12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி-I 

    25 x 5 = 125
  1. விகிதமுறு எண்களைக் கொண்டு அருவமாக்க தரவு வகையை உருவமைப்பு செய்தலை பற்றி விரிவாக எழுதுக.

  2. தேர்ந்தெடுப்பு வரிசையாக்கம் நெறிமுறையை விளக்கமாக எழுதுக

  3. கீழேகாணும் நிரலின் வெளியீட்டை எழுதவும்.
    x=20
    x+=20
    print ("The x +=20 is =",x)
    x-=5
    print ("The x-=5 is =",x)
    x*=5
    print ("The x*=5 is =",x)
    x/=2
    print ("The x/=2 is =",x)
    x%=3
    print ("The x%=3 is =",x)
    x**=2
    print ("The x**=2 is =",x)
    x//=3
    print ("The x//=3 is =",x)
    #program End

  4. கீழ்க்காணும் அமைப்பில் எண்களை அச்சிடுவதை விளக்கும் நிரலை எழுதுக.

    1 2
    1 2 3
    1 2 3 4
    1 2 3 4 5

  5. பைத்தானில் பயன்படுத்தப்படும் செயலுருப்புகளை பற்றி விளக்கமாக எழுதுக.

  6. இரண்டு எண்களின் HCF கண்டுபிடிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

  7. For மடக்கையை பயன்படுத்தி உறுப்புகளை எவ்வாறு அணுகுவாய் என்பதை எ.கா. மூலம் விளக்குக.

  8. remove ( ), Clear ( ), Pop ( ) செயற்கூறுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  9. பொருள்களின் விலையை List-ல் பெற்று, அனைத்து விலைகளின் கூட்டுத்தொகை,பெருக்கற்தொகை மற்றும் சராசரியைக் கண்டறியும் பைத்தான் நிரலை எழுதுக.

  10. பைபோனாசி வரிசையை உருவாக்கி அதை List-ல் சேமிப்பதற்கான நிரலை எழுதுக. பிறகு அனைத்து மதிப்புகளின் கூட்டுத்தொகையைக் கண்டறிக. 

  11. செயற்கூற்றைப் பயன்படுத்தி, வட்டத்தின் ஆரத்தை செயற்கூறுக்கு அளபுருவாக அனுப்பி, வட்டத்தின் பரப்பு மற்றும் சுற்றளவை திருப்பி அனுப்புவதற்கான நிரலை எழுதுக.

  12. இனக்குழுவைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட எண் நேர்மறை எண்ணா அல்லது எதிர்மறை எண்ணா என்று சோதித்து அச்சிடும் பைத்தான் நிரலை எழுதுக.

  13. உன்னுடைய பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்களை பதிவு செய்து, புத்தகங்களின் பட்டியலை காட்டும் பைத்தான் நிரலை எழுதுக.

  14. சரத்தை உள்ளீடாகப் பெற்று, அதில் எத்தனை பெரிய எழுத்துக்கள், சிறிய எழுத்துக்கள், உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் மற்றும் இடைவெளிகள் உள்ளன என்று கண்டறியும் பைத்தான் நிரலை எழுதுக. 

  15. ALTER கட்டளைப் பற்றி விரிவாக எழுதுக

  16. பின்வருவன பற்றி விரிவாக எழுதுக
    (i) TRUNCATE கட்டளை
    (ii) DROP TABLE கட்டளை

  17. பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழி கட்டளைகள் பற்றி விவரி.

  18. பைத்தானில் உள்ள CSV.reader ( ) என்ற செயற்கூறு மூலம் கோப்பினை படிக்கும் நிரலை எழுதுக.

  19. பயனரால் வரையறுக்கப்பட்டுள்ள பிரிப்பானைக் கொண்டுள்ள '\(_{ | }^{ | }\)' கொண்டு CSV கோப்பினை படிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.

  20. CSV கோப்பின் அனைத்து வரிசையில் உள்ள மதிப்புகளையும் பட்டியலாக சேமிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.

  21. வரிமுறிப்பானுடன் கூடிய CSV கோப்பினை அறியும் பைத்தான் நிரலை எழுதுக,

  22. இயங்கு நேரத்தில் தரவினை பெற்று CSV கோப்பினில் எழுதும் பைத்தான் நிரலை எழுதுக.

  23. SQL துணைநிலை கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக

  24. Matplotlib யை பயன்படுத்தும் pyplot வகைகளை விரிவாக விவரி.

  25. வட்ட வரைபடம் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil MediumComputer Science Reduced Syllabus Creative Five Mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment