12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் முன்னர், சல்பைடு தாதுக்களை வறுத்தலில் ஏற்படும் நன்மையினைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? 

    (a)

    CS2 மற்றும் H2S ஆகியவற்றைக் காட்டிலும் சல்பைடின் \(\Delta \)Gf0 மதிப்பு அதிகம் 

    (b)

    சல்பைடை வறுத்து ஆக்ஸைடாக மாற்றும் வினைக்கு  \(\Delta \)Gr0 மதிப்பு எதிர்க்குறியுடையது. 

    (c)

    சல்பைடை அதன் ஆக்ஸைடாக வறுத்தல் என்பது ஒரு சாதகமான வெப்ப இயக்கவியல் செயல்முறையாகும்.  

    (d)

    உலோக சல்பைடுகளுக்கு, கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த பொருத்தமான ஒடுக்கும் காரணிகளாகும். 

  2. பிஷ்ஷர் ட்ரோப்ஷ் தொகுப்பு எதனை தயாரிக்கப் பயன்படுகிறது? 

    (a)

    சிலிகோன்கள்

    (b)

    போரேன்கள்

    (c)

    ஹைட்ரோகார்பன்கள்

    (d)

    கார்போனில்கள்

  3. பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?

    (a)

    நெஸ்லர் காரணி

    (b)

    IVம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு

    (c)

    IIIம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு

    (d)

    டாலன்ஸ் வினைப்பொருள்

  4. KMnO4 எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

    (a)

    குரோமைட் இரும்பு தாது

    (b)

    பைரோலுசைட்

    (c)

    பெரஸ் சல்பைடு 

    (d)

    இரும்பு பைரைட்

  5. பின்வருவனவற்றுள் இனான்சியோமர் இணைகளை தர வல்லது எது?

    (a)

    [Cr(NH3)6][Co(CN)6]

    (b)

    [Co(en)2Cl2]cl

    (c)

    [pt(NH3)4][ptcl4]

    (d)

    [Co(NH3)4Cl2]NO2

  6. எளிய கனசதுர அமைப்பில் மொத்த கனஅளவில் அணுக்களால் அடைத்துக் கொள்ளப்படும் கனஅளவின் விகிதம் ___________

    (a)

    \(\left( \frac { \pi }{ 4\sqrt { 2 } } \right) \)

    (b)

    \(\left( \frac { \pi }{ 6 } \right) \)

    (c)

    \(\left( \frac { \pi }{ 4 } \right) \)

    (d)

    \(\left( \frac { \pi }{ 3\sqrt { 2 } } \right) \)

  7. வேதி வினையில் வினைவேக மாற்றி பங்கேற்றால், வினையின் இறுதியில் அது ______________

    (a)

    சிதைவடைகிறது 

    (b)

    மீளவும் பெறப்படுகிறது 

    (c)

    வேதி மாற்றமடைகிறது 

    (d)

    புதிய பொருளாக மாறுகிறது 

  8. சம கனஅளவுள்ள 0.1M NaOH மற்றும் 0.01M HCl கரைசல்களை ஒன்றாக கலக்கும் போது கிடைக்கும் கரைசலின் pH மதிப்பு என்ன?

    (a)

    2.0

    (b)

    3

    (c)

    7.0

    (d)

    12.65

  9. 25oC வெப்பநிலையில் 1MY மற்றும் 1MZ- ஆகியவற்றை கொண்டுள்ள கரைசலின் வழியே 1 atm அழுத்த த்தில் X எனும் வாயு குமிழிகள் மூலமாக  செலுத்த ப்படுகிறது. அவற்றின் ஒடுக்க மின்னழுத்தங்கள் Z>Y>X எனில்,____________

    (a)

    Y ஆனது X ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும் ஆனால் Z ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யாது

    (b)

    Y ஆனது Z ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும் ஆனால் X ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யாது

    (c)

    Y ஆனது X மற்றும் Z இரண்டையும் ஆக்ஸிஜனேற்றம் செய்யும்

    (d)

    Y ஆனது X மற்றும் Z இரண்டையும் ஒடுக்குமடையச் செய்யும்

  10. மின்புலத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு கூழ்ம நிலை அமைப்பிலுள்ள துகள்கள்  எதிர்மின்முனையை நோக்கி  நகருகின்றன  கூழ்மக்கரைசலின் திரிதல்   நிகழ்வானது K2SO 
    (i) Na3PO4  (ii)K4[Fe(CN)6]  (iii)மற்றும் NaCl  (iv) ஆகியவற்றைக் கொண்டு  ஆய்வு செய்யப்படுகிறது. அவற்றின் வீழ்படிவாகும் திறன் _________

    (a)

    II > I>IV > III

    (b)

    III > II > I > IV

    (c)

    I > II > III > IV

    (d)

    இவற்றில் எதுவுமில்லை


  11. என்ற வினையானது எதற்கு ஒரு  எடுத்துக்காட்டாகும்.

    (a)

    உர்ட்ஸ் வினை

    (b)

    வளையமாதல் வினை

    (c)

    வில்லியம்சன் தொகுப்பு  முறை 

    (d)

    கோல்ட் வினை 

  12. பின்வரும் வினைகளில் எதில் புதிய கார்பன் – கார்பன் பிணைப்பு உருவாகவில்லை ?

    (a)

    ஆல்டால் குறுக்கம்

    (b)

    பிரீடல் கிராஃப்ட் வினை

    (c)

    கோல்ப் வினை

    (d)

    உல்ஃப் கிஷ்னர் வினை

  13. என்ற சேர்மத்தின் IUPAC பெயர் ___________

    (a)

    3 – டைமெத்தில் அமினோ – 3 – மெத்தில் பென்டேன்

    (b)

    3 (N,N – ட்ரை எத்தில்) – 3- அமினோ பென்டேன்

    (c)

    3 – N,N – ட்ரை மெத்தில் பென்டமீன்

    (d)

    3 – (N,N – டைமெத்தில் அமினோ ) – 3- மெத்தில் பென்டேன்

  14. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று உடலில் தயாரிக்கப்படாதது?

    (a)

    DNA

    (b)

    நொதிகள்

    (c)

    ஹார்மோன்கள்

    (d)

    வைட்டமின்கள்

  15. தூக்கத்தை தூண்டும் மருந்துப் பொருளாக பயன்படுவது ___________

    (a)

    பாராசிட்டமால்

    (b)

    பைதயோனால்

    (c)

    குளோரோகுயின்

    (d)

    ஈக்வனில்

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. கரி மற்றும் CO ஆகிய இரண்டினுள் ZnO வை ஒடுக்க, சிறந்த ஒடுக்கும் காரணி எது? ஏன்? 

  18. பாஸ்பீனின் ஒடுக்கும் பண்பு பற்றி எழுதுக

  19. ஆக்டினாய்டுகள் என்றால் என்ன? மூன்று உதாரணங்கள் தருக.

  20. அணைவுப் பன்முகி என்றால் என்ன?

  21. முனைவுற்ற மூலக்கூறு படிகங்கள் என்றால் என்ன?

  22. ஒரு வேதிவினையின் வேகத்தை வினைவேக மாற்றி எவ்வாறு பாதிக்கின்றது என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  23. கால்வானிக் மின்கலத்தில் நேர்மின்முனையானது எதிர்குறி கொண்டதாகவும் எதிர்மின்முனையானது நேர்குறி கொண்டதாகவும் கருதப்படுகிறது ஏன்?

  24. பின்வருவனவற்றை அவற்றின் கொதிநிலை மதிப்பின் அடிப்படையில் ஏறுவரிசையில் எழுதுக. மேலும் தாங்கள் வரிசை படித்தியமைக்கு உரிய காரணம் தருக.
    i. பியூட்டன் -2-ஆல், பியூட்டன் -1- ஆல், 2 – மெத்தில் புரப்பன்-2-ஆல்
    ii. புரப்பன்  -1 -ஆல், புரப்பன் – 1,2,3 – ட்ரைஆல், புரப்பன் – 1,3 – டை ஆல், புரப்பன் -2-ஆல்.

  25. ஃபீனைல் கீட்டோன்களைத் தயாரித்தல்?

    1. பகுதி - III

      எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  26. பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
    அ. B (OH)3 + NH3 \(\longrightarrow\)
    ஆ. Na2B4O+ H2SO4H2O\(\longrightarrow\)
    இ. B2H+ 2NaOH + 2H2O\(\longrightarrow\)
    ஈ. B2H+ CH3OH\(\longrightarrow\)
    உ. BF+ 9 H2O\(\longrightarrow\)
    ஊ. HCOOH + H2SO4\(\longrightarrow\)
    எ. SiCl4 + NH3\(\longrightarrow\)
    ஏ. SiCl4 + C2H5OH\(\longrightarrow\)
    ஐ. B + NaOH\(\longrightarrow\)
    ஒ. H2B4O7 

  27. இடைநிலைக்  தனிமங்கள் என்பவை யாவை ? இடைநிலைத் தனிமங்கள் பண்புகள் இரண்டினைக் குறிப்பிடுக.

  28. VBT கொள்கையைப்  பயன்படுத்தி \(\left[ CoCl_{ 4 } \right] ^{ 2- }\)அயனியில் காணப்படும்  தனித்த இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கையினைத் தீர்மானிக்கவும்.

  29. அயனிப்படிகங்கள் ஏன் கடினமாகவும், உடையும் தன்மையினையும் பெற்றுள்ளன?

  30. HClO4 மூலக்கூறின் அமிலத்தன்மைக்கான காரணம் கூறு. ப்ரான்ஸ்டட் – லெளரி கொள்கையின் அடிப்படையில், அதன் இணை காரத்தை கண்டறிக.

  31. ஒரு திரிதல் சோதனையில் , (X)  எனும் கூழ்மத்தின் 10  mL    கரைசலானது  வாலைவடிநீர் , மற்றும்  0.1M செறிவுடைய AB எனும் மின்பகுளிக் கரைச ல் ஆகிவற்றை சேர்த்து அதன் கனஅளவு 20 mL ஆக்கப்படுகிறது. 6.6 mL AB கரைசலைக் கொண்டுள்ள  அனை த்து கரைசல்களும் 5 நிமிடங்களுக்குள்  வீழ்படிவாக்கப்பட்டன என கண்ட றியப்பட்டுள்ள து.கூழ்மம் (X) க்கு AB யின் துகள்திரட்டு மதிப்பு என்ன?

  32. இருமோல் எத்தில்மெக்னீசியம் புரோமைடுடன் மெத்தில் பென்சோயேட்டை வினைப்படுத்தி பின் அமில நீராற்பகுக்க உருவாகும் முதன்மை விளைபொருள் யாது?

  33. டை எத்திலமீனை பின்வரும் சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்?
    i) N, N – டை எத்தில் அசிட்டமைடு
    ii) N – நைட்ரசோடை எத்திலமீன்

  34. சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் தயாரிக்க பயன்படும் இனிப்புச் சுவையூட்டி எது?

  35. பகுதி - IV 

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    5 x 5 = 25
    1. இரண்டாம் வரிசை கார உலோகம் (A) ஆனது (B) என்ற போரானின் சேர்மத்துடன் வினை புரிந்து (C) என்ற ஒடுக்கும் காரணியினைத் தருகிறது. A, B மற்றும் C ஐக் கண்டறிக.

    2. பாஸ்பைனின் வேதிப் பண்புகளை விளக்கும் இரு சமன்பாடுகளைத் தருக.

    1. பின்வருவனவற்றை பற்றி எழுது.
      (i ) லாந்தனாய்டுகளின் எலக்ட்ரான் அமைப்பு 
      (ii )ஆக்டினாய்டுகளின் எலக்ட்ரான் அமைப்பு 

    2. அணைவுச் சேர்மங்களில் காணப்படும் ஒளி சுழற்ச்சி மாற்றியங்களை விளக்குக.

    1. எளிய கனசதுர அமைப்பின் பொதிவு பின்னத்தை கணக்கிடுக.

    2. ஒரு வினையின் வினைவேக மாறிலி k ஆனது வெப்பநிலையினைப் பொருத்து பின்வருமாறு அர்ஹினீயஸ் சமன்பாட்டின் படி மாற்றமடைகிறது.
      \(log\quad K=log\quad A-\frac { { E }_{ a } }{ 2.303R } \left( \frac { 1 }{ T } \right) \)
      இங்கு Ea என்பது கிளர்வு ஆற்றல் log K Vs \(\frac{1}{T}\) வரைபடம் வரையும் போது -400K சாய்வு உடைய நேர்கோடு பெறப்படுகிறது. கிளர்வு ஆற்றலைக் கணக்கிடுக.

    1. வினைவேக மாற்றம் பற்றிய பரப்பு கவர்தல் கொள்கையை விவரி. [அல்லது ] 
      பலபடித்தான விளைவேகமாற்று விளையில்‌ பரப்பு கவர்தலின் பங்கு என்ன?

    2. பின்வரும் வினைகளை நிறைவு செய்க.



    1. வைட்டமின்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?

    2. கருத்தடை மருந்துகள் என்றால் என்ன ? எடுத்துக்காட்டுகள்தருக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Public Exam Model Question Paper with Answer key  - 2021

Write your Comment