விலங்கியல் - மனித இனப்பெருக்கம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
    25 x 1 = 25
  1. முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம் _____.

    (a)

    விந்தக நுண் குழல்கள் 

    (b)

    விந்து நாளம் 

    (c)

    விந்தகமேல் சுருள்சூழல் 

    (d)

    விந்துப்பை 

  2. விந்து திரவத்தின் பெரும்பான்மைப் பகுதியைச் சுரக்கும் துணைச் சுரப்பி _____.

    (a)

    விந்துப்பை 

    (b)

    பல்போயுரித்ரல் சுரப்பி 

    (c)

    புரோஸ்டேட் சுரப்பி 

    (d)

    கோழைச் சுரப்பி 

  3. கரு பதியும் இடம் ______.

    (a)

    கருப்பை 

    (b)

    வயிற்றுக்குழி 

    (c)

    கலவிக் கால்வாய் 

    (d)

    ஃபெல்லோப்பியன் குழாய்  

  4. குழந்தை பிறப்புக்குப்பின் பால் சுரத்தலைத் தொடங்கி வைப்பதும் தொடர்ச்சியாகச் சுரக்க வைக்கவும் உதவும் முக்கிய ஹார்மோன் ______.

    (a)

    ஈஸ்ட்ரோஜன் 

    (b)

    FSH 

    (c)

    புரோலாக்டின் 

    (d)

    ஆக்ஸிடோசின் 

  5. பாலூட்டியின் முட்டை ______.

    (a)

    மீசோலெசிதல் ஓடற்றது 

    (b)

    மைக்ரோலெசிதல், ஓடற்றது  

    (c)

    ஏலெசிதல், ஓடற்றது 

    (d)

    ஏலெசிதல், ஓடுடையது  

  6. அண்ட செல்லைத் துளைத்துச் செல்வதற்கு முன் விந்து செல்லில் நடைபெறும் நிகழ்வு _______.

    (a)

    ஸ்பெர்மியேஷன்

    (b)

    கார்டிகல் வினைகள்

    (c)

    ஸ்பெர்மியோஜெனிசிஸ்

    (d)

    திறனேற்றம்

  7. குழந்தை பிறந்தவுடன் உடனடியாகச் சுரக்கும் பாலின் பெயர் _____.

    (a)

    கோழை

    (b)

    சீம்பால்

    (c)

    லாக்டோஸ்

    (d)

    சுக்ரோஸ்

  8. சீம்பாலில் அதிகம் காணப்படுவது _____.

    (a)

    IgE

    (b)

    IgA

    (c)

    IgD

    (d)

    IgM

  9. ஆண்ட்ரோஜன் இணைவுப்புரதத்தை உற்பத்தி செய்பவை _____.

    (a)

    லீடிக் செல்கள்

    (b)

    ஹைபோதலாமஸ்

    (c)

    செர்டோலி செல்கள்

    (d)

    பிட்யூட்டரி சுரப்பி

  10. தவறான இணையைக் கண்டுபிடி

    (a)

    இரத்தப்போக்கு நிலை - ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் குறைதல்

    (b)

    நுண்பை செல்கள் ஃபாலிகுலார் நிலை – ஈஸ்ட்ரோஜன் அதிகரித்தல்

    (c)

    லூட்டியல் நிலை – FSH அளவு அதிகரிப்பு

    (d)

    அண்டம் விடுபடு நிலை – LH எழுச்சி

  11. கூற்று மற்றும் காரண வினாக்கள்:
    கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று கூற்று (கூ) ஆகும். மற்றொன்று காரணம் (கா). சரியான விடையை கீழ்க்ககாணும் வகையில் குறிப்பிடுக.
    A - அண்டம் விடுபடுதல் என்பது கிராஃபியன் நுண்பையிலிருந்து அண்டம் வெளியேறும் நிகழ்ச்சியாகும்.
    R - இது மாதவிடாய் சுழற்சியின் நுண்பை (ஃபாலிகுலார்) நிலையில் நடைபெறுகிறது.

    (a)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.

    (b)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் இல்லை.

    (c)

    ‘கூ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.

    (d)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறானவை. 

  12. குழந்தை பிறப்பின்போது, கருப்பையின் எப்பகுதி வலுவான சுருக்கங்களை ஏற்படுத்தும்.

    (a)

    எண்டோமெட்ரியம் 

    (b)

    மையோமெட்ரியம் 

    (c)

    பெரிமெட்ரியம் 

    (d)

    குவிமுகடு 

  13. ஆண்களில் உள்ள புரோஸ்டேட் சுரப்பிக்கு இணையாக பெண்களில் உள்ளவை.

    (a)

    ஸ்கீன்ஸ் சுரப்பி 

    (b)

    பர்த்தோலின் சிறப்பு 

    (c)

    பால் சுரப்பி 

    (d)

    வியர்வைச் சுரப்பி 

  14. எரியோலார் சுரப்பிகள், உள்ள இடம் 

    (a)

    விந்தகம் 

    (b)

    அண்டகம் 

    (c)

    கலவிக் கால்வாய் 

    (d)

    பால் சுரப்பி 

  15. மார்பக வளர்ச்சி தொடங்கும் காலம் 

    (a)

    பிறப்பு 

    (b)

    பூப்பெய்தல் 

    (c)

    விடலைப் பருவம் 

    (d)

    பால் சுரக்கும் காலம் 

  16. ஆண்கள் தங்கள் வாழ்நாளில் உற்பத்தி செய்யும் விந்தணுக்களின் எண்ணிக்கை 

    (a)

    ஒரு மில்லியன் 

    (b)

    500 மில்லியன் 

    (c)

    300 மில்லியன் 

    (d)

    400 மில்லியன் 

  17. கருப்பை உட்சுவரில் கரு பதியும்போது ________ 

    (a)

    100

    (b)

    200

    (c)

    300

    (d)

    1 மில்லியன் 

  18. தவறான கூற்றைக் கண்டறி 
    சீம்பாலில் ________ 

    (a)

    அதிக அளவு லாக்டோஸ் 

    (b)

    கொழுப்பு இல்லை 

    (c)

    அதிக புரதங்கள் 

    (d)

    விட்டமின் A 

  19. மிகச்சிறிய மனித செல் 

    (a)

    விந்து 

    (b)

    மானோசைட் 

    (c)

    சிவப்பணு 

    (d)

    WBC 

  20. விட்டலின் புற இடைவெளி ______ ல் உள்ளது 

    (a)

    விந்து 

    (b)

    அண்டம் 

    (c)

    கருவுற்ற அண்டம் 

    (d)

    டிரோபோபிளாஸ்ட் 

  21. ______ அதிகரிப்பு (எழுச்சி) அண்ட செல்லை விடுவிக்கிறது.

    (a)

    LH 

    (b)

    FSH 

    (c)

    ஆக்டோசின் 

    (d)

    GnRH 

  22. குழந்தையின் உணவுப்பாதையில் ஏற்படும் பாக்டீரியத் தொற்றைத் தடுப்பவை _______ எதிர்ப்பொருட்கள் 

    (a)

    IgA 

    (b)

    IgM 

    (c)

    IgG 

    (d)

    IgE 

  23. குழந்தையின் _______ மாதகாலம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது 

    (a)

    5

    (b)

    12

    (c)

    6

    (d)

    3

  24. கருவின் இதயம் ________ வாரம் உருவாகின்றது.

    (a)

    முதல் 

    (b)

    இரண்டாம் 

    (c)

    மூன்றாம் 

    (d)

    நான்காம் 

  25. கோடிட்ட இடத்தை நிரப்புக 
    (A -முன் பிட்யூட்டரி, B -விந்தக வளர்ச்சி, C -செர்டோலி செல்கள், ட-லீடிக் செல்கள்)
    1. GnRH _______ மேல் செயல்படும்.
    2. FSH_______ தூண்டும்.
    3. ஆண்டரோஜன் இணைவுத் புரதத்தை உற்பத்தி செய்வது______ 

    (a)

    1-A,2-B,3-C,4-D

    (b)

    1-C,2-B,3-A,4-D

    (c)

    1-B,2-A,3-D,4-C

    (d)

    1-D,2-C,3-B,4-A

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் விலங்கியல் - மனித இனப்பெருக்கம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Biology Zoology - Human Reproduction One Marks Model Question Paper )

Write your Comment