வேதிவினை வேகவியல் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    12 x 1 = 12
  1. \(\rightarrow \) வினைபொருள் என்ற பூஜ்ய வகை வினையில் துவக்கச் செறிவு 0.02m மேலும் அரை வாழ்காலம் 10min. 0.04m துவக்கச் செறிவுடன் ஒருவர் வினையினை நிகழ்த்தினால் அவ்வினையின் அரை வாழ்காலம் __________

    (a)

    10s 

    (b)

    5min 

    (c)

    20min 

    (d)

    கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து யூகித்து அறிய இயலாது.

  2. ஒரு வினைக்கு, வினைவேகம் =K(அசிட்டோன்]3/2 எனில், வினைவேக மாறிலி மற்றும் வினைவேகம் ஆகியனவற்றின் அலகுகள் முறையே _____________

    (a)

    (mol L-1s-1),(mol-1/2 L1/2 s-1)

    (b)

    (mol L-1/2L1/2s-1),(mol L-1 s-1)

    (c)

    (mol 1/2 L1/2s-1),(mol L-1 s-1)

    (d)

    (mol L s-1),(mol-1/2 L1/2 s)

  3. கூற்று : ஒரு வினை முதல் வகை வினையாக இருந்தால், வினைபடு பொருளின் செறிவு இரு மடங்காகும் போது, வினை வேகமும் இரு மடங்காகும்.
    காரணம் : வினை வேக மாறிலியும் இரு மடங்காகும்.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல 

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

  4. ஒரு கதிரியக்கத் தனிமமானது இரண்டு மணி நேரத்தில் அதன் ஆரம்ப அளவில் \({ \left( \frac { 1 }{ 16 } \right) }^{ th }\)மடங்காகக் குறைகிறது அதன் அரை வாழ் காலம்.

    (a)

    60 min

    (b)

    120 min

    (c)

    30 min

    (d)

    15 min

  5. வேக விதியில் காணப்படும் செறிவு உறுப்புகளின் அடுக்குகளின் கூட்டுத்தொகை _________ எனப்படும்.

    (a)

    மூலக்கூறு எண் 

    (b)

    வினைவேக மாறிலி 

    (c)

    வினை வகை 

    (d)

    வினை வேகம் 

  6. வினை வேகம் = k[A] 3/2 [B]1 என்ற வேக விதியினை உடைய வினையின் மொத்த வினை வகை ___________

    (a)

    1.5

    (b)

    1

    (c)

    2.5

    (d)

    3

  7. 2A + B ⟶ C+D என்ற அடிப்படை வினையின் மூலக்கூறு எண் ________________

    (a)

    பூஜ்யம் 

    (b)

    ஒன்று 

    (c)

    இரண்டு 

    (d)

    மூன்று 

  8. முதல் வகை வினைக்கு, வரையப்படும் ln[A] Vs t  வரைபடம் தரும் நேர்கோட்டின் சாய்வு ____________

    (a)

    நேர்குறி உடையது 

    (b)

    எதிர்குறி உடையது 

    (c)

    பூஜ்யம் 

    (d)

    முடிவிலி 

  9. கார முன்னிலையில் எஸ்டரை நீராற்பகுத்தல் வினை  __________ ஆகும்.

    (a)

    பூஜ்ய வகை 

    (b)

    முதல் வகை 

    (c)

    போலி முதல் வகை 

    (d)

    இரண்டாம் வகை 

  10. பெரும்பாலான வினைகளுக்கு 10o C வெப்பநிலை அதிகரிப்பிற்கு வினை வேகம் தோராயமாக ______ அதிகரிக்கும்.

    (a)

    ஒரு மடங்கு 

    (b)

    இரு மடங்கு 

    (c)

    மூன்று மடங்கு 

    (d)

    நான்கு மடங்கு 

  11. ஒரு வினையின் வேகம் ஒவ்வொரு 10oC வெப்பநிலை உயர்வுக்கும் இரு மடங்காக உயர்கிறது எனில், வெப்பநிலை 10oC லிருந்து 50oC ஆக உயரும் போது வினை வேகம் எத்தனை மடங்கு உயர்ந்திருக்கும்?

    (a)

    4

    (b)

    8

    (c)

    16

    (d)

    32

  12. ஒரு முதல் வகை வினை சரிபாதி நிறைவுற 45 நிமிடங்கள் எடுத்துக் கொண்டால் அவ்வினை 99.9% நிறைவுற எவ்வளவு நேரம் ஆகும்.

    (a)

    5 மணி நேரம் 

    (b)

    7.5 மணி நேரம் 

    (c)

    10  மணி நேரம் 

    (d)

    20 மணி நேரம் 

  13. 1 x 1 = 1
  14. i) வினைவேக மாறிலி என்பது விகித மாறிலியாகும்.
    ii) வேதி வினையின் வேகம், வினைபடு பொருளின் ஆரம்பச் செறிவை சார்ந்தது.
    iii) வினைவேக மாறிலி, வினைபடு பொருட்களின் ஆரம்பச் செறிவை சார்ந்ததல்ல 
    அ) (i) & (ii)
    ஆ) (i) & (iii)
    இ) (ii) & (iii)
    ஈ) (i), (ii) & (iii)

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஈ) (i), (ii) & (iii)

  15. 1 x 2 = 2
  16. கூற்று (A) : அமில முன்னிலையில் எஸ்டரை நீறாற்பகுத்தல் ஒரு போலி முதல் வகை வினை ஆகும்.
    காரணம் (R) : இவ்வினையின் வினைவேகம் நீரின் செறிவைச் சார்ந்ததல்ல.
    i) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது 
    ii) A சரி ஆனால் R தவறு 
    iii) A தவறு ஆனால் R சரி 
    iv) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்கவில்லை 

  17. 1 x 2 = 2
  18. i) அமில முன்னிலையில் எஸ்டரை நீராற்பகுத்தல் வினை ஒரு இரண்டாம் வகை வினை ஆகும்.
    ii) வளைய புரேப்பேன் ஆனது புரப்பீனாக மாற்றியமாகும் வினை ஒரு பூஜ்ய வகை வினை ஆகும்.
    iii) அமில முன்னிலையில் எஸ்டரை நீராற்பகுத்தல் வினையில் எஸ்டரின் செறிவு ஒரு மாறிலி.
    அ) (i) & (ii)
    ஆ) (i) & (iii)
    இ) (ii) & (iii)
    ஈ) (i), (ii) & (iii) 

  19. 3 x 2 = 6
  20. x+2y\(\rightarrow \) விளைபொருள் [x] = [y] = 0.2M என்ற வினையின் வினைவேகமானது 4 \(\times\) 10-3mol L-1s-1 எனும் போது, 400Kல் வினைவேகம் மாறிலி 2x10-2S-1, இவ்வினையின் ஒட்டுமொத்த வினைவகையைக் கண்டறிக.

  21. A,B மற்றும் C ஆகியவற்றிற்கிடையேயான வினையின் வேக விதி வினைவேகம் = k[A]2[B][L]3/2 பின்வரும் நேர்வுகளின் வினைவேகம் எவ்வாறு மாற்றமடையும்?
    i) [L] ன் செறிவு நான்கு மடங்காக உயர்த்தும் போது 
    (ii) [A] மற்றும் [B] ஆகிய இரண்டின் செறிவுகளையும் இரு மடங்காக்கும் போது 
    (iii) [A] ன் செறிவை பாதியாகக் குறைக்கும் போது.
    (iv) [A] ன் செறிவை (1/3) மடங்காக குறைத்தும் [L] ன் செறிவை நான்கு மடங்காகவும் மாற்றும் போது.

  22. வினை வேகத்தினைக் குறிப்பிடும் சமன்பாட்டில் எதிர்க்குறி ஏன் பயன்படுத்தப்படுகிறது.

  23. 4 x 3 = 12
  24. ஒருபடியின் (monomer) செறிவானது 0.05 mol L-1 ஆக உள்ள ஒரு இருபடி (dimer) உருவாகும் இரண்டாம் வகை வினையின் வினைவேகம் 7.5x 10-3 mol L-1s-1 வினைவேக மாறிலியினைக் கண்டறிக.

  25. ஒரு வாயு நிலை வினையின் கிளர்வு ஆற்றல் 200 kJ mol-1. அவ்வினையின் அதிர்வுக் காரணி 1.6 x 1013s-1. 600 K ல் வினைவேக மாறிலியைக் கணக்கிடுக. (e-40.09 = 3.8 x 10-18)

  26. பூஜ்ய வகை வினைக்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக.

  27. 25oC ல் ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலி மதிப்பு 0.45s-1 எனில் அதன் அரை வாழ்காலம் என்ன? 12.5% வினைபடு பொருள் எஞ்சியிருக்கும் நேரத்தைக் கணக்கிடு.

  28. 3 x 5 = 15
  29. ஒரு வேதிவினையின் வேகத்தினை, வினைபடு பொருட்களின் செறிவு எவ்வாறு பாதிக்கின்றது என்பதை விளக்குக.

  30. பின்வரும் விவரங்களிலிருந்து ஹைட்ரஜன் பெராக்ஸடு சிதைவுறுதல் ஒரு முதல் வகை வினை எனக்காட்டுக.

    t(min) 0 10 20
    V(ml) 46.1 29.8 19.3

    இங்கு t என்பது நேரம் (நிமிடங்களில்) மற்றும் V என்பது ஒரு குறிப்பிட்ட கனஅளவு உடைய வினைக் கலவையுடன் தரம்பார்க்கும் போது தேவைப்படும் திட்ட KMnO4 கரைசலின் கன அளவு ஆகும்.

  31. அர்ஹீனியஸ் சமன்பாட்டினை பயன்படுத்தி வினைவேகத்தின் மீது வெப்பம் மற்றும் கிளர்வு ஆற்றலின் விளைவுகளைப் பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - வேதிவினை வேகவியல் மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry - Chemical Kinetics Model Question Paper )

Write your Comment