முக்கிய 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி I

    10 x 5 = 50
  1. கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு இறுதி பற்பல கடனாளிகளையும், இறுதி பற்பல கடனீந்தோரையும் கணக்கிடுக்க.

      ரூ.
    1.4.2002 அன்று பற்பல கடனாளிகள்  30,000
    1.4.2002 அன்று பற்பல கடனீந்தோர்  41,000
    கடன்கொள்முதல்  1,50,000
    கடன் விற்பனை  1,70,000
    பெற்ற தள்ளுபடி  5,000
    அளித்த தள்ளுபடி  6,000
    கொள்முதல் திருப்பம்  7,500
    விற்பனைத் திருப்பம்  6,500
    பற்பல கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்  1,50,000
    பற்பல கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்  1,40,000
  2. மளிகை வியாபாரம் நடத்திவரும் சுந்தரம் தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. அவருடைய ஏடுகளிலிருந்த்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:

    விவரம்  1.4.2018
    ரூ.
    31.3.2019
    ரூ.
    பொறி மற்றும் இயந்திரம்  20,000 20,000
    சரக்கிருப்பு  9,000 16,000
    பற்பல கடனாளிகள்  2,000 5,300
    பற்பல கடனீந்தோர்  5,000 4,000
    வங்கி ரொக்கம்  4,000 6,000

    31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் பிற தகவல்கள் பின்வருமாறு:

    விவரம்  ரூ.
    விளம்பரம்  4,700
    உள்தூக்குக் கூலி  8,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்  64,000
    எடுப்புகள்  2,000

    அவ்வாண்டின் மொத்த விற்பனை ரூ.85,000. கொள்முதல் திருப்பம் ரூ.2,000 மற்றும் விற்பனைத் திருப்பம் ரூ.1,000. பொறி மற்றும் இயந்திரம் மீது 5% தேய்மானம் நீக்கவும்  ரூ.300 ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்க வேண்டும். 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும். 

  3. ஜான் மற்றும் சுரேஷ் என்ற இரு கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, ஜனவரி 1 அன்று அவர்களின் முதல் கணக்குகளின் இருப்புகள் ஜான் ரூ.60,000 மற்றும் சுரேஷ் 40,000 ஆகும். 2018, ஏப்ரல் 1 அன்று ஜான் கூடுதல் முதலாக ரூ.10.000 கொண்டு வந்தார். அவ்வாண்டில் சுரேஷ் ரூ.50,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். 2018 டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% எனக் கணக்கிடவும்.

  4. பின்வரும் தகவல்களிலிருந்து, உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
    (அ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.4,00,000
    (ஆ) சாதாரண இலாப விகிதல் 10%
    (இ) இலாபம் 2016: ரூ.62,000; 2017: ரூ.61,000 மற்றும் 2018: ரூ.63,000:

  5. ரஹீம் மற்றும் கோகுல் என்ற இரு கூட்டாளிகள் 5 : 3 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜான் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். ஜான் ரஹீமிடமிருந்து 1/5 பங்கும், கோகுலிடமிருந்து 1/5 பங்கும் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்

  6. ராமு, சோமு, கோபு கூட்டாளிகள் 5 : 3 : 2 எனும் விகிதத்தில் இலாப நட்டங்கள் பகிர்ந்து வந்தனர். 2005 ஜனவரி 1 அன்று கோபு என்பவர் விளக்க விரும்புகிறார். அவர்களின் சொத்துக்கள் பொறுப்புகள் பின்வருமாறு மறுமதிப்பீடு செய்வதென முடிவெடுத்தனர்.
    (அ) கட்டடத்தின் மதிப்பு ரூ.30,000 அதிகரிப்பது
    (ஆ) சரக்கிருப்பு, அறைகலன் மற்றும் பொறிவகை மீது முறையே ரூ.1,00,000, ரூ.5,000 மற்றும் ரூ.23,000 என தேய்மானம் ஒதுக்குவது.

  7. சுந்தர், விவேக், மற்றும் பாண்டியன் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் 2016, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     நிலம் 80,000
      சுந்தர் 50,000   சரக்கிருப்பு 20,000
      விவேக் 40,000   கடனாளிகள் 30,000
      பாண்டியன் 10,000 1,00,000 வங்கி ரொக்கம் 14,000
    பொதுக்கப்பு   36,000 இலாப நட்டக் க/கு (நட்டம்) 6,000
    பற்பல கடனீந்தோர்   14,000    
        1,50,000   1,50,000

     1.1.2019 அன்று பாண்டியன் இறந்தது விட்டார் மற்றும் அவரின் இறப்பின் போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டடன
    (i) சரக்கிருப்பின் மதிப்பு 10% தேய்மானம் குறைக்கப்பட வேண்டும்
    (ii) நிலத்தின் மதிப்பு ரூ.11,000 அதிகரிக்கப்பட வேண்டும்
    (iii) கடனாளிகள் மதிப்பு ரூ.3,000 குறைக்க வேண்டும்
    (iv) பாண்டியனுக்கு செலுத்த வேண்டிய இறுதித் தொகை செலுத்தப்படவில்லை
    கூட்டாளியின் இறப்பிற்கு பின் நிருமத்தின் மறுமதிப்பீட்டுக் கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

  8. காந்திமதி நிறுமத்தின் பெயரளவு முதல் ரூ.1,00,000 பங்கொன்று ரூ.10வீதம் செய்யப்பட்டது. இது பொதுமக்களுக்கு 6,000 பங்குகளை வெளியீடு செய்தது. அனால் 8,000 பங்குகள் வேண்டிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1,000 பங்குகளுக்கான விண்ணப்பங்களை இயக்குநர்கள் நிராகரித்து திருப்பி விட்டனர். 1,000 பங்குகள் மீதான விண்ணப்பித் தொகை ஒதுக்கீட்டிற்கு சரிகட்டப்பட்டது. பங்குகள் மீது பின்வருமாறு தொகைகள் பெறப்பட்டன.

    விண்ணப்பத்தின் போது பங்கொன்றுக்கு  ரூ.3 வீதம் 
    ஒதுக்கீட்டின்போது பங்கொன்றுக்கு  ரூ.3 வீதம் 

    மீத தொகை முதலாவது மற்றும் இறுதி அழைப்பில்.
    100 பங்குகளை வைத்திருந்த பங்குதாரர் ஒருவர் அழைப்பு தொகையை செலுத்தத் தவறியதன் காரணமாக அவரின் பங்குகள் ஒறுபிழப்பு செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.

  9. குப்தா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைகுறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடைவடியும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.

      விவரம்  2016, மார்ச் 31 2017, மார்ச் 31
        ரூ. ரூ.
    பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்     
      பங்குதாரர் நிதி  2,00,000 5,20,000
      நீண்டகாலப் பொறுப்புகள்  1,00,000 1,20,000
      நடப்புப் பொறுப்புகள்  50,000 60,000
      மொத்தம்  3,50,000 7,00,000
    II  சொத்துகள்     
      நிலைச் சொத்துகள்  2,00,000 4,00,000
      நடப்புச் சொத்துகள்  1,50,000 3,00,000
      மொத்தம்  3,50,000 7,00,000
  10. அருண் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 
    (i) புற அக பொறுப்புகள் விகிதம் 
    (ii) உரிமையாளர் விகிதம் மற்றும் 
    (iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்.

    அருண் நிறுவனத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    விவரம்  ரூ 
    பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்   
    1. பங்குதாரர் நிதி   
      (அ) பங்குமுதல்   
      நேர்மைப் பங்குமுதல்  1,50,000
      8% முன்னுரிமைப் பங்குமுதல்  2,00,000
      (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி  1,50,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்   
      நீண்டகால கடன்கள் (9% கடனீட்டுப் பாத்திரங்கள்) 4,00,000
    3. நடப்பு பொறுப்புகள்   
      (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள்  25,000
      (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்  75,000
      மொத்தம்  10,00,000
    II  சொத்துகள்   
    1. நீண்ட காலச் சொத்துகள்   
      நிலைச் சொத்துகள்  7,50,000
    2. நடப்புச் சொத்துகள்  1,20,000
      (அ) சரக்கிருப்பு  1,20,000
      (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள்  1,000,000
      (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவர்கள்  27,500
      (ஈ) இதர நடப்புச் சொத்துகள்   
      செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது  2,500
      மொத்தம்  10,00,000

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முக்கிய 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Tamil Medium Important 5 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment