பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்

    20 x 1 = 20
  1. கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?

    (a)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் தொடக்க இருப்பு

    (b)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் இறுதி இருப்பு

    (c)

    அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு

    (d)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு ரொக்கம் செலுத்தியது

  2. 2010 ஜனவரி 1-ல் கடனீந்தோர் ரூ.1,21,0000. 2010 டிசம்பர் 31-ல் கடனீந்தோர் தொகை ரூ.1,30,000. அவ்வாண்டில் கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் ரூ.2,09,000 எனில் அவ்வாண்டில் கடன் கொள்முதல் ________ ஆகும்.

    (a)

    ரூ.2,00,000

    (b)

    ரூ.2,09,000

    (c)

    ரூ.2,18,000

    (d)

    ரூ.2,07,000

  3. நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது_____.

    (a)

    ஒரு சொத்து

    (b)

    ஒரு பொறுப்பு

    (c)

    ஒரு செலவு 

    (d)

    தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று 

  4. பழைய செய்தித்தாள்களை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை, ஒரு 

    (a)

    முதலினச் செலவுகள் 

    (b)

    வருவாயினச் செலுத்தல்கள் 

    (c)

    முதலின வரவுகள் 

    (d)

    வருவாயின வரவு 

  5. பின்வருவனவற்றில் எது சரியற்ற இணை?

    (a)

    எடுப்புகள் மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்

    (b)

    முதல் மீது வட்டி – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்

    (c)

    கடன்மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்

    (d)

    இலாபப் பகிர்வு – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்

  6. இந்தியாவில், கூட்டாண்மை நிறுவனங்களை இந்திய கூட்டாண்மைச் சட்டம், ________ நெறிப்படுத்துகிறது

    (a)

    1902

    (b)

    1914

    (c)

    1956

    (d)

    1932

  7. பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?

    (a)

    நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து

    (b)

    நற்பெயர் ஒரு நடப்புச் சொத்து

    (c)

    நற்பெயர் ஒரு கற்பனைச் சொத்து

    (d)

    நற்பெயரினை வாங்க முடியாது

  8. ஒரு தொழிலுக்கு நன்மையை தரக்கூடிய அத்தொழிலின் புகழ் அல்லது நன்மதிப்பு ________ ஆகும்

    (a)

    நற்பெயர்

    (b)

    காப்புரிமை

    (c)

    பொதுநிதி

    (d)

    இலாபநட்டம்

  9. கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது

    (a)

    முதல் விகிதம்

    (b)

    தியாக விகிதம்

    (c)

    ஆதாய விகிதம்

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  10. புதிய இலாபப் பகிர்வு விகித நிர்ணயம், புதிய கூட்டாளி பழைய கூட்டாளிகளிடம் பெறக்கூடிய ________ சார்ந்தது.

    (a)

    பொறுப்பினை

    (b)

    இலாபப் பங்கினை

    (c)

    சொத்தினை

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  11. கூட்டாளி ஒருவர் ஜுன் 30 அன்று கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவது_____.

    (a)

    நடப்பு கணக்காண்டின் இறுதி வரைக்கும்

    (b)

    முந்தைய கணக்காண்டின் இறுதி வரைக்கும்

    (c)

    கூட்டாளி விலகும் நாள் வரைக்கும்

    (d)

    கூட்டாளியின் கணக்கைத் தீர்வு செய்யும் வரைக்கும்

  12. கூட்டாளி விலகளின்பொழுது, சொத்துக்களையும், பொறுப்புகளையும், மறுமதிப்பீடு செய்ததால் நேர்ந்த இலாபம் அனைத்துக் கூட்டாளிகளின் முதல் கணக்குகளில் _______ பக்கம் மாற்றப்படும்

    (a)

    பற்று

    (b)

    வரவு

    (c)

    இரண்டு

    (d)

    இரண்டுமில்லை

  13. முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு _____.

    (a)

    பத்திர முனைமக் கணக்கு

    (b)

    அழைப்பு முன்பணக் கணக்கு

    (c)

    பங்குமுதல் கணக்கு

    (d)

    பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு

  14. ______ என்பது தன்னார்வமாக செயல்படும் நபர்களின் சங்கம்.

    (a)

    தனியாள் வணிகம் 

    (b)

    கூட்டாண்மை 

    (c)

    கூட்டுறவுச் சங்கம் 

    (d)

    நிறுமம் 

  15. நிதி என்னும் சொல் குறிப்பிடுவது_____.

    (a)

    நடப்புப் பொறுப்புகள்

    (b)

    நடைமுறை முதல்

    (c)

    நிலைச் சொத்துகள்

    (d)

    நீண்டகாலச் சொத்துகள்

  16. ________ என்பது இயக்கம் என்பதைக் குறிக்கும்.

    (a)

    போக்கு 

    (b)

    நிதி 

    (c)

    விகிதம் 

    (d)

    ஓட்டம் 

  17. ஒரு நிறுமத்தின் நீர்மைத்தன்மையை சோதிக்க கீழ்க்கண்ட எந்த விகிதங்கள் பயன்படுகிறது?
    (i) விரைவு விகிதம்
    (ii) நிகர இலாப விகிதம்
    (iii) புற அக பொறுப்புகள் விகிதம்
    (iv) நடப்பு விகிதம்
    கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

    (a)

    (i) மற்றும் (ii)

    (b)

    (i) மற்றும் (iv)

    (c)

    (ii) மற்றும் (iii)

    (d)

    (ii) மற்றும் (iv)

  18. விற்பனை மூலம் பெற்ற வருவாய் என்பது ______ ஆகும்.

    (a)

    நிகர கொள்முதல் 

    (b)

    நிகர விற்பனை 

    (c)

    நிகர இலாபம் 

    (d)

    மொத்த இலாபம் 

  19. எதிர்ப்பதிவு சான்றாவணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? 

    (a)

    தலைமைப் பதிவு 

    (b)

    அலுவலக பயன்பாட்டிற்காக வங்கியில் இருந்து எடுத்த ரொக்கம்  

    (c)

    அறிக்கைகள் 

    (d)

    சொத்துகள் கடனுக்கு வாங்கியது 

  20. _______ மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் நிதியியல் கணக்கியல் மென்பொருள்களில் ஒன்றாகும்.

    (a)

    Tally 

    (b)

    Window excel 6.0

    (c)

    World docment 

    (d)

    Microsoft 

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

    7 x 2 = 14
  22. பின்வரும் தகவல்களிலிருந்து கடன் விற்பனையை காணவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 1,00,000
    கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 2,30,000
    அளித்த தள்ளுபடி 5,000
    உள் திருப்பம் 25,000
    2019, மார்ச் 31 அன்று கடனாளிகள் 1,20,000
  23. மதிப்பூதியம் என்றால் என்ன?

  24. கூட்டாண்மை பொருள் தருக.

  25. பின்வரும் தகவல்களிலிருந்து மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் காணவும்.
    (அ) சராசரி இலாபம் = ரூ.60,000
    (ஆ) சாதாரண இலாப விகிதம் = 10%
    (இ) பயன்படுத்தப்பட்ட முதல் = ரூ.4,50,000

  26. கூட்டாளி சேர்ப்பு என்றால் என்ன? அவர் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகிறார்?

  27. மேரி, மீனா மற்றும் மரியம் எனும் கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் இலாபநட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1-1-2019 அன்று மேரி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளில், அந்நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு சொத்துகள் பக்கத்தில் ரூ. 75,000 பகிர்ந்து தரா நட்டம் எனக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  28. பொது வெளியீடு என்றால் என்ன?

  29. பின்வரும் மலர் நிறுமத்தின் 2016, மார்ச் 31 மற்றும் 2017, மார்ச் 31 ஆம் நாளைய ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்

    விவரம் 2016, மார்ச் 31 2017, மார்ச் 31
    ரூ. ரூ.
    I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள்    
    1. பங்குதாரர் நிதி    
      அ) பங்கு முதல் 2,00,000 2,50,000
      ஆ) காப்பும் மிகுதியும் 50,000 50,000
    2. நீண்ட காலப் பொறுப்புகள்    
      நீண்ட காலக் கடன்கள் 30,000 60,000
    3. நடப்புப் பொறுப்புகள்    
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 20,000 60,000
    மொத்தம் 3,00,000 4,20,000
    II. சொத்துகள்    
    1. நீண்ட காலச் சொத்துகள்    
      அ) நிலைச் சொத்துகள் 1,00,000 1,50,000
      ஆ) நீண்ட கால முதலீடுகள் 50,000 75,000
    2. நடப்புச் சொத்துகள்    
      சரக்கிருப்பு 75,000 1,50,000
      ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் 75,000 45,000
    மொத்தம் 3,00,000 4,20,000
  30. கடன் வசூலிப்பு காலம் என்றால் என்ன?

  31. கணக்கியல் அறிக்கைகள் என்றால் என்ன?

  32. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

    7 x 3 = 21
  33. 2018, ஏப்ரல் 1 அன்று சுபா தன்னுடைய தொழிலை ரூ. 1,20,000 முதலுடன் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. 2019, மார்ச் 31 அன்று அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    வங்கி மேல்வரைப்பற்று 50,000 சரக்கிருப்பு 1,60,000
    கடனாளிகள் 1,80,000 கடனீந்தோர் 90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 70,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 2,40,000
    கணினி 30,000 கைரொக்கம் 60,000
    இயந்திரம் 3,00,000    

    அவ்வாண்டில் அவர் தன்னுடைய சொந்த பயனுக்காக ரூ. 30,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ.40,000. அவருடைய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

  34. இலாப நோக்கமற்ற அமைப்புகளின் இயல்புகள் யாவை?

  35. ஆனந்த் மற்றும் நாராயணன் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2018, ஜனவரி 1 அன்று அவர்களுடைய முதல் முறையே ரூ.50,000 மற்றும் ரூ.30,000. கூட்டாண்மை ஒப்பாவணம் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது:
    (அ) முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும்.
    (ஆ) ஆனந்த் மற்றும் நாராயணனுக்கு விதித்த எடுப்புகள் மீதான வட்டி முறையே ரூ.1,000 மற்றும் ரூ.800.
    (இ) முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீதான வட்டி கழிப்பதற்கு முன் உள்ள நிறுவனத்தின் நிகர இலாபம் ரூ.35,000.
    கூட்டாளிகளுடைய முதல், மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும் மற்றும் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இலாபநட்டப் பகிர்வு கணக்கையும் தயார் செய்யவும்.

  36. நற்பெயரின் நன்மைகளை எழுதுக

  37. அனு மற்றும் அருள் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 4:1 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் மனோ என்பவரை 2/5 இலாப விகிதத்தில் நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்கின்றனர். சேர்க்கையின் போது நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு ரூ.25,000 என்று மதிப்பிடப்படுகிறது. மனோ தன்னுடைய பங்கிற்கான நற்பெயர் மதிப்பிற்கான தொகையைக் கொண்டுவர முடியவில்லை. மாறுபடும் முதல் முறையினை அடிப்படையாக கொண்டு நற்பெயர் சரிக்கட்டுவதற்கு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  38. நற்பெயர் சர்க்கட்டப்படுத்தல் பற்றி சிறு குறிப்பு வரைக

  39. அனு நிறுமத்தால் ரூ.10 முகமதிப்பில் வெளியிடப்பட்ட நேர்மைப் பங்குகளில், தியாகு என்பவர் வைத்திருந்த ரூ.200 நேர்மைப் பங்குகளுக்கு இறுதி அழைப்புத் தொகையான ரூ.3 செலுத்தாத காரணத்தால் அவை ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அப்பங்குகள் ரூ.6 வீதம் லக்ஷ்மனுக்கு மறுவெளியீடு செய்யப்பட்டன். ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்

  40. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் குறைபாடுகள் யாவை?

  41. டெல்ஃபி நிறுமத்திடமிருந்து பெறப்பட்ட பின்வரும் தகவல்களிலிருந்து
    (i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
    (ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
    (iii) கணக்குகள் மூலம் செலுத்தப்பட வேண்டியவைகளின் சுழற்சி மற்றும்
    (iv) நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.

    விவரம் 2018, மார்ச் 31
    ரூ.
    2019, மார்ச் 31
    ரூ.
    சரக்கிருப்பு 1,40,000 1,00,000
    கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 80,000 60,000
    கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 40,000 50,000
    நிலைச் சொத்துகள் 5,50,000 5,00,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.10,50,000
    (ii) அவ்வாண்டின் கொள்முதல் ரூ.4,50,000
    (iii) விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.6,00,000.
    விற்பனை மற்றும் கொள்முதலை கடன் நடவடிக்கைகளாகக் கருதவும்.

  42. Tally.ERP 9-ல் இலாப நட்டக் கணக்கை எவ்வாறு பார்வையிடுவது என்பதை விளக்கவும்.

  43. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    7 x 5 = 35
    1. பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31,2016 மற்றும் மார்ச் 31,2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.

      விவரம்  2015-16
      ரூ.
      2016-17
      ரூ.
      விற்பனை மூலம் பெற்ற வருவாய்  4,00,000 6,00,000
      இதர வருமானங்கள்  50,000 1,50,000
      செலவுகள்  5,00,000 3,00,000
      வருமான வரி % 40 40
    2. பின்வரும் நடவடிக்கைகளை Tally-ல் பதிவு செய்யவும்.
      (1) ரூ. 4,00,000 முதலுடன் தேவி தொழில் தொடங்கினர்.
      (2) இந்தியன் வங்கியில் கணக்கு துவங்கப்பட்டு ரூ. 60,000 செலுத்தியது.
      (3) ரொக்கத்திற்கு அறைகலன்  வாங்கியது ரூ. 15,000
      (4) சுமதியிடம் இருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ. 50,000
      (5) ரொக்க விற்பனை மேற்கொண்டது ரூ. 10,000
      (6) இராஜாவிடம் சரக்கு கொள்முதல் செய்து காசோலை மூலம் செலுத்தியது ரூ. 5000.
      (7) அருணுக்கு கடனாக விற்ற சரக்கு ரூ. 70,000.
      (8) அலுவலக செலவிற்காக  வங்கியிலிருந்து பணம் எடுத்தது ரூ. 25,000
      (9) சுமதிக்கு காசோலை மூலம் பகுதி தொகை செலுத்தியது ரூ. 30,000
      (10) அருண் பகுதி தொகையாக செலுத்திய ரொக்கம் ரூ. 10,000
      (11) பணியாளர்களுக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 36,000
      (12) கொள்முதல் மீதான துக்குக்கூலி ரொக்கமாக செலுத்தியது ரூ. 6,000
      (13) முத்து நிறுவனத்திடமிருந்து கடனுக்கு கணினி வாங்கியது ரூ. 44,000

    1. சார்லஸ், முத்து மற்றும் சேகர் என்ற கூட்டாளிகள் முறையே 3 : 4 : 2 என்ற விகிதத்தில் இலாபங்களைப் பகிர்ந்து கொண்டனர். 2018 டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு

      பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
      முதல் கணக்குகள்:     அறைகலன்  20,000
        சார்லஸ் 30,000   சரக்கிருப்பு 40,000
        முத்து 40,000   கடனாளிகள் 30,000
      தொழிலாளர் ஈட்டு நிதி 20,000 90,000 வங்கி ரொக்கம் 42,000
      பற்பல கடனீந்தோர்   27,000 இலாபநட்ட க/கு (நட்டம்) 18,000
          33,000    
          1,50,000   1,50,000

      1.1.2019 அன்று பின்வரும் ஏற்பாடுகளின் படி சார்லஸ் கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
      (i) சரக்கிருப்பின் மதிப்பு 10% அதிகரிக்கப்பட வேண்டும்
      (ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
      (iii) வாராக்கடன் மீது ரூ.1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
      (iv) கொடுபடா பழுதுபார்ப்புச் செலவு ரூ.10,000 இன்னமும் பதிப்படையவில்லை.
      (v) சார்லஸிற்கு உரியத்தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது
      மறுமதிப்பீட்டுக் கணக்கு, விலகலுக்குப் பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும். 

    2. பாபு நிறுமத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய) பின்வருமாறு:

      விவரம் தொகை
      ரூ.
      I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
      1. பங்குதாரர் நிதி  
       (அ) பங்குமுதல் 70,000
       (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 25,000
      2. நீண்டகாலப் பொறுப்புகள்  
        நீண்டகாலக் கடன்கள் 30,000
      3. நடப்புப் பொறுப்புகள்  
        (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 20,000
        (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் 15,000
        (இ) குறுகியகால ஒதுக்குகள் 42,000
      மொத்தம் 2,02,000

       அவ்வாண்டில் வட்டி மற்றும் வரிக்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ரூ.25,000. அவ்வாண்டின் முதலீடு மீதான வருவாய் கணக்கிடவும்.

    1. பின்வரும் தகவல்களிலிருந்து, உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
      (அ) சாதாரண இலாப விகிதம் 10%
      (ஆ) கடந்த 4 ஆண்டுகளின் இலாபங்கள் ரூ.30,000, ரூ.40,000, ரூ.50,000 மற்றும் ரூ.45,000.
      (இ) மேற்குறிப்பிட்ட இலாபம் ரூ.30,000 ல் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.3,000 சேர்ந்துள்ளது.
      (ஈ) சராசரி பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.3,00,000.

    2. பின்வரும் விவரங்களைக் கொண்டு குறிஞ்சி வரையறு நிறுவனத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.

      விவரம் ரூ. ஆயிரங்களில்
      2015-16 2016-17 2017-18
      விற்பனை மூலம் பெற்ற வருவாய் 120 132 156
      இதர வருமானம் 50 38 65
      செலவுகள் 100 135 123
    1. அன்பு என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி, கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% கணக்கிடப்படுகிறது. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:

      நாள் ரூ.
      மார்ச் 1 8,000
      ஜூன் 1 6,000
      செப்டெம்பர் 1 4,000
      டிசம்பர் 1 3,000

      பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்

    2. சார்லஸ், முத்து மற்றும் சேகர் என்ற கூட்டாளிகள் முறையே 3:4:2 என்ற விகிதத்தில் இலாபங்களைப் பகிர்ந்து கொண்டனர். 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.

      பொறுப்புகள்  ரூ. ரூ. சொத்துகள்  ரூ.
      முதல் கணக்குகள்:     அறைகலன்  20,000
      சார்லஸ்  30,000   சரக்கிருப்பு 40,000
      முத்து  40,000   கடனாளிகள்  30,000
      சேகர்  20,000 90,000 வங்கி ரொக்கம்  42,000
      தொழிலாளர் ஈட்டு நிதி    27,000 இலாபநட்ட க/கு 18,000
      பற்பல கடனீந்தோர் க/கு   33,000    
          1,50,000   1,50,000

      1.1.2019 அன்று பின்வரும் ஏற்பாடுகளின்படி சார்லஸ் கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
      (i) சரக்கிருப்பின் மதிப்பு 10% அதிகரிக்கப்பட வேண்டும்
      (ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
      (iii) வாராக்கடன் மீது ரூ. 1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
      (iv) கொடுபடா பழுதுபார்ப்புச் செலவு ரூ.10,000 இன்னமும் பதியப்படவில்லை
      (v) சார்லஸிற்கு உரியத்தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது
      மறுமதிப்பீட்டுக் கணக்கு, விலகலுக்குப் பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்

    1. அமல் மற்றும் விமல் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 7:5 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 அன்றைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

      பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
      முதல் கணக்குகள்:     கட்டடம் 80,000
      அமல் 70,000   அறைகலன் 20,000
      விமல் 50,000 1,20,000 சரக்கிருப்பு 25,000
      பற்பல கடனீந்தோர்   30,000 கடனாளிகள் 30,000
      இலாப நட்ட க/கு   24,000 வங்கி 19,000
          1,74,000   1,74,000

      1.4.2019 இல் நிர்மல் புதிய கூட்டாளியாக சேருகிறார். அவர் ரூ.30,000 முதலுடன் எதிர்கால இலாபப்பங்கில் 1/3 விகிதத்தில், பின்வரும் சரிக்கட்டலுடன் கூட்டாளியாகிறார்.
      அ) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.5,000 குறைக்கப்பட வேண்டும்.
      (ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.3,000 உருவாக்கப்பட வேண்டும்.
      (இ) கட்டடம் ரூ.20,000 மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்.
      மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின்பான கூட்டாளி முதல் கணக்கு தயார் செய்யவும்.

    2. சம்பத் நிறுமம் 25,000 பங்குகளை, பங்கு ஒன்று ரூ.10 என பொதுமக்களுக்கு வெளியிட்டது. விண்ணப்பத்தின் போது ரூ.3, ஒதுக்கீட்டின் போது ரூ.4, முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.3 செலுத்தப்பட வேண்டும். பொதுமக்களால் 24,000 பங்குகள் ஒப்பப்பட்டன. இயக்குனர்கள் அனைத்து பங்குகளையும் ஒதுக்கீடு செய்தனர். அதற்காக தொகை முழுவதும் முறையாகப் பெறப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

    1. கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து மதுரை அன்னை தெரசா மகளிர் மன்றத்தின் 2018, டிசம்பர், 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

      விவரம்  ரூ விவரம்  ரூ 
      ரொக்க இருப்பு (1.1.2018) 2,000 தீக்காப்பீட்டு முனைமம் செலுத்தியது  1,500
      வங்கி இருப்பு (1.1.2018 3,000 சந்தா பெற்றது 8,500
      பழைய செய்தித்தாள்கள்  விற்றது 500 அறைகலன் வாங்கியது 6,000
      எழுதுபொருள்கள் வாங்கியது 6,000 செய்தித்தாள்கள் வாங்கியது 700
      தணிக்கைக் கட்டணம் செலுத்தியது 2,000 அறைகலன் மீதான தேய்மானம் 900
      நுழைவுக்கட்டணம் பெற்றது 3,000 ரொக்க இருப்பு (31.12.2018) 2,500
      பல்வகைச் செலவுகள் 6,000 போக்குவரத்துச் செலவுகள் 1,000
      உதவித்தொகை அளித்தது 2,000 அறைகலன் விற்றது 4,000
      முதலீடுகள் மீதான வட்டி 2,000    
    2. தமிழ் கல்வியில் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

      விவரம்  ரூ. விவரம்  ரூ.
      தொடக்க ரொக்க இருப்பு (1.4.2018) 15,000 சந்தா பெற்றது  40,000
      வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) 9,000 பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல்  7,500
      அச்சு மற்றும் எழுதுபொருள்  2,500 போக்குவரத்துச் செலவுகள்  2,750
      வட்டி செலுத்தியது  5,250 புத்தகங்கள் வாங்கியது  10,000
      முதலீடுகள் விற்றது  4,000 காப்பீட்டு முனைமம் செலுத்தியது  4,000
      சிற்றுண்டி வாங்கியது  2,500 பல்வகை வரவுகள்  650
      கொடுபட வேண்டிய சம்பளம்  6,000 அரசிடமிருந்து பெற்ற மானியம்  6,000
      அறக்கொடை நிதி பெற்றது  6,000 சிற்றுண்டி விற்றது  1,500
      ஒளியூட்டுக் கட்டணம்  3,300 கட்டடம் மீதான தேய்மானம்  3,000
          வங்கி ரொக்கம் (31.3.2019) 2,000
    1. வன்பொருள் வியாபாரம் செய்துவரும் அருண் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:

      விவரம் 31.12.2017
      ரூ.
      31.12.2018
      ரூ.
      நிலம் மற்றும் கட்டடம் 2,40,000 2,40,000
      சரக்கிருப்பு 1,20,000 1,70,000
      கடனாளிகள் 40,000 51,500
      கடனீந்தோர் 50,000 45,000
      வங்கி ரொக்கம் 30,000 53,000

       31.12.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் பிற தகவல்கள் பின்வருமாறு:

      விவரம் ரூ
      கூலி 65,000
      வெளித் தூக்குக்கூலி 7,500
      பற்பல செலவுகள் 28,000
      கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 6,00,000
      எடுப்புகள் 10,000

      அவ்வாண்டுக்குரிய மொத்த விற்பனை ரூ. 7,70,000. அவ்வாண்டின் கொள்முதல் திருப்பம் ரூ. 30,000 மற்றும் விற்பனைத் திருப்பம் ரூ. 25,000. நிலம் மற்றும் கட்டடங்கள் மீது 5% தேய்மானம் நீக்கவும். ரூ. 1,500 –க்கு ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    2. பின்வரும் விவரங்களைக் கொண்டு நடப்பு விகிதம் மற்றும் நீர்மை விகிதத்தைக் கணக்கிடுக.

        ரூ.   ரூ.
      ரொக்கம்  5,000 கடனாளிகள்  29,000
      பெறுதற்குரிய மாற்று சீட்டுகள்  5,000 குறுகிய கால முதலீடுகள்  15,0000
      சரக்கிருப்பு  52,000 முன்கூட்டிச் செலுத்திய செலவினங்கள்  2,000
      கடனீந்தோர்  36,000 முன்கூட்டிச் செலுத்திய செலவினங்கள்  2,000
      செலுத்த வேண்டிய செலவினங்கள்  8,000 செலுத்தற்குரிய மாற்று சீட்டுகள்  10,0000

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 12th Accountancy - Public Model Question Paper 2019 - 2020 )

Write your Comment