தைச் சேர்ந்தது?

    (a)

    குவார்டெர்னரி

    (b)

    கிரட்டேஷியஸ்

    (c)

    சைலூரியன்

    (d)

    கேம்ப்ரியன்

  15. பி.வைவாக்ஸின் ஸ்போரோசோயிட்டுகள் ______ ல் உருவாக்கப்பட்டது.

    (a)

    கேமிட்டோசைட்டுகள் (இனச்செல்கள்) 

    (b)

    ஸ்போரோபிளாஸ்ட்டுகள் 

    (c)

    ஊசிஸ்டுகள்

    (d)

    ஸ்போர்கள்

  16. ஒவ்வாமையில் தொடர்புடையது _____.

    (a)

    IgE

    (b)

    IgG

    (c)

    Ig

    (d)

    IgM

  17. கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடாத நிகழ்வினை தேர்ந்தெடு.

    (a)

    ஆல்கஹாலிக் நொதித்தல் 

    (b)

    லாக்டேட் நொதித்தல் 

    (c)

    விலங்குகளில் நடைபெறும் காற்றுச் சுவாசம்

    (d)

    தாவரங்களில் நடைபெறும் காற்றுச் சுவாசம்

  18. இன்சுலின் இரு சங்கிலிகளிலும் எத்தனை அமினோ  அமிலங்கள் அமைந்துள்ளன.

    (a)

    A சங்கிலியில் 12 மற்றும் B சங்கிலியில் 13 அமினோ அமிலங்கள்

    (b)

    A சங்கிலியில் 21 மற்றும் B சங்கிலியில் 30 அமினோ அமிலங்கள்

    (c)

    A சங்கிலியில் 20 மற்றும் B சங்கிலியில் 30 அமினோ அமிலங்கள்

    (d)

    A சங்கிலியில் 12 மற்றும் B சங்கிலியில் 20 அமினோ அமிலங்கள்

  19. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் அனைத்து இனக்கூட்டமும் இவ்வாறு வரையறுக்கப்படுகிறது.

    (a)

    உயிர்த் தொகை

    (b)

    சூழல் மண்டலம்

    (c)

    எல்லை

    (d)

    உயிர் காரணிகள்

  20. கீழ்க்கண்டவற்றும் r-வகை தேர்வுசெய்யப்பட்ட சிற்றினம் குறித்த சரியான கருத்துக்கள்.

    (a)

    அதிக எண்ணிக்கையில் சத்ததிகள் மற்றும் சிறிய உருவம்

    (b)

    அதிக எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் பெரிய உருவம்

    (c)

    குறைவான எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் சிறிய உருவம்

    (d)

    குறைவான எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் பெரிய உருவம்

  21. பின்வருவனவற்றில் எது சூழல்உள் பாதுகாப்பு வகையை சார்ந்தது அல்ல.

    (a)

    புகலிடங்கள்

    (b)

    தேசிய பூங்காக்கள்

    (c)

    விலங்கியல் பூங்காக்கள்

    (d)

    உயிர்கோள காப்பிடம்

  22. கூற்று – வெப்ப மண்டலப் பகுதிகளில் நிலவும் சுற்றுசூழல் தன்மைகள் உயிரினங்களின் சிற்றினமாக்கல் மற்றும் பல்வகைத்தன்மைக்குச் சாதமாகாக உள்ளன
    காரணம் – பருவகாலம், தட்பவெப்பநிலை, ஈரப்பதம், ஒளிக்காலம் ஏறக்குறைய நிலையாகவும் உகந்ததாகவும் உள்ளது.

    (a)

    காரணம் மற்றும் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது

    (b)

    காரணம் மற்றும் கூற்று சரி, காரணம் கூற்றை சரியாக விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி, காரணம் தவறு.

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

  23. 2017ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி உலக அளவில் கார்பன்-டை-ஆக்சைடை மிக அதிகமாக வெளியிடும் நாடு எது?

    (a)

    அமெரிக்கா

    (b)

    சீனா

    (c)

    கத்தார்

    (d)

    சவுதி அரேபியா

  24. குடிநீரில் அதிக அளவு புளுரைடு  ______ ஐ ஏற்படுத்துகிறது.

    (a)

    நுரையீரல் நோய்

    (b)

    குடல் தொற்றுகள்

    (c)

    புளுரோஸிஸ்

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை

  25. மகரந்தக்குழாயை கண்டுபிடித்தவர் _____.

    (a)

    J.G.கோல்ரூட்டர்

    (b)

    G.B. அமிசி

    (c)

    E. ஸ்டிராஸ்பர்கர்

    (d)

    E. ஹேன்னிங்

  26. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பெரு கேமீட்டகத் தாவரத்தைக் குறிக்கிறது.

    (a)

    சூல்

    (b)

    கருப்பை

    (c)

    சூல்திசு

    (d)

    கருவூண் திசு

  27. AaBb மரபணு வகையம் கொண்ட பட்டாணித் தாவரத்தின் பல்வேறு வகையான கேமீட்களை கண்டறிய, இதனுடன் கலப்புற செய்ய வேண்டிய தாவர மரபணு வகையமானது

    (a)

    aaBB

    (b)

    AaBB

    (c)

    AABB

    (d)

    aabb

  28. ஒரு தாவரத்தில் மரபணுவாக்க விகிதம் ஓங்கு பண்புடைய புறத் தோற்றத்தினைத் தோற்றுவிக்குமேயானால் அது

    (a)

    பிற்கலப்பு

    (b)

    சோதனைக் கலப்பு

    (c)

    இருபண்புக் கலப்பு

    (d)

    சந்ததி வழித்தொடர் ஆய்வு

  29. இருபண்புக் கலப்பு 9:3:3:1 இடைப்பட்ட AaBb x AaBb என்று மாறுபாடடைந்த ஓங்கிய மறைத்தல் விளைவானது

    (a)

    இரு அமைவிடத்திலுள்ள ஒரு அல்லீல் மற்றொரு அல்லீலை விட ஓங்குதன்மை கொண்டதாக உள்ளது

    (b)

    இரு வேறுபட்ட அமைவிடத்தில் இரு அல்லீல்களின் இடையேயான இடைச்செயல்கள்

    (c)

    ஒரே அமைவிடத்தில் அமைந்துள்ள ஒரு அல்லீல் மற்றொரு அல்லீலை விட ஓங்குதன்மை உடையதாக உள்ளது

    (d)

    அல்லீல்களின் இடைச்செயல்களுக்கு இடையே ஒரே அமைவிடத்தில் நிகழ்வது.

  30. தூயகால்வழி நெட்டைத்தாவரங்கள் தூயகால்வழி குட்டைத் தாவரத்துடன் கலப்புற்று முதலாம் மகவுச் சந்ததியில் (F1) அனைத்துத் தாவரங்களும் நெட்டையாகவே காணப்பட்டது. அதே முதல் மகவுச் சந்ததி தாவரங்களைத் தற்கலப்பு செய்யும் போது கிடைக்கும் நெட்டை மற்றும் குட்டைத் தாவரங்களின் விகிதம் 3:1. இது ______.

    (a)

    ஓங்குத்தன்மை

    (b)

    பாரம்பரியமாதல்

    (c)

    இணை ஓங்குத்தன்மை

    (d)

    மரபுவழித்தன்மை

  31. பின்வரும் எந்தக் கூற்றுகள் சரியானவை?
    1. முழுமையற்ற பிணைப்பினால் பெற்றோர்  சேர்க்கை வழித்தோன்றல்கள் மட்டுமே வெளிப்படுத்துகின்றன.
    2. முழுமையான பிணைப்பில் பிணைந்த மரபணுக்கள் குறுக்கேற்றத்தை வெளிப்படுத்துகின்றன.
    3. முழுமையற்ற பிணைப்பில் இரண்டு பிணைந்த மரபணுக்கள் பிரிவடையலாம் .
    4. முழுமையான பிணைப்பில் குறுக்கேற்றம் நடைபெறுவதில்லை.

    (a)

    1 மற்றும் 2

    (b)

    2 மற்றும் 3

    (c)

    3 மற்றும் 4

    (d)

    1 மற்றும் 4

  32. ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் என்பது ______.

    (a)

    மரபுப் பொறியியலில் எப்போதும் தேவைப்படுவதில்லை.

    (b)

    மரபுப் பொறியியலில் முக்கியமான கருவியாகும்.

    (c)

    நியுக்ளியேஸ் DNA வைக் குறிப்பிட்ட இடத்தில் துண்டித்தல் 

    (d)

    ஆ மற்றும் இ 

  33. மறுகூட்டிணைவு தொழில்நுட்பம் பின்வரும் படிநிலைகளைக் கொண்டுள்ளது.
    I. மரபணுக்களின் பெருக்கம் 
    II. ஓம்புயிர் செல்லில் மறுகூட்டிணைவு DNA வை  செலுத்துதல் 
    III. தடைகட்டு (ரெஸ்ட்ரிக்சன்) நொதியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இடத்தில் DNA வைத் துண்டித்தல்.
    IV. மரபணுப் பொருட்களைப் பிரித்தெடுத்தல் (DNA) மறுகூட்டிணைவு தொழில்நுட்பத்தின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.

    (a)

    II, III, IV, I 

    (b)

    IV, II, III, I 

    (c)

    I, II, III, IV 

    (d)

    IV, III, I, II 

  34. எத்திடியம் புரோமைடு எந்த தொழில்நுட்பமுறையில் பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    சதர்ன் ஒற்றியெடுப்பு தொழில்நுட்பமுறை 

    (b)

    வெஸ்ட்ர்ன் ஒற்றியெடுப்பு தொழில்நுட்பமுறை 

    (c)

    பாலிமரேஸ் சங்கிலித் தொடர்வினை 

    (d)

    அகரோஸ் இழும மின்னாற் பிரிப்பு 

  35. Bt பருத்தியின் சில பண்புகள் ______.

    (a)

    நீண்ட நார்களும், அசுவுனி பூச்சிகளுக்கு (aphids) எதிர்ப்புத் திறன்.

    (b)

    நடுத்தரமான அறுவடை, நீண்ட நார்கள் மற்றும் வண்டுகளுக்கான எதிர்ப்புத் தன்மை 

    (c)

    அதிக விளைச்சல் மற்றும் டிப்தீரியன் பூச்சிகளைக் கொல்லக் கூடிய படிக நச்சுப் புரத உற்பத்தி 

    (d)

    அதிக உற்பத்தி மற்றும் காய் புழுவிற்கான எதிர்ப்புதிறன் 

  36. பின்வரும் கூற்றிலிருந்து தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

    (a)

    இதய அடைப்பிற்கு பயன்படுத்தப்படும் ஊட்டபானம் டிஜிடாலிஸ் பர்பியூரியாவிலிருந்து கிடைக்கிறது.

    (b)

    மூட்டுவலியை குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்து காப்சிகம் அணுவத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

    (c)

    மலேரியா எதிர்ப்பு மருந்து சின்கோனா அபினாலிஸ் தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

    (d)

    புற்றுநோய் எதிர்ப்பு பண்பானது கேதராந்தஸ் ரோசியஸ் தாவரத்தில் காணப்படவில்லை 

  37. ஓர் உயிரினம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்து தனது பனியினைச் செயல்படுத்தும் சூழ்நிலைத் தொகுப்பு _____.

    (a)

    புவி வாழிடம் 

    (b)

    செயல் வாழிடம் 

    (c)

    நிலத்தோற்றம் 

    (d)

    உயிர்மம் 

  38. கீழ்கண்ட கூற்றுகளில் காணப்படும் கோடிட்ட இடங்களுக்கான சரியா விடைகளைக் கொண்டு பூர்த்தி செய்க.
    i) மண்ணில் காணப்படும் மொத்த நீர் ____.
    ii) தாவரங்களுக்குப் பயன்படாத நீர் ______.
    iii) தாவரங்களுக்குப் பயன்படும் நீர் ______.

    (a)
    ii iii
    ஹாலார்டு எக்ஹார்டு கிரிஸ்ஸார்டு
    (b)
    ii iii
    எக்ஹார்டு ஹாலார்டு கிரிஸார்டு
    (c)
    ii iii
    கிரிஸ்ஸார்டு எக்ஹார்டு ஹாலார்டு
    (d)
    ii iii
    ஹாலார்டு கிரிஸ்ஸார்டு எக்ஹார்டு
  39. பெடாஜெனிஸிஸ் (pedagensis) என்பது எதனுடன் தொடர்புடையது?

    (a)

    தொல்லுயிரி படிவம் 

    (b)

    நீர் 

    (c)

    உயிரித்தொகை 

    (d)

    மண் 

  40. கீழ்கண்டவற்றில் எது/எவை இயற்கை சூழல்மண்டலம் அல்ல?

    (a)

    வனச் சூழல்மண்டலம் 

    (b)

    நெல்வயல் 

    (c)

    புல்வெளி சூழல்மண்டலம் 

    (d)

    பாலைவன சூழல்மண்டலம் 

  41. உணவு வலையின் முக்கியத்துவம்?

    (a)

    இது இயற்கையின் சமநிலையை தக்க வைப்பதில்லை 

    (b)

    இது ஆற்றல் பரிமாற்றங்களை வெளிப்படுத்துகிறது 

    (c)

    சிற்றினங்களிடையே நிகழும் இடைவிளைவை விளக்குகிறது 

    (d)

    ஆ மற்றும் இ

  42. ஆகாயத் தாமரையைப் பொறுத்தவரை
    கூற்று I – தேங்கும் நீரில் வளர்ந்து காணப்படுகிறது மற்றும் இது நீரிலுள்ள ஆக்ஸிஜனை முற்றிலும் வெளியேற்றுகிறது.
    கூற்று II – இது நமது நாட்டின் உள்நாட்டு தாவரமாகும்.

    (a)

    கூற்று I சரியானது மற்றும் கூற்று II தவறானது

    (b)

    கூற்று I மற்றும் II - இரண்டு கூறுகளும் சரியானது

    (c)

    கூற்று I தவறானது மற்றும் கூற்று II சரியானது

    (d)

    கூற்று I மற்றும் II – இரு கூறுகளும் தவறானது

  43. ஓசோனின் தடிமனை அளவிடும் அலகு?

    (a)

    ஜூல் 

    (b)

    கிலோ 

    (c)

    டாப்சன் 

    (d)

    வாட் 

  44. கூற்று: மரபணுவிய வேறுபாடுகள் தேர்ந்தெடுத்தலுக்கு மூலப்பொருட்களைத்  தருகின்றன.
    காரணம்: மரபணுவிய வேறுபாடுகள்  ஒவ்வொரு தனித்த உயிரியின் மரபணு வகையத்திலிருந்து வேறுபடுகின்றன.

    (a)

    கூற்று சரி காரணம் தவறு 

    (b)

    கூற்று தவறு காரணம் சரி 

    (c)

    கூற்று மற்றும் காரணம் சரி 

    (d)

    கூற்று மற்றும் காரணம் தவறு

  45. வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படும்  இரகங்கள் மற்றும் தாவரங்களைப் புதிய சூழலுக்குப் பழக்கப்படுத்துவது _____.

    (a)

    நகலாக்கம்

    (b)

    கலப்பின வீரியம்

    (c)

    தேர்ந்தெடுத்தல்

    (d)

    அறிமுகப்படுத்துதல்

  46. கீழ்கண்ட எந்த இரண்டு சிற்றினங்களைக் கலப்பு செய்து அதிக இனிப்புத்தன்மை, அதிக விளைச்சல், தடித்த தண்டு மற்றும் வட இந்தியாவில் கரும்பு பயிரிடப்படும் இடங்களில் வளரும் தன்மையுடைய இரகங்கள் பெறப்பட்டன.

    (a)

    சக்காரம் ரோபோஸ்டம் மற்றும் சக்காரம் அஃபிசினாரம்

    (b)

    சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் அஃபிசினாரம்

    (c)

    சக்காரம் சைனென்ஸ் மற்றும் சக்காரம் அஃபிசினாரம்

    (d)

    சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் ரோபோஸ்டம்

  47. பட்டியல் ஒன்றைப் பட்டியல் இரண்டுடன் பொருத்து

    பட்டியல் I பட்டியல் II
    i) தனிவாழ் உயிரி N2 அ) ஆஸ்பர் ஜில்லஸ் சிற்றினம்
    ii) கூட்டுயிரி N2 ஆ) அமானிடா சிற்றினம்
    iii) P கரைக்கும் திறனுடையது இ) அனபீனா அசோலா
    iv) P இடம் மாற்றும்
    திறனுடையது
    ஈ) அசடோ பாக்டர்
    (a)
    II  III   IV 
    இ  அ  ஆ  ஈ 
    (b)
    II  III   IV 
    ஈ   இ  அ 
    (c)
    II  III   IV 
    அ   இ  ஆ  ஈ 
    (d)
    II  III   IV 
    ஆ   அ  ஈ 
  48. கூற்று I: காஃபி காஃபின் கொண்டது.
    கூற்று II: காஃபி பருகுவதால் புற்றுநோய் வளர்க்கும்

    (a)

    கூற்று I சரி, கூற்று II தவறு

    (b)

    கூற்று I, II – இரண்டும் சரி

    (c)

    கூற்று I தவறு, கூற்று II சரி

    (d)

    கூற்று I, II – இரண்டும் தவறு

  49. பருத்தியின் புது உலகச் சிற்றினங்கள் ___.

    (a)

    காஸிப்பியம் ஆர்போரிடம்

    (b)

    கா. ஹெர்பேசியம்

    (c)

    அ மற்றும் ஆ இரண்டும்

    (d)

    கா. பார்படென்ஸ்

  50. செயலாக்க மூலமருந்து டிரான்ஸ் - டெட்ராஹட்ரோகென்னாபினால் எதிலுள்ளது?

    (a)

    அபின்

    (b)

    மஞ்சள்

    (c)

    கஞ்சாச்செடி

    (d)

    நிலவேம்பு

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus One mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment