கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    3 x 1 = 3
  1. சரியற்ற இணையினை அடையாளம் காணவும்.

    (a)

    சராசரி இலாபமுறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

    (b)

    உயர் இலாப முறையில் நற்பெயர் = உயர் இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

    (c)

    ஆண்டுத்தொகை முறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு

    (d)

    கூட்டு சராசரி இலாப முறையில் நற்பெயர் = கூட்டு சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

  2. சராசரி இலாபம் ரூ.50,000 மற்றும் சாதாரண இலாபம் ரூ.30,000 ஆக இருக்கும் பொது, உயர் இலாபம்

    (a)

    ரூ.50,000

    (b)

    ரூ.10,000

    (c)

    ரூ.20,000

    (d)

    ரூ.30,000

  3. உயர் இலாபத்தை குறிப்பிட்ட சில ஆண்டுக்குரிய கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கையால் _______ மூலம் நற்பெயர் கணக்கிடப்படுகிறது

    (a)

    கூட்டுவதன்

    (b)

    கழித்தலின்

    (c)

    பெருக்குவதன்

    (d)

    வகுப்பதன்

  4. 1 x 2 = 2
  5. கூற்று (A): நற்பெயர் என்பது நிறுவனம் வருங்காலத்தில் எதிர்பார்க்கும் கூடுதல் இலாபத்தைக் கணக்கிட்டு உருவாக்கப்படும் தற்போதைய மதிப்பு ஆகும்.
    காரணம் (R): நிறுவனத்தின் பொருட்கள் தரமாக இருப்பதனால் ஏற்பட்டுள்ள நன்மதிப்பு காரணமாக பொருட்கள் உடனடியாக விற்பனை ஆகின்றன. எனவே, நற்பெயர் மதிப்பு உயர்கிறது.
    (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
    (ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    (இ) (A) சரி ஆனால் (R) தவறு
    (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி

  6. 1 x 2 = 2
  7. (அ) உயர் இலாபத்தில் கொள்முதல் முறை
    (ஆ) ஆண்டுத்தொகை முறை
    (இ) நேர்கோட்டுத் முறை
    (ஈ) உயர் இலாபத்தினை மூலதனமாக்கும் முறை

  8. 1 x 2 = 2
  9. 1. நற்பெயர் அதிக இலாபம் ஈட்டுவதற்கு மற்றும் அதிக வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு உதவுகிறது.
    2. போட்டியே இல்லாத அல்லது குறைவான போட்டியைக் கொண்டுள்ள நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு அதிகமானதாக இருக்கும்.
    3. சாதாரண சராசரி இலாபமுறையில் நற்பெயரானது, சராசரி இலாபத்தை குறிப்பிட்ட கொள்முதல் ஆண்டுகளின் எணிக்கையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுவது.
    (அ) 1 மட்டும் சரி
    (ஆ) 1 மற்றும் 2 சரி
    (இ) 3 மட்டும் சரி
    (ஈ) 1,2 மற்றும் 3 சரி

  10. 2 x 2 = 4
  11. ஒரு கூட்டாண்மை நிறுவனம் விலகும் கூட்டாளி ஒருவரின் கணக்கைத் தீர்ப்பதற்காக நற்பெயரை மதிப்பிட முடிவு செய்தது. அந்த நிறுவனத்தின் கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் பின்வருமாறு:
    2015: ரூ.40,000; 2016: ரூ.50,000; 2017: ரூ.48,000 ; 2018: ரூ.46,000
    வியாபாரம் கூட்டாளிகளில் ஒருவரால் நடத்தப்பட்டது. அவருக்கு எவ்வித ஊதியமும் வழங்கப்படவில்லை. அக்கூட்டாளியின் நியாயமான ஊதியம் ஆண்டுக்கு ரூ.6,000 என மதிப்பிடப்பட்டது.
    கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  12. பின்வரும் விவரங்களிலிருந்து, கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

    ஆண்டு முடிவு தொகை ரூ.
    2015 இலாபம் 5,000
    2016 இலாபம் 8,000
    2017 நட்டம் 3,000
    2018 இலாபம் 6,000
  13. 4 x 3 = 12
  14. ஒரு நிறுவனத்தின் கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் மற்றும் நட்டங்கள் பின்வருமாறு:
    2015: ரூ.15,000; 2016: ரூ.17,000; 2017: ரூ.6,000 (நட்டம்); 2018: ரூ.14,000
    4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 5 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  15. புதிய கூட்டாளி ஒருவரை சேர்ப்பதற்காக, ஒரு நிறுவனம் 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் கூட்டு சராசரி இலாபத்தினை பயன்படுத்தி, நற்பெயரை மதிப்பிட முடிவு செய்தது. கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் மற்றும் அந்தந்த ஆண்டுகளுக்கான நிறைகள் பின்வருமாறு.

    விவரம் 2015 2016 2017 2018
    இலாபம் (ரூ) 20,000 22,000 24,000 28,000
    நிறை 1 2 3 4

    நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  16. கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் கூட்டு சராசரி இலாபத்தினை பயன்படுத்தி, நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

    ஆண்டு இலாபம் ரூ. நிறைகள்
    2015 10,000 1
    2016 12,000 2
    2017 16,000 3
    2018 18,000 4
  17. நற்பெயரின் வகைகளை எழுத விளக்குக.

  18. 3 x 5 = 15
  19. பின்வரும் தகவல்களிலிருந்து, உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
    (அ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.4,00,000
    (ஆ) சாதாரண இலாப விகிதம் 10%
    (இ) இலாபம் 2016: ரூ.62,000; 2017: ரூ.61,000 மற்றும் 2018: ரூ.63,000

  20. பின்வரும் விவரங்களைக் கொண்டு, ஆண்டுத்தொகை முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

    (i) சராசரி இலாபம் ரூ.14,000
    (ii) சாதாரண இலாபம் ரூ.4,000
    (iii) சாதாரண இலாப விகிதம் 15%
    (iv) நற்பெயருக்கான கொள்முதல் ஆண்டுகள் 5

    5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 15% என்ற வட்டி விகிதத்தில் ரூ.1 தற்போதைய ஆண்டுத்தொகை மதிப்பு ரூ.3.352

  21. கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
    (அ) ஈட்டிய இலாபங்கள் : 2016 : ரூ.30,000: 2017: ரூ.35,000 மற்றும் 2018: ரூ.38,000;
    (ஆ) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பாத திரும்ப நிகழா வருமானம் ரூ.5,000 சேர்த்துள்ளது
    (இ) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்தால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ.3,000 குறைக்கப்பட்டது
    (ஈ) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்காகன காப்பீட்டுக் கட்டணம்  ஆண்டுகளுக்கு ரூ.3,600 என மதிப்பிடப்பட்டது
    3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுக்குள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் மாதிரி வினாத்தாள் (12th Accountancy - Goodwill In Partnership Accounts Sample Question Paper)

Write your Comment