12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி I

    25 x 5 = 125
  1. தங்கத்தாது எவ்வாறு சயனைடு வேதிக் கழுவுதல் முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது என்பதை விவரி . 

  2. P -தொகுதி தனிமங்களின் முதல் தனிமங்களின் முரண்பட்ட பண்புகளை  எழுதுக.

  3. கந்தகத்தின் ஆக்சோ அமிலங்களின் வடிவமைப்புகளை எழுதுக

  4. கரு ஊதா நிறம் கொண்ட மாங்கனீசு சேர்மம் (A) சூடுபடுத்தும்போது சிதைவடைந்து ஆக்சிஜனுடன் சேர்மம் (B) மற்றும் (C) ஐ தருகிறது. சேர்மம் (C) KOH உடன் பொட்டாசியம் நைட்ரேட் முன்னிலையில் வினைபுரிந்து சேர்மம் (B) ஐத் தருகிறது. அடர் H2SO4 உடன் NaCl சேர்ந்து சேர்மம் (C) ஐ சூடுபடுத்தும் போது குளோரின் வாயு வெளியேறுகிறது. சேர்மம் (D) உருவாகிறது சேர்மங்கள் A, B, C, D ஐ கண்டறிந்து வினைகளைத் தருக. 

  5. காப்பர் சல்பேட்டின் நீர்க்கரைசலுடன், திரவ அம்மோனியாவைச் சேர்ப்பதால் உருவாகும் அணைவு அயனி யாது?

  6. VBT ன் வரம்புகள் யாவை ?

  7. ஷாட்கி குறைபாட்டினை விளக்குக.

  8. X மற்றும் Y ஆகிய அணுக்கள் bcc படிக அமைப்பினை உருவாக்குகின்றன. கனச்சதுரத்தின் மூலையில் X அணுக்களும் அதன் மையத்தில் Y அணுவும் இடம் பெறுகிறது. அச்சேர்மத்தின் வாய்ப்பாடு என்ன?

  9.  படிகங்களின்‌ குறைபாடுகளை எழுதுக.

  10. ஒரு வினையின் கிளர்வு ஆற்றல் 225 k Cal mol-1 மேலும் 400C ல் வினைவேக மாறிலி 1.8×10-5 s-1 எனில் அதிர்வுக் காரணி A ன் மதிப்பைக் கண்டறிக.

  11. வினைவேகத்தை பாதிக்கும் காரணிகளை விளக்குக.

  12. 0.150 L கனஅளவுடைய 0.1M Pb(NO3)2 மற்றும் 0.100 L கனஅளவுடைய 0.2M NaCl கரைசல் ஆகியவற்றை ஒன்றாக கலக்கும் போது வீழ்படிவு உருவாகுமா? \(K_{sp} (PbCl_{2})=1.2\times10^{-5}\).

  13. மோலார் கரைதிறன் மதிப்பிலிருந்து கரைதிறன் பெருக்க மதிப்பு எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது.

  14. H2 - O2 எரிபொருள் மின்கலத்தின் செயல்பாடுகளை விளக்குக.

  15. கால்வானிக்‌ மின்கலங்களில்‌ உப்புப்பாலத்தின்‌ பங்கு என்ன?

  16. நானோ வினைவேக மாற்றம்‌ என்றால்‌ என்ன? உதாரணம்‌ தருக.

  17. பின்வருவனவற்றுள் இருந்து பீனாலை எவ்வாறு தயாரிப்பாய் ?
    i) குளோரோபென்சின்        
    ii) ஐசோபுரப்பைல் பென்சீன்

  18. கீழ்கண்ட மாற்றங்களை எவ்வாறு நிகழ்த்துவாய் ?
    i ) பீனால்  \(\longrightarrow \) சாலிசிலால்டிஹைடு 
    ii ) பீனால்\(\longrightarrow \) பீனால்ப்தலீன் 
    iii ) கிளைகால் \(\longrightarrow \) 1, 4 டையாக்சேன் 

  19. பின்வரும் வினையில் A, B, C மற்றும் D ஆகியவற்றை கண்டறிக.
    எத்தனாயிக் அமிலம் \(\overset{SOCl_2}\longrightarrow A\overset{Pd/BaSO_4}\longrightarrow B\overset{NaOH}\longrightarrow C\overset{\Delta}\longrightarrow D\)

  20.  போபஃப்‌ விதியை எடுத்துக்காட்டுடன்‌ விளக்கு.

  21. பின்வருவனவற்றுள் என்ன நிகழும்
    i. 2 – நைட்ரோ புரப்பேனை HCl உடன் கொதிக்க வைக்கும் போது 
    ii. நைட்ரோ பென்சீன் வலிமையான அமில ஊடகத்தில் மின்னாற் ஒடுக்குதல்
    iii. மூவிணைய பியூட்டைலமீனை KMnO4 உடன் ஆக்சிஜனேற்றம் செய்தல்
    iv. அசிட்டோன் ஆக்சைமை ட்ரைபுளூரோ பெராக்சி அசிட்டிக் அமிலம் கொண்டு ஆக்சிஜனேற்றம் செய்தல்

  22. C4H9NO2 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினை உடைய நைட்ரோ சேர்மத்தின் மாற்றியங்கள் பட்டியலிடு. 

  23.  குளுகோஸின் வளைய அமைப்பை பற்றி எழுதுக 

  24. பல்லின பலபடிகள் குறித்து குறிப்பு வரைக.

  25. பேக்கலைட் தயாரித்தல் மற்றும் பயன்களை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Five mark Important Questions with Answer key - 2021(Public Exam)

Write your Comment