இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது______.

    (a)

    நிறுமம்

    (b)

    அரசு

    (c)

    சிறிய அளவிலான தனிஆள் வணிகம்

    (d)

    பன்னாட்டு நிறுவனங்கள்

  2. கடனாளிகள் தொடக்க இருப்பு: ரூ. 30,000, பெற்ற ரொக்கம்: ரூ. 1,00,000, கடன் விற்பனை: ரூ. 90,000; கடனாளிகள் இறுதி இருப்பு:?

    (a)

    ரூ. 30,000

    (b)

    ரூ. 1,30,000

    (c)

    ரூ. 40,000

    (d)

    ரூ. 20,000

  3. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்______.

    (a)

    வருவாயினத் தன்மை மட்டும் உடையது

    (b)

    முதலினத் தன்மை மட்டும் உடையது

    (c)

    வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  4. உயில்கொடை ஒரு_____.

    (a)

    வருவாயினச் செலவு

    (b)

    முதலினச் செலவு

    (c)

    வருவாயின வரவு

    (d)

    முதலின வரவு

  5. கூட்டாளிகளிடமிருந்து நிறுவனம் கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களுக்கு இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932 –ன் படி வழங்கப்படும் வட்டி வீதம்______.

    (a)

    ஆண்டுக்கு 8%

    (b)

    ஆண்டுக்கு 12%

    (c)

    ஆண்டுக்கு 5%

    (d)

    ஆண்டுக்கு 6%

  6. கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது கூட்டாளிகள் பெறத் தகுதியுடையது______.

    (a)

    சம்பளம்

    (b)

    கழிவு

    (c)

    கடன் மீது வட்டி

    (d)

    முதல் மீது வட்டி

  7. ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாபவிகிதமாக கருதப்படுவது _____.

    (a)

    சராசரி இலாபம்

    (b)

    சாதாரண இலாப விகிதம்

    (c)

    எதிர்நோக்கும் இலாப விகிதம்

    (d)

    இவைகளில் ஏதுமில்லை

  8. சராசரி இலாபம் ரூ.25,000 மற்றும் சாதாரண இலாபம் ரூ.15,000 ஆக இருக்கும் போது, உயர் இலாபம் _____.

    (a)

    ரூ.25,000

    (b)

    ரூ.5,000

    (c)

    ரூ.10,000

    (d)

    ரூ.15,000

  9. மறுமதிபீட்டுக் கணக்கு ஒரு_____.

    (a)

    சொத்து க/கு

    (b)

    பெயரளவு க/கு

    (c)

    ஆள்சார் க/கு

    (d)

    ஆள்சாரா க/கு

  10. மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது_____.

    (a)

    ஆதாயம்

    (b)

    நட்டம்

    (c)

    செலவு

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  11. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

    (a)

    மறுமதிப்பீட்டு இலாபம்

    (b)

    பகிர்ந்தளிக்கப்படாத இலாபம்

    (c)

    புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர்

    (d)

    முதலீட்டு மாறுபடும் நிதி

  12. மறுமதிப்பீட்டின்போது, பொறுப்புகளின் அதிகரிப்பு தருவது_____.

    (a)

    ஆதாயம்

    (b)

    நட்டம்

    (c)

    இலாபம்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  13. முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு _____.

    (a)

    பத்திர முனைமக் கணக்கு

    (b)

    அழைப்பு முன்பணக் கணக்கு

    (c)

    பங்குமுதல் கணக்கு

    (d)

    பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு

  14. நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாய்வின் பின்வரும் எந்த கருவி பல்வேறு ஆண்டுகளுக்கான விவரங்களை பகுப்பாய்வு செய்வதற்கு ஏற்புடையதாகும்?

    (a)

    ரொக்க ஓட்ட பகுப்பாய்வு

    (b)

    பொது அளவு அறிக்கை

    (c)

    ஒப்பீட்டு அறிக்கை

    (d)

    போக்கு ஆய்வு

  15. ஒரு வரையறு நிறுமத்தின் விற்பனை ரூ.1,25,000 லிருந்து ரூ.1,50,000க்கு அதிகரித்துள்ளது. இது ஒப்பீட்டு வருமான அறிக்கையில் எவ்வாறு தோன்றுகிறது?

    (a)

    +20%

    (b)

    +120%

    (c)

    -120%

    (d)

    -20%

  16. நடப்பு விகிதம் காட்டுவது ______.

    (a)

    குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்

    (b)

    மேலாண்மை திறன்

    (c)

    இலாபம் ஈட்டும் திறன்

    (d)

    நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்

  17. நடப்புப் பொறுப்பு ரூ.40,000; நடப்புச் சொத்து ரூ.1,00,000; சரக்கிருப்பு ரூ.20,000 எனில் விரைவு விகிதம்______.

    (a)

    1:1

    (b)

    2.5:1

    (c)

    2:1

    (d)

    1:2

  18. F11 எனும் பயன்பாடு ______.

    (a)

    நிறுவனப் பண்புகூறுகள் 

    (b)

    கணக்கியல் சான்றாவணங்கள் 

    (c)

    நிறுவன கட்டமைப்பு 

    (d)

    இவைகளில் எதுவும் இல்லை 

  19. Tally-யில் எது முன்கூட்டியே வரையறுக்கப்படாத குழு?

    (a)

    அனாமத்து க/கு 

    (b)

    கொடுபட வேண்டிய செலவு க/கு 

    (c)

    விற்பனை க/கு 

    (d)

    முதலீடுகள் க/கு 

  20. சம்பளக் கணக்கு பின்வரும் எந்த தலைப்பின் கீழ் வரும்? 

    (a)

    நேரடி வருமானங்கள் 

    (b)

    நேரடி செலவினங்கள் 

    (c)

    மறைமுக வருமானங்கள் 

    (d)

    மறைமுக செலவினங்கள் 

  21. 7 x 2 = 14
  22. சாந்தி என்பவரின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புகள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 6,000 பற்பல கடனீந்தோர் 25,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 4,000 சரக்கிருப்பு 45,000
    இயந்திரம் 60,000 கடனாளிகள் 70,000
    அறைகலன் 10,000 ரொக்கம் 4,000

    2018, டிசம்பர் 31ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரித்து அந்நாளைய முதலை கணக்கிடவும்.

  23. ஒரு சங்கத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018 ஆம் ஆண்டு சந்தா மூலம் பெற்ற வருமானத்தைக் கணக்கிடவும்.

    விவரம் 1.1.2018
    ரூ
    31.12.2018
    ரூ
    பெறவேண்டிய சந்தா  10,000 7,000
    முன்கூட்டிப் பெற்ற சந்தா  3,000 5,000

    2018 ஆம் ஆண்டில் பெற்ற சந்தா ரூ.1,50,000.

  24. 2018 ஆம் ஆண்டில் இராஜன் என்ற கூட்டாளி எடுத்த எடுப்புகள் ரூ.30,000. எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என விதிக்கப்பட்டது. 2018, டிசம்பர் 31 அன்றைய எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.

  25. நிலைமுதல் முறை என்றால் என்ன?

  26. பின்வரும் விவரங்களிலிருந்து, கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

    ஆண்டு முடிவு தொகை ரூ.
    2015 இலாபம் 5,000
    2016 இலாபம் 8,000
    2017 நட்டம் 3,000
    2018 இலாபம் 6,000
  27. தியாக விகிதம் என்றால் என்ன?

  28. ஆதாய விகிதம் என்றால் என்ன?

  29. 7 x 3 = 21
  30. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31ஆம் நாளைய முதல் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2018, ஜனவரி 1 அன்று முதல் 27,500
    உரிமையாளர் தன் சொந்த பயனுக்கு சரக்கு எடுத்தது 5,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 2,500
    அவ்வாண்டின் இலாபம் 10,000
  31. முழுமை பெறா பதிவேடுகளின் குறைபாடுகள் யாவை?

  32. தங்கள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வரும் சுபா மற்றும் சுதா என்ற கூட்டாளிகளின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடவும்.

    2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:   நிலைச் சொத்துகள் 30,000
    சுபா 15,000 நடப்புச் சொத்துகள் 20,000
    சுதா 20,000    
    நடப்புப் பொறுப்புகள் 15,000    
      50,000   50,000

    அவ்வாண்டில் சுபா மற்றும் சுதாவின் எடுப்புகள் முறையே ரூ.2,500 மற்றும் ரூ.3,500. அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.15,000.

  33. ஜனனி, கமலி மற்றும் லட்சுமி மூவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் நிறுவனத்தின் தொழிலுக்கு அளித்த பங்களிப்புக்காக, கூட்டாண்மை ஒப்பாவணத்தின் விதிமுறைகளின் படி, கமலிக்கு மாத ஊதியம் ரூ.10,000 அனுமதிக்கப்பட்டது மற்றும் லட்சுமிக்கு கழிவு ஆண்டுக்கு ரூ.40,000 அனுமதிக்கப்பட்டது. கூட்டாளிகளுடைய முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  34. நற்பெயரைத் தீர்மானிக்கும் ஏதேனும் ஆறு காரணிகளைத் தரவும்.

  35. அமுதா மற்றும் புவனா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 5:3 என்ற விகிதத்தில் இலாப-நட்டம் பகிர்ந்து வந்தனர். சித்ரா 3/8 பங்கு விகிதத்தில் புதிய கூட்டாளியாக சேர்கிறார். அப்போது ரூ.8,000 தமது நற்பெயர் பங்களிப்பாக கொண்டு வருகிறார். அவர்கள் மாறுபடும் முதல் முறையில் கணக்கினை பராமரிக்கின்றனர். நற்பெயருக்கென தொகை முழுவதையும் அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். நற்பெயரைச் சரிகட்டத் தேவையான குறிப்பேட்டுப்பதிவுகளை உருவாக்கவும்.

  36. தியாக விகிதத்திற்கும் ஆதாய விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

  37. 7 x 5 = 35
  38. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கடனாளிகள் கணக்கு, மொத்தக் கடனீந்தோர் கணக்கு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு மற்றம் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரித்து கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் கண்டறியவும்.

    விவரம் தொடக்க இருப்பு ரூ. இறுதி இருப்பு ரூ.
    கடனாளிகள் 60,000 55,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 5,000 1,000
    கடனீந்தோர் 25,000 28,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 2,000 3,000
    பிற தகவல்கள் ரூ.
    கடளாளிகளிடமிருந்து ரொக்கம் பெற்றது 1,30,000
    வாடிக்கையாளருக்கு அளித்த தள்ளுபடி 5,500
    கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம் 70,000
    சரக்களித்தோர் வழங்கிய தள்ளுபடி 3,500
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்குரிய ரொக்கம் செலுத்தியது 7,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்கான ரொக்கம் பெற்றது 14,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 1,200
    வாராக்கடன் 3,500
  39. பூம்புகார் இலக்கிய மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்

    விவரம்  ரூ  விவரம்  ரூ 
    தொடக்க இருப்பு (1.4.2018) 5,000 சந்தா பெற்றது 20,000
    வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) 4,000 பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் 2,500
    அச்சு மற்றும் எழுதுபொருள் 1,500 போக்குவரத்துச் செலவுகள்  2,750
    வட்டி செலுத்தியது 3,250 புத்தகங்கள் வாங்கியது 10,000
    சிற்றுண்டி வாங்கியது 1,500 பல்வகை வரவுகள் 750
    கொடுபட வேண்டிய சம்பளம்  2,000 அரசிடமிருந்து பெற்ற மானி 6,000
    அறக்கொடை நிதி பெற்றது 2,000 சிற்றுண்டி விற்றது. 1,500
    ஒளியூட்டுக் கட்டணம் 1,300 கட்டடம் மீதான தேய்மானம் 2,000
        வங்கி ரொக்கம் (31.3.2019) 2,000
  40. இராமநாதபுரம் கிரிக்கெட் மன்றத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களிலிருந்து 2018, டிசம்பர் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்

    பெறுதல்கள்  ரூ ரூ செலுத்தல்கள் ரூ ரூ
    இருப்பு கீ/கொ     வாடகை   11,000
    கைரொக்கம்  5,000   பொழுதுபோக்குச் செலவுகள்   11,200
    வங்கி ரொக்கம் 10,000 15,000 அறைகலன்   10,000
    சந்தா     விளையாட்டுப் பொருள்கள்    
    2017 12,000   வாங்கியது   13,000
    2018 33,000   விளையாட்டு போட்டிச் செலவுகள்   12,000
    2019 16,000 61,000 முதலீடுகள் செய்தது   28,000
    நுழைவுக் கட்டணம்   6,000 இருப்பு கீ/இ    
    பொது நன்கொடைகள்    7,000 கைரொக்கம் 1,300  
    பழைய விளையாட்டுப்      வங்கி ரொக்கம் 4,000 5,300
    பொருள்கள் விற்றது   1,000      
    இதர வரவுகள்   500      
        90,500     90,500

    கூடுதல் தகவல்கள்:
    (அ) 2018 ஜனவரி 1 அன்று முதல்நிதி ரூ.30,000.
    (ஆ) விளையாட்டுப் பொருள்களின்தொடக்க இருப்பு ரூ.3,000 மற்றும் விளையாட்டுப் பொருள்களின் இறுதி இருப்பு ரூ.5,000.

  41. பின்வரும் தகவல்களிலிருந்து சாந்தி மற்றும் சுமதி என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகளை அவர்களின் முதல், நிலை முதலாக இருக்கும் போது தயாரிக்கவும்.

    விவரம் சாந்தி ரூ. சுமதி ரூ.
    2018, ஜனவரி 1 அன்று முதல் 1,00,000 80,000
    2018, ஜனவரி 1 அன்று நடப்புக் கணக்கு (வ) 5,000 3,000
    2018, ஜுன் 1 கூடுதல் முதல் கொண்டு வந்தது 10,000 20,000
    2018 ஆம் ஆண்டில் எடுப்புகள் 20,000 13,000
    எடுப்புகள் மீது வட்டி 500 300
    2018 – ல் இலாபப் பங்கு 10,000 8,000
    முதல் மீது வட்டி 6,300 5,400
    ஊதியம் 9,000 -
    கழிவு - 1,200
  42. பின்வரும் தகவல்களிலிருந்து, பத்மினி, மற்றும் பத்மா என்ற கூட்டாளிகளின் முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.

    விவரம் பத்மினி ரூ. பத்மா ரூ.
    2018, ஜனவரி 1 அன்று முதல் (வரவிருப்பு) 5,00,000 4,00,000
    2018 ஆம் ஆண்டில் எடுப்புகள் 70,000 40,000
    எடுப்புகள் மீது வட்டி 2,000 1,000
    2018 – ல் இலாபப் பங்கு 52,000 40,000
    முதல் மீது வட்டி 30,000 24,000
    ஊதியம் 45,000 -
    கழிவு - 21,000
  43. பின்வரும் விவரங்களைக் கொண்டு, ஆண்டுத்தொகை முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

    (i) சராசரி இலாபம் ரூ.14,000
    (ii) சாதாரண இலாபம் ரூ.4,000
    (iii) சாதாரண இலாப விகிதம் 15%
    (iv) நற்பெயருக்கான கொள்முதல் ஆண்டுகள் 5

    5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 15% என்ற வட்டி விகிதத்தில் ரூ.1 தற்போதைய ஆண்டுத்தொகை மதிப்பு ரூ.3.352

  44. வீணா மற்றும் பியர்ல் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள். முறையே 2:1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 60,000
    வீணா 60,000   இயந்திரம் 30,000
    பியர்ல் 40,000 1,00,000 கடனாளிகள் 20,000
    காப்பு நிதி   30,000 சரக்கிருப்பு 10,000
    தொழிலாளர் ஈட்டு நிதி   10,000 வங்கி ரொக்கம் 30,000
    பற்பல கடனீந்தோர்   10,000    
        1,50,000   1,50,000

    01-04-2018 அன்று டெரி என்பவர் பின்வரும் நிபந்தனைக்குட்பட்டு கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார்.
    (i) வீணா, பியர்ல் மற்றும் டெரியின் புதிய இலாபப்பகிர்வு விகிதம் 5:3:2 ஆகும்.
    (ii) டெரி ரூ.30,000 முதலாக கொண்டு வர வேண்டும்.
    (iii) சரக்கிருப்பின் மதிப்பை 20% குறைக்க வேண்டும்.
    (iv) தொழிலாளர் ஈட்டு நிதி மீது எதிர்பார்க்கப்படும் கோருரிமை ரூ.1,000.
    (v) பதிவுறா முதலீடுகள் ரூ.11,000 ஏடுகளில் கொண்டுவரப்பட வேண்டும்.
    (vi) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது. டெரி தன்னுடைய நற்பெயரின் பங்கினை ரொக்கமாக கொண்டுவந்தார். டெரி நற்பெயராகக் கொண்டு வந்த தொகை முழுவதையும் பழைய கூட்டாளிகள் எடுத்துக் கொண்டனர்.
    தேவையான பேரேட்டு கணக்குகள் மற்றும் சேர்ப்பிற்கு பின் உள்ள இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Term II Model Question Paper )

Write your Comment