" /> -->

எண்ணியல் முறைகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. மதிப்பிடுக: Δ(log ax)

 2. y=x3-x2+x-1 எனில் x=0,1,2,3,4,5 என்பனவற்றுக்கு y-ன் மதிப்புகளைக் கணக்கிட்டு முன்நோக்கு வேறுபாட்டு அட்டவணையை அமைக்க.

 3. h = 1 எனில், Δ\(\left[ \frac { 1 }{ (x+1)(x+2) } \right] \) -ஐ மதிப்பிடுக.

 4. ஒரு மாவட்டத்தின் மக்கள்த் தொகை விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  ஆண்டு(x) 1881 1891 1901 1911 1921 1931
  மக்கள்தொகை (y)
  (ஆயிரத்தில்)
  363 391 421 - 467 501

  1911 ம் ஆண்டிற்கான மக்கள் தொகையைக் காண்க.

 5. பின்வரும் விவரங்களைக் கொண்டு விடுபட்ட உறுப்புகளைக் காண்க.

  x 0 1 2 3 4 5
  y=f(x) 0 - 8 15 - 35'
 6. பின்வரும் விவரங்களிலிருந்து 350 அலகுகளில் ஏற்படக்கூடிய செலவினத்தை வரைபட முறையைப் பயன்படுத்தி காண்க.

  மாதம் ஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன்
  வெளியீடு அலகுகள் 200 300 400 640 540 580
  மறைமுக உழைப்பூதியச்
  செலவினம்
  2500 2800 3100 3820 3220 3640
 7. 10 வருடங்களுக்கு ஒருமுறை எடுக்கப்படும் ஒரு நகரத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 1955 வருடத்தின் மக்கள் தொகையை மதிப்பிடுக.

  வருடம் 1951 1961 1971 1981
  மக்கள் தொகை (இலட்சத்தில்) 35 42 58 84
 8. ஒரு தேர்வில் குறிப்பிட்ட இடைவெளிக்குள் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  மதிப்பெண்கள் 0-19 20-39 40-59 60-79 80-99
  மாணவர்களின் எண்ணிக்கை 41 62 65 50 17

  70-க்கு குறைவான மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை காண்க.

 9. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைக் கொண்டு x=32 எனில் f(x) ன் மதிப்பைக் காண்க.

  x 30 35 40 45 50
  f(x) 15.9 14.9 14.1 13.3 12.5
 10. உலோகம் மற்றும் துத்தநாகத்தில் உள்ள காரீயத்தின் உருகும் நிலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ‘T’ என்பது வெப்பநிலை (பாகையில்) மற்றும் P என்பது உலோகத்தில் காரீயத்தின் சதவீதம்.

  P 40 50 60 70 80 90
  T 180 204 226 250 276 304

  84 சதவீத காரீயம் கொண்ட உலோகத்தின் உருகும் நிலையைக் காண்க .

 11. இடைச்செருகலைப் பயன்படுத்தி 1985-ஆம் வருடத்தின் வியாபாரத்தை மதிப்பிடுக.

  வருடம் 1982 1983 1984 1986
  வியாபாரம் (இலட்சங்களில்) 150 235 365 525
 12. f(x)=eax எனில் f(0), Δf(0), Δ2f(0) என்பன பெருக்குத்தொடரில் இருக்கும் எனக் காட்டுக.

 13. f(-1)=202, f(0)=175, f(1)=82 மற்றும் f(2)=55 எனில் f(0.5) காண்க.

 14. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து x = 43 மற்றும் x = 84 எனும் புள்ளிகளில் y-ன் மதிப்பு காண்க.

  x 40 50 60 70 80 90
  y 184 204 226 250 276 304
 15.  Δ∇=Δ-∇ என நிறுவுக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - எண்ணியல் முறைகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Numerical Methods Two Marks Questions )

Write your Comment