கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. கூட்டாளி ஒருவர் ஜுன் 30 அன்று கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவது_____.

    (a)

    நடப்பு கணக்காண்டின் இறுதி வரைக்கும்

    (b)

    முந்தைய கணக்காண்டின் இறுதி வரைக்கும்

    (c)

    கூட்டாளி விலகும் நாள் வரைக்கும்

    (d)

    கூட்டாளியின் கணக்கைத் தீர்வு செய்யும் வரைக்கும்

  2. ஒரு கூட்டாளி விலகலின்போது, ஆதாய விகிதத்தின் நிர்ணயம் எதற்கு தேவைப்படுகிறது?

    (a)

    மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நட்டம் மாற்றப்படுவதற்கு

    (b)

    பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்தளிப்பதற்கு

    (c)

    நற்பெயரை சரிக்கட்டுவதற்கு 

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை 

  3. ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளியாக இருந்த ‘A’ என்பவர் 2019, மார்ச் 31 அன்று இறந்து விட்டார். அவருக்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை ரூ.25,000 உடனடியாகச் செலுத்தப்படவில்லை. அது மாற்றப்பட வேண்டிய கணக்கு_____.

    (a)

    A-ன் முதல் கணக்கு

    (b)

    A-ன் கடன் கணக்கு

    (c)

    A –ன் நிறைவேற்றாளர் கணக்கு

    (d)

    A –ன் நிறைவேற்றாளர்கடன் கணக்கு

  4. A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 2:2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். B-ன் விலகலின்போது நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளி B-க்கு ஈடு செய்வதற்கு A மற்றும் C யின் பங்களிப்பைக் கண்டறியவும்.

    (a)

    ரூ.20,000 மற்றும் ரூ.10,000

    (b)

    ரூ. 8,000 மற்றும் ரூ.4,000

    (c)

    ரூ.10,000 மற்றும் ரூ.20,000

    (d)

    ரூ.15,000 மற்றும் ரூ.15,000

  5. A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 4:2:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். தற்போது C விலகுகிறார். A மற்றும் B யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம்_____.

    (a)

    4:3

    (b)

    3:4

    (c)

    2:1

    (d)

    1:2

  6. 5 x 2 = 10
  7. மேரி, மீனா மற்றும் மரியம் எனும் கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் இலாபநட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1-1-2019 அன்று மேரி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளில், அந்நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு சொத்துகள் பக்கத்தில் ரூ. 75,000 பகிர்ந்து தரா நட்டம் எனக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  8. பிரபு, ரகு மற்றும் சிவா என்ற கூட்டாளிகள் 3:2:1 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2017 ஏப்ரல், 1 ஆம் நாளன்று பிரபு கூட்டாண்மையிலிருந்து விலகினார். பின்வரும் சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
    (i) கட்டடத்தின் மதிப்பு ரூ.12,000 உயர்த்துவது
    (ii) அறைகலன் மதிப்பை ரூ. 8,500 குறைப்பது
    (iii) கொடுபடா சம்பளத்திற்காக ரூ. 6,500 ஒதுக்கு உருவாக்குவது
    குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.

  9. கூட்டாளி விலகல் என்றால் என்ன?

  10. ஆதாய விகிதம் என்றால் என்ன?

  11. இறந்த கூட்டாளிக்கு செலுத்த வேண்டிய தொகையினை அவருடைய நிறைவேற்றாளர் கணக்கிற்கு மாற்றுவதற்குரிய குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  12. 5 x 3 = 15
  13. ஆர்யா, பெனின் மற்றும் சார்லஸ் என்ற கூட்டாளிகள் முறையே 3:3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் சார்லஸ் என்பவர் விலகினார். அவருடைய பங்கு முழுவதையும் ஆர்யா எடுத்துக் கொண்டார். ஆர்யா மற்றும் பெனின் ஆகியோரின் புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.

  14. ஜஸ்டினா, நவி மற்றும் ரித்திகா எனும் கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 31.3.2019 அன்று ரித்திகா என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். முந்தைய ஆண்டுகளின் இலாபம் பின்வருமாறு.
    2016: ரூ.5,000; 2017: ரூ.10,000; 2018: ரூ.30,000; 2019 ஆம் ஆண்டிற்கான ரித்திகாவின் இலாபப் பங்கை அவர் விலகும் நாள் வரை பின்வரும் நிலைகளில் கணக்கிடவும்.
    (அ) முந்தைய ஆண்டின் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
    (ஆ) கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
    மேலும், கூட்டாளிகளின் முதல் கணக்கு மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  15. கூட்டாளி விலகலின்போது செய்யப்பட வேண்டிய சரிக்கட்டுதல்களை பட்டியலிடவும்.

  16. தியாக விகிதத்திற்கும் ஆதாய விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

  17. வெளிச்செல்லும் கூட்டாளிக்குச் செலுத்தவேண்டிய தொகையினை எவ்வாறு தீர்வு செய்யலாம்?

  18. 4 x 5 = 20
  19. மணி, ரமா மற்றும் தேவன் ஆகியோர் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள். தங்கள் இலாப நட்டங்களை முறையே 5:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு

    பொறுப்புகள்  ரூ. ரூ. சொத்துகள்  ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 80,000
    மணி  50,000   சரக்கிருப்பு 20,000
    ரமா  50,000   அறைகலன்  70,000
    தேவன்  50,000 1,50,000 கடனாளிகள்  20,000
    பற்பல கடனீந்தோர்   20,000 கைரொக்கம்  10,000
    இலாபநட்டக் க/கு   30,000    
        2,00,000   2,00,000

    பின்வரும் சரிகட்டுதல்களுக்குட்பட்டு மணி 31.03.2019 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகுகிறார்
    (i) சரக்கிருப்பில் ரூ.5,000 மதிப்பு குறைக்கப்பட வேண்டும்
    (ii) வாரா ஐயக்கடனுக்கு ரூ.1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
    (iii) கட்டடத்தின் மதிப்பு ரூ. 16,000 அதிகரிக்கப்பட வேண்டும்
    (iv) மணிக்குச் சேரவேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை
    மறுமதிப்பீட்டு கணக்கு மற்றும் கூட்டாளி விலகலுக்குப் பின் உள்ள முதல் கணக்கினைத் தயாரிக்கவும்.

  20. இரத்னா, பாஸ்கர், மற்றும் இப்ராஹிம் ஆகிய கூட்டாளிகள் 2 : 3 : 4 என்ற விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று இரத்னா இறந்துவிட்டார். அவருக்குச் செலுத்த வேண்டிய இறுதித் தொகை ரூ.1,00,000 வரவு இருப்பினைக் காட்டியது. கீழ்கண்ட சூழ்நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
    (அ) சேரவேண்டியத் தொகை உடனடியாகக் காசோலை மூலம் செலுத்தப்பட்டது
    (ஆ) சேரவேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை
    (இ) ரூ.60,000 காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டது

  21. ஆகாஷ், முகேஷ் மற்றும் சஞ்சய் என்ற கூட்டாளிகள் 3:2:1 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2017, மார்ச் 31 அன்று அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ
    முதல் கணக்குகள்     கட்டடம் 1,10,000
    ஆகாஷ் 40,000   வாகனம் 30,000
    முகேஷ் 60,000   சரக்கிருப்பு 26,000
    சஞ்சய் 30,000 1,30,000 கடனாளிகள் 25,000
    இலாபநட்டப் பகிர்வு க/கு   12,000 கைரொக்கம்  15,000
    பொதுக்காப்பு    24,000    
    தொழிலாளர் ஈட்டு நிதி   18,000    
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு   22,000    
        2,06,000   2,06,000

    பகிர்ந்து தரா இலாபத்தினைப் பதிவு செய்யும் குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும் 

  22. ஒரு கூட்டடாண்மை நிறுவனத்தில் சரண், அருண் மற்றும் கரண் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 4:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2016, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ  ரூ  சொத்துகள் ரூ ரூ
    முதல் கணக்குகள்     கட்டடம்   60,000
    சரண்  60,000   இயந்திரம்   40,000
    அருண் 50,000   முதலீடுகள்   20,000
    கரண்  40,000 1,50,000 சரக்கிருப்பு   12,000
    பொதுக்காப்பு   15,000 கடனாளிகள் 25,000  
    கடனீந்தோர்    35,000 கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு 1000 24,000
          வங்கி ரொக்கம்    44,000
        2,00,000     2,00,000

    1.1.2017 அன்று கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு கரண் விலகினார்.
    (i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.21,000 என மதிப்பிடப்பட்டது.
    (ii) இயந்திரம் மீது 10% மதிப்பேற்றம் செய்ய வேண்டும்.
    (iii) கட்டடம் ரூ.80,000 ஆக மதிப்பிட வேண்டும்.
    (iv) வாராக்கடன் ஒதுக்கு ரூ.2,000 ஆக அதிகரிக்க வேண்டும்.
    (v) சரக்கிருப்பு மதிப்பில் ரூ.2,000 குறைக்க வேண்டும்.
    (vi) கரணுக்கு செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
    தேவையான பேரேட்டுக் கணக்குகளை தயார் செய்யவும் மற்றும் விலகலுக்குப் பின் உள்ள கூட்டாண்மை நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - Unit 6 கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு மாதிரி வினாத்தாள் ( 12th Accountancy - Unit 6 Retirement And Death Of A Partner Model Question Paper )

Write your Comment