12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 75

    பகுதி I

    25 x 3 = 75
  1. கார வேதிக் கழுவுதல் பற்றி எழுது.

  2. உலோகவியலில் வறுத்தல் தாதுவின்  உருகுநிலைக்கு குறைவான வெப்ப நிலையிலும் உருக்கி பிரித்தல் உருகு நிலையைவிட அதிக வெப்பநிலையில் நிகழ்த்துவது ஏன்?

  3. போரிக் அமிலத்தின் அமைப்பினை விளக்கு.

  4. பின்வருவனவற்றுள் போரான் எவ்வாறு வினைபுரிகிறது ?
    (i ) ஹேலஜனுடன்
    (ii ) நைட்ரஜனுடன் 
    (iii ) சோடியம் ஹைட்ராக்சைடுடன் 

  5. பாஸ்பீனின் வடிவமைப்பை பற்றி எழுது

  6. HF அமிலம் கண்ணாடி பாட்டில்களில் சேமிக்கப்படுவதில்லை. ஏன்?

  7. லாந்தனைடுகளில் ஆக்சிஜனேற்ற நிலை பற்றி எழுதுக

  8. ஒரு பொருளின் காந்ததிருப்புத் திறன் மதிப்பு 3.9 BM எனில் அதிலுள்ள தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை கணக்கிடுக 

  9. நான்முகி படிக புலத்தில், d - ஆர்பிட்டாலின் படிக புலப் பிளப்பினை குறிப்பிடும் வரைபடம் காண்க.

  10. ஓரின மற்றும் பல் இன ஈனி அணைவுச் சேர்மங்கள் பற்றி சிறு குறிப்பு வரைக.

  11. நையோபியம் என்ற தனிமம் பொருள் மைய கனசதுர அமைப்பில் படிகமாகிறது.அதன் அடர்த்தி 8.55gcm-3 மற்றும் அணுநிறை 93u எனில் அதன் அணு ஆறாம் யாது?

  12. N2O5(g) சிதைவடைந்து NO2(g) மற்றும் O2(g) ஆகியனவற்றைத் தரும் வினைகளைக் கருதுக. ஒரு குறிப்பிட்ட நிலையில் N2O5(g)ன் மறைத்தல் வேகம் 2.5x10-2 mol dm-3 s-1 எனில், NOமற்றும் O2 ஆகியனவற்றின் உருவாதல் வேகத்தின் மதிப்புகளைக் காண்க. வினையின் வினைவேகம் என்ன?

  13. ஒரு முதல் வகை வினைக்கு 99% வினை முடிவடைய ஆகும் காலம் 90% வினை முடிவடையும் காலத்தைப் போல் இரு மடங்கு என நிரூபி.

  14. தாங்கல் கரைசலின் இருவகைகள் எவை? ஒவ்வொரு வகைக்கும் உதாரணம் தருக.

  15. 0.15 M செறிவுடைய மின்பகுளி கரைசலின் மின்தடை 50 \(\Omega \). அக்கரைசலின் நியமகடத்துத்திறன் 2.4 Sm-1. அதே மின்கடத்துக் கலனை கொண்டு அளவிடப்பட்ட, 0.5N செறிவுடைய அதே மின்பகுளிக் கரைசலின் மின்தடை 480\(\Omega \)ஆகும்.0.5N செறிவுடைய மின்பகுளி கரைசலின் சமான கடத்துத்திறனை கணக்கிடுக .  

  16. அரை மின்கலம் என்றால் என்ன ? உதாரணம் தருக.

  17. பிரெளனியன்‌ இயக்கத்தின்‌ முக்கியத்துவம்‌ யாது?

  18. டிண்டால்‌ விளைவு பற்றி எழுதுக.

  19. ஆல்கஹால் மற்றும் பீனால்களை வேறுபடுத்தி அறியும் சோதனைகளை எழுதுக.

  20. எத்திலீன் டையமீனை கிளைக்கால் ஆக எவ்வாறு மாற்றுவாய் ?

  21. நவநகல்‌ வினை குறிப்பு வரைக.

  22. டையசோ தொகுதி நீங்காதிருக்கும் ஏதேனும் ஒரு வினையை எழுதுக.

  23. பின்வரும் சேர்மங்களுக்கு சாத்தியமான அனைத்து மாற்றியங்களையும் எழுதுக.
    (i ) C2H5 - NO2 
    (ii ) C3H- NO2 

  24. பார்லி சர்க்கரை என்பதன் பொருளென்ன?

  25. சுரநிவாரணி  எவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Creative Three mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment