12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 75

    பகுதி I

    25 x 3 = 75
  1. எலிங்கம் வரைபடத்திலிருந்து உற்று நோக்கி உணரப்படுபவை யாவை?

  2. காப்பர் பிரித்தெடுத்தலில் சிலிக்காவின் பங்கு என்ன?

  3. தாமிரத்தின் பயன்கள் யாவை?

  4. பின்வருவனவற்றிற்கு ஒரு உதாரணம் தருக.
    (அ) ஐகோசோஜன் 
    (ஆ) டெட்ராஜன் 
    (இ) நிக்டோஜன்
    (ஈ) சால்கோஜன் 

  5. போராக்ஸின் நீர்க்கரைசல் காரத்தன்மை உடையது. ஏன்?

  6. டைபோரேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  7. போரான் நியூட்ரான் கவர்தல் சிகிச்சை (BNCT) பற்றி குறிப்பு வரைக.

  8. எரிக்கப்பட்ட படிகாரம் என்றால் என்ன ?

  9. சிவப்பு பாஸ்பரஸ் ஆக்சிஜனுடன் எவ்வாறு வினைபுரிகிறது?

  10. ஆய்வகத்தில் ஆக்சிஜன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  11. சல்பேட்கள்/ கந்தக அமிலத்திற்கான சோதனைகளை பற்றி எழுது.

  12. Ti3+ , Mn2+ அயனியில் காணப்படும் இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கண்டறிக மேலும் அவைகளின் காந்ததிருப்பு திறன் மதிப்புகளைக் (μs) கண்டறிக.

  13. பின்வரும் ஈனிகளை அவற்றில் உள்ள வழங்கி அணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
    அ) NH3
    ஆ) en
    இ) OX2-
    ஈ) டிரைஅமினோடிரைஎத்திலமீன்
    உ) பிரிடின்

  14. ஒருபடியின் (monomer) செறிவானது 0.05 mol L-1 ஆக உள்ள ஒரு இருபடி (dimer) உருவாகும் இரண்டாம் வகை வினையின் வினைவேகம் 7.5x 10-3 mol L-1s-1 வினைவேக மாறிலியினைக் கண்டறிக.

  15. Fe3+ அயனிகள் திட்ட நிலைமைகளில் புரோமைடை புரோமினாக ஆக்ஸிஜனேற்றம் அடையச் செய்யுமா? கொடுக்கப்பட்டது: \(E^{0}_{Fe^{3+}|Fe^{2+}}=0.771\)  \(E^{0}_{Br_{2}|Br^{-}}=1.09 V\).

  16. கால்வானிக் மின்கலத்தில் நிகழும் நிகர வினை யானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
    2 Cr (s) + 3Cu2+   (aq)  → 2Cr3+ (aq) + 3Cu (s)
    மின்கல குறியீட்டை பயன்படுத்தி மின்கலத்தை விளக்குக, மே லும் அரை வினைக ளை எழுதுக.

  17. NHஅல்லது CO2 ஆகிய இரண்டில் எது கரியின் புறப்பரப்பில் எளிதில் பரப்புகவரப்படுகிறது? ஏன்?

  18. வீழ்படிவை கூழ்மக் கரைசலாக மாற்றுவதற்காக கூழ்மமாக்கி சேர்க்கப்படுகிறது. இக்கூற்றை  எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  19. இருமோல் எத்தில்மெக்னீசியம் புரோமைடுடன் மெத்தில் பென்சோயேட்டை வினைப்படுத்தி பின் அமில நீராற்பகுக்க உருவாகும் முதன்மை விளைபொருள் யாது?

  20. X மற்றும் Y ஆகியவற்றை கண்டறிக.
    \(CH_3COCH_2CH_2COOC_2H_5 \overset{CH_3MgBr}\longrightarrow X \overset{H_3O^+}\longrightarrow Y\)

  21. பின்வருவனவற்றிற்கு காரணம் கூறு
    i. அனிலீன் பிரீடல் கிராப்ட் வினைக்கு உட்படுவதில்லை
    ii. அலிபாட்டிக் அமீன்களை விட அரோமேட்டிக் அமீன்களின் டையசோனியம் உப்புகள் அதிக நிலைப்புத் தன்மை கொண்டது.
    iii. அனிலீனின் pKb மதிப்பு மெத்திலமீனை விட அதிகம்
    iv. காப்ரியல் தாலிமைடு தொகுப்பு வினை ஓரிணைய அமீன்களை தொகுப்பதற்கானது.
    v. எத்தில்மீன் நீரில் கரையும் ஆனால் அனிலீன் கரையாது.
    vi. அமைடுகளை விட அமீன்கள் அதிக காரத்தன்மை உடையது.
    vii. அரோமேட்டிக் எலக்ட்ரான்கவர் பதிலீட்டு வினைகளில் அமினோ தொகுதி o – மற்றும்  p – வழிநடத்தும் தொகுதியாக இருப்பினும்  அனிலீனின் நைட்ரோ ஏற்றம் செய்யும் வினைகளில் m – நைட்ரோ அனிலீன் கணிசமான விளைபொருளாக கிடைக்கிறது.

  22. A,B மற்றும் C ஐ கண்டறிக  \(CH_3-NO_2\overset{LiAlH_4}\longrightarrow A\overset{2CH_3CH_2Br}\longrightarrow B \overset{H_2SO_4}\longrightarrow C\)

  23. கார்போஹைட்ரேட்டுகள் பொதுவாக ஒளிசுழற்றும் தன்மையை பெ ற்றுள்ளன . ஏன்?

  24. α-சுருள் உருவாதல் பற்றி குறிப்பு வரைக

  25. மன அமைதிப்படுத்திகள் உடலில் எவ்வாறு செயல்புரிகின்றன?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Three mark Important Questions with Answer key  - 2021(Public Exam)

Write your Comment