" /> -->

காலாண்டு மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70
  15 x 1 = 15
 1. இளம் உயிரிகளை ஈனும் விலங்குகள் 

  (a)

  முட்டையிடுபவை 

  (b)

  தாயுள் முட்டை பொரித்துக்குட்டி ஈனுபவை 

  (c)

  குட்டி ஈனுபவை 

  (d)

  'அ' மற்றும் 'ஆ' இரண்டும் 

 2. கூற்று : சில சமயம், வயிறு வலி மகப்பேறு, அறுவை வலி மகப்பேறு நடைபெறும்.
  காரணம் : கருப்பையில் குழந்தையின் நிலை, தாய்சேய் இணைப்புத் திசுவின் தன்மை போன்றவற்றால் இயல்பான குழந்தை பிறப்பு நடைபெறாது.

  (a)

  கூற்றும், காரணமும் சரி.

  (b)

  இரண்டும் தவறு 

  (c)

  கூற்று சரி, காரணம் தவறு.

  (d)

  கூற்றுதவறு, காரணம் சரி 

 3. ______ அதிகரிப்பு (எழுச்சி) அண்ட செல்லை விடுவிக்கிறது.

  (a)

  LH 

  (b)

  FSH 

  (c)

  ஆக்டோசின் 

  (d)

  GnRH 

 4. குழந்தையின் உணவுப்பாதையில் ஏற்படும் பாக்டீரியத் தொற்றைத் தடுப்பவை _______ எதிர்ப்பொருட்கள் 

  (a)

  IgA 

  (b)

  IgM 

  (c)

  IgG 

  (d)

  IgE 

 5. கருப்பையின் பெரும்பாலான பகுதி 

  (a)

  கருப்பை வாய் 

  (b)

  உடல் 

  (c)

  குவிமுகடு 

  (d)

  கலவிக் கால்வாய் 

 6. சரியான கூற்று எது?

  (a)

  உடல் வெளிக்கருவுறுத்தலுக்கு 10,000 நகரும் திறனுள்ள விந்தணுக்கள் தேவைப்படும்.

  (b)

  விந்துசெல்கள் அறுவைசிகிச்சை மூலம் உடல்வெளிக் கருவுறுதலுக்காக எடுக்கப்படும்.

  (c)

  அண்ட செல்கள் சிறப்பு ஊடகத்தில் தயார் செய்யப்படும்.

  (d)

  HCG  ஊசி உடல் வெளிக்கருதலில் தேவையில்லை 

 7. இரவில் வியர்த்தல் எந்த நோயின் அறிகுறி?

  (a)

  எய்ட்ஸ் 

  (b)

  மேகப்புண் 

  (c)

  கேண்டிடியாசிஸ் 

  (d)

  கிளாமிடியாசிஸ் 

 8. மறுகூட்டிணைவு நிகழ்விரைவு 0.09 என இருந்தா ல், A மற்றும் B என்ற இரு அல்லீல்களை பிரிக்கும் வரைபட அலகு எதுவாக இருக்கும்?

  (a)

  900 cM

  (b)

  90 cM

  (c)

  9 cM

  (d)

  0.9 cM

 9. பின்வருவனவற்றுள் எது உயிரி உணரவியில் பயன்படுத்தப்படுகிறது?

  (a)

  மின்னற்பிரிப்பு 

  (b)

  உயிரி உலைக்கலன் 

  (c)

  தாங்கிக்கடத்தி 

  (d)

  மின்துளையாக்கம் 

 10. பின்வரும் கூற்றிலிருந்து தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  (a)

  இதய அடைப்பிற்கு பயன்படுத்தப்படும் ஊட்டபானம் டிஜிடாலிஸ் பர்பியூரியாவிலிருந்து கிடைக்கிறது.

  (b)

  மூட்டுவலியை குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்து காப்சிகம் அணுவத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

  (c)

  மலேரியா எதிர்ப்பு மருந்து சின்கோனா அபினாலிஸ் தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

  (d)

  புற்றுநோய் எதிர்ப்பு பண்பானது கேதராந்தஸ் ரோசியஸ் தாவரத்தில் காணப்படவில்லை 

 11. ஒரு தனிச் சிற்றினத்தின் சூழ்நிலையியல் பற்றி படிப்பது?
  i. குழும சூழ்நிலையியல் 
  ii. சுயச் சூழ்நிலையியல் 
  iii. சிற்றினச் சூழ்நிலையியல் 
  iv. கூட்டு சூழ்நிலையியல் 

  (a)

  i மட்டும் 

  (b)

  ii மட்டும் 

  (c)

  i மற்றும் iv மட்டும் 

  (d)

  ii மற்றும் iii மட்டும் 

 12. கீழ்கண்ட கூற்றினைப் படித்துச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
  i) பசலை மண் தாவர வளர்ச்சிக்கு ஏற்ற மண் வகையாகும். இது வண்டல் மண், மணல் மற்றும் களிமண் ஆகியவை கலந்த கலவையாகும்.
  ii) அதிகளவு லிக்னின் மற்றும் செல்லுலோஸ் கொண்ட கரிம மட்குகளில் மட்டும் செயமுறைகள் மெதுவாக நடைபெறுகிறது.
  iii) நுண் துளைகளுக்குள் காணப்படும் நுண்புழை நீர் தாவரங்களுக்குக் கிடைக்கும் ஒரே நீராகும்.
  iv) நிழல் விரும்பும் தாவரங்களின் செயல் மையத்தில் அதிகளவு பசுங்கணிகங்களிலும், குறைவான அளவு பச்சையம் a மற்றும் b ஆகியவற்றிலும் மற்றும் இலைகள் மெல்லியதாகவும் காணப்படுகின்றன.

  (a)

  i, ii மற்றும் iii மட்டும் 

  (b)

  ii, iii மற்றும் iv மட்டும் 

  (c)

  i, ii மற்றும் iv மட்டும் 

  (d)

  ii மற்றும் iii மட்டும்

 13. நிரல் I-ல் மண்ணின் அளவும், நிரல் II-ல் மண்ணின் ஒப்பீட்டளவும் கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்டவற்றில் நிரல் I மற்றும் நிரல் II-ல் சரியாகப் பொருந்தியுள்ளவற்றைக் கண்டுபிடிக்கவும்.

  நிரல் I நிரல் II
  I) 0.2 முதல் 2.00 மி.மீ. வரை i) வண்டல் மண்
  II) 0.002 மி.மீ க்கு குறைவாக ii) களிமண்
  III) 0.002 முதல் 0.02 மி.,மீ. வரை  iii) மணல் 
  IV) 0.002 முதல் 0.2 மி.மீ. வரை iv) பசலை மண் 
  (a)
  I II III IV
  ii iii iv i
  (b)
  I II III IV
  iv i iii ii
  (c)
  I II III IV
  iii ii i iv
  (d)

  எதுவுமில்லை 

 14. ஒபிரிஸ் என்ற ஆர்கிட் தாவரத்தின் மலரானது பெண் பூச்சியினை ஒத்த காணப்பட்டு, ஆண் பூச்சிகளைக் கவர்ந்து மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற செயல்முறை இதுவாகும்.

  (a)

  மிர்மிகோஃபில்லி 

  (b)

  சூழ்நிலையியல் சமானங்கள் 

  (c)

  பாவனை செயல்கள் 

  (d)

  எதுவுமில்லை 

 15. பெடாஜெனிஸிஸ் (pedagensis) என்பது எதனுடன் தொடர்புடையது?

  (a)

  தொல்லுயிரி படிவம் 

  (b)

  நீர் 

  (c)

  உயிரித்தொகை 

  (d)

  மண் 

 16. 6 x 2 = 12
 17. சீம்பால் என்றான்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?

 18. குறுக்கு மறுக்கு மரபுகடத்தல் என்றால் என்ன?

 19. ஒசசாகி துண்டங்கள் என்றால் என்ன? இவை எந்த திசையில் உருவாக்கப்படுகின்றன?

 20. திடீர்மாற்றம், இயற்கைத் தேர்வு மற்றும் மரபியல் நகர்வு ஆகிய நிகழ்வுகள் ஹார்டி– வீன்பெர்க் சமநிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விளக்குக.

 21. எவ்வாறு நாம் பாக்டீரியாவின் எதிர்ப்புத்திறனை குறைக்க முடியும்?

 22. மரபணுக்கள் என்றால் என்ன?

 23. 6 x 3 = 18
 24. ஏன் தேனீக்களின் கன்னி இனப்பெருக்கத்தை முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம் என அழைகின்றோம்?

 25. உயிரிகளில் காணப்படும் பல்வேறு வகையான ஒருங்கிணைவு முறைகள் யாவை?

 26. கர்ப்ப காலத்தில் தாய்சேய் இணைப்புத்திசுவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் யாவை?

 27. இம்யுனேகுளோபுலிளின் அமைப்பை தகுந்த படத்துடன் விளக்கு.

 28. தன்-மகரந்தச்சேர்க்கையைத் தடுக்க இருபால் மலர்கள் மேற்கொள்ளும் ஏதேனும் இரண்டு உத்திகளைப் பட்டியிலிடுக.

 29. உயிரிதொழில்நுட்பவியலின் பயன்பாட்டைக் குறிப்பிடுக.

 30. 5 x 5 = 25
 31. குழந்தை பிறப்பு மற்றும் பாலூட்டுதலில் ஆக்ஸிடோசின் மற்றும் ரிலாக்சின் ஹார்மோன்களின் பங்கினை விளக்குக.

 32. அக்ரோசம் வினையை விவரி.

 33. புரதம் தயாரித்தலில் செல் தொழிற்சாலையைப் பற்றி விவரி.

 34. பாக்டீரியாவின் ஏற்படும் நோய்களை அட்டவணைப்படுத்துக.

 35. வெடித்தல் வழிமுறை என்றால் என்ன? இவ்வகை கனிகளில் காணப்படும் தகஅமைவுகள் யாவை?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th உயிரியல் - காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Biology - Quarterly Model Question paper )

Write your Comment