12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 75

    பகுதி I

    25 x 3 = 75
  1. துத்தநாகத்தின் பயன்களைக் கூறுக. 

  2. பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
    அ. B (OH)3 + NH3 \(\longrightarrow\)
    ஆ. Na2B4O+ H2SO4H2O\(\longrightarrow\)
    இ. B2H+ 2NaOH + 2H2O\(\longrightarrow\)
    ஈ. B2H+ CH3OH\(\longrightarrow\)
    உ. BF+ 9 H2O\(\longrightarrow\)
    ஊ. HCOOH + H2SO4\(\longrightarrow\)
    எ. SiCl4 + NH3\(\longrightarrow\)
    ஏ. SiCl4 + C2H5OH\(\longrightarrow\)
    ஐ. B + NaOH\(\longrightarrow\)
    ஒ. H2B4O7 

  3. கந்தக அமிலம் ஒரு நீர் நீக்கும் காரணி - என்பதனைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

  4. Ce4+ மற்றும் Co2+ ன் எலக்ட்ரான் அமைப்புகளைத் தருக.

  5. லாந்தனாய்டுகளையும், ஆக்டினாய்டுகளையும் ஒப்பிடுக.

  6. இணைப்பு மாற்றியம் என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  7. Fcc அலகுகூட்டில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கையினைக் கணக்கிடுக.

  8. ii) 500k வெப்பநிலையில், X\(\rightarrow \)விளைபொருள் என்ற ஒரு முதல் வகை வினையின் அரை வாழ் காலம் 6.932 x 104s at 500K வெப்பநிலையில் x ஐ வெப்பப்படுத்தும் போது 100 நிமிடங்களில், அது எவ்வளவு சதவீதம் சிதைவடிந்திருக்கும்? (e0.06 = 1.06)

  9. ஒருபடியின் (monomer) செறிவானது 0.05 mol L-1 ஆக உள்ள ஒரு இருபடி (dimer) உருவாகும் இரண்டாம் வகை வினையின் வினைவேகம் 7.5x 10-3 mol L-1s-1 வினைவேக மாறிலியினைக் கண்டறிக.

  10. பின்வரும் வினைகளில் வினைவகையைக் கண்டறிக
    (i) இரும்பு துருப்பிடித்தல்
    (ii) 92U238 ன் கதிரியக்கச் சிதைவு
    (iii) 2A +3B \(\rightarrow \)விளைபொருள்; வினைவேகம் = K [A]1/2 [B]2

  11. நீரின் அயனிப் பெருக்கம் வரையறு. அறை வெப்ப நிலையில் அதன் மதிப்பை தருக.

  12. 1. 0.20 மோல் லிட்டர்-1 சோடியம் அசிட்டேட் மற்றும் 0.18 மோல் லிட்டர் -1 அசிட்டிக் அமிலம் ஆகியவை கலந்துள்ள ஒரு தாங்கல் கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக. அசிட்டிக் அமிலத்தின் Ka மதிப்பு \(1.8\times10^{-5}\).

  13. 1.608A அளவுள்ள மின்னோட்டமானது 250 mL கனஅளவுள்ள 0.5M காப்பர் சல்பேட் கரைசல் வழியே 50 நிமிடங்களுக்கு செலுத்தப்படுகிறது. கனளவு மாறாமல் உள்ளது  எனவும் மின்திறன் 100% எனவும் கருதி மின்னாற்பகுத்தல் முடிந்த பிறது மீதமுள்ள கரைசலில் Cu2+ அயனிச் செறிவை கணக்கிடுக

  14. M1 மற்றும் M2 ஆகிய இரண்டு உலோகங்களின் ஒடுக்க மின்னழுத்தங்கள் முறையே \(E^{0}_{M^{2+}_{1}|M_{1}}\)= -2.3 V மற்றும் \(E^{0}_{M^{2+}_{1}|M_{1}}\)=0.2 V. இவை இரண்டில் எந்த ஒன்று இரும்பின் புறப்பரப் பின் மீது பூசுவதற்கு சிறந்தது  கொடுக்கப்பட்டுள்ளது \(E^{0}_{Fe^{2+}|Fe}\)= -0.44 V

  15. 2 ஆம்பியர் மின்னோட்டத்தைக் கொண்டு, சில்வர் நைட்ரேட் கரைசலானது 20  நிமிடங்களுக்கு மின்னாற்பகுக்கப்படுகிறது எனில், எதிர்மின்முனை யில் வீழ்ப டிவாகும் சில்வரின் நிறையை கணக்கிடுக.

  16. கூழ்மம் மற்றும் களி ஆகிய்வற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?

  17. NH3, CH3 O− போன்ற கருக்கவர் பொருட்களை ஆல்கஹால்களின் கருக்கவர் பதிலீட்டு வினைக்கு நாம் பயன்படுத்த இயலுமா?

  18. 4 – மெத்தில் பென்ட் -2- ஈன் -1- ஆல் ஐ தரும் ஆல்டிஹைடு, கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் எஸ்டர் ஆகியனவற்றின் வடிவமைப்புகளைத் தருக.

  19. X மற்றும் Y ஆகியவற்றை கண்டறிக.
    \(CH_3COCH_2CH_2COOC_2H_5 \overset{CH_3MgBr}\longrightarrow X \overset{H_3O^+}\longrightarrow Y\)

  20. பின்வரும் வினையை நிரப்புக.

  21. ஓரிணைய, ஈரிணைய, மூவிணைய அமீன்களை எவ்வாறு வேறுபடுத்தி அறிவாய்?

  22. A,B மற்றும் C ஐ கண்டறிக  \(CH_3-NO_2\overset{LiAlH_4}\longrightarrow A\overset{2CH_3CH_2Br}\longrightarrow B \overset{H_2SO_4}\longrightarrow C\)

  23. பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க

  24. கிளைசீன் மற்றும் அலனின் ஆகியவற்றிலிருந்து உருவாக வாய்ப்புள்ள அனைத்து டைபெப்டைடுகளின் வடிவங்களையும் வரைக.

  25. மன அமைதிப்படுத்திகள் உடலில் எவ்வாறு செயல்புரிகின்றன?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Three mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment