12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

    பகுதி I

    50 x 2 = 100
  1. இரும்பை அதன் தாதுவான Fe2O3 யிலிருந்து பிரித்தெடுப்பதில் சுண்ணாம்புக் கல்லின் பயன்பாடு யாது? 

  2. கரி மற்றும் CO ஆகிய இரண்டினுள் ZnO வை ஒடுக்க, சிறந்த ஒடுக்கும் காரணி எது? ஏன்? 

  3. \(A{ g }_{ 2 }O\) மற்றும் \(HgO\)  சுய ஒடுக்கமடைகின்றன .ஏன் ?

  4. \(A{ g }_{ 2 }O\)  மற்றும் \(HgO\) சுய ஒக்கமடைகின்றன.ஏன் ?

  5. பின்வரும் தாதுக்களை கவனித்து, அதில் காந்த பிரிப்பு மூலம் அடர்பிக்கப்படும் தாதுக்களை எழுதுக.
    \(FeO,FeS,Fe_{ 2 }O_{ 3\ },F{ e }_{ 3 }O_{ 4 },FeC{ O }_{ 3 },CuFe{ S }_{ 2 },ZnO,ZnS,Fe{ S }_{ 2 }.\quad \)

  6. கார்பனை உதாரணமாக கொண்டு p தொகுதி தனிமங்களில் காணப்படும் புறவேற்றுமை வடிவங்களை விளக்குக.

  7. ஃபிஷ்ஷர்-ட்ரோப்ஷ் முறை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  8. CO மற்றும் COன் வடிவங்களைத் தருக.

  9. NaOH உடன் டைபோரேனின் வினை யாது? 

  10. பொட்டாஷ் படிகாரத்தின் பயன்கள் எழுதுக .

  11. சால்கோஜன்சன் p-தொகுதி தனிமங்களாகும் காரணம் தருக.

  12. பின்வரும் சேர்மங்களில் ஹாலஜன்களின் ஆக்சிஜனேற்ற நிலையினைக் குறிப்பிடுக.
    அ) OF2
    ஆ) O2F2
    இ) Cl2O3
    ஈ) I2O4

  13. ஹீலியத்தின் பயன்களைத் தருக.

  14. ஓசோனின் ஆக்சிஜனேற்ற பண்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு தருக.

  15. \(XeOF_{ 2 }\) -ல் காணப்படும் இனக்கலப்பு யாது? அதன் மூலக்கூறு அமைப்பை தருக.

  16. பாஸ்பரஸ் அமிலத்திலிருந்து எவ்வாறு பாஸ்பீன் தயாரிக்கப்படுகிறது ?

  17. உள்இடைநிலை தனிமங்கள் என்றால் என்ன?

  18. Gd3+ அயனியானது நிறமற்றது. ஏன்?

  19. பொட்டாசியம் டைகுரோமேட் தயாரித்தலை விளக்குக.

  20. பின்வரும் பெயருடைய அணைவுச் சேர்மங்களுக்கு உரிய வாய்ப்பாட்டினைத் தருக.
    அ) பொட்டாசியம் ஹெக்சாசயனிடோபெர்ரேட் (II)
    ஆ) பென்டாகார்பனைல் இரும்பு (o)
    இ) பென்டாஅம்மைன்நைட்ரிடோ -K-N-கோபால்ட் (III) அயனி 
    ஈ) ஹெக்ஸாஅம்மைன்கோபால்ட் (III) சல்பேட் 
    உ) சோடியம் டெட்ராபுளூரிடோடை ஹைராக்ஸிடோகுரமேட் (III)

  21. பின்வரும் அணைவுச் சேர்மங்களை அவைகளின் மோலார் கடத்துத் திறனின் ஏறு வரிசையில் எழுதுக.
    (i) Mg[Cr(NH3)(Cl)5]
    (ii) Cr(NH3)5Cl]3[CoF6]2
    (iii) [Cr(NH3)3Cl3]

  22. [Cr(NH3)6]3+  ஆனது ஏன் பாராகாந்தத் தன்மையுடையது எனவும்,[Ni(CN)4]2- ஆனது ஏன் டையாகாந்தத் தன்மையுடையது எனவும் VB கொள்கையின் அடிப்படியில் விளக்குக.

  23. \(\left[ Fe\left( CN \right) _{ 6 } \right] ^{ 4- }\) மற்றும் \(\left[ Fe\left( { H }_{ 2 }O \right) _{ 6 } \right] ^{ 2+ }\)ஆகியவற்றின் நீர்க்கரைசல்கள் வெவ்வேறு நிறமுடையது ஏன் ? 

  24. படிக திண்மங்களை படிக வடிவமற்ற திண்மங்களிலிருந்து வேறுபடுத்துக. 

  25. பின்வரும் திண்மங்களை வகைப்படுத்துக.
    அ) P4 ஆ) பித்தளை
    இ) வைரம் ஈ) NaCl உ) அயோடின்

  26. புள்ளி குறைபாடுகள் என்றால் என்ன?

  27. x+2y\(\rightarrow \) விளைபொருள் [x] = [y] = 0.2M என்ற வினையின் வினைவேகமானது [x] = [y] = 0.2 M எனும் போது, 400K ல் வினைவேகம் 2x10-2S-1, இவ்வினையின் ஒட்டுமொத்த வினைவகையைக் கண்டறிக.

  28. \(\rightarrow \)என்ற பூஜ்ய வகை வினைக்கான தொகைப்படுத்தப்பட்ட வேக விதியினை வருவிக்க.

  29. அடிப்படை வினைகள் என்றால் என்ன? ஒரு வினையின் வினை வகை மற்றும் மூலக்கூறு எண் ஆகியனவற்றிற்கு இடையேயான வேறுபாடுகள் யாவை?

  30. முதல் வகை வினையின் வரைபட விளக்கத்தினைத் தருக.

  31. A2 +B2 \(\longrightarrow \) 2 AB  என்ற பொதுவான வேதிவினையில் வினைபடு பொருட்களின் வினை நிகழ் ஒருங்கமைவு மற்றும் வின நிகழா ஒருங்கமைவு  மாதிரி வரைபடத்தை வரைக.

  32. ஒரு நீர் மாதிரியில் உள்ள ஹைட்ராக்சைடு அயனிச் செறிவு 2.5\(\times\)10-6M என கண்டறியப்பட்டுள்ளது. கரைசலின் தன்மையை கண்டறிக.

  33. pH வரையறு.

  34. HCN இன் Ka மதிப்பு 10-9 எனில் 0.4M HCN கரைசலின் pH மதிப்பு என்ன?

  35. Ca3(PO4)2 இன் கரை திறன் பெருக்கத்திற்கான சமன்பாட்டை எழுதுக.

  36. 0.001M HCl கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக

  37. பின்வரும் கரைசல்களை அவற்றின் நியம கடத்துத்திறன்களின் இறங்குவரிசையில் வரிசைப்படுத்துக.
    i) 0.01M KCl
    ii) 0.005M KCl
    iii) 0.1M KCl
    iv) 0.25 M KCl
    v) 0.5 M KCl

  38. ஒரு மின்கடத்துக் கலனிலுள்ள இரண்டு பிளாட்டின மின்முனைகளுக்கு இடைப்பட்ட தூரம் 1.5 செ.மீ. ஒவ்வொரு மின்முனையும் குறுக்குப் பரப்பும் 4.5 ச.செ.மீ என்க. 0.5 N மின்பகுளிக் கரைசலுக்கு மின்கலத்தை பயன்படுத்தி கண்டறியப்பட்ட மின்தடை மதிப்பு 15 Ω எனில், கரைசலின் நியம கடத்துத்திறன் மதிப்பை காண்க.

  39. ஒரு ஒற்றை -ஒற்றை இணைதிற மின்பகுளிக்ககான  பை - ஹீக்கல் மற்றும் ஆள்சாகர் சமன்பாட்டினை எழுதுக. 

  40. ஜியோலைட்டுகள் வினைவேக மாற்றத்தின் சில சிறப்புப் பண்புகளை விவரி.

  41. MnO2 முன்னிலையில் KClO3 யின் வெப்பச்சிதைவு வினை பின்வருமாறு நிகழ்கிறது.

  42. பால்மமாக்கல்  ‌மற்றும்  பால்மச்‌சிதைவு வரையறு.

  43. 1 – மீத்தாக்ஸிபுரப்பேனை  அதிக அளவு HI உடன் வெப்படுத்தும் போது உருவாகும் விளைபபொருட்களை  கண்டறிக. இவ்வினையின் வினைவழிமுறையினை குறிப்பிடுக.

  44. பின்வருவனவற்றை அவற்றின் கொதிநிலை மதிப்பின் அடிப்படையில் ஏறுவரிசையில் எழுதுக. மேலும் தாங்கள் வரிசை படித்தியமைக்கு உரிய காரணம் தருக.
    i. பியூட்டன் -2-ஆல், பியூட்டன் -1- ஆல், 2 – மெத்தில் புரப்பன்-2-ஆல்
    ii. புரப்பன்  -1 -ஆல், புரப்பன் – 1,2,3 – ட்ரைஆல், புரப்பன் – 1,3 – டை ஆல், புரப்பன் -2-ஆல்.

  45. LiAIH4 ஐப் பயன்படுத்தி பெனட் -2-ஈன் -1-ஆல் ஐத் தயாரிக்க உதவும் தகுந்த கார்பனைல்  சேர்மத்தினை  பரிந்துரைக்க.

  46. ஃபார்மால்டிஹைடையும் கீட்டோன்களை இம்முறையில் தயாரிக்க ?

  47. ஃபீனைல் கீட்டோன்களைத் தயாரித்தல்?

  48. புரதங்களின் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை அமைப்புகளை வேறுபடுத்துக.

  49. செல்லில் காணப்படும் RNA வின் வகைகள் யாவை ?

  50. தொகுப்பு டிடர்ஜெண்ட்கள் பற்றி குறிப்பு வரைக .

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Two mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment