கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. மறுமதிப்பீடுக் கணக்கின் இருதிவிளைவு கூட்டாளிகளின் எந்த கணக்குகளில் சரிகட்டப்படும்?

    (a)

    முதல் கணக்குகளில்

    (b)

    எடுப்பு கணக்குகளில்

    (c)

    நடப்பு கணக்குகளில்

    (d)

    இருப்பு நிலைக் குறிப்பில்

  2. நிறுவனத்தின் சொத்துக்களில் அவருக்குரிய பங்கில் அவருக்கு சேர வேண்டிய தொகைக்கு ஆண்டுக்கு எத்தனை சதவீதம் வட்டி பெறலாம்?

    (a)

    5%

    (b)

    6%

    (c)

    8%

    (d)

    10%

  3. தொழிலாளர் ஈட்டு நிதியில் எதிர்நோக்கக் கூடிய இழப்பீடுகளை சரி செய்த பின்னர் மீதமுள்ள தொகை கூட்டாளிகளின் _______  கணக்குக்கு மாற்றப்பட வேண்டும்.

    (a)

    முதல்

    (b)

    கடன்

    (c)

    நடப்பு

    (d)

    மறுமதிப்பீடு

  4. ________ கணக்கு ஒரு தற்காலிக கணக்கு ஆகும்

    (a)

    இலாப நட்ட அனாமத்து

    (b)

    மறுமதிப்பீட்டு 

    (c)

    நற்பெயர்

    (d)

    முதல்

  5. A, B, C, ஆகிய கூட்டாளிகளின் இலாப்பங்கு முறையே 1/2, 1/3, 1/6 ஆகும். B கூட்டாண்மையிலிருந்து விலகினால், புதிய இலாபப் பகிர்வு விகிதம் _______.

    (a)

    1 : 3

    (b)

    3 : 2

    (c)

    3 : 1

    (d)

    1 : 1

  6. 5 x 2 = 10
  7. மேரி, மீனா மற்றும் மரியம் எனும் கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் இலாபநட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1-1-2019 அன்று மேரி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளில், அந்நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு சொத்துகள் பக்கத்தில் ரூ. 75,000 பகிர்ந்து தரா நட்டம் எனக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  8. கிரண், வினோத் மற்றும் விமல் எனும் கூட்டாளிகள் 5:3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். கிரண் விலகினார். வினோத் மற்றும் விமல் ஆகியோரின் புதிய இலாப விகிதம் 2:1 ஆகும். ஆதாய விகிதத்தை கணக்கிடவும்

  9. கூட்டாளி விலகல் என்றால் என்ன?

  10. ஆதாய விகிதம் என்றால் என்ன?

  11. புதிய இலாப விகிதம் என்றால் என்ன?

  12. 5 x 3 = 15
  13. ரம்யா, சாரா மற்றும் தாரா என்ற கூட்டாளிகள் முறையே 5:3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று தாரா கூட்டாண்மையிலிருந்து விலகினார். பின்வரும் சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
    i) வளாகத்தின் மதிப்பை ரூ. 40,000 உயர்த்த வேண்டும் 
    ii) சரக்கிருப்பு ரூ.3,000, இயந்திரம் ரூ. 6,500 மதிப்பு குறைக்க வேண்டும்.
    iii) கொடுபடாச் செலவுகள் ரூ. 500 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
    குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.

  14. ஜஸ்டினா, நவி மற்றும் ரித்திகா எனும் கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 31.3.2019 அன்று ரித்திகா என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். முந்தைய ஆண்டுகளின் இலாபம் பின்வருமாறு.
    2016: ரூ.5,000; 2017: ரூ.10,000; 2018: ரூ.30,000; 2019 ஆம் ஆண்டிற்கான ரித்திகாவின் இலாபப் பங்கை அவர் விலகும் நாள் வரை பின்வரும் நிலைகளில் கணக்கிடவும்.
    (அ) முந்தைய ஆண்டின் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
    (ஆ) கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
    மேலும், கூட்டாளிகளின் முதல் கணக்கு மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  15. நற்பெயர் சர்க்கட்டப்படுத்தல் பற்றி சிறு குறிப்பு வரைக

  16. விலகும் கூட்டாளிக்குரிய தொகையை எவ்வகையில் தீர்க்கப்படலாம்?

  17. கூட்டாளியின் இறப்பின் போது செய்ய வேண்டிய சரிக்கட்டுதல்கள் யாவை?

  18. 4 x 5 = 20
  19. மோகன்ராஜ், நாகராஜ், பாக்கியராஜ் என்ற கூட்டாளிகள் 5 : 3 : 2 எனும் விகிதத்தில் இலாப நட்டங்கள் பகிர்ந்து வந்தனர். 31.12.2014 அன்று நிறுவன ஏடுகளில் காப்பு நிதி ரூ.30,000 மற்றும் பகிர்ந்து தரா நட்டம் ரூ.20,000 உள்ளன. பாக்கியராஜ் 1.1.2015 அன்று விலக்கினார். காப்பு நிதி, பகிர்ந்து தரா நாட்டம் ஆகியவற்றை பழைய கூட்டாளிகளின் கணக்குகளுக்கு மாற்றுவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.

  20. ராகுல், ரவி மற்றும் ரோஹித் எனும் கூட்டாளிகள் முறையே 5 : 3 : 2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் ரோஹித் விலகினார். அவருடைய பங்கு ராகுல் மற்றும் ரவி ஆகியோரால் 3 : 2 எனும் விகிதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கணக்கிடவும்

  21. சார்லஸ், முத்து மற்றும் சேகர் என்ற கூட்டாளிகள் முறையே 3 : 4 : 2 என்ற விகிதத்தில் இலாபங்களைப் பகிர்ந்து கொண்டனர். 2018 டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     அறைகலன்  20,000
      சார்லஸ் 30,000   சரக்கிருப்பு 40,000
      முத்து 40,000   கடனாளிகள் 30,000
    தொழிலாளர் ஈட்டு நிதி 20,000 90,000 வங்கி ரொக்கம் 42,000
    பற்பல கடனீந்தோர்   27,000 இலாபநட்ட க/கு (நட்டம்) 18,000
        33,000    
        1,50,000   1,50,000

    1.1.2019 அன்று பின்வரும் ஏற்பாடுகளின் படி சார்லஸ் கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
    (i) சரக்கிருப்பின் மதிப்பு 10% அதிகரிக்கப்பட வேண்டும்
    (ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
    (iii) வாராக்கடன் மீது ரூ.1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
    (iv) கொடுபடா பழுதுபார்ப்புச் செலவு ரூ.10,000 இன்னமும் பதிப்படையவில்லை.
    (v) சார்லஸிற்கு உரியத்தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது
    மறுமதிப்பீட்டுக் கணக்கு, விலகலுக்குப் பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும். 

  22. சுந்தர், விவேக், மற்றும் பாண்டியன் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் 2016, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     நிலம் 80,000
      சுந்தர் 50,000   சரக்கிருப்பு 20,000
      விவேக் 40,000   கடனாளிகள் 30,000
      பாண்டியன் 10,000 1,00,000 வங்கி ரொக்கம் 14,000
    பொதுக்கப்பு   36,000 இலாப நட்டக் க/கு (நட்டம்) 6,000
    பற்பல கடனீந்தோர்   14,000    
        1,50,000   1,50,000

     1.1.2019 அன்று பாண்டியன் இறந்தது விட்டார் மற்றும் அவரின் இறப்பின் போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டடன
    (i) சரக்கிருப்பின் மதிப்பு 10% தேய்மானம் குறைக்கப்பட வேண்டும்
    (ii) நிலத்தின் மதிப்பு ரூ.11,000 அதிகரிக்கப்பட வேண்டும்
    (iii) கடனாளிகள் மதிப்பு ரூ.3,000 குறைக்க வேண்டும்
    (iv) பாண்டியனுக்கு செலுத்த வேண்டிய இறுதித் தொகை செலுத்தப்படவில்லை
    கூட்டாளியின் இறப்பிற்கு பின் நிருமத்தின் மறுமதிப்பீட்டுக் கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Retirement And Death of a Partner Model Question Paper )

Write your Comment