நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 35
    9 x 1 = 9
  1. பின்வரும் வாக்கியங்களில் எது சரியானதல்ல?

    (a)

    குறிப்புகள் மற்றும் பட்டியல்களும் நிதிநிலை அறிக்கைகளின் பகுதி ஆகின்றன.

    (b)

    நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் கருவிகளில் பொது அளவு அறிக்கை உள்ளடங்கும்.

    (c)

    போக்குப் பகுப்பாய்வு என்பது ஓராண்டில் தொகைகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்தலைக் குறிப்பதாகும்.

    (d)

    பொது அளவு அறிக்கை சில பொது அடிப்படைகளைக் கொண்டு பல்வேறு இனங்களின் தொடர்பினைக் காட்டுவதாகும். இவ்வினங்கள், பொது அளவு அடிப்படையின் சதவிகிதமதாக காட்டப்படுகின்றன.

  2. பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது அல்ல?

    (a)

    நிதிநிலை அறிக்கையின் குறைபாடுகள் அனைத்தும் நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாய்விற்கும் பொருந்தும்.

    (b)

    நிதிநிலை அறிக்கை பகுப்பாப்பாய்வு ஒரு வழிமுறை, இது ஒரு முடிவல்ல.

    (c)

    நிதி நிலை அறிக்கை பகுப்பாய்விற்கு நிபுணத்துவம் தேவையில்லை

    (d)

    ஆய்வு செய்யப்பட்ட தகவல்களை உய்த்துணர்வது தனிப்பட்ட கருத்துகளை உள்ளடக்கியதாகும்.

  3. ஒரு வணிகத்தின் முதலாம் ஆண்டுச் செலவுகள் ரூ.80,000. இரண்டாம் ஆண்டில் செலவுகள் ரூ.88,000 ஆக அதிகரித்திருந்தது. இரண்டாம் ஆண்டின் போக்கு விகிதம் என்ன?

    (a)

    10%

    (b)

    110%

    (c)

    90%

    (d)

    11%

  4. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு செய்வதற்கு எது தேவையானதாகும்?

    (a)

    திறமை 

    (b)

    மேலாண்மை 

    (c)

    நிபுணத்துவ அறிவு 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  5. ________ அறிக்கைகள் என்பது நிதிநிலை தகவல்களுக்கான ஆதாரமாகும்.

    (a)

    வருமான 

    (b)

    நிதி நிலை 

    (c)

    செலவின 

    (d)

    இலாப நட்ட 

  6. ________ ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் தயாரிக்கப்படுகின்றன.

    (a)

    வியாபாரக் கணக்கு 

    (b)

    இலாப நட்டக் கணக்கு 

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (d)

    நிதிநிலை அறிக்கைகள்

  7. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு செய்வதற்கு பல்வேறு ______ பயன்படுத்தப்படுகின்றன.

    (a)

    கருவிகள் 

    (b)

    தன்மைகள் 

    (c)

    இரண்டும் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  8. _____ நடப்புப் பொறுப்புகளை விட அதிகமாக உள்ள நடப்புச் சொத்துகளைக் குறிப்பதாகும்.

    (a)

    மாறுபடும் முதல் 

    (b)

    நிலை முதல் 

    (c)

    நடைமுறை முதல் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  9. ஒரு கணக்காண்டிற்குரிய தொகை மட்டுமே பகுப்பாய்விற்கு எடுத்து கொள்ளப்படுமானால் அது _______ என்றழைக்கப்படும்.

    (a)

    கிடைமட்ட பகுப்பாய்வு 

    (b)

    செங்குத்துப் பகுப்பாய்வு 

    (c)

    இரண்டும் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  10. 1 x 2 = 2
  11. கூற்று (A): பொது அளவு அறிக்கைகளில் பொது அளவு வருமான அறிக்கை மற்றும் பொது அளவு இருப்புநிலைக் குறிப்பு போன்றவைகள் அடங்கும்.
    காரணம் (R): போக்குப் பகுப்பாய்வு என்பது ஒரு காலக்கட்டத்திற்கு மேல் உள்ள தொகைகளின் இயக்கத்தை ஆய்வு செய்வதாகும்.
    அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம் 
    ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல 
    இ) (A) சரி ஆனால் (R) தவறு 
    ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  12. 1 x 2 = 2
  13. அ) இருப்புநிலைக் குறிப்பு 
    ஆ) ஒப்பீட்டு அறிக்கை 
    இ) போக்குப் பகுப்பாய்வு 
    ஈ) ரொக்க ஓட்டப் பகுப்பாய்வு 

  14. 1 x 2 = 2
  15. 1. பல ஆண்டுகளுக்கான தொகைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு எடுத்துக் கொண்டால், அப்பகுப்பாய்வு கிடைமட்ட பகுப்பாய்வு என்றழைக்கப்படும்.
    2. ஒரு கணக்காண்டிற்குரிய தொகை மட்டுமே பகுப்பாய்விற்கு எடுத்து கொள்ளப்படுமானால் அது செங்குத்துப் பகுப்பாய்வு கொண்டது.
    3. ஒப்புநோக்க அறிக்கை மூன்று பத்திகளைக் கொண்டது.
    அ) 1 மட்டும் சரி 
    ஆ) 2 மட்டும் சரி 
    இ) 1 மற்றும் 2 சரி 
    ஈ) 1,2 மற்றிம் 3 சரி 

  16. 2 x 2 = 4
  17. பின்வரும் விவரங்களிலிருந்து அப்துல் வரையறு நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.

    விவரம் 2015-16
    ரூ.
    2016-17
    ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 3,00,000 3,60,000
    இதர வருமானம் 1,00,000 60,000
    செலவுகள் 2,00,000 1,80,000
    வருமான வரி 30% 30%
  18. கிடைமட்ட பகுப்பாய்வு என்றால் என்ன?

  19. 2 x 3 = 6
  20. ரொக்க ஓட்ட பகுப்பாய்வு குறித்து சிறு குறிப்பு வரையுவும்

  21. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் நோக்கங்களை எழுதுக.

  22. 2 x 5 = 10
  23. பின்வரும் தகவல்களிலிருந்து, அனு நிறுமத்தின் போக்கு சதவிகிதங்களை கணக்கிடவும்.

    விவரம் ரூ. (ஆயிரத்தில்)
    முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்      
      பங்குதாரர் நிதி 500 550 600
      நீண்டகாலப் பொறுப்புகள் 200 250 240
      நடப்புப் பொறுப்புகள் 100 80 120
    மொத்தம் 800 880 960
    II. சொத்துகள்      
      நீண்டகாலச் சொத்துகள் 600 720 780
      நடப்புச் சொத்துகள் 200 160 180
    மொத்தம் 800 880 960
  24. பின்வரும் விவரங்களிலிருந்து சிவசாமி & கோ நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கை தயார் செய்யவும்.

    விவரம்  2016-17 2017-18
    ரூ. ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய்  4,00,000 5,00,000
    இதர வருமானங்கள்  1,00,000 80,000
    செலவுகள்  3,00,000 2,40,000

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு மாதிரி வினாத்தாள் (12th Accountancy - Financial Statement Analysis Sample Question Paper)

Write your Comment