முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    4 x 1 = 4
  1. கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது______.

    (a)

    மொத்தக் கடனாளிகள் கணக்கு

    (b)

    மொத்தக் கடனீந்தோர் கணக்கு

    (c)

    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு

    (d)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு

  2. செலவுகளுக்குச் செலுத்தியது எந்த கணக்கில் மட்டும் பதியப்படுகிறது?

    (a)

    ரொக்கக் கணக்கில் 

    (b)

    ஆள்சார் கணக்கில் 

    (c)

    செலவுகள் கணக்கில் 

    (d)

    உரிமையாளர் கணக்கில் 

  3. கணக்கேடுகள் முழுமையாக இரட்டைப்பதிவு முறையில் தயாரிக்கப்படாதபோது அவ்வேடுகள் ______ என்றழைக்கப்படுகின்றன.

    (a)

    முழுமை பெறா பதிவேடுகள் 

    (b)

    முழுமை பெற்ற பதிவேடுகள் 

    (c)

    ஒற்றைபதிவு முறை 

    (d)

    நிலையறிக்கை 

  4. 2010 ஜனவரி 1-ல் கடனீந்தோர் ரூ.1,21,0000. 2010 டிசம்பர் 31-ல் கடனீந்தோர் தொகை ரூ.1,30,000. அவ்வாண்டில் கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் ரூ.2,09,000 எனில் அவ்வாண்டில் கடன் கொள்முதல் ________ ஆகும்.

    (a)

    ரூ.2,00,000

    (b)

    ரூ.2,09,000

    (c)

    ரூ.2,18,000

    (d)

    ரூ.2,07,000

  5. 1 x 2 = 2
  6. கூற்று (A): நிலை அறிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட நாளுக்கான சொத்துகள் மற்றும் பொறுப்புகள் இருப்பைக் காட்டும் ஒரு அறிக்கை ஆகும்.
    காரணம் (R): இருப்புநிலைக் குறிப்பு வியாபாரத்தின் நிதிநிலையைக் கண்டறிய தயாரிக்கப்படுகிறது.
    அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
    ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
    இ) (A) சரி ஆனால் (R) தவறு 
    ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  7. 1 x 2 = 2
  8. 1) நிலை அறிக்கை தொடக்க முதலை கண்டறிய உதவுகிறது.
    2) மொத்தக் கடனீந்தோர் க/கு கடன் கொள்முதலை கண்டறிய உதவுகிறது.
    3) மொத்தக் கடனாளி க/கு கடன் விற்பனையை கண்டறிய உதவுகிறது.
    அ) 1 மற்றும் 3 சரி 
    ஆ) 2 மட்டும் சரி 
    இ) 1 மட்டும் சரி 
    ஈ) 1,2 மற்றும் 3 சரி 

  9. 1 x 1 = 1
  10. அ)  சரிகட்டப்பட்ட இறுதி முதல் -  இறுதி முதல் +எடுப்புகள்-கூடுதல் முதல்
    ஆ) சரிகட்டப்பட்ட இறுதி முதல் - இறுதி முதல் -எடுப்புகள் + கூடுதல் முதல் 
    இ) சரிகட்டப்பட்ட இறுதி முதல் - இறுதி முதல் -எடுப்புகள் - கூடுதல் முதல் 
    ஈ) சரிகட்டப்பட்ட இறுதி முதல் - இறுதி முதல் +எடுப்புகள் + கூடுதல் முதல் 

  11. 2 x 2 = 4
  12. பின்வரும் விவரங்களிலிருந்து கடன் விற்பனையைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2018, ஜனவரி 1 அன்று கடனாளிகள் 40,000
    கடனாளிகளிடம் பெற்ற ரொக்கம் 1,00,000
    அளித்த தள்ளுபடி 5,000
    விற்பனைத் திருப்பம் 2,000
    2018, டிசம்பர் 31 அன்று கடனாளிகள் 60,000
  13. பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலை கணக்கிடவும்.

    விவரம் ரூ.
    தொடக்க கடனீந்தோர் 1,70,000
    கொள்முதல் திருப்பம் 20,000
    கடனீந்தோருக்குச் செலுத்தியது 4,50,000
    இறுதிக் கடனீந்தோர் 1,90,000
  14. 4 x 3 = 12
  15. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    31.3.2019 அன்று இறுதி முதல் 1,90,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 50,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 30,000
    1.4.2018 அன்று தொடக்க முதல் ?
    31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் 40,000
  16. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்.

    விவரம் ரூ.
    31.3.2018 அன்று இறுதி முதல் 80,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 30,000
    அவ்வாண்டில் எடுப்புகள் 15,000
    01.4.2017 அன்று தொடக்க முதல் ?
    31.3.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் நட்டம் 25,000
  17. 2019, மார்ச் 31 அன்று தாமஸ் என்பவரின் ஏடுகளிலிருந்து பெறப்பட்ட இருப்புகள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    பற்பல கடனீந்தோர் 6,00,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 1,20,000
    அறைகலன் 80,000 கைரொக்கம் 20,000
    நிலம் மற்றும் கட்டடம் 3,00,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 60,000
    பற்பல கடனாளிகள் 3,20,000 சரக்கிருப்பு 2,20,000

    2019, மார்ச் 31 ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரிக்கவும் மற்றும் அந்நாளைய முதல் கண்டறியவும்.

  18. இரட்டைப்பதிவு முறை மற்றும் முழுமை பெறா பதிவேடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

  19. 3 x 5 = 15
  20. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கடனாளிகள் கணக்கு, மொத்தக் கடனீந்தோர் கணக்கு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு மற்றம் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரித்து கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் கண்டறியவும்.

    விவரம் தொடக்க இருப்பு ரூ. இறுதி இருப்பு ரூ.
    கடனாளிகள் 60,000 55,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 5,000 1,000
    கடனீந்தோர் 25,000 28,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 2,000 3,000
    பிற தகவல்கள் ரூ.
    கடளாளிகளிடமிருந்து ரொக்கம் பெற்றது 1,30,000
    வாடிக்கையாளருக்கு அளித்த தள்ளுபடி 5,500
    கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம் 70,000
    சரக்களித்தோர் வழங்கிய தள்ளுபடி 3,500
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்குரிய ரொக்கம் செலுத்தியது 7,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்கான ரொக்கம் பெற்றது 14,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 1,200
    வாராக்கடன் 3,500
  21. செல்வம் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    விவரம் 1-1-2018
    ரூ.
    31.12.2018
    ரூ.
    இயந்திரம் 60,000 60,000
    வங்கி ரொக்கம் 25,000 33,000
    பற்பல கடனாளிகள் 70,000 1,00,000
    சரக்கிருப்பு 45,000 22,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 20,000 38,000
    வங்கிக் கடன் 45,000 45,000
    பற்பல கடனீந்தோர் 25,000 21,000

    கூடுதல் தகவல்கள்:

      ரூ.   ரூ.
    ரொக்க விற்பனை 20,000 கடன் விற்பனை 1,80,000
    ரொக்கக் கொள்முதல் 8,000 கடன் கொள்முதல் 52,000
    கூலி 6,000 சம்பளம் 23,500
    விளம்பரம் 7,000 வங்கிக் கடன்மீது வட்டி 4,500
    எடுப்புகள் 60,000 கூடுதல் முதல் 21,000

    சரிக்கட்டுதல்கள்:
    இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.

  22. கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு இறுதி பற்பல கடனாளிகளையும், இறுதி பற்பல கடனீந்தோரையும் கணக்கிடுக்க.

      ரூ.
    1.4.2002 அன்று பற்பல கடனாளிகள்  30,000
    1.4.2002 அன்று பற்பல கடனீந்தோர்  41,000
    கடன்கொள்முதல்  1,50,000
    கடன் விற்பனை  1,70,000
    பெற்ற தள்ளுபடி  5,000
    அளித்த தள்ளுபடி  6,000
    கொள்முதல் திருப்பம்  7,500
    விற்பனைத் திருப்பம்  6,500
    பற்பல கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்  1,50,000
    பற்பல கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்  1,40,000

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் மாதிரி வினாத்தாள் (12th Accountancy - Accounts From Incomplete Records Sample Question Paper)

Write your Comment