12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் முன்னர், சல்பைடு தாதுக்களை வறுத்தலில் ஏற்படும் நன்மையினைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? 

    (a)

    CS2 மற்றும் H2S ஆகியவற்றைக் காட்டிலும் சல்பைடின் \(\Delta \)Gf0 மதிப்பு அதிகம் 

    (b)

    சல்பைடை வறுத்து ஆக்ஸைடாக மாற்றும் வினைக்கு  \(\Delta \)Gr0 மதிப்பு எதிர்க்குறியுடையது. 

    (c)

    சல்பைடை அதன் ஆக்ஸைடாக வறுத்தல் என்பது ஒரு சாதகமான வெப்ப இயக்கவியல் செயல்முறையாகும்.  

    (d)

    உலோக சல்பைடுகளுக்கு, கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த பொருத்தமான ஒடுக்கும் காரணிகளாகும். 

  2. உலோக கார்பனைகளில், உலோகங்களின் ஆக்சிஜனேற்ற நிலை ________.

    (a)

    0

    (b)

    +1

    (c)

    +2

    (d)

    +3

  3. ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி ______.

    (a)

    6N

    (b)

    4N

    (c)

    2N

    (d)

    இவை எதுவுமல்ல

  4. லாந்தனைடுகள் பின்வரும் எந்த ஆக்சிஜனேற்ற நிலைகளையும் பெற்றிருக்கும் ?

    (a)

    +2,+4

    (b)

    +6,+1

    (c)

    +3,+5

    (d)

    +2,+3

  5. பின்வருவனவற்றுள் இனான்சியோமர் இணைகளை தர வல்லது எது?

    (a)

    [Cr(NH3)6][Co(CN)6]

    (b)

    [Co(en)2Cl2]cl

    (c)

    [pt(NH3)4][ptcl4]

    (d)

    [Co(NH3)4Cl2]NO2

  6. CsCl ஆனது bcc வடிவமைப்பினை உடையது. அதன் அலகு கூட்டின் விளிம்பு நீளம் 400pm, அணுக்களுக்கு இடையேயான தொலைவு ______________

    (a)

    400 pm 

    (b)

    800pm 

    (c)

    \(\sqrt{3}\times 100pm \)

    (d)

    \(\left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) \times 400pm\)

  7. மூலக்கூறு கிளர்வுறுவதற்கு தேவைப்படும் அதிகபட்ச ஆற்றல் _____________

    (a)

    இயக்க ஆற்றல் 

    (b)

    குறைந்தபட்ச ஆற்றல் 

    (c)

    நிலை ஆற்றல் 

    (d)

    கிளர்வுறு ஆற்றல் 

  8. \(\Delta G^{0}\)=57.34 kJ mol-1, எனும் கிபஸ் கட்டிலா ஆற்றல் மதிப்பை பயன்படுத்தி \(X_{2}Y(s)\rightleftharpoons 2X^{+}\) நீர்க்கரைசல் + Y2- (aq) என்ற வினைக்கு, 300 K வெப்ப நிலையில், நீரில் X2Y இன் கரை திறன் பெருக்க மதிப்பை கணக்கிடுக. 300 K (R = 8.3 J K-1 Mol-1)

    (a)

    10-10

    (b)

    10-12

    (c)

    10-14

    (d)

    கொடுக்கப்பட்ட தகவிலிருந்து கணக்கிட முடியாது

  9. \(M/36\) செறிவு கொண்ட வலிமை குறைந்த ஒற்றைக்கார அமிலத்தின் சமான கடத்துத்திறன் மதிப்பு 6 mho cm2 மற்றும் அளவிலா நீர்த்த லில் அதன் சமான கடத்துத்திறன் மதிப்பு 400 mho  cm2 எனில், அந்த அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பு _____________

    (a)

    \(1.25\times10^{-6}\)

    (b)

    \(6.25\times10^{-6}\)

    (c)

    \(1.25\times10^{-4}\)

    (d)

    \(6.25\times10^{-5}\)

  10. பின்வருவனவற்றை பொருத்துக 

    V2O5 உயர் அடர்த்தி
    பாலிஎத்திலீன்
    சீக்லர் - நட்டா PAN
    பெராக்சைடு NH3
    தூளாக்கப்பட்ட Fe H2SO4
    (a)
    A B C D
    (iv) (i) (ii) (iii)
    (b)
    A B C D
    (i) (ii) (iv) (iii)
    (c)
    A B C D
    (ii) (iii) (iv) (i)
    (d)
    A B C D
    (iii) (iv) (ii) (i)

  11. என்ற வினையானது எதற்கு ஒரு  எடுத்துக்காட்டாகும்.

    (a)

    உர்ட்ஸ் வினை

    (b)

    வளையமாதல் வினை

    (c)

    வில்லியம்சன் தொகுப்பு  முறை 

    (d)

    கோல்ட் வினை 

  12. பென்சாயிக் அமிலம் \(\overset{i)NH_3}{\underset{ii)\Delta}\longrightarrow} A \overset{NaOBr}\longrightarrow B \overset{NaNO_2/HCl}\longrightarrow C\), C என்பது ___________

    (a)

    அனிலீனியம் குளோரைடு

    (b)

    O – நைட்ரோ அனிலீன்

    (c)

    பென்சீன் டையசோனியம் குளோரைடு

    (d)

    m – நைட்ரோ பென்சாயிக் அமிலம்

  13. பின்வரும் நைட்ரோ சேர்மங்களில் எது நைட்ரஸ் அமிலத்துடன் வினைபுரியாது _____________

    (a)

    CH3 -CH2 -CH2 -NO2

    (b)

    (CH3)2 CH - CH2 NO2

    (c)

    (CH3)3CNO2

    (d)

  14. பின்வருவனவற்றுள் சீர்மை தன்மையுடைய அமினோ அமிலம் __________

    (a)

    2-எத்திலலனின்

    (b)

    2-மெத்தில் கிளைசீன்

    (c)

    2-ஹைட்ராக்ஸிமெத்தில்செரீன்

    (d)

    ட்ரிப்டோஃபேன்

  15. ஆஸ்பிரின் என்பது ____________

    (a)

    அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்

    (b)

    பென்சாயில் சாலிசிலிக் அமிலம்

    (c)

    குளோரோபென்சாயிக் அமிலம்

    (d)

    ஆந்த்ரனிலிக் அமிலம்

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. எவ்வகை தாதுக்களை அடர்ப்பிக்க நுரை மிதப்பு முறை ஏற்றது? அத்தகைய தாதுக்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக. 

  18. ஆய்வகத்தில் குளோரின் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  19. லாந்தனாய்டுகள் மற்றும் ஆக்டினாய்டுகள் தனிம வரிசை அட்டவணையில் பெற்றுள்ள இடத்தினை நிறுவுக.

  20. அணைவுக்  கோளம் வரையறு.

  21. திடப்பொருட்களை அவைகளில்‌ காணப்படும்‌ உட்கூறுகளின்‌ அமைப்பினை பொறுத்து எத்தனை பிரிவுகளாக விரிக்கப்பட்டுள்ளது? அவை யாவை?

  22. பின்வரும் வினைகளில், ஒவ்வொரு வினைபடு பொருள்களைப் பொருத்து வினை வேகங்ககளைக்  குறிப்பிடுக. வினையின் ஒட்டுமொத்த வினைவகையைக் கண்டறிக.
    அ) \(\\ 5{ Br }^{ - }(aq)+Br{ O }_{ 3 }^{ - }(aq)+{ 6H }^{ + }(aq)\longrightarrow 3{ Br }_{ 2 }(l)+3{ H }_{ 2 }O(l)\)
    சோதனை மூலம் கண்டறியப்பட்ட வேகவிதி 
    வினைவேகம் = K[Br-][BrO3-][H+]2
    ஆ) CH3CHO(g)\(\overset { \Delta }{ \longrightarrow } \)CH4(g)+CO(g) சோதனை மூலம் கணடறியப்பட வேகவிதி 
    Rate = K[CH3CHO]\(\frac {3}{2}\)

  23. ஒரு மின்கடத்துக் கலனிலுள்ள இரண்டு பிளாட்டின மின்முனைகளுக்கு இடைப்பட்ட தூரம் 1.5 செ.மீ. ஒவ்வொரு மின்முனையும் குறுக்குப் பரப்பும் 4.5 ச.செ.மீ என்க. 0.5 N மின்பகுளிக் கரைசலுக்கு மின்கலத்தை பயன்படுத்தி கண்டறியப்பட்ட மின்தடை மதிப்பு 15 Ω எனில், கரைசலின் நியம கடத்துத்திறன் மதிப்பை காண்க.

  24. 1 – மீத்தாக்ஸிபுரப்பேனை  அதிக அளவு HI உடன் வெப்படுத்தும் போது உருவாகும் விளைபபொருட்களை  கண்டறிக. இவ்வினையின் வினைவழிமுறையினை குறிப்பிடுக.

  25. ஹெக்ஸ் -4- ஈனால் தயாரிக ?

    1. பகுதி - III

      எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  26. AICI3 ஆனது லூயி அமிலமாக செயல்படுகிறது. இக்கூற்றினை நிறுவுக.

  27. பொட்டாசியம் பெர்மாங்கனேட் பயன்களை எழுதுக 

  28. நான்முகி படிக புலத்தில், d - ஆர்பிட்டாலின் படிக புலப் பிளப்பினை குறிப்பிடும் வரைபடம் காண்க.

  29. அயனிப்படிகங்கள் ஏன் கடினமாகவும், உடையும் தன்மையினையும் பெற்றுள்ளன?

  30. HClO4 மூலக்கூறின் அமிலத்தன்மைக்கான காரணம் கூறு. ப்ரான்ஸ்டட் – லெளரி கொள்கையின் அடிப்படையில், அதன் இணை காரத்தை கண்டறிக.

  31. ஒருபடித்தான மற்றும் பலபடித்தான வினைவேக மாற்றங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?

  32. t – பியூட்டைல் ஆல்கஹாலை அமிலம் கலந்த டைகுரோமேட்டை பயன்படுத்தி கார்பனைல் சேர்மமாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்ய இயலுமா?

  33. பின்வருவனவற்றை வரிசைபடுத்துக.
    i. நீரில் கரைதிறனின் ஏறுவரிசை, C6H5NH2, (C2H5)2 NH, C2H5NH2
    ii. கார வலிமையின் ஏறுவரிசை
    a) அனிலீன், p- டொலுடின் மற்றும் p – நைட்ரோ அனிலீன்
    b) C6H5NH2, C6H5NHCH3C6H5NH2p-Cl-C6H4-NH2
    iii. வாயுநிலைமைகளில் காரவலிமையின் இறங்கு வரிசை
    (C2H5)NH2, (C2H5)NH(C2H5)3N மற்றும் NH3
    iv. கொதிநிலையின் ஏறுவரிசை  C6H5OH, (CH3)2NH, C2H5NH2
    v. pKb மதிப்புகளின் இறங்கு வரிசை C2H5NH2, C6H5NHCH3,(C2H5)2NH மற்றும் CHNH2
    vi. கார வலிமையின் ஏறுவரிசை C6H5NH2, C6H5N(CH3)2(C2H5)NH மற்றும் CHNH2
    vii. கார வலிமையின் இறங்கு வரிசை 

  34. சோப்புகள் ஏன் கடின நீரில் செயல்புரிவதில்லை ?

  35. பகுதி - IV 

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    5 x 5 = 25
    1. ஜியோலைட்டுகள் பற்றி குறிப்பு வரைக.

    2. HF ஆனது ஒரு வலிமை குறைந்த அமிலம் ஆனால் பிற ஹாலஜன்களின் இருமை அமிலங்கள் வலிமை மிக்கதாக உள்ளன ஏன் என்பதற்கான காரணம் தருக.

    1. இடைநிலைத்  தனிமங்களில் காணப்படும் பாரா காந்தத்தன்மை மற்றும் டையா காந்தத்தன்மை பற்றி எழுதுக.

    2. VB கொள்கையின் வரம்புகள் யாவை?

    1. பொதிவுத்‌திறன் என்றால் என்ன ?

    2. ஒரு வினையின் கிளர்வு ஆற்றல் 225 k Cal mol-1 மேலும் 400C ல் வினைவேக மாறிலி 1.8×10-5 s-1 எனில் அதிர்வுக் காரணி A ன் மதிப்பைக் கண்டறிக.

    1. வினைவேக மாற்றம் பற்றிய இடைநிலைச் சேர்மம் உருவாதல் கொள்கையை  ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    2. 3,3 – டை மெத்தில் பியூட்டன்  – 2 – ஆல ஐ அடர்  கந்தக  அமிலத்துடன்  வினைப்படுத்தும்  போது  டெட்ரா  மீதையல் எத்திலீன்  முதன்மை  விளைபொருளாக உருவாகிறது . தகுந்த  வினை  வழிமுறையைத்  தருக 

    1. உயிரினங்களில் லிப்பிடுகளின் செயல்பாடுகள் யாவை ?

    2. டெரிலீன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021

Write your Comment