12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. எலிங்கம் வரைபடத்தில், கார்பன் மோனாக்ஸைடு உருவாதலுக்கு ________.

    (a)

    \(\left( \frac { \Delta { S }^{ 0 } }{ \Delta T } \right) \) எதிர்குறியுடையது 

    (b)

    \(\left( \frac { \Delta {G }^{ 0 } }{ \Delta T } \right) \) நேர்குறியுடையது 

    (c)

    \(\left( \frac { \Delta {G }^{ 0 } }{ \Delta T } \right) \) எதிர்குறியுடையது 

    (d)

    \(\left( \frac { \Delta T }{ \Delta G ^ 0 } \right) \)ஆரம்பத்தில் நேர்குறியுடையது  7000C க்கு மேல் \(\left( \frac { \Delta {G }^{ 0 } }{ \Delta T } \right) \) எதிர்குறியுடையது 

  2. p - தொகுதி தனிமங்களில் உள்ள தொகுதிகளின் எண் ______.

    (a)

    1 & 2

    (b)

    3 - 12

    (c)

    13 - 17

    (d)

    13 - 18

  3. ஹாலஜன்களின் பிணைப்பு பிளவு என்தால்பி மதிப்பினைப் பொறுத்து சரியான வரிசை எது? 

    (a)

    Br2 > I2 > F2 > Cl2

    (b)

    F2 > Cl2 > Br2 > l2

    (c)

    I2 > Br2 > Cl2 > F2

    (d)

    Cl2 > Br2 > F2 > I2

  4. U3+ அயனியின் நிறம் _________

    (a)

    சிவப்பு

    (b)

    பச்சை

    (c)

    மஞ்சள்

    (d)

    இளஞ்சிவப்பு

  5. [Pt(Py)(NH3)(Br)(Cl)] என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்கள் எத்தனை?

    (a)

    3

    (b)

    4

    (c)

    0

    (d)

    15

  6. ஒரு அணுவின் ஆர மதிப்பு 300pm அது முகப்புமைய கனச்சதுர அமைப்பில் படிகமானால், அலகு கூட்டின் விளிம்பு நீளம் _____________

    (a)

    488.5pm

    (b)

    848.5pm

    (c)

    884.5pm

    (d)

    484.5pm

  7. பின்வருவனவற்றுள்‌ எதை E , மதிப்பு நிர்ணயம்‌ செய்கிறது?

    (a)

    மூலக்கூறு எண்

    (b)

     வினைவேகம்‌

    (c)

    வினைவகை

    (d)

    அரைவாழ்வுகாலம்‌

  8. 298K ல், நீரில் BaSO4 இன் கரைதிறன் \(2.42\times10^{-3}gL^{-1}\) எனில் அதன் கரை திறன் பெருக்க (Ksp) மதிப்பு. (BaSO4 இன் மோலார் நிறை = 233 g mol-1)

    (a)

    \(1.08\times10^{-14} mol^{2}L^{-2}\)

    (b)

    \(1.08\times10^{-12} mol^{2}L^{-2}\)

    (c)

    \(1.08\times10^{-10} mol^{2}L^{-2}\)

    (d)

    \(1.08\times10^{-8} mol^{2}L^{-2}\)

  9. ஃ பாரடே மாறிலி _________ என வரையறுக்கப்படுகிறது

    (a)

    1 எலக்ட்ரானால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்

    (b)

    1 மோல் எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்

    (c)

    ஒரு மோல் பொருளை விடுவிக்க தேவைப்படும் மின்னூட்டம்

    (d)

    \(6.22\times10^{10}\) எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்

  10. தலைமுடி கிரீம் என்பது ஒரு _____________

    (a)

    களி

    (b)

    பால்மம்

    (c)

    திண்மக் கூழ்மம்

    (d)

    கூழ்மக் கரைசல்.

  11. வில்லியம்சன் தொகுப்பு முறை யில் டைமெ த்தில் ஈதரை உருவாக்கும் வினை ஒரு ____________

    (a)

    SN1 வினை

    (b)

    SN2 வினை

    (c)

    எலக்ட்ரான் கவர் பொருள்  சேர்க்கை வினை

    (d)

    எலக்ட்ரான் கவர் பொருள் பதிலீட்டு வினை

  12.  இன் IUPAC பெயர் _____________

    (a)

    பியுட் – 3-ஈனாயிக்அமிலம்

    (b)

    பியுட் – 1- ஈன்-4-ஆயிக்அமிலம்

    (c)

    பியுட்– 2- ஈன்-1-ஆயிக்அமிலம்

    (d)

    பியுட்-3-ஈன்-1-ஆயிக்அமிலம்

  13. அனிலீனாது அசிட்டிக் அமில நீரிலியுடன் வினைப்பட்டு கொடுக்கும் விளைபொருள் ______________

    (a)

    o – அமினோ அசிட்டோ பீனோன்

    (b)

    m-அமினோ அசிட்டோ பீனோன்

    (c)

    p-அமினோ அசிட்டோ பீனோன்

    (d)

    அசிட்டனிலைடு

  14. நீர்த்த கரைசல்களில் அமினோ அமிலங்கள் பெரும்பாலும் ________ அமைப்பில் உள்ளன .

    (a)

    NH2-CH(R)-COOH

    (b)

    NH2-CH(R)-COO-

    (c)

    H3N+-CH(R)-COOH

    (d)

    H3N+-CH(R)-COO-

  15. உணர்வேற்பி மையத்துடன் பிணைந்து அதன் இயல்பான செயல்பாட்டைத் தடுக்கும் மருந்துகள் __________ என்றழைக்கப்படுகின்றன.

    (a)

    எதிர்வினையூக்கி

    (b)

    முதன்மை இயக்கி

    (c)

    நொதிகள்

    (d)

    மூலக்கூறு இலக்குகள்

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. நிக்கலைத் தூய்மையாக்கப் பயன்படும் ஒரு முறையினை விவரிக்க?

  18. அம்மோனியாவின் மீதான வெப்பத்தின் விளைவை எழுதுக.

  19. Gd3+ அயனியானது நிறமற்றது. ஏன்?

  20. நான்முகி புலத்தில் படிகபுலப் பிளப்பு வரைபடத்தை வரைக . 

  21. படிக வடிவமற்ற திடப்பொருட்கள் என்றால் என்ன?

  22. ஒரு வேதிவினையின் வேகத்தை வினைவேக மாற்றி எவ்வாறு பாதிக்கின்றது என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  23. நேர்மின்முனை மற்றும் எதிர்மின்முனைகளை வரையறு.

  24. 1 – மீத்தாக்ஸிபுரப்பேனை  அதிக அளவு HI உடன் வெப்படுத்தும் போது உருவாகும் விளைபபொருட்களை  கண்டறிக. இவ்வினையின் வினைவழிமுறையினை குறிப்பிடுக.

  25. அசிட்டோன்  தயாரித்தல் ?

    1. பகுதி - III

      எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  26. பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
    அ. B (OH)3 + NH3 \(\longrightarrow\)
    ஆ. Na2B4O+ H2SO4H2O\(\longrightarrow\)
    இ. B2H+ 2NaOH + 2H2O\(\longrightarrow\)
    ஈ. B2H+ CH3OH\(\longrightarrow\)
    உ. BF+ 9 H2O\(\longrightarrow\)
    ஊ. HCOOH + H2SO4\(\longrightarrow\)
    எ. SiCl4 + NH3\(\longrightarrow\)
    ஏ. SiCl4 + C2H5OH\(\longrightarrow\)
    ஐ. B + NaOH\(\longrightarrow\)
    ஒ. H2B4O7 

  27. Sc முதல் Zn வரை உள்ள தனிமங்களின் Zn ன் அணுவாக்கும் என்தால்பி மதிப்பு குறைவு ஏன்?

  28. கொடுக்கிணைப்புகள்- குறிப்பு வரைக.

  29. அயனிப்படிகங்கள் ஏன் கடினமாகவும், உடையும் தன்மையினையும் பெற்றுள்ளன?

  30. 50ml கனஅளவுடைய 0.025M KOH கரைசலுடன் 50ml கனஅளவுடைய 0.05M HNO3 கரைசல் சேர்க்கப்படுகிறது. இறுதியில் பெறப்பட்ட கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக.

  31. வினைவேகமாற்ற நச்சுகள் பற்றி குறிப்பு வரைக.

  32. 0.44 கிராம் மோனோஹைட்ரிக் ஆல்கஹாலை, ஈதரில் உள்ள மெத்தில் மெக்னீசியம் அயோடைடுன் சேர்க்கும் போது STP ல் 112 cm3 மீத்தேனை வெளியேற்றுகிறது. அதே ஆல்கஹாலானது PCC யுடன் வினைபடுத்தும் போது கார்பனைல் சேர்மத்தைத் தருகிறது. அந்த கார்பனைல் சேர்மம் வெள்ளி ஆடி சோதனைக்கு உட்படுகிறது. சேர்மத்தினைக் கண்டறிக.

  33. C4H9NO2 என மூலக்கூறு வாய்பாட்டில் அமையும் அனைத்து மாற்றியங்களையும் எழுது, IUPAC பெயரிடுக.

  34. மன அமைதிப்படுத்திகள் உடலில் எவ்வாறு செயல்புரிகின்றன?

  35. பகுதி - IV 

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. டைபோரேனின் வடிவமைப்பினை விவரிக்க.

    2. பின்வரும் சேர்மங்களில் காணப்படும் இனக்கலப்பாதலைக் கண்டறிக.
      அ) BrF5
      ஆ) BrF3

    1. i) Co2+ மற்றும் Cu2+ அயனிகளின் எலக்ட்ரான் அமைப்புகள் முறையே 3d7 மற்றும் 3d9 எனில் எது அதிக பாரா காந்த தன்மையுடையது?
      ii) Mn ன் நிலைப்புத்தன்மை மிக்க ஆக்சிஜனேற்ற நிலை யாது?
      iii) Sc3+ மற்றும் Cu+ இரண்டில் எது பாராகாந்தத் தன்மையுடையது 

    2. உலோகக் கார்பனைல்களில் காணப்படும் பிணைப்பின் தன்மையினை விளக்குக.

    1. மூலக்கூறு படிகங்களின்‌ வகைப்பாட்டை விவரி.

    2. ஒரு பூஜ்ய வகை வினை 20 நிமிடங்களில் 20% நிறைவுறுகிறது. வினை வேக மாறிலியைக் கணக்கிடுக. அவ்வினை 80% நிறைவடைய ஆகும் காலம் எவ்வளவு?

    1. இயற்புறப்பரப்பு கவர்தல், வேதிப்புறப்பரப்பு கவர்தல் வேறுபடுத்துக.

    2. பின்வரும் வினையினை நிறைவு செய்க.

    1. வைட்டமின்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?

    2. வெப்பத்தால் இளகும் மற்றும் வெப்பத்தால் இறுகும் பிளாஸ்டிக்குகள் வேறுபடுத்துக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Annual  Exam Model Question Paper with Answer key  - 2021

Write your Comment