மாதிரி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 48

    பகுதி I

    16 x 3 = 48
  1. அலுமினியத்தின் மின்னாற் உலோகவியலை விளக்குக. 

  2. ஹைட்ரோ போரோ ஏற்ற வினை பற்றி குறிப்பு வரைக.

  3. கந்தக அமிலம் ஒரு நீர் நீக்கும் காரணி - என்பதனைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

  4. Fe3+ மற்றும் Fe2+ல் எது அதிக நிலைப்புத் தன்மை உடையது. ஏன்?

  5. இணைப்பு மாற்றியம் என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  6. AAAA, ABABA மற்றும் ABC ABC வகை முப்பரிமாண நெருங்கிப் பொதிந்த அமைப்புகளை தகுந்த படத்துடன் விளக்குக.

  7. அர்ஹீனியஸ் சமன்பாட்டினை எழுதி அதில் இடம் பெற்றுள்ளனவற்றை விளக்குக.

  8. 50ml கனஅளவுடைய 0.025M KOH கரைசலுடன் 50ml கனஅளவுடைய 0.05M HNO3 கரைசல் சேர்க்கப்படுகிறது. இறுதியில் பெறப்பட்ட கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக.

  9. 1.608A அளவுள்ள மின்னோட்டமானது 250 mL கனஅளவுள்ள 0.5M காப்பர் சல்பேட் கரைசல் வழியே 50 நிமிடங்களுக்கு செலுத்தப்படுகிறது. கனளவு மாறாமல் உள்ளது  எனவும் மின்திறன் 100% எனவும் கருதி மின்னாற்பகுத்தல் முடிந்த பிறது மீதமுள்ள கரைசலில் Cu2+ அயனிச் செறிவை கணக்கிடுக

  10. கால்வானிக் மின்கலத்தில் நிகழும் நிகர வினை யானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
    2 Cr (s) + 3Cu2+   (aq)  → 2Cr3+ (aq) + 3Cu (s)
    மின்கல குறியீட்டை பயன்படுத்தி மின்கலத்தை விளக்குக, மே லும் அரை வினைக ளை எழுதுக.

  11. பால்மங்களின் மூன்று பயன்களை எழுதுக.

  12. 4 – மெத்தில் பென்ட் -2- ஈன் -1- ஆல் ஐ தரும் ஆல்டிஹைடு, கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் எஸ்டர் ஆகியனவற்றின் வடிவமைப்புகளைத் தருக.

  13. C5H10O எனும் மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட (A) எனும் கார்பனைல் சேர்மமானது, சோடியம் பைசல்பேட்டுடன் படிக வீழ்படிவை தருகிறது, மேலும் அது அயோடோஃபார்ம் வினைக்கு உட்படுகிறது. சேர்மம் (A) ஃபெலிங் கரைசலை ஒடுக்குவதில்லை . சேர்மம் (A) வை கண்டறிக.

  14. பின்வருவனவற்றை வரிசைபடுத்துக.
    i. நீரில் கரைதிறனின் ஏறுவரிசை, C6H5NH2, (C2H5)2 NH, C2H5NH2
    ii. கார வலிமையின் ஏறுவரிசை
    a) அனிலீன், p- டொலுடின் மற்றும் p – நைட்ரோ அனிலீன்
    b) C6H5NH2, C6H5NHCH3C6H5NH2p-Cl-C6H4-NH2
    iii. வாயுநிலைமைகளில் காரவலிமையின் இறங்கு வரிசை
    (C2H5)NH2, (C2H5)NH(C2H5)3N மற்றும் NH3
    iv. கொதிநிலையின் ஏறுவரிசை  C6H5OH, (CH3)2NH, C2H5NH2
    v. pKb மதிப்புகளின் இறங்கு வரிசை C2H5NH2, C6H5NHCH3,(C2H5)2NH மற்றும் CHNH2
    vi. கார வலிமையின் ஏறுவரிசை C6H5NH2, C6H5N(CH3)2(C2H5)NH மற்றும் CHNH2
    vii. கார வலிமையின் இறங்கு வரிசை 

  15. கார்போஹைட்ரேட்டுகள் பொதுவாக ஒளிசுழற்றும் தன்மையை பெ ற்றுள்ளன . ஏன்?

  16. ஆஸ்பிரின் மூலக்கூறின் அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Sample 3 Mark Book Back Questions (New Syllabus 2020)

Write your Comment